புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிப்பதே இன்றைய முதற்பணி – ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி அறிக்கை

sangari.jpgsitharthan.jpgsritharan.jpgவன்னியில் சிக்கியிருக்கும் மக்களை தாம் விரும்பிய பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு புலிகள் எதுவித நிபந்தனைகளுமின்றி அனுமதிக்க வேண்டுமென ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரம் அந்த மக்களை பேரவலத்திலிருந்து மீட்பதே இன்றைய முதன்மையான பணியென்றும் மேற்படி கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் வீ. ஆனந்தசங்கரி, தி. ஸ்ரீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வன்னியில் பேரவலத்தினுள் சிக்குண்டுள்ள மக்கள் பற்றிய கவலை மனிதநேயமுள்ளவர்களின் மனச்சாட்சியை உலுக்கி நிற்கிறது.

வன்னியில் பரந்து வாழ்ந்த இம்மக்கள், மாதக்கணக்கில் பணயமாக கொண்டு செல்லப்பட்டு இன்று 200 சதுர கி.மீ.க்கு குறைவான நிலப்பரப்பில் ஒடுங்க, ஒதுங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அன்றாடம் காயமும் மரணமுமென்று அவர்கள் சாவுக்கும் வாழ்வுக்குமிடையே அகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதேவேளை அரசாங்கம் அந்த மக்கள் பாதுகாப்பாக வந்து சேர்வதற்கு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு இருக்கின்றது என்பதை உணரும்படியாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதாவது, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இந்த மக்கள் கடந்த 15 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். ஏதோவொரு வகையில் புலிகளுடன் சம்பந்தப்பட்டு வாழ வேண்டிய துரதிர்ஷ்ட நிலையே இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு வாய்த்திருந்தது. இதனால் அவர்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகிறது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய புலிகளின் பொய்யான பிரசாரங்களும் அந்த மக்களை பீதிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. மேலும், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஒருசில சம்பவங்களும் அவர்களிடம் இந்த தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்கள் ஐ.நா. நிறுவனங்களின் கண்காணிப்புடன் அல்லது ஒத்துழைப்புடன் பராமரிக்கப்படல் வேண்டும்.

ஜனநாயக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் இம்மக்கள் தொடர்புகொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

வயோதிபர்கள் தமது உறவினர்கள் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உறவினர் யாராவது அருகிலிருந்து உதவுவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும்.

மரணப் பொறியில் அகப்பட்டிருக்கும் இந்த இலட்சக்கணக்கான மக்களை மீட்பதில் உரிய அழுத்தங்கள் சர்வதேச சமூகத்தாலும், குறிப்பாக இந்தியாவாலும் பிரயோகிக்கப்படல் வேண்டும். காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்கள், தற்போது முகாம்களில் இருப்பவர்கள், இனிமேல் வரவிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் உரிய கட்டமைப்பு வசதிகள், ஏற்பாடுகள் விரிவாக திருப்திகரமாக செய்யப்படல் வேண்டும்.

இந்தக் காரியங்களை செய்வதன் மூலமே மக்களின் மனக்காயங்களை ஆற்ற முடியும். பேரவலங்களில் இருந்து அவர்களை மீட்க முடியும்.

அவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.

Show More
Leave a Reply to kula Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • padamman
    padamman

    உடனடியாக செய்யவேண்டிய முதல்பணி இலங்கை மக்கள் எல்லோரும் சேர்ந்து இதை செய்யவேண்டும்

    Reply
  • palli
    palli

    இவர்கள் புகைபடம்கூட தனிதனிதான் இவர்களா ஒற்றுமையாக செயல்பட போகிறார்கள். இருப்பினும் இவர்கள் மட்டுமல்ல மற்றய அமைப்புகளும் இனைந்து மக்களுடன் சேர்ந்து வன்னியில் அகப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்க முன்வரவேண்டுமன சம்பந்த பட்டவர்களிடம் வேண்டி கொள்கிறேன்.

