தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதற்கான கோரிக்கைகள் அதிகம் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சர் யாப்பா இவ்வாறு கூறினார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தடைசெய்யப்படவேண்டுமென தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி தெரிவித்திருக்கும் நிலையில் அதுபற்றி அரசாங்கத்தினால் ஏதேனும் கலந்தாலோசனை செய்யப்பட்டிருக்கிறதா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா;
“அவ்வாறானதொரு விடயம் பற்றி அரசாங்கத்தினால் எந்தக் கலந்தாலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இதற்கு அதிக கோரிக்கைகள் இருக்கின்றன’ என்று கூறினார்.