ஜேர்மனில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல்

flag_german.jpgஜேர்மனிய தலைநகர்  பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதன் காரணமாக தூதரகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • Somu
    Somu

    தலைவன்/ தொண்டர்கள்/ அவனுக்கான ஊடகங்கள் எல்லாமே ஒட்டுமொத்தத்தில் முட்டாள்கள் தான். நாளை ஊர்வலத்துக்கு ஆட்சேர்ப்பு இன்று தூதரகம் உடைப்பு. ரஜீவ் கொலையிலிருந்தாவது பாடம் கற்கவேண்டாமா…

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பயங்கரவாதத்தின் வாரிசுகள். எவன் பேரினவாதத்தை ஆயுதபலத்தால் வென்று தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று தருவான் நம்பினார்களோ எவன் தமிழ்மக்களை அகதிகளாக்கி உலகத்தை சுற்ற விட்டதுமல்லாமல் உள்நாட்டிலேயும் அலைய விட்டானோ எவன் சகோதர இனத்தை வாழ விடாமல் அவர்களின் பொருள்களை சூறையாடி துரத்திக் கலைத்தானோ தன்னால் தன்னம் தனியாக சாதிக்க முடியும் என்று மாற்று இயகத்தினை சதி நடவடிக்கையால் கொலை செய்வித்தானோ எவன் தன்சொந்த இனத்து இரண்டரை லட்சம் மக்களை தனது கடைசி ஆட்டத்திற்காக பயணம் வைத்து ஆடுகிறானோ அவனின் ஆதரவாளரான குட்டி பயங்கரவாதிகளாலேயே இது நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
    தமிழ் மக்கள் நாகரீகம் இல்லாத மனிதகளாக காட்டியவர். இங்கு வந்துமா நாகரீகத்தை கற்றுக் கொள்ளாமல் விசமச் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் ?.

    Reply
  • thurai
    thurai

    விடுதலைப்புலிகளா அல்லது படுகொலைப் புலிகளா என்பதை உலக்ம் அறியும் காலமிது.

    துரை

    Reply
  • palli
    palli

    துரை நான் உங்கள் கருதுடனே எப்போதும் உடன்படுபவன். ஆனால் இன்று புலியை விட எம்மக்களை சிங்கத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டிய தார்மீகம் நமக்கு இல்லையா?? தயவு செய்து முயற்சி செய்யவும்.

    Reply
  • பகீ
    பகீ

    பல்லி நீங்கள் சொல்வது போல புலியை விட எம்மக்களை சிங்கத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டிய தார்மீகம் நமக்கு இன்றுதான் வந்தது என்றில்லை என்றுமே இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் எல்லோரும் இவ்வளவு நாளும் புலி இருக்கிறது என்கின்ற துணிச்சலில் பல விடயங்களை பல தலைப்புகளில் பல சொல்லாடல்களின் பின்னே இருந்து அலசி ஆராய்ந்து எமது கல்விமான்தனங்களை காட்டிவிட்டு இன்று இது நேரமல்ல என கலங்கிநிற்கிறோம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லி தயவு செய்து சொல்லுங்கள். சிங்கத்திடம்மிருந்து மக்களை எப்படி பாதுகாப்பதது? முகமாலை பூநகரி மாங்குளம் மன்னார் வவுனியா திருகோணமலை மட்டக்கிளப்பு அம்பாறை கொழும்பு மலையகம் போன்றவை மக்கள் பாதுகாக்கபடாமல் சிங்கம் பிடிச்சு தின்று கொண்டிருக்கிறது என கருதுகிறீர்களா? தண்ணீர் தொட்டிமாதிரி பங்கர்களைகட்டி வைத்து பங்கருக்கு மேலே ஓலை வேய்ந்திருந்தால் குடியாவன் குடிமகனைப் பாதுகாப்பவன் என பொருள்படுமா? தப்பிஓடுபவர்களுக்கு மரணதண்டனை என்ற நிலையிலேயே வன்னிமக்கள் .தப்பிஓட புறப்பட்ட இரண்டுபேரை பிடித்து புதுகுடியிருப்பு ஆஸ்பத்திரி வளவுமரத்தில் தூக்கில் போட்ட சம்பவம் நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?.சரி அது வதந்தியாகவே இருக்கட்தும். இதற்கெல்லாம் தயங்காதவர்களா? புலிகள். திருமால்வளவன் வை. கோபாலசாமி தரத்திற்கு நீங்கள் இறங்கியிருப்பது கவலைக்குரியது.