    Reply
  • santhanam
    santhanam

    இவர்கள் மக்களின் உண்மையான மனிதர்கள் துவக்குக்கு பயந்த கோளைகள் அல்ல விடுதலை போரட்ட முன்னோடிகள் புலம்பெயர்ந்து பிறகு விடுதலைக்கு உளைத்து தனிமனித துதிபாடி மேடையை காப்பாற்றியவர்கள் அல்ல.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இவர்கள்கள் கற்சிலைகள் தான். எந்த சூறைக்காற்றும் இவர்களை ஒன்றும் செய்துவிட போவதில்லை. அந்த நம்பிக்கையில் தான்சில புலம்பெயர் உள்ளங்கள் நின்மதி அடைகிறது.

    Reply
  • kula
    kula

    இவர்கள் புகைபடம்கூட தனிதனிதான் இவர்களா ஒற்றுமையாக செயல்பட போகிறார்கள்//பல்லி

    பத்மநாபா சிறீசபாரத்தினம் பிரபாகரன் பாலகுமார் இவர்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தார்கள் இவர்கள் ஒற்றுமையாக செயற்ப்பட்டார்களா?

    படங்கனளவிட செயல்கள் தான் ஒற்றுமையை காட்டவேண்டும்

    Reply
  • புரியவில்லை
    புரியவில்லை

    /தீவிரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது எங்களுக்கு எந்த வித இரக்கமும் கிடையாது. அவர்களை ஆதரிக்க முடியாது. இங்கும் (இந்தியா), இலங்கையிலும், பல்வேறு உலக நாடுகளிலும் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு ஒவ்வொரு ஆண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.அதே நேரத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்துக்கு இடையே போர் முனையில் சிக்கி உள்ள 2 லட்சம் அப்பாவி தமிழர்கள் மீது நாங்கள் இரக்கப்படுகிறோம்.விடுதலைப்புலிகளுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும் இடையே வேறுபாட்டை கண்டு கொள்ள வேண்டும் என தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் அரசியல் கட்சி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.சமீபத்தில் நான் இலங்கை சென்று வந்த பிறகு 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அப்பாவி மக்கள் வருவதற்காக பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.அந்த பகுதியில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறோம். போர் முனையில் சிக்கியுள்ள மக்களை பாதுகாக்குமாறு இலங்கையை இந்தியா வலியுறுத்துகிறது. /— இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள்.நார்வேயின் அணுசரணையை ஏற்கனவே இந்தியா அங்கீகரித்திருக்கிறது,சமீபத்திய 48 மணி நேர போர்நிறுத்தத்தை ஏன் இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.இந்தியா பல தலைகள் கொண்டது,அதில் ஒரு தலை(பிரணாப் முகர்ஜி)அன்புடன் நெருங்கி வந்ததை,அனுபவங்கள் மூலமாக இன்னுமா பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

    Reply
  • palli
    palli

    //பத்மநாபா சிறீசபாரத்தினம் பிரபாகரன் பாலகுமார் இவர்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தார்கள் இவர்கள் ஒற்றுமையாக செயற்ப்பட்டார்களா?//

    இந்த படம் எடுக்க இந்திய சில தலைவர்கள் பட்டபாடு இருக்கே. ரவிக்குமார் பெரியகுடும்பம் படத்தில் முடிவில் எடுக்கும் புகைபடத்தை விட அவஸ்த்தை. இது தோழருக்கும் தெரியும்.

    ஒரு பத்து மாதங்களுக்கு முன்பு பாரிசில் முக்கட்ச்சி ஒன்றினைந்து செயலாற்றும் மகாநாடு நடந்தது. அதில் வேடிக்கை என்னவெனில் மகானாடு நடந்த மறுநாள் வவுனியாவில் ஒரு டெலோ நண்பரை கழக கண்மணி கொலை செய்துவிட்டது. இதை மகாநாடு நடத்திய மிக முக்கியமான கழக கண்மணியிடம் ஜெர்மனுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது .அவர் சொன்னார் புலம் பெயர் தெசத்திதான் கூட்டு நாட்டில் இல்லையென. இப்போது புரியுதா தனிபோட்டோ விபரம். இந்தியாவுடன் பேசமாற்று அமைப்புகளான சிலரை அரசு அனுப்ப முற்பட்ட போது சங்கரிஜயா வயித்துவலி காரனமாய் போக மறுத்ததும் .இதே தேசத்தில் பலர் பாராட்டியதை கவனிக்கவில்லையா?? இவர்கள் தாமாக சில நல்லது கெட்டதுகளுக்கு கூட(தனிபட்ட) போகமுடியாது. தோழராவது அமைச்சரவையில் இருப்பதால் சில விடயத்தில் வாய் மூடியிருக்கலாம் (தவறுதான்) இவர்களுக்கு என்ன…?

