அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 2வது முறையாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவியேற்பு விழாவின் போது, பதவி பிரமாண வாசகத்தை உச்சரிக்கும் போது குளறுபடி ஏற்பட்டதால் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஹிலாரி கிளிண்டனும், 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். துணை அதிபர் ஜோ பைடன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஹிலாரியின் கணவரான முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மகள் செல்சியா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.