யுத்தம் இனநெருக்கடிக்கு தீர்வாக இருக்க முடியாது’ – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

chandrika-bandaranaike-kumaratunga-01.jpgஇலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தற்போது இடம்பெற்று வரும் யுத்தம் இன நெருக்கடிக்கு தீர்வாக இருக்க முடியாது என்றும் பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாடே இறுதியான சமாதானத்தை கொண்டு வரும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். இந்திய மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயரின் ராஜீவ்காந்தி; “மாற்றத்திற்கான காலம்’ என்ற நூல் தொடர்பான குழு ஆய்வு நிகழ்வு புதுடில்லியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் பங்கு பற்றிய திருமதி குமாரதுங்க, நெடிவ்கொம்மிற்கு இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதை நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அணுகு முறை பற்றியும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த வழியென்ன என்பது குறித்து அவர் நினைப்பது என்ன என்பது தொடர்பாகவும் கருத்துக் கேட்கப்பட்டபோது, நான் கூறுவதை கேட்க ஜனாதிபதி விரும்புவாரென நான் நினைக்கவில்லை என்று சந்திரிகா கூறியுள்ளார்.

ஆகக் குறைந்தளவு பாதிப்புடன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான அவரின் அபிப்பிராயம் பற்றி கேட்கப்பட்டபோது தமிழ் மக்களுடன் பேசுவதே ஒரே வழி முறையென்று கூறியுள்ளார். “இந்த மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாடு மட்டுமே இறுதித் தீர்வு’ என்றார் சந்திரிகா.

ராஜீவ் காந்தியின் கொள்கைக்கு அப்பால் 21 ஆவது நூற்றாண்டு சென்று விட்டதா என்பது தொடர்பான குழு நிலை ஆய்வில் கருத்து தெரிவித்த சந்திரிகா ராஜீவ் காந்தியினதும் அவரின் மதச் சார்பற்ற கொள்கைகளும் 21 ஆம் நூற்றாண்டால் தாண்டிச் சென்றுவிடவில்லை என்று கூறியுள்ளார்.  சூழ்நிலைகளால் அவர் நிலைவரத்தில் ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார். அது கறுப்பு ஜூலையென கூறப்படும் 1983 ஜூலை கலவர காலமாகும். அதனால், 6 இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். தமிழத்திற்கு சென்றனர். ராஜீவ் காந்தி அதிகாரத்திற்கு வந்த கால கட்டம் அதுவாகும் என்று சந்திரிகா கூறியுள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் ராஜீவ் காந்தியுடன் தான் அதிகளவு உரையாடியதில்லை என்று குறிப்பிட்ட சந்திரிகா, ஆயினும் இந்திய விஜயத்தின் போது பண்டிட் ஜவஹர்லால் நேரு தனது தந்தையாரான மறைந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவை பிள்ளைகளையும் அழைத்து வருமாறு வலியுறுத்தியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தரம்கெட்ட அரசியலுக்காக சமாதான காலத்தில் ரணிலின் அரசைக் கலைத்த அம்மையார் இப்போ யாருக்கு வேதம் ஓதுகின்றார். அம்மையார் ஆட்சிப்பீடமேறிய போது அரச பழிவாங்கலினால் பாதிக்கப்பட்ட பெண்மணி என்பதனால் தமிழருக்கு ஏதாவது விடிவு கிடைக்கும் என பெருண்பான்மையான தமிழர்கள் நம்பினார்கள். ஆனால் எல்லோருக்கும் ஆப்பு வைத்தார் அம்மணி. புலிகளுக்கும் அம்மணிக்குமிடையில் தோன்றிய முறுகல் நிலையால் முழுத்தமிழருக்கும் ஆப்பு வைத்த பெருமைக்குரியவர். தான் ஆட்சிக்கு வந்தால் அதிகாரப்பலமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பேன் என்று சொல்லியே ஆட்சிக்கு வந்தவர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி ஆட்சிமுறையை இறுகப் பற்றிக் கொண்டதோடு இரண்டாவது தடவையும் நீடித்து இருக்க திருட்டுத்தனமாக இரண்டாவது பதவிப்பிரமானமும் செய்து பின்பு மாட்டுப்பட்டவர். எல்லோருக்கும் ஆட்சியிலில்லாத போதுதான் ஞரனோதயம் பிறக்கும் போல!!

    Reply
  • Kullan
    Kullan

    யுத்தம் இனநெருக்கடிக்குத் தீர்வாக முடியாது என்றால் சந்திரியா அம்மையார் அப்போது என்ன செய்தார். யுத்தத்தைச் சுமூகமாகத்தீர்க்கிறேன் என்று வேட்டுக்கேட்ட வந்த அம்மையார் நடத்திச்சென்றதும் போர்தான். யாழ்பாண இடம்பெயர்வையும் அதன் பாதிப்பையும் நாம் மறக்கவில்லை. இன்றைய போருக்கே காரணமே இவரின் தகப்பனார்தான். வெளியிலை இருந்த வியாக்கியாணம் கதைக்கலாம். இருக்கும் போது என்ன செய்தார் என்பதை மறந்துவிட்டார் போலும்.

    Reply
  • பகீ
    பகீ

    இவை மட்டுமல்ல அவர் இன்னும் சில விடயங்களும் சொல்லி இருக்கிறார்…..
    http://www.indiaenews.com/india/20090218/179620.htm

    இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொழும்பு அரசுகளாலேயே கவிழ்க்கப்பட்டது!!

    1) ஒவ்வொரு ஸ்ரீலங்கா அரசும் தீர்வுத்திட்டங்களை வேலைசெய்யாமல் பண்ணுவதை உறுதிப்படுத்தும் விதமாகவே செயற்பட்டன. அத்துடன் தானும் பல சரத்துகலை செயற்படுத்தவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டார்.

    2) சிலவேளைகளில் 75% சிங்களவர்கள் எல்லாத்தமிழர்களும் புலிகளுக்கூ ஆட்ரவளிக்கின்றனர் என்கிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு வேறு வழியை அரசு வழங்காததனால் அவர்களுக்கும்ம் வேறு வழி இல்லை

    3) புலிகள் சில வகைகளில் அவர்களுக்கு (தமிழர்களுக்கு) கெளரவத்தை தருகிறார்கள். எனவே அவர்கள் புலிகளை ஆதரிக்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு வேறு வழி இல்லை. அவர்கள் தனி நாட்டையோ அன்றி பயங்கரவாதத்தையொ ஆதரிப்பவர்கள் என்றில்லை.

    இவை எல்லாம் நான் சந்திரிக்காவை நம்புபவன் (புத்திஜீவிகள்) என்றில்லை. கட்டுரையாளர் தவற விட்டு விட்டார் என நினைத்ததனால் தான் சொல்கிறேன். புலிகளே எல்லாவற்றையும் குழப்பினார்கள் என அறிவுஜீவிகள் சொல்வதையும் கருத்திலெடுக்கவேண்டும்.

    செம்மணியை மறக்க முடியுமா? இல்லை பிந்துநுவேவாவைத்தான் மறக்க முடியுமா?

    Reply