    Reply
  • seelan
    seelan

    இது நல்லவிடயமே. ஏன் இவர் வவுனியாவில் இடைதங்கல் முகாமில் (தடுப்புமுகாம்) இருக்கும் மக்கள் தாம் விரும்பிய இடத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றூ இவர்களின் எஜமானிடம் கேட்கவேஇல்லை

    Reply
  • பகீ
    பகீ

    சிறீலங்கா அரசு உதவி நிறுவனங்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இவ் “அகதிக் கிராமங்கள்” மூன்று வருடங்களுக்கு தொடரும் எனவும் அவற்றுள் வங்கி , தபால் அலுவலகம் போன்றவை இருக்கும் எனவும் கூறியுள்ளது சங்கரிக்கு தெரியாது போலும். அல்லது இக்கிராமங்களில் மக்களை அடைத்தால் டக்ளஸ் தீவுப்பகுதிகளில் ”பெரும்பான்மை” வாக்குகளால் வெல்வது போல் தாமும் வெல்லலாம் என கனவு காண்கின்றனரோ?

    Sri Lanka is preparing to house 200,000 civil war refugees at five huge “welfare villages”—complete with post offices, banks and libraries—where it expects them to stay for up to three years, according to a government plan.
    The draft plan, which the government has circulated among international aid groups and donors in recent days, surfaced as tens of thousands of civilians fled the northern battlefield where Tamil Tiger rebels and government forces have been waging heavy battles.

    http://www.breitbart.com/article.php?id=D969GUDO1&show_article=1

    Reply
  • accu
    accu

    நண்பர்களே! ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிறீதரன் [ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி] டக்ளஸ், [அமைச்சர்] முரளீதரன், [பாரளமன்ற உறுப்பினர்] சந்திரகாந்தன்,[முதல்வர்] இவர்களுடன் இன்னும் யார் யார் உங்களுக்கு பிடிக்காதவர்களோ அவர்கள் எல்லோரையும் ஒன்றாய் சேர்த்து அவர்கள் இன்று செய்யும் மனிதவிரோதச் செயல்கள், சந்தர்ப்பவாதக்கூட்டு, துரோகங்கள், இன்னும் என்னென்ன தமிழருக்கு எதிரான செயல்கள் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவற்றை எல்லாம் கூட்டி பிரபாகரன் [தேசியத்தலைவர்?]இன்று புரிந்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் [வன்னி]விரோதச் செயல்களுடன் ஒப்பிடுங்கள். அவை வெறும் கொசுறு என்பதை உணர்வீர்கள். உயிரை எடுக்கும் கொடிய விசம் உடலில் பரவுவதை தடுப்பது எப்படியென முதலில் சிந்தியுங்கள். தலையிடி தடிமனை பிறகு பார்க்கலாம்.

