புதுக்குடியிருப்புப் பகுதியில் 2 நாள்களாக கடும் சண்டை

SL_Army_in_Killinochieமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்புக்கு மேற்குப் பகுதியிலும் அம்பலவன்பொக் கணைக்குக் கிழக்குப் பகுதியிலும் நேற்று முன்தினம் தொடக்கம் இராணுவத்தினருக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சண்டை இடம்பெற்று வருகிறது எனப் படைத்தரப்பு நேற்றுச் செய்தி வெளியிட்டது. இச்சமர்களில் நேற்று முன்தினம் வரை 36 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். அவர்களின் 11 சடலங்களைத் தாங்கள் மீட்டனர் என்று இராணுவத்தினர் நேற்றுக் கூறினர்.

புதுக்குடியிருப்பு மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சண்டையில் விடுதலைப் புலிகள் 20 பேர் உயிரிழந்தனர். 18 பேர்வரை காயமடைந்தனர். உயிரிழந்த விடுதலைப் புலிகளில் இருவரின் சடலங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் வெடிபொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

அதேவேளை, புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்மைப்புத் தளம் ஒன்றையும், ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றையும் இதேவேளை 57 படையணியால் விசுவமடுவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கிளைமோர்க்குண்டுகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 58 ஆவது டிவிசனின் படையணி கைப்பற்றியது என்றும்  அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.அதேசமயம், அம்பலவன் பொக்கணைப் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகளில் ஐவர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தச் சண்டையில் படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • palli
    palli

    //கடுஞ்சண்டை இடம்பெற்று வருகிறது எனப் படைத்தரப்பு நேற்றுச் செய்தி வெளியிட்டது. இச்சமர்களில் நேற்று முன்தினம் வரை 36 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். அவர்களின் 11 சடலங்களைத் தாங்கள் மீட்டனர் என்று இராணுவத்தினர் நேற்றுக் கூறினர்.//

    ஆகா புலி என்னும் பலத்துடந்தான் இருக்கா?? ராணுவத்தின் இழப்பு என்ன? இருதரப்பின் சேதாரத்தையும் சொல்லுவதுதானே நியாயம். பல்லியின் சாத்திரபடி பல புலிகள் ராணுவம் இல்லாத இடத்தால் ராணுவகட்டுபாட்டுக்குள் வந்துவிட்டனர். எப்படி என்பதை வன்னி நிலபரப்பு தெரிந்த நண்பர்களிடம் கேக்கவும். முல்லைதீவில் இருந்து வவுனியாவரை என்னதான் பாதுகாப்பை ராணுவம் செய்தாலும் நடந்து கூட்டமாக இல்லாமல் சுலபமாக வரமுடியும். இதை மகிந்தா புரிந்துகொள்ள சிறிதுகாலம் எடுக்கும்.

    Reply
  • santhanam
    santhanam

    கனவு கானும் காலமெல்லாம் கடந்துவிட்டது பல்லி என்னும் இரண்டுகிழமை பொறும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இதிலை பெரிய நகைச்சுவை என்னவென்றால் நேற்று தீபம் தொலைக்காட்சிச் செய்தியில் புலிகள் இராணுவத்தின் விநியோகப் பாதையை ஊடறுப்புத் தாக்குதல் மூலம் துண்டித்திருப்பதாகவும் அதனால் இராணுவத்திற்கு ஆயுதத் தளபாட விநியோகம் தடைப்பட்டு விட்டதாகவும் சொன்னார்கள். இப்ப எனக்கொரு சந்தேகம் இராணுவம் புலிகளை குறிப்பிட்டளவு நிலப்பரப்புக்குள் முடக்கி சுற்றிவளைத்துள்ளதா?? அல்லது புலிகள் இராணுவத்தை குறிப்பிட்டளவு நிலப்பரப்புக்குள் முடக்கி சுற்றிவளைத்துள்ளதா??

    Reply
  • palli
    palli

    சந்தானம் இன்றய கனவுகள்தான் நாளைய சாதனைகள். ஆனால் அது முடியது என பல்லி அறிவதால் சமாதானமாவது வரட்டுமே என ஏங்குவதில் தப்பில்லையே. கூட்டி பெருக்கி பாருங்கள் பல்லியின் கணக்கு சரியாய் இருக்கும்.

    Reply