முல்லைத் தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் கப்பல்கள் மூலம் அழைத்துவரப்பட்டு திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த மற்றும் நோயாளர்களுக்கு தேவைப்படும் குருதித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கோடு திருமலை மாவட்ட ஈபிடிபியினர் இன்று இரத்ததானம் வழங்கியுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் இரத்ததானம் செய்ய விரும்பும் பொதுமக்களை இரத்த தானம் செய்யுமாறு பொதுவான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தனர். நேற்றைய தினம் ரெலோ அமைப்பினரும் திருமலை வைத்தியசாலையில் இரத்ததானம் செய்திருந்தனர். திருமலை வைத்தியசாலையில் 778 பேர் வன்னியிலிருந்து அழைத்துவரப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.