    //இவ் “அகதிக் கிராமங்கள்” மூன்று வருடங்களுக்கு தொடரும் எனவும் அவற்றுள் வங்கி , தபால் அலுவலகம் போன்றவை இருக்கும் எனவும் கூறியுள்ளது // பகீ; முப்பது வருடங்கள் கொடுமைக்கு கீழ் வாழ்ந்தவர்களுக்கு இது பெரிய கடினமாய் இருக்காதென நம்புகிறேன். புலிகளை முற்றாக அழித்து கண்ணிவெடிகள் அகற்றி மக்களை மீள்குடியேற்றம் செய்ய மூன்று வருடங்கள் தேவையில்லையா?.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புதியதொரு சட்டம் உருவாக்கப்பட்டு புலம்பெயர் தமிழர்களும் தபால்மூலம் வாக்களிக்கலாம் என்று ஒருநிலை வந்தால்புலி தலைவரே தலைவராக வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. டக்களஸ் ஆனந்தசங்கரி தமிழ்மக்களுக்கு பாடுபட்ட தலைவர்கள் எல்லோரும் இடம் தெரியாமல் மறைந்து விடுவார்கள். இதுதான் இன்றைய நிலை. புலபெயர் நாட்டில்லுள்ளவர்களில் அநேகம் பேர் அப்பு ஆச்சி எல்லோரையும் எதோ ஒருவழியில் தம்மோடு இழுத்து வைத்துக் கொண்டிருப்பவர்கள். செல்லடி குண்டடி துப்பாக்கிசூடு பட்டினி சாவுகள் இடபெயர்வு அகதிமுகாம் போன்றவற்றை மறந்தவர்கள் மறக்கப் பழகிவிட்டவர்கள். தம் தற்போதைய வாழ்வை வைத்து கற்பனை ஈழத்தை கனவு காண்பவர்கள். வன்னிமக்களின் உருவகோலத்தை கண்டுமனம் வருந்தாவர்கள். ஆகக்குறைந்தது த.தே.பா. உ, புலித்தவர்களின்…… இவர்கள் எவ்வளவு தூரம் மக்களுக்கு பயன்யுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை ஒப்பிட்டுபார்க விரும்பாதவர்கள்.

    Reply
  • palli
    palli

    புலியை விட கூட்டு அமைப்பு எவ்வளவோ மேல் என்பதில் பல்லிக்கு உடன்பாடு கிடையாது. புலி தலமைதான் பிரச்சனை. ஆனால் கூட்டில் தலையிருந்து கால்விரல் வரை பிரச்சனை. புலிசெய்யும் தவறை நாம் சுட்டி காட்டுகிறோம். அப்படி இவர்களை சுட்டிகாட்ட முடியுமா??? இன்று வன்னியில் பிரச்சனை அதுபுலியால்தான் ஏற்பட்டது. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் வன்னியில் இருப்பதெல்லாம் புலியல்ல என்பதை ஏன் புரிய மறுக்கிறீர்கள்.

    சங்கரியை எம்பியாக்கிய பலஆயிர மக்கள் இதே வன்னியில் இரு மிருகங்களாலும் கொடுமையை அனுபவிக்கும் போது தனது மாவட்ட மக்களுக்காக குரல் கொடுக்காமல் கொழும்பில் ஜந்து நட்செத்திர அறையில் காத்து வாங்கி கொண்டு மகிந்தா சொல்லுவதின் மறு ஒலிபரப்பை ஆங்கிலத்தில் விடுவதை எப்படி உம்மால் நியாயபடுத்த முடியும். இவர்கள் அன்று கூட்டனியில் பதவியில் இருந்தபோது இவர்களது அறைவரை (சாரதி) சந்திக்கவே மாதகணக்காய் தவம் கிடந்ததை பல்லி மறக்கவில்லை. இவர்களது ஒற்றுமை சாத்தியபடுமென நம்புவது உமது உரிமை. கருணா எப்படி இவர்களை கண்டுபிடித்தீர். இவரது பார்வையில் இன்றய பிரச்சனை பிள்ளையானை என்ன செய்வது என்பது தான். சில மனிதருக்கு எமது மக்கள் பற்றி பேசவே அருகதையில்லை. அதில் முதலிடம் கருணாவுக்குதான் ஆக இவரும் கூட்டில் இருப்பது நல்லதுதான். டக்கிளஸ் இவருக்கு நீர் சொன்னது போல் தலியிடி தடிமனுக்கும் விஸாத்துக்கும் அறவே வித்தியாசம் தெரியாதவர். அதுக்கு சான்று சமீபகால அவரது செயல்கள்.

