மத்திய மாகாண சபைக்கு நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த பத்து சுயேச்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தை இழந்துள்ளன. மேற்படி சுயேச்சைக் குழுக்கள் ஒவ்வொன்றும் 30 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியிருந்தன. மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 வீத வாக்குகளை எந்தவொரு சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொள்ள முடியாமையினாலேயே இந்நிலையேற்பட்டுள்ளது.
இம்முறை மாகாண சபையில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஐ.ம.சு.மு., ஐ.தே.க. தவிர்ந்த எந்தவொரு அரசியல் கட்சியும் ஒரு ஆசனத்தையும் பெற முடியவில்லை. இம்முறை மக்கள் விடுதலை முன்னணிக்கு நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த மொத்த வாக்குகள் 3,039 ஆகும். இது மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 1.07 சதவீதமாகும்.