இலங்கை இறைமையும் சுயாதிபத்தியமும் கொண்ட தனித்துவமான நாடு. எந்த வெளிநாட்டு சக்திகளும் இதில் தலையிட இடமளிக்க முடியாதென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாடுகள் சில யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தம் கொடுத்து வருகின்றன. இலங்கை ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் பெற்று நீண்டகாலங்களாயிற்று. தற்போது இந்நாடு ஜனநாயகம், கெளரவமிக்க சுதந்திரமான நாடு. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசொன்றைக் கொண்ட நாடு என்ற வகையில் எத்தகைய சக்திகளுக்கும் நாம் அடிபணியத் தேவையில்லை யெனவும் பிரதமர் தெரிவித்தார்.
ஹொரணை மக்கள் இராணுவத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துவ உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் முக்கிய நிகழ்வொன்று நேற்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் நாம் ஏணியின் இறுதிப்படியில் தற்போது இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் நாம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் இது. யுத்த நிறுத்தம் பற்றி பேசப்படுகிறது. புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் மட்டுமே அதுபற்றி யோசிக்க முடியும். ஆயுதங்களைக் கையில் ஏந்திக்கொண்டு யுத்த நிறுத்தம் என்பது முடியாதது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டியுள்ளது.
ஜனநாயகமும் பயங்கரவாதமும் ஒரே கட்டிலில் உறங்க முடியாது. இதனை நான் பிரதமராகப் பதவியேற்று முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தேன். இன்றைய அரசாங்கம் மட்டுமல்ல எந்த அரசாங்கத்துக்கும் இது பொருந்தும். பால் பொங்கி வரும்போது அதில் சாணத்தை இடுவது போன்று பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் இறுதித் தருணத்தில் சிலர் யுத்த நிறுத்தம் பற்றி அழுத்தம் கொடுக்கிறார்கள். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவாமல் அதற்கு ஆசீர்வாதம் வழங்க முற்படுபவர்கள் தேசத் துரோகிகாளவர்.
பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம். இதில் பெருமளவு புலிகள் பலியாவதைப் போன்றே இராணுவத்தினரும் பலியாகின்றனர். அதனை எவரும் மறுக்க முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலக்குக்கான அர்ப்பணிப்பே இது. இந்த வகையில் நாம் படையினருக்கு தற்போது செய்வது போதாது. அவர்களுக்கு முழுமையாக உதவவும் ஆதரவு வழங்கவும் நாம் தயாராக வேண்டும். அவர்களைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமக்குள்ளது இலங்கை மட்டுமே. எமக்கு வேறு நாடு கிடையாது. நாம் வேறு எந்த நாட்டுக்குப் போவது? அதனால் தாய்நாட்டை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அதனைப் படையினர் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும்போது படையினரை நாம் பாதுகாப்பது மிகவும் முக்கியம். அதற்காக எம்மை நாம் அர்ப்பணித்துச் செயற்பட வேண்டும். அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதுடன் ஒழுக்கம், பண்பாடு, தொழில்வாய்ப்புகள் நிறைந்த நாடாகவும் இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராணுவப் பதவி நிலை உயரதிகாரி மேஜர் ஜெனரல் என். விஜேசிங்க உட்பட உயரதிகாரிகள் பலரும், ஹொரணை இங்கிரிய பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
palli
மாவீரர் உரை மட்டுமல்ல இப்போது பல அமைச்சர்களும் மகிந்தா குடும்பம் எழுதிகொடுப்பதை பிழையின்றி வாசிக்கின்றனர். அதுக்கு ஒரு எடுத்துகாட்டு பிரதமரின் இந்த பித்தலாட்டம்.