ஓமந்தை முதல் ஆணையிறவு வரை 20 பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானம்.

srilanka-police.jpgவடக்கில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு 20 புதிய பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வவுனியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா ஓமந்தை முதல் ஆணையிறவு வரையான பிரதேசங்களில் இந்த புதிய பொலிஸ் நிலையங்கள் அமையவுள்ளதாகவும் கிழக்கு வன்னி என்ற பெயரில் பிரதான பொலிஸ் தொழில்பாட்டுப் பிரிவொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு பொறுப்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தீபால் தல்பதாதுவை நியமிக்க ஆலோசித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    கிட்டதட்ட(இது அந்த கிட்டதட்ட அல்ல) 85வீதமான இலங்கைவாழ் மக்கழுக்கு பொலிஸில் வேலைவாய்ப்பு இருக்கிறது. ஆக எம்நாட்டில் பொருள் ஆதாரம் கொடிகட்டி பறக்க போகுது.

    Reply