தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பி. களுக்கு தமிழ் மக்களிடையே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் வெளிநாடுகளில் தலைமறைவாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்று கூறி தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தமக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:- புலிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வெளிநாடுக ளுக்குச் சுற்றிவந்த இவர்கள் தமது தொகுதிக்குக் கூட சென்றது கிடையாது. புலிகள் படுதோல்வி அடைந்து வரும் நிலையில் எமக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூட கூறத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடு விக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை சொல்லவில்லை இது தமிழ் மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும்.
அங்கு சிக்கியுள்ள மக்களை விடுவிக்குமாறு சகல தரப்பினரும் புலிகளைக் கோரி வருகின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த மக்கள் குறித்து எது வித கவலையும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும் – இரா.சம்பந்தன்
“விடுதலைப்புலிகள் தற்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழந்து விட்டார்கள் என்பது உண்மை. ஆனால்,விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும், இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்’. “லங்காதீப’ பத்திரிகைக்கு என்னைப் பேட்டிகண்ட செய்தியாளர் “விடுதலைப் புலிகள் தோல்வி கண்டுள்ளார்கள். இனி உங்கள் நிலை என்ன’ என்று கேட்டார். அதற்கு இவ்வாறே பதிலளித்தேன் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்; “நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் காணி உரிமைகளை வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. பிரபாகரன் பிறப்பதற்கு முன்பே இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் ஆரம்பமாயிற்று. பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இலங்கைத் தமிழரின் அரசியல் மற்றும் காணி உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுவந்தது. இலங்கைத் தமிழ் மக்களின் இந்த உரிமைப் போராட்டம் இனியும் தொடரும். இதில் மாற்றம் இல்லை’ என்றார்.
பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐ. நா. அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை – ஜெயனந்தமூர்த்தி
வன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என தமிழர் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு காணப்படும் சர்வதேச அதிகாரம் மற்றும் பொறுப்புணர்ச்சி உரிய முறையில் வெளியிப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட போதிலும் அதனை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்காத ஓர் போக்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனச்சுத்திரிகப்பு அரசாங்கமொன்றின் கைப்பொம்மையாக ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் வன்னிப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், முக்கிய சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் அமைப்பு தமது தார்மீகப் பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இனச்சுத்திரிகரிப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Ambalavarner
புலிக்கு கொடுத்த பணம் பற்றியும் அவை பாவிக்கப்பட்ட விதங்கள் பற்றியும் பணம் வழங்கியவர்களுக்கு தெரிவிப்பார்களா – நீர்தானே புலிகளின் பணத்தை இந்தியாவரையில் கொண்டு போவதாக புலி நண்பர்கள் பேசுகிறார்கள்.
chandran.raja
மண்டையில் வெடிவிழும் என்ற பயத்தைதவிர எந்த பெரிய குற்றமும் புரியாதவர்கள். புரிந்த குற்றம் சிறுகுற்றம் என்னவென்றால் சொந்தவாழ்வை மேம்படுத்த பாராளமன்ற கதிரைக்காக ஆசைப்பட்ட சிறு குற்றம் தான். மற்றவர்கள் செய்யாதையா அவர்கள் செய்தார்கள்?.மக்கள் சேவை போராட்டம் என்று சொல்லி அவர்களை கூச்சப்படுத்தாதீர்கள்.
palli
பண கணக்கல்ல.. பிண கணக்கும் சொல்ல வேண்டும்.
எதுக்கும் 22கூத்தமைப்பும் ஆயிதமாக இருங்கள். இல்லையேல் அதுக்கு முன்னாடியே எங்காவது போய் அகதி ஆகுங்கள். எங்களை அகதி ஆக்கிய நீங்கள் அகதி மட்டையுடன் திரிவதை எமது இனம் பார்க்கவேண்டாமா??
padamman
புலிவால் பிடித்தால் 22 கூத்தமைப்பு உறுப்பினர்கள் பட்டபாடு அவர்களுக்குதான் தெரியும்.சரி இனிமேல்லாவது நண்பர்களிடம் ரகசியமாக சொல்லுவதை வெளியில் எல்லோரிடமும் சொல்லவேண்டும்.
பகீ
1982 இல ஸ்ரீலங்கா அரசு இவர்களிடம் தமிழீழ கொள்கைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் எடுக்க கோரி பாராளுமன்ற பதவி நீக்கியபோது மொத்த குடும்பத்துடன் எம்ஜிஆர் ஓச்யில் கொடுத்த மாளிகையில் இந்தியாவில் போய் இருந்த ஆனந்த சங்கரி இப்போது எள்ளி நகையாடுகிறார் கேளுங்கள் வெறும் பாராளுமன்ற ஆசனம் பறிபோனதற்கே கொழும்பில் கூட இருக்க பயந்து ஓடியவர். இப்போது சொந்த தொகுதி அது இது என்று விடுகிறார்.
thurai
கிடைத்த பதவிகளை சாகும் வரை, பிறரிற்கு விட்டுக்கொடுக்க மனம் இல்லாத தலைவர்களே ஈழத்த்மிழரின் அழிவிற்கு முதற்காரணம்.
