ஆழ்ந்த கவலை தரும் ஐ.நா.வின் போக்கு – புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்

p_nadesan.jpgமனிதத்துவத்தின் அதி உன்னத நிறுவனமான ஐ.நா.வின் போக்கு ஆழ்ந்த கவலையையும் புதிரையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் அப்பாவித் தமிழ் மக்களின் நலன்களையும் உயிரையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த அமைப்பு மேற்கொள்ளவில்லையெனவும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.  என்ன நடக்கின்றது என்று நேரில் வந்து பார்க்காமல் தவறான பக்கத்தை குற்றம் சாட்டும் பிரயோசனமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நடேசன் கூறியுள்ளதாக “தமிழ் நெற்’ இணையத்தளம் தெரிவித்தது.

யுத்தத்தை நிறுத்துவதே இந்த நேரத்தில் தேவைப்படுவதாகும். அதற்கு இடமளித்துக் கொண்டு பொதுமக்கள் துன்பங்களுக்காக கவலை தெரிவிப்பது தவறான கொள்கையாகும் என்றும் நடேசன் கூறியுள்ளார். ஐ.நா.வின் கொழும்பு அலுவலகம் மற்றும் யுனிசெப் விடுத்த அறிக்கைகள் தொடர்பாக தமிழ் நெற்றுக்கு நடேசன் தெரிவித்திருப்பதாவது;

இடம்பெறும் யுத்தம் பொதுமக்களுக்கு சகல விதமான துன்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கப்பட வேண்டும். புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. அவர்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக உள்ளார்கள். ஆதலால் பொதுமக்களின் துன்பம் தொடர்பாக கரிசனையுடைய உலக அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசைக் கோர வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக யுத்தத்துக்கு இடமளிக்கும் கடுமையான நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. ஆனால், முழுமையாக தமிழருக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றது உண்மையாகும்.

கொழும்பின் யுத்தத்தை நியாயப்படுத்துவதும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலைப்படுவதுமான இரட்டைத் தனமான கொள்கை அடிப்படையில் தவறானதாகும். இந்தத் தவறான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள ஐ.நா. கடுமையாக உழைக்க வேண்டும். மனித உயிர் , கௌரவம், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல் என்பவற்றை மோதல் வலயத்தில் மட்டுமல்லாது முழுத்தீவிலும் உறுதிப்படுத்த பணியாற்ற வேண்டும்.

வன்னியிலுள்ள பொதுமக்களின் உடனடிக்கவலைகள், தாக்குதல் பயத்திலிருந்தும் விடுபடுவதும் மருந்து , உணவு, நீர் மற்றும் தமது கிராமங்கள் வீடுகளுக்கு அச்சமின்றி திரும்பிச் செல்வதுமாகும். இந்தக் கவலைகளுக்கு எதிராக புலிகள் செயற்படவில்லை. தற்காலிக மோதல் நிறுத்தக் கோரிக்கையைக் கூட கொழும்பு செவிமடுக்கவில்லை என்பதை ஐ.நா. நன்கறியும். உணவு, மருந்து விநியோகத்திற்கும் அனுமதியில்லை. ஆதலால் பொதுமக்களின் கவலைகளுக்கு பரிகாரம் காணும் விடயத்தில் ஐ.நா. தவறான விதத்தில் குற்றம் சாட்டுகிறது.

அத்துடன் 18 வயதுக்கு குறைந்த எவரையும் அமைப்பில் புலிகள் இணைத்துக்கொள்ளவில்லை. பொதுமக்கள் தமது சொந்த விருப்பத்திலேயே எமது பகுதிக்குள் இருக்கின்றனர்

Show More

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • துறைப்பொறுப்பாளர்
    துறைப்பொறுப்பாளர்

    மகிந்தவை பதவிக்கு கொண்டு வந்து இந்த நிலைக்கான புறநிலையை உருவாக்கி குடுத்தது உங்கள் மடைத்தனம் பாருங்கோ.

