இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்காக இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண கோரியும் சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு,
இலங்கை தமிழர்களுக்காக காங்கிரசும், தி.மு.க.வும் பல முனைகளில் போராடி உள்ளன. இந்த பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக பலநேரங்களில் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இலங்கை பிரச்சினைக்காக இப்போது குரல் கொடுக்கும் கட்சிகளே அப்போது கிடையாது.
இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து ஆயுதம் சப்ளை செய்யப்படுகிறது. தமிழர்களைக் கொல்வதற்காக இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை என்பதை இந்த மேடையில் பட்டவர்த்தனமாக சொல்கிறேன். மத்திய, மாநில அரசுகளுடன் அனைவரும் ஒத்துழைத்தால்தான் தமிழனைக் காப்பாற்ற முடியும் என்றார்.
palli
தம்பி தங்கபாலு நீங்க நினைப்பதுபோல் ஆயுதம் என்பது சையிக்கிள் செயின் ; கத்தி அருவாள் ; சோடா புற்றல்; கல்; அல்ல என்பதனை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது வேறு விதமான ஆயுத சமாச்சாரம். தெரியாவிட்டால் முந்திரியம் விதைபோல் விம்பபடாது ஆமா.