வவுனியா வுக்கான யாழ்தேவி கடுகதி ரயில்சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் வவுனியா வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த சில தினங்களாக இந்த சேவை மதவாச்சி வரையுமே நடத்தப்பட்டு வந்தது. இதேவேளை, இரவு தபால் ரயில்சேவை தொடர்ந்தும் மதவாச்சி வரையுமே நடைபெற்று வருகிறது. யாழ்தேவி ரயில் சேவையும், இரவு தபால் ரயில் சேவையும் பாதுகாப்பு காரணங்களால் கடந்த சில மாதங்களாக மதவாச்சி வரையுமே நடத்தப்பட்டு வந்தது.
எனினும், கடந்த டிசம்பர் மாதம் யாழ்தேவி சேவை மட்டும் வவுனியா வரை நீடிக்கப்பட்டது. இதேவேளை, நாடு முழுவதும் நடத்தப்படுகின்ற ரயில்சேவைகளின் நேரங்களில் சில மாற்றங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.