58 வது படையணி புதுக்குடியிருப்பு மேற்கை கைபற்றியுள்ளனர்

udayar-kattu-tmv.jpgஇரணுவத்தின் 58வது படைணி புதுக்குடியிருப்பு மேற்கை முற்றாக கைப்பற்றி அதன்பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6வது கெமுனு படையணி,8வது கெமுனு படையணி,12வது கெமுனு படையணி,11வது காலால் படையணி,10வது காலால் படையணி, 7வது சிங்கப் படைப்பிரிவு என்பன கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தாக்குதல் நடத்தி இப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். படையினர் இப்பகுதியை கைபற்ற ஏ-35 (பரந்தன்- முல்லைத்தீவு) பாதைக்கு வடக்காகவும் தாக்குதல் நடத்தியதுடன் பயங்கரவாதிகளின் கடும் எதிர்பு நிலைகளையும் பல நீர்நிலைத் தடைகளையும் தாண்டி இப்பகுதியை கைபற்றியுள்ளதாக களத்திலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலைத் தொடர்ந்து நடத்திய தேடுதலின் போது 28 பயங்கரவாதிகளின் சடலங்களைக் கைபற்றியுள்ளனர் இதில் 14 சடலங்கள் ரி-56 ரக துப்பாக்கிகளுடன் கைபற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு- மேற்கு, பரந்தன் நகருக்கு 18 கி.மீ.தொலைவில் உள்ளது. பயங்கரவாதிகளிடம் எஞ்சியிருப்பது புதுக்குடியிருப்பு நகரமாகும். கைபற்றப்பட்ட பகுதியின் பாதுகாப்பை படையினர் பலப்படுத்தி வருகின்றனர்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    (படித்த செய்திதான் தவறாயின் பல்லி பொறுப்பல்ல.)

    கிட்லரின் படையணிகள் சர்வதேச படையிடம் மெதுவாக மெதுவாக தோத்து கொண்டு போகும்போது கிட்லரின் நம்பிக்கைக்குரிய படை தளபதிகள் கிட்லருக்கும் ஊடகங்கள் மூலம் மக்களுக்கும் தமதுபடை அனைத்து (சர்வதேச) படையையும் தோற்கடித்து வெற்றியுடன் முன்னேறுகிறது என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்களாம். சர்வதேச படை கிட்லரின் படையை ஆக்கிரமிக்கும் இறுதி கட்டத்தில்தான் தாம் இதுவரை தோத்து கொண்டே வருகிறோம். ஆனால் மக்கள் தம்மீது நம்பிக்கை இழக்க கூடாது என்பதுக்காகதான் இதுவரை பொய்யான தகவலை ஊடக மூலம் மக்களுக்கு சொன்னோம் என கிட்லரிடம் சொன்னார்களாம். அதுக்கு கிட்லர் சொன்னாராம் இதை முதலே தனக்கு சொல்லியிருந்தால் எமது தாக்குதலை வேறுவழியில் தொடுக்க நான் யோசனை சொல்லியிருப்பேன். ஆனால் உங்கள் முட்டாள் தனத்தால் எனி எதுவும் செய்ய முடியாது ஆகவே எதிரியிடம் அகப்படமால் தொலைந்து விடுங்கள் என சொல்லி தொலைந்து போனவர்தான் கிட்லர். அந்த நினைவு முல்லைதீவை பல காலமாக பிடிப்பதால் பல்லிக்கு வந்தது. இது அரசபடைக்கு மட்டுமல்ல புலிப்படைக்கும் மிகவும் பொருந்தும்.

    Reply