    Reply
  • palli
    palli

    பகி உன்மதான் அதில் எமது பங்கும் உண்டுதானே.

    சந்திரா நீர் சொன்ன தப்பியோடியவர்களுக்கு தண்டனை என்னும் விடயத்தை பின்னொட்டமாக விட்டதே பல்லிதான். ஆகவே எனது நோக்கம் புலியல்ல. மக்களை புலியை போல் அரசும் அடாவடிதனமாக செயல்படுவதை அன்று புலியை வேடிக்கை பார்த்ததுபோல் பார்க்க வேண்டுமா?? திரும்பவும் சொல்லுகிறேன் புலியை உங்களைவிட வெறுக்கிறேன். இன்று புலியைவிட அரசை வெறுக்கிறேன். புலி எம்மை கொல்லும். அரசு எமது குடும்பத்தையே அழிக்கும்.

    Reply
  • mutugan
    mutugan

    வன்னியில் எல்லாம் முடிந்துவிட்டது. பிரபாகரன் எந்தெத் திசைநோக்கி ஓடித்தொலைந்தாரோ- அது எல்லாம் வல்ல அவரது எஜமானர்களுக்கே வெளிச்சம்! அவரது இருப்பிடம் மட்டும் அநாதவராகக் கிடக்கிறது! இலங்கை இராணுவம் மக்களை மேய்ந்து வருவதுபோன்றே அவரது இருப்பிடத்தையும் மேய்ந்து-மோப்பம் பிடிக்கிறது.

    இந்நிலையில் வன்னி நிலைமையோ அப்பாவி மக்களையும் அடிமட்டப் புலிகளையும் பலிகொடுக்கும் பலிப்பீடமாக மாறியுள்ளது! இதுவரை பிராபாகரன் செய்த அத்தனை வேள்விகளும் சேர்ந்து இனி மக்களைச் சிங்களப் பாசிச இராணுவத்திடம் பெருந்தொகையாகப் பலிகொடுப்பதுதாம் பாக்கியாக இருக்கிறது!

    இதைக்கூடத் தடுத்து நிறுத்த வக்கற்ற புலிகளின் பெருந்தொகையான போராளிகளின் இன்றைய அவலம் மக்களைக் கேடயமாக்கிறது. புலிகளுக்கு நன்றாகவே தெரியும் தாம் அடியோடு அழிக்கப்பட்டுவருவது. எனினும் வன்னியில் மக்கள் புலிகளைக்காத்த பாவத்துக்காகப் புலிகளோ செய்யும் நன்றிக் கடன் என்னவெனில் அதே மக்களைப் பலிகொடுப்பதாக இருக்கிறது! உலகத்தில் எங்கேயும் இனங்காண முடியாத துரோகம் இது! புலிகள் எதைச் செய்தாலும் அது மக்களின் நலனுக்கென நம்பும் புலம்பெயர் தமிழ் (வி)தேசிய மனதுக்கு எதைச் சொல்லிப் புரியவைப்பது?

    இப்போதுள்ள கள நிலைமைப்படிச் சிங்கள இராணுவம் அனைத்து வளங்களையும் புலிகளிடமிருந்து பறித்துவிட்டது. இருக்கும் போராளிகளையும் ஒருத்தர்விடாது பலிகொடுப்பதற்காகப் புலிகள் செய்யும் “போக்குக்காட்டும் போர்” மிக விரைவில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிவோடு முடிவுக்குக் கொணரப்படும். அப்போதாவது இந்தப் புலிகளின் கூச்சல் அடங்கி விடுமா? சிறிரங்கன்.

    Reply