ஈழத் தமிழர்களை போரில் இருந்து காப்பாற்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கள்ளத் தோணியில் தூத்துக்குடியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றனர். கரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி, போராட்டம் நடத்தி வந்தனர். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் முல்லைத்தீவு சென்று பேராடுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் 6 பேரும், கரூர் வழக்கறிஞர்கள் 8 பேர் முருகையன் தலைமையில் முல்லைத்தீவு செல்ல முடிவு செய்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் 14 பேரும் தூத்துக்குடிக்கு முன்பு 3 கி.மீ. தொலையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் புறப்பட்டனர்.
முல்லைத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த முருகையனை தொடர்பு கொண்டு பேசியபோது, நாங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முல்லைத்தீவு சென்று விடுவோம் என்று தெரிவித்தார். வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் செய்வதை அறிந்த கடலோர காவல்படையினர் அவர்களை பிடிக்க விரைந்தனர். நடுக்கடலில் சுற்றி வளைத்த கடலோர காவல்படையினர் அவர்களை கைது செய்தனர்.
ஈழத்தமிழர்களுக்காக தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள செய்தி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களது விபரம் :
1 ) சுப.இராமச்சந்திரன் ,(தூத்துக்குடி)
2) முருகையன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் )
3) நடேசன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர்)
4 ) நெடுஞ்செழியன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )
5) முகமது பரூன் ஹக் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )
6) சின்னச்சாமி ( கரூர் )
7) லெட்சுமணன் ( கரூர் )
8 ) முருகேசன் ( கரூர் )
9) சுதாகர் ( கரூர் )
10 ) வேலுச்சாமி ( தூத்துக்குடி )
11 ) அரிகரன் ( தூத்துக்குடி )
12)பொன்ராசு ( தூத்துக்குடி )
13) இரகு (( தூத்துக்குடி ) மாணவர் திமுக மாவட்ட அமைப்பாளர் )
14 ) தூத்துக்குடி வழக்கறிஞர்
மதுரையில் வக்கீல்கள்-காங். பயங்கர மோதல்: அடிதடி, கல்வீச்சு, கடையடைப்பு
மதுரையில் வக்கீல்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பெரும் மோதல் மூண்டது. அவர்களுக்கும், காங்கிரஸாருக்கும் இடையே ஏற்பட்ட பெரும் அடிதடியால் பல கடைகள் தாக்கப்பட்டன. கல்வீச்சும் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தினசரி ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்டவற்றை அவர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் காங்கிரஸாரையும் குறி வைத்து அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வக்கீல்கள் போராட்டம் நடத்துவதை கண்டித்தும், காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனின் வீடு, அலுவலகங்கள் தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் மதுரை மாவட்ட கோர்ட் முன்பு வக்கீல் பெருமாள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து கோர்ட்டு வளாகத்துக்குள் இருந்த வக்கீல்கள், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்களையும், காங்கிரசாரையும் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு எச்சரித்தனர். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக வெடித்தது.
இரு தரப்பினரும் போர்க்களத்தில் மோதுவது போல கைக்குக் கிடைத்த பொருட்களை எடுத்து வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர். கற்களாலும் சரமாரியாக வீசித் தாக்கிக் கொண்டனர். வக்கீல்கள், காங்கிரஸாரின் இந்த கல்வீச்சால் அந்தப் பகுதியில் இருந்த சில கடைகள் சேதமடைந்தன. இதையடுத்து கடைகள் அனைத்தும் வேகம் வேகமாக அடைக்கப்பட்டன.
பார்த்திபன்
உண்மையில் புலிகளின் கையாட்களாக இன்று அவர்களிடம் பணம் பெற்று இயங்கும் மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் தமிழகத்தில் பலவழிகளில் அமைதியைக் கெடுக்க இப்படியான செயற்பாடுகளை தூண்டிவிடுகின்றார்கள். இதன் மூலம் காங்கிரஸாருக்கும் திமுகவிற்கும் நெருக்கடிகளைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கின்றார்கள். அதை கையாள்வதற்கு இவர்கள் காட்டும் படம் தான் இலங்கையில் போர் நிறுத்தம் என்ற கோசம். உண்மையில் இவர்களுக்கு இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டுமென்பதை விட தமிழகம் இன்று அமைதிப் பூங்காவாக இல்லை என்ற நிலையை ஏற்படுத்தவே முயல்கின்றார்கள். வன்னியில் போர் முடிந்தாலும் தமிழகத்தில் அதனை வெவ்வேறு விதமாக தொடர்வார்கள் இவர்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் இவர்களை கண்டிப்போடு கையாள மத்திய அரசு காட்டும் தயக்கம் இவர்களுக்கு தைரியமாக அமைகின்றது. எனவே இப்படியானவர்களுக்கு தமிழக மக்கள் தான் எதிர்காலத்தில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
M S Pillai
கைது செய்தது நல்லதாய்ப் போயிற்று எந்த ஒரு இந்தியனும் ஈழத்தமிழருக்கு உதவமாட்டான் . படம்காட்டி தன் வயிற்றுப்பிழைப்பை நடத்துற கூட்டமது. இவர்களின் இந்த ஸ்டண்ட் விளையாட்டுக்களைப் பார்த்து நாம் சந்தோசப்படக் கூடாது. சிங்களவனை விட எந்த ஒரு இந்தியனையும் எம்தாய்மண்ணில் கால்பதிக்க விடக்கூடாது.