    Reply
  • துறைப்பொறுப்பாளர்
    துறைப்பொறுப்பாளர்

    இப்ப புலியின் நிலையை பாக்க ரெலோவை புலி 1985ல் கட்டைபிராயிலை சுத்திவளைச்சு சாத்தினமாதிரி கிடக்கு.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மகிந்தவை பதவிக்கு கொண்டு வந்தது தங்கள் இராஜதந்திரம் தான் என்று அப்போது புருடா விட்டவைக்கு, இப்ப அதே மகிந்த புலம்ப வைத்திருப்பது தான் காலத்தின் கோலம். அப்படியென்றால் இது என்ன தந்திரமெண்டதையும் ஒருக்கால் புரிய வையுங்கோவன்.

    Reply
  • Thaksan
    Thaksan

    ஆடின ஆட்டமென்ன? வாங்கின வரியென்ன? கட்டுநாயக்கா>வவுனியா>அநுராதபுரம்>…. அடிச்ச அடியள் என்ன? தலைகால் தெரியாமல் கனடாவிலும் யூரோப்பிலும் காட்டின காட்சிகள் என்ன? எல்லாம் விழலுக்கிறைத்த நீராய் போனதே. உலகின் நம்பர் 1 கெரில்லா இயக்கமாக கணிக்கப்பட்ட அமைப்பு இப்போ அநாதையாய் நிற்க என்ன காரணம்? அது ஒரு பயங்கரவாத அமைப்பாக கணிக்கப்பட்டதே!!! ஒரு இனச்சுத்திகரிப்பை(முஸ்லீம் மக்கள்) வெற்றிகரமாக நடாத்திக்காட்டி> தன் இனத்தின் தலைவர்களையே கொன்றொழித்து> அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து> மாற்றுக்கருத்தாளர்களை சுட்டுப் பொசுக்கி> சிறுவர்களை தற்கொலை குண்டுதாரிகளாக்கி> தனது மக்களையே மனித கேடயங்களாக்கி…… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்…. உலக நாட்டுத் தலைவர்களும் ஐ.நா.சபையும் என்ன வாங்கின காசுக்கு மாரடிக்கும் வை.கோ>திருமாவளவனா?

    Reply
  • padamman
    padamman

    ஏன் யுத்தநிறுத்தம்? யாருக்காக?
    இந்த யுத்தத்தை ஏன்? அன்று மாவிலாற்ரில் ஆரம்பித்திர்கள் அப்போது உங்களுக்கு தெரியாதா இப்படி அழிவுவரும் என்று?
    உங்களால் இந்த சண்டையில் வெல்லமுடியாது என்று தெரிந்தும் இறுதி வரை போராடுவோம் என்று சொல்லிக் கொண்டு யுத்தநிறுத்தம் வேண்டும் என்று வாய்கிழிய கத்துகின்றிர்கள்.

    Reply
  • palli
    palli

    நாம் மற்றவர்களிடம் எதை எல்லாம் எதிர் பார்க்குகிறோமோ. அதை எல்லாம் நாம் மற்றவர்களுக்கு கொடுக்காவிட்டாலும்.அவர்களை மதிக்க ஆவது செய்யவேண்டும். தமிழர் இன்று இந்தநிலைக்கு வந்ததுக்கு காரனம். சகல அமைப்பும்தான் அதில் முதல் இடத்தை போட்டியின்றி புலிகள்
    பெற்றுகொண்டனர் என்பதை அண்ணன் நடேசர் புரிந்து கொள்ள வேண்டும் தவறு செய்யும் ஒருவருக்கு சரியாக செயல் படுபவர்கள் எல்லோருமே தவறு இழைப்பதாக தெரியும். ஆகவே என்றுமே உங்கள் கொள்கைகளை சர்வதேசம் ஏற்றுகொள்ளாது.சர்வதேசத்தின் அறிவுரைகளை தாங்கள் செயல் படுத்த முடியமா?? என தேசியத்துடன் கலந்துரையாடுங்கள்.

    Reply