வவுனியாவில் ஆட்கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் தொடர்பாக பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்கள் கடத்தப்பட்டு அவர்களை விடுதலை செய்ய பெருந்தொகை பணத்தை கப்பமாக கோரிவந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
“புளொட்’ அமைப்பினரே இவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆட்களைக் கடத்தி அவர்களது குடும்பத்தவர்களை தொலைபேசி மூலம் மிரட்டி அவர்களை விடுதலை செய்வதற்கு இந்தப் பெண்ணும் அவரது குழுவினரும் பெருந்தொகைப் பணத்தை பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக புளொட் அமைப்புக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் இந்தப் பெண்ணைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Thaksan
வவுனியா ஆசுபத்திரியில இருக்குற காயம்பட்ட வன்னிச் சனத்துக்கு ரத்தம் குடுக்கினம்> பழங்கள்> போர்வைகள் குடுக்கினம்.. கப்பக்காரரை பிடிக்கினம் என்ன நடந்தது புளொட்காரருக்கு???? ஓ…கெதியில எலக்சன் வரபோகுதுபோல கிடக்கு!!!
Anonymous
முதலில் இவர்கள் தங்களால் மேற்கொள்ளப்படும் கப்பம் கொள்ளைகளை நிறுத்தட்டும். அதன்பிறகு அடுத்தவர்களை திருத்தட்டும்.
palli
தமிழீழ மக்கள் விடுதலை கழகமப்பா.