    ஜ த தே கூ சொல்லவே வேண்டாம். எந்தவிதமான கொள்கைகளும் இல்லை ஏதாவது பேப்பரில் கைஎழுத்து இடுவது; அல்லது ஏதாவது அரசுக்கு சார்பாக சொதப்புவதுதான். எந்தவிதமான அதிகார செயல்களும் இவர்களால் முடியாது. கிழக்கு முதல்வர் மிக விரவில் பதவி விலகி முன்னாள் கிழக்கு முதல்வர் பட்டத்துடன் ……. பாவபட்ட மனிதன் .இப்போது விடயத்துக்கு வருகிறேன் ஏன் தமிழர் என்றால் இந்த கூட்டையோ அல்லது புலி கூத்தையோ மட்டும் நம்ப வேண்டும். எப்படி ஒரு சிவபாலன் யாழ்மேயராக வந்தாரோ அதேபோல் ஆயிரக்கணக்கான சிவபாலன்கள் மக்கள் மத்தியில் இரு மிறுகத்துக்கும் பயந்து ஒழிந்து இருக்கிறார்கள். அந்த பயத்தை போக்கினாலே தமிழர்க்கு மிக அருமையான நிர்வாகிகள் கிடைப்பார்கள்.

    இந்த ஜனனாயகவாதிகள் மிக ஆபத்தானவர்கள் .இதே தேசத்துக்கு எதிராக (தமது வண்டவாளங்கள் வந்துவிட போகும் பயத்தில்) 74பேர் கைநாட்டு போராட்டம் சில வன்முறை எதோ தம்மால் முடிந்ததை நாம் கண்முன்னே பார்த்ததை மறக்க முடியுமா? மக்கள் நிர்வாக சாத்தியமா??கண்டிப்பாக சாத்தியம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஒவ்வொருவரும் உங்கள் ஊரில் இருக்கும் திறமைசாலிகள்; சமூகசேவகர்களை நினைத்து பாருங்கள் இவர்கள் செய்யும் சிலம்பாட்டம் புரியும். படம் எடுத்தாதான் பாம்பு அல்ல(புலி) படமெடுக்காவிட்டாலும் பாம்பு பாம்புதான் (அச்சு சொன்னவர்கள்)
    பல்லி.
    ———————-
    //புலம்பெயர் தமிழர்களும் தபால்மூலம் வாக்களிக்கலாம் என்று ஒருநிலை வந்தால்புலி தலைவரே தலைவராக வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை//

    சந்திரா என்னஇது. கவனமாக. புலம்பெயர் புலிகளை கவனிக்கும் தாங்கள் அவர்களில் 95வீதம் பேர் இலங்கை குடியுரிமையை இழந்தவர்கள். அதாவது இருக்கும் நாட்டு குடியுரிமை(பாதுகாப்பாக) பெற்றவர்கள் என்பது தெரியாதா??? சிலநாட்டில் தற்போதைய ஊர்வலத்தில் நம்நாட்டு அரசே, இலங்கை அரசை தட்டிகேள் என முழக்கமிடுவதை மறு ஒலிபரப்பிலாவது கேழுங்கள் .அவர்களுக்கு வன்னி பிரச்சனை பொழுதுபோக்குதான்.
    பல்லி.

    Reply
  • accu
    accu

    பல்லி எனது பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்ட நபர்கள் நல்லவர்கள் என்பதோ அல்லது அவர்கள் பின் நாம் அனைவரும் அணிவகுக்கவேண்டும் என்பதோ என் கருத்தில்லை. இன்று வன்னியில் நடக்கும் சகிக்கமுடியாத கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் எனக்குள்ள ஒரே நோக்கம். அங்குள்ள குஞ்சுகள், குருத்துக்கள், அனைவருமே காக்கப்பட வேண்டும். அதுதான் எனது ஏக்கம். இன்று யாழ்ப்பாணத்தில், வவுனியாவில், கிழக்கில், கொழும்பில் என ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் கொலைகள் என்னைப் பாதிக்கவில்லை. சங்கரியார் ஐந்து நட்சத்திர விடுதியில் காற்று வாங்குவதோ, டக்ளஸ் யாழ்ப்பாணத்தில் நாளைய தேர்தல் வெற்றிக்கு இன்று மேற்கொள்ளும் ஆயுத்தங்களோ, கருணா கொழும்பில் டிஸ்கோவில் போடும் குத்தாட்டங்களோ எனக்குத் தேவையில்லை. ஏன் மகிந்தா நாளைக்கு தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு தரப்போகிறார் என்பதில் கூட எனக்கு நாட்டம் இல்லை.

