இலங் கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசுகள் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகளினால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.
எனினும் அரசாங்கத்தின் முயற்சியை புலிகள் குறைத்து மதிப்பிட்டதால் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டோம் என பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.
பௌத்த சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக 5 நாள் விஜயம் மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்றுள்ள பிரதமர் நேற்று பெங்கொக் நகரில் அந்நாட்டுப் பிரதமர் அபிசிட் விஜ்ஜாஜிவாவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வடக்கிலுள்ள அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளை மேற்கொண்டபோதும் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் அவர்களைத் தொடர்ந்தும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றது. இலங்கையின் வட பகுதியில் இன்று புலிப்பயங்கரவாதிகள் குறுகிய பிரதேசத்துக்குள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளனர். இந்தப் பிரதேசத்தில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர முயற்சிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் மீது புலிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவகின்றனர் என்றும் பிரதமர் அங்கு மேலும் தெரிவித்தார்.
palli
இதுவரை(27வருடமாக) அரசை புகழ்ந்து பாடியா புலிகள் இருந்தனர். அரசியல்வாதி என்றாலே காமடி பண்ண வேண்டுமென ஏதாவது சட்டமுள்ளதா என்ன?