முல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் புதிய பாதுகாப்பு வலயம் ஒன்றை இன்று பிரகடனப்படுத்தியுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு ஏரிக்கு கிழக்கே உள்ள நிலப்பரப்பில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவே இப்புதிய பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முடிந்த அளவு விரைவில் பொது மக்கள் இந்தப் பாதுகாப்பு வலயத்துக்கு வந்து சேரவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.