    எங்கள் மக்களை மனிதவிரோதிகள் ஆயுதமுனையில் ஓரிடத்தில் குவிக்க அவர்களை எதிரிகள் குண்டு வீசி கொன்று குவிக்கும் இந்த ஈவுஇரக்கமற்ற யுத்தவிளையாட்டு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதற்கு என்ன வழி. //ஆயிரக்கணக்கான சிவபாலன்கள் மக்கள் மத்தியில் இரு மிறுகத்துக்கும் பயந்து ஒழிந்து இருக்கிறார்கள். அந்த பயத்தை போக்கினாலே தமிழர்க்கு மிக அருமையான நிர்வாகிகள் கிடைப்பார்கள். //
    எப்படி பயத்தைப் போக்குவது? யாரவது அறிவுரை தாருங்கள் அக்கு நிச்சயம் பங்களிப்பேன். புலம்பெயர் மக்களின் மனநிலைக்கு ஒரு உதாரணம். எனது வேலைத்தளத்தில் எனது மேற்ப்பார்வையாளர் ஒரு தமிழர், மிக நல்லவர், படித்தவர், நமது நாட்டுப் பிரச்சனை பெரிதாக தெரியாது. ஒரு நாள் அவரது அலுவலக அறையில் நாமிருவரும் மட்டும் கதைத்துக்கொண்டு இருக்கும் போது என்னிடம் நாட்டில் என்ன நடக்கிறது எனக் கேட்டார். நானும் அன்றைய சில செய்திகளை கூறிவிட்டு புலிகள் செய்த சில தவறுகளையும் அதனால் ஏற்ப்பட்ட பாதகமான விளைவுகளையும் சொல்ல முனைய அவரின் முகம் பயத்தால் வெளுறியது. என்னை நிறுத்தும்படி சொல்லிவிட்டு கேட்டார். தனக்கு கேட்கவே பயமாய் இருக்கிறது உமக்கு புலிக்கெதிராய் கதைக்கப் பயமில்லையோவென்று? நான் சொன்னேன் இத்தனை மைல்களுக்கு அப்பால் ஒரு அந்நியநாட்டில் இந்த மெசின்களின் இரைச்சல் மத்தியில் நான் சொல்லுவதைக் கேட்பதற்க்கே உங்களுக்கு ஏற்ப்படும் பயம்தான் புலிகளின் வெற்றியென்று.

    Reply
  • பகீ
    பகீ

    பல்லி, சந்திரன்…
    பாலஸ்தீன பிரச்சினையில் தீர்க்கமுடியாமல் திணறும் முக்கிய அம்சங்களில் ஒன்று புலம்பெயர்ந்தவர்களின் வாக்குரிமைப் பிரச்சினை. பல லட்சம் பாலஸ்தீனியர்கள் புலம்பெயர்ந்து பக்கத்து நாடுகளில் பல தலைமுறைகளாக வாழ்கின்றனர். அவர்களையும் பாலஸ்தீன தீர்வில் பங்களிக்க அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீன விடுதலை அமைப்பு கோருகிறது ஆனால் இஸ்ரேலோ இல்லை போனவர்கள் போனவர்கள் தான் என்கிறது. இஸ்ரேலின் நடவடிக்கை சரி என்கிறீர்கள் போல் இருகிறது!

