முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னரும் இனப்பிரச்சினைக்கு மகிந்த அரசினால் தீர்வை முன்வைக்க முடியாதுள்ளது – ரணில்

ranil-wickramasinge.jpgநாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் என்ன தீர்வினை முன்வைத்துள்ளனரென கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவினை கைப்பற்றி யுத்தத்தில் வெற்றிபெற்றும் அரசினால் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டி பொதுச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

போர்வீரர்களின் வெற்றியை நிலைநாட்ட வாக்களியுங்கள் என ஜனாதிபதி வாக்கு கேட்டுள்ளார். இன்று போர்வீரர்கள் முல்லைத்தீவினையும் கைப்பற்றியுள்ள நிலையில் இனி ஏன் வெற்றிக்காக வாக்களிக்க வேண்டும்.  தம்மைப் பலப்படுத்தவே வாக்கு கேட்கின்றனர். மிகின் எயார், கொழும்பில் பாலங்கள் அமைத்தல் கிராமங்களில் மகநெகும, கமநெகும திட்டங்கள் முலம் அரசாங்கம் பணம் சம்பாதிக்கின்றது இதற்காகவே வாக்கு கேட்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். ரிவிர பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டார். சிரச எரிக்கப்பட்டது. லசந்த கொலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர், இதனையே மூன்று வருடமாக இந்த அரசு செய்தது. இவ்வாறு ஊழல் புரிந்த குடுகாரர்கள், கொள்ளையர்கள், ஏமாற்றுக்காரர்கள், கொலைகளை மூடிமறைக்க போர்வீரர்களது வெற்றியைக் காட்டி வாக்குக் கேட்கின்றனர். இதற்கு எதிராக இலங்கை தேசிய தொழிலாளர் முன்னணி ஐ.தே.க., முஸ்லீம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி அனைத்தும் இணைந்து எஸ். பி. திஸ்ஸநாயக்கா தலைமையில் ஒரு குழுவினரை நியமித்துள்ளோம்.

பொருட்களின் விலை அதிகரிப்பு, விவசாயமுலப்பொருட்களின் விலை அதிகரிப்பு இதற்கு மக்களுக்கு மானியங்கள் வழங்கப்படவேண்டும். இந்த நாட்டு மக்கள் ஜனநாயக உரிமைகளை, அரசியல் அமைப்பு உரிமைகளை பெற்றுக்கொள்ள ஐ.தே.க. வுக்கு வாக்களியுங்கள் இதற்காக திஸ்ஸநாயக்காவை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ன நடந்தாலும் மகிந்த அரசு இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. இந்த நாட்டைக் காப்பாற்ற ஐ.தே.க. ஆட்சியினாலேயே முடியும் எனத் தெரிவித்தார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    என்னது முல்லைதீவை கைபற்றியாச்சா?? எப்போது?? எப்படி?? சொல்லவே இல்லை.
    தலைவரே முல்லைதீவு சமாச்சாரம் புலியைவிட தங்களுடைய (ஜக்கிய தேசிசிசிய கட்ச்சியை) ஒரு உலுக்கு உலுக்க போவது தெரியாமல் தலைக்கு மேல் கையை தூக்கலாமா????

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ரணில் புலித்தலைவருடன் கூடிக் குலாவிய போது வெளியிட்ட நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிப்பு. தோண்டத் தோண்ட இன்னும் என்னென்ன வரப்போகுதோ?? இப்படியெல்லாம் நடைபெறப் போகின்றதை முக்கூட்டியே தெரிந்ததால்த் தான், ரணில் அவசர அவசரமாக போரில் வெற்றி பெறும் இராணுவத்திற்கும், அரசிற்கும் வாழ்த்து தெரிவித்தாரோ??

    Reply