இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் நியமித்த விசேட பிரதிநிதியின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் மேலும் கூறியிருப்பதாவது.
இலங்கைக்கான பிரிட்டனின் விசேட பிரதிநிதியின் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. ஒரு தலைப்பட்சமாக இடம்பெற்ற இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென அதில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நியமனம் சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணானதென்றும் இவரது நியமனத்தில் முறையான இராஜதந்திர ஒழுங்குமுறைகள் பேணப்படவில்லையென்றும் அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.