அரசாங்கமும் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் – இரா.சம்பந்தன்

sampanthan.jpgவிடு தலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பகிரங்கமாக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் முல்லைத்தீவில் சிக்கியுள்ள மூன்றை லட்சம் மக்களை காப்பற்றுவதற்காக அரசாங்கமும் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் (பெப். 17)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை வன்னியில் இரண்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 500 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் குடிநீர், உணவு மற்றும் மருந்து பொருட்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசு தமிழர்கள் மீதான நன்கு திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருக்கின்றது. உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு இந்த அழிப்பு போரை உடனடியாக நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டு மனம் நொந்த நிலையில் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாததன் நோக்கம் என்ன?. அந்த மக்களை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட அனுமதி வழங்கக்கூடாதா?.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து வெளியேறி வருகின்ற மக்களை விடுதலை புலிகள் கொலை செய்கின்றனர் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. விடுதலைப் புலிகள் எதற்காக மக்களை கொலை செய்ய வேண்டும்? அரசாங்கம் கூறுவது போன்று அவ்வாறு மக்களை புலிகள் கொலை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் காயமடைகின்ற மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை. கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன உடலங்களை புதைப்பதற்கு கூட முடியாத நிலை. அந்தளவுக்கு இடைவிடாத எறிகணை பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இனப் படுகொலைகளை சில அனைத்துலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இனப் படுகொலைகள் உலகில் எங்கும் இடம்பெற்றதில்லை என்றார் சம்பந்தன்.

கூட்டத்தில் தமிழ் எம்.பிக்கள் குழு தலைவர் மாவை சேனாதிராசா, யாழ். மாவட்ட எம்.பி. என்.சிறீக்காந்தா, திரிகோணமலை மாவட்ட எம்.பி. துரைரத்ணம், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கனகசபை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • murugan
    murugan

    காலம் கடந்த கையேந்தல். முப்பது வருடமாய் புலி அடித்த குத்துக் கரணங்கள் வன்னியில் பிணங்களாய் விளைகின்றன. புலிக்கு உரமூட்டி செருக்கேற வைத்த புலம் பெயர்ந்த உள்ளூர் விசுவாசிகளே அத்தனை பிணங்களும் உங்களுக்குத்தான். சும்மா முதலைக் கண்ணீர் வடிக்காதீர்கள். இப்பவும் யுத்த நிறுத்தம் பற்றித்தான் கேடகிறீர்கள். அரசியல் தீர்வைப் பற்றி கதையே இல்லை.

    Reply
  • palli
    palli

    தங்களை பற்றி பின்னோட்டம் விட கூட மனம் வரவில்லை. இன்று தமிழினம் படும் துன்பத்துக்கு நீங்களும் ஒரு காரனம். ஆகயால் அதை நிவர்த்தி செய்ய ஏதாவது செய்ய முடியுமா என உங்க கடந்த கால அனுபவத்தை பிரயோசன படுத்தகூடாதா??

    Reply