இலங்கைப் பிரச்சினையில் தெளிவான முடிவிலுள்ள ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா : சோ

cho_ramaswamy.jpgஇலங்கைப் பிரச்சினையில் மிகத்தெளிவான முடிவை எடுத்துள்ள ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என்று “சோ” இராமசாமி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பொதுமேடைப் பேச்சுக்களைத் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்து அதனை “கல்வியே கற்பகத் தரு” என்ற பெயரில் அலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது, இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், துக்ளக் ஆசிரியரும் பத்திரிகையாளருமான “சோ” இராமசாமி, நல்லி குப்புச்சாமி செட்டியார் கலந்துகொண்டனர். 

“சோ” இராமசாமி  இலங்கைப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகையில்,  காஷ்மீரில் இருக்கும் இராணுவத்தினரை உடனடியாக வெளியேறவும், அவர்களது நடவடிக்கைகளை நிறுத்தவும் பாகிஸ்தான் இந்தியாவைக் கேட்டுக்கொண்டால் எப்படி அபத்தமாக இருக்குமோ, அதேபோல்தான் இலங்கைப் போரை நிறுத்தச் சொல்லி இந்தியாவை வலியுறுத்துவது.  அந்த நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்த்து போர் நடந்துகொண்டுள்ளது.

இங்கிருந்து கூக்குரலிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.  இதனைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.  எந்த மேடையிலும் நான் தைரியமாகச் சொல்வேன். இதையே என்னை யாழ்ப்பாணத்தில் போய்ப் பேசச்சொன்னாலும் நான் பேசத் தயார். இலங்கைப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இந்தியாவில் சரியான முடிவை எடுத்துள்ள ஒரே அரசியல் கட்சித் தலைவர் ஜெயலலிதா மட்டுமே என்று பேசினார்.

Show More
Leave a Reply to பகீ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Thaksan
    Thaksan

    ஈ.பி.ஆர்.எல்.எவ்.> புளொட் அமைப்புகளுக்கு 84>85க்களில் கல்யாணசுந்தரம்> த.பாண்டியன்>பெங்களுர் குணா> போன்றோர் சமூக விஞ்ஞான வகுப்புக்களை போதித்தார்கள் என்றும் சோ.ராமசாமி>வை.கோ.>பண்டுருட்டி>எல்.கணேசன்> எஸ்.டி.எஸ். போன்றோர் இயக்க தலைமைகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாக இருந்தார்கள் என்றும் அறிந்ததாக ஞாபகம்.

    Reply
  • palli
    palli

    சோ அவர்களே பல்லியின் சாத்திரபடி தாங்கள் அ தி மு காவையும் இ..காங்கிரஸையும் வரும் தேர்தலில் இனைக்கும் புறோக்கர் வேலையை தொடங்கி விட்டது இந்த செய்தி மூலம் தெரிகிறது. ஜெயலலிதாவின் தகுதியை பாராட்டி உங்கள் தனி தகுதியை தாழ்த்தி கொண்டதையிட்டு மகிழ்ச்சி. அம்மையார் நாயகியாக நடித்த பலபடங்களில் தாங்கள் சிரிப்பு நடிகர்தானே அந்த விசுவாசமோ; …….தங்களையும் பாலசிஙத்துடன் சேர்த்து நாடு கடத்த ஒரு காலத்தில் இந்திய அரசு செயல்பட்டதை மறந்துவிட வேண்டாம்.

    Reply
  • பகீ
    பகீ

    இவர் இந்திய அரசுக்கு சப்போட் பண்ணுவது ஒன்றும் புதிதல்ல. அத்துடன் 1980 களின் ஆரம்பத்தில் ஈழம் பற்றிக் கேட்டபோது ‘இந்தியாவில் இருந்து பிழைப்புக்கு போனவர்களுக்கு தனிநாடு கேட்கும் உரிமை இல்லை” என்று சொன்ன அரசியல் ஞானப்பழம் இவர். இவரது அப்பேட்டி தினபதி என்ற ஸ்ரீலங்கா பேப்ப்ரில் வந்தது என நினைக்கிறேன்.

    Reply
  • Kathir
    Kathir

    It is true Mr.Thaksan. Before we thouht much about this culprits, very much as an advanced ideologist. Not only these people but also the socalled Naxalites are in the same board.

    Reply
  • BC
    BC

    பாலசிங்கத்துடன் சோ அவர்களையும் சேர்த்து நாடு கடத்த ஒரு காலத்தில் இந்திய அரசு செயல்பட்டதா? சோ ஒரு இந்தியர். தனது நாட்டுகாரரை எப்படி இந்தியா நாடு கடத்த முடியும்!?

    Reply