முல்லைத் தீவு காட்டுப் பகுதியில் மறைவான முறையில் அமைக்கப்பட்டிருந்த கடற் புலிகளின் பாரிய தளம் மற்றும் கட்டடத் தொகுதி என்பனவற்றை நேற்றுக் காலை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படையினரின் இந்த கடுமையான தாக்குதல்களில் கடற் புலிகளின் பாரிய கட்டடத் தொகுதிகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான படகுகள் மற்றும் உழவு இயந்திரங்களும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கடலேரிக்கு வடக்கேயும், வெள்ளைமுல்லை வாய்க்கால் காட்டுப் பகுதியின் கரை யோரத்திற்கு மேற்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவிலும் இந்த முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் மற்றும் மிக் – 27 ரக தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நேற்றுக்காலை 7.00 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.