    இன்னொன்று ஸ்ரீலங்காவில் இரட்டை பிரஜாவுரிமை உண்டாமே. 1,00,000 ரூபா கொடுத்தால் பாஸ்போட் கொடுப்பார்களாமே. ஸ்ரீலங்கா மத்திய வங்கி 500 மில்லியன் டொலர் கடன் கேட்டு புலம்பெயர் ஸ்ரீலங்கர்களிடம் கையேந்துகிறதே!
    ————-
    பல்லி,
    நீங்கள் அறை வரை தவம் கிடந்தீர்கள். எனது பெற்றோரிடம் உள்ளூர் கூட்டணி அமைப்பாளர் வங்கி உத்தியோகம் வெற்றிடம் இருக்கிறது எம்பி யிடம் சொல்லி இருக்கிறேன் மகனை சென்று அவரிடம் கதைக்கச்சொல்லவும் என சொன்னார். எனது பெற்றோர் போய் கதை என நெருக்கினர். ஆனால் தமிழீழம் காண அனுப்பியவர்களிடம் எப்படி வங்கி உத்தியோகம் காட்ட சொல்லுவது என நினைத்த எனது ‘கொள்கைப் பிடிப்பு’ (இவ்வாறுதான் எனது கழகத்தோழர்கள் சொல்வார்கள்) இடம் கொடுக்கவில்லை. ஆனால் போகாவிட்டால் வீட்டில் சோறு தண்ணி கிடைக்காது என சாடைமாடையாக அறிவிக்கப்பட்டது. அதனால் எம்பி அலுவலகத்தடியில் சைக்கிளில் ரவுண்ட் அடிச்சு முகத்தைக்காட்டி விட்டு வீடுவந்து ”பெருமையுடன்” எம்பியுடன் கதைத்ததாக பொய் சொன்னேன்.
    பின்நாட்களில் உள்ளே நடந்த வங்கி, இந்திய மருத்துவ பீட அனுமதி மற்றும் இன்னோரன்ன தில்லுமுல்லுகளை அறிந்தேன். இன்றைய சங்கரியின் நடத்தைகள் ஒர் சாம்பிள்தான்!

    Reply
  • palli
    palli

    அச்சு உமது மனனிலைதான் பல்லிக்கும். அதனால் தான் பல இடையூறகள் பல்லிக்கு வந்தும் எம்மால் கண்டிப்பாக ஒரு நல்ல நிர்வாகத்தை
    தமிழ் மக்களுக்கு கொண்டுவர ஒரு கோடு போடமுடியும். இதை நான் தோழரிடமும் சங்கரி ஏன் கருனா தவிர்ந்த பலரிடம் உங்களது மக்கள் சார்ந்த நிர்வாகத்தில் அமைப்பு இல்லாத கல்விமான்களை இனைக்கும்படி வற்புறுத்தி வருகிறேன். பல்லி மட்டும் சொன்னால் போதுமா,,???

    இன்றும் பாருங்கள் தோழர் அமைப்பு ரத்ததானம் எனஒரு விடயத்தை படித்தேன். பாராட்டபட வேண்டிய செயல். ஆனால் எனக்கு அவர்களது செயலில்(ரத்ததானம்) உடன்பட்டாலும் அதை அமைப்பு பெயரை சொல்லி விளம்பரம் தேடுவது சரியா?? ஏன் இவர்கள் மக்களையும் ல்விமாஙளையும் இனைத்து பாதிக்கபட்ட மக்களுக்கு அமைப்பு வேறுபாடின்றி அமைப்பு பெயரின்றி செயல்பட விரும்பவில்லை. இவர்கள் அமைப்பு பெயரை அடிக்கடி சொல்லுவதால் பொதுமக்கள் இவர்களுடன் இனைய பயப்பிடுவது நியாயம்தானே. அமைப்புகளும் பொதுவானதாக மாறவேண்டும் என்பது பல்லியின் அவா மட்டுமல்ல .அச்சு போன்ற உனர்வாளரது நோகமும் என்பது அச்சுவின் பகி சந்திரா இப்படி பலரது பின்னோட்டந்தில் தெரிகிறது.
    பல்லி

    Reply
  • palli
    palli

    சந்தோசம் பகீ பல்லி மட்டும்பெற்ற இன்பம் பலர் பெற்றதை இட்டு. இது எத்தனை தமிழர்க்கு தெரியும் என்பதுதான் பல்லியின் ஆதங்கம்.காரனம் பல்லி எப்போதும் யதார்த்தத்தை மட்டுமே மதிப்பவன். காரனம் கடந்தகால அனுபவம்.
    பல்லி.

    Reply
  • பகீ
    பகீ

    ஆம் பல்லி ..ஆமோதிக்கிறேன்..ஏனெனில்… பகீ எப்போதும் யதார்த்தத்தை மட்டுமே மதிப்பவன். காரணம் மாற்றுக்கருத்து, ஜனநாயகம், கொள்கை, உள்வீட்டு புடுங்குப்பாடு, கூட்டணி எல்லாம் ஜனநாயகப்போர்வையில் குளிர்காய்ந்த கடந்தகால அனுபவம்.

    Reply