கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்கா குரன வெலப்பனப் பகுதியில் வீழ்ந்த விடுதலைப்புலிகளின் உடல் விமானத்தின் விமானியின் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நீர்கொழும்பு சட்டவைத்திய அதிகாரி டாக்டர் சன்ன பெரேரா பிரேத பரிசோதனை அறிக்கையை நீர்கொழும்பு நீதிவானிடம் சமர்ப்பித்திருந்தார். விமானியின் நெஞ்சில் சன்னம் துளைத்துக்கொண்டு சென்றதும் இருதயத்தில் காற்று நிரம்பியிருந்தும் மரணத்துக்குக் காரணம்.
இரு சன்னங்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்டன. அத்துடன் பல துப்பாக்கிச் சூட்டு காயங்களும் காணப்பட்டன. உடலின் மூட்டுக்கள் எக்ஸ் கதிர் படம் பிடிக்கப்பட்டன. பற்களும் உடலின் சில பகுதிகளும் இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இச்சடலம் பலத்த பாதுகாப்புடன் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சடலம் தொடர்பாக சர்வதேச பொலிஸாரின் விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் சட்டவைத்திய அதிகாரி நீதிவானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.