மு ச பிள்ளை
palli
பல்லிக்கு கவலைதான்….
உன்மையில் முத்துகுமரனின் தியாகம்கூட கேலியாகி விடுமோ என பல்லிக்கு பயமாக உள்ளது. 1984ல் நெடுமாறன் இலங்கை (ஈழம்) போக கடக்கரை வந்தார் .அவரை கடக்கரைகாத்து வாங்கிய பின் பொலிசார் கைது செய்து அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டதாக அன்று படித்தோம். இன்று 14பேர் 15 மைல் தூரம் ஈழம்நோக்கி போனதாக செய்தி ஆக25வருடம் தாண்டியும் இவர்கள் கடக்கரை காத்தைதான் சுவாசிக்கின்றனர். போனவர்கள் அனைவரும் வக்கில்கள் இவர்கள் நினைத்தால் இந்திய வெளியுறவு அமச்சர் மீது கூட வழக்கு தொடரலாம்.அதை விட்டு எது முடியுமோ அதை செய்யாமல் .முடியாதைதை செய்து தமது பலவீனத்தை காட்டுவது சரியல்ல.சில வேளை இவர்களை இந்திய அரசு அப்படியே அந்தமானுக்கு நாடுகடத்தி விட்டால். இவர்கள் குடும்ப நிலையை எண்ணி பார்க்க வேண்டாமா??
பார்த்திபன்
பல்லி ஏன் அந்தமானில உள்ளவர்களாவது நிம்மதியாகவிருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையோ?? இவர்கள் அங்கு போயும் படம் காட்டத் தானே பார்ப்பார்கள்.
accu
இவர்கள் போகமுதலே பொலிசுக்கு சொல்லிப்போட்டுதான் போவினம். உவர்கள் முல்லைதீவு போய்ச் சேர்ந்திருந்தால் நிலமையை கற்பனை பண்ணிப்பாருங்கள். சங்குதான்!
புரியவில்லை
சிங்களவனை விட எந்த ஒரு இந்தியனையும் எம்தாய்மண்ணில் கால்பதிக்க விடக்கூடாது./ மு ச பிள்ளை.
— பிள்ளைவாள்!!,”போஸ்ட் கலோனியல் கருத்து”,நன்றி!. அமெரிக்கா, ஜெர்மனிக்கு அடுத்து, இந்தியாவில்தான் மருந்து பொருட்கள் அதிக உற்பத்தி இலங்கைக்கு விற்பனையாகின்றன, அமைதிப்படை காலத்திலேயே இதை ஏஜென்சி எடுத்து விற்ற (போர் அவலங்களுக்கு), தெலுங்கு, கன்னட மற்றும் இலங்கையே பார்க்காத, “இலங்கைத் (என்.ஜி.ஓ.)தமிழர்கள்” இன்று கோடீஸ்வரர்கள். இடைத்தங்கல் முகாமில் செத்துக் கிடந்த “ஏழைச் சிறுமி”யின் தாய் அவளை டாக்டராக்க வேண்டும் என்று விருப்ப படக்கூடாதா?, நீங்கள் மட்டும்தான் விருப்பபடவேண்டுமா? -உடல் சிதற மட்டும்தான் ஆசைப்பட வேண்டுமா?. . பெரும்பாலான தமிழகத்தமிழர்கள் இதில் இலாபமடைவதில் முன்னேரவில்லை- இரக்கம் காரணமாக இருக்கலாம்?- சும்மா இப்படி கத்திக் கொண்டிருப்பார்கள் அவ்வளவுதான். உங்களால் சிறிதுகாலத்திற்கு இந்திய-தமிழ்த் திரைப்படம் பார்க்காமல் இருக்கமுடியுமா?, உங்கள் “தாய் மண்ணில்?” உங்களால்தான் இப்போது கால் வைக்க முடிகிறதா?. அல்லது தமிழீழம் கிடைத்தால், இந்தியாவின் “அசோக் லேலண்ட்” வாகனங்களை வாங்காமல்தான் விட்டு விடுவீர்களா?. ரொம்பத்தான் கிச்சு,கிச்சு மூட்டுகிறீர்கள் போங்கள்.