துரை
Thaksan
சங்கரிக்கு இப்ப விரோதி டக்ளஸ் மட்டும் தான். யாரை சந்திக்கப் போனாலும் டக்ளஸ் செய்த> செய்கிறதாக நம்பப்படுகிற மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டு பைல் பண்ணி கொடுக்கிறாராம். யாழில் தன்னை தேர்தலில் வெல்ல விட மாட்டார் எண்ட பயம் தான். இதையே நெடுக சொல்லுறதால இப்ப அவரை சந்திக்க எந்த முக்கியஸ்தர்களும் விரும்புறதில்லையாம். நீங்களும் டக்ளஸ்க்கு போட்டியா யாழ்ப்பாணத்தில போய் நிக்கிறத விட்டிட்டு சும்மா அண்டல் வேலை பார்த்து திரிஞ்சா யார்தான் உங்கட கருத்தை கேட்பினம்? சரியோ பிழையோ டக்ளஸ் அரசாங்கத்தோட சேர்ந்து தானும் அடிச்சு மக்களுக்கும் ஏதோ செய்யுறார். உமக்கு கிடைத்த ஐ.நா. விருதில(ஒரு கோடி ரூபா) ஒரு ரூபாவை தானும் கஸ்டப்படுற சனத்துக்காக செலவழித்தீரா? உமக்கெல்லாம் ஒரு அரசியல்….ஒரு கருத்து…… சித்தரும் சிறிதரனும் உம்மோட கூட்டுச் சேர்ந்ததை பற்றி இனியாவது யோசிக்கட்டும்.
chandran.raja
தக்சன்; உங்கள் கருத்து சிரிக்க வைத்தாலும் சிந்திக்கவும் வைக்கிறது. நான் ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள்.ஆனந்தசங்கரி அவர்கள் யுனஸ்கோ விருது கிடைத்த பிறகு பிரதம விருந்திராக ஸ்சுட்காட் கூட்டத்திற்கு வந்திருந்தார். யாழ்.இந்துக்கல்லூரின் உங்கள் மாணவன் என என்னை அறிமுகப்படுத்தி அவரிடம் ஒரு கேள்வி கேட்கேட்டேன். கேள்வி இதுதான்.ஐயா! மார்கழி இருபத்திஏழுயை விதவைகள் உயிர் இழந்தவர்கள் தினமாக பிரகடனப்படுத்துங்கள் என்று அதற்கு அவர் சொன்ன பதில்; இது உண்மையாக இருந்தால் அதை மக்களே செய்வார்கள் என்று சொல்லி என்னை விலத்தி சென்றார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் முடிந்தால் புலிகளையும் அரவணைத்து செல்லவே விரும்பியதே அவரின் அரசியல் போக்கு. இந்தப் போக்கு சரியா? பிழையா என காலம் தான் பதில் சொல்லவேண்டும். எப்படியிருந்தாலும் அவரின் அனுபவம்வும் ஆற்றல் அறிவும் இன்னமும் இலங்கை சிறுபான்மை இனங்களுக்கு தேவைப்படுகிறது.
mutugan
ஆமாம் நல்ல வேளை ஞாபகப்படுத்தினீர்கள். யாழ்ப்பாணத்திற்கு பிரச்சாரத்திற்கு ஆனந்தசங்கரி போகும் போது அந்தக் காசு எங்கே என மக்களை கேட்க சொல்லி நினைவூட்ட வேண்டும். அந்த ஒரு கேள்வியே கூட்டணிக்கு சாவு மணி அடிக்க போதும்.
பார்த்திபன்
இப்ப உந்தக் கூத்தமைப்புக்கு உள்ள ஒரே கவலை. இலங்கை அரசு பாராளுமன்றத்தைக் கலைக்காமல் 5 வருடம் பூர்த்தியாகும் மட்டும் விட வேண்டும். அப்படி விட்டால் தான் இவைக்கு காலாட்டிக் கொண்டிருக்க குறைஞ்சது மாதம் 18`000 ருபா பென்சன் வரும்.
பகீ
mutugan காசைப்பற்றி பி.பி.சி யில கேட்டதற்கு சங்கரி தனக்கு ஏற்கனவே செலவு செய்த கடன் தொகை நிறைய இருக்கு எண்டு சொன்னதை கேட்கவில்லை போல! அதோட மறக்காமல் தென் ஆபிரிக்காவில காந்தி சிலைக்கு முன்னால சேர்ந்து நிண்டு படம் எடுத்துப்போட்டு ஊருக்க வந்து சேரமுதலே ஏன் டக்ளசை பற்றி விமர்சன கடிதம் எழுதினியள் எண்டும் கேளுங்கோ.
பகீ
பார்திபன், இப்ப ஒரு குறிப்பிட காலம் பார்லிமென்ற் போகாட்டி பதவி இழப்பு/பென்சன் இழப்பு எண்டெல்லாம் இல்லையோ? சும்மா வெளிநாட்டில ஒழிச்சு இருந்தால் பென்சன் கிடைக்குமோ?
உது மட்டுமில்லை இன்னும் கனபேர் புலியளைச் சாட்டி மாதாமாதம் பிக்கப், ரெலிபோன், அலுவலகம், சாப்பாடு, ட்ரைவர் எண்டு கன விளையாட்டுகள் காட்டினவை. கெதியில இதெல்லாம் கிழியப்போகுது உங்கால வந்தால் என்ன செய்யலாம் எண்டு புலம்பெயர்ந்த தங்கட அமைப்புக்காரரிட்ட கதைக்க தொடங்கி விட்டினம்.
gobi
கூட்டணிக்காரரிட்டை அவங்ட சில்லறைக் காசுக்கு கணக்கு கேளுங்கோ தப்பில்ல. புலியின் பெயரில் பில்லியன்கணக்கில் சேர்த்த காசுகளுக்கும் சேர்த்தவங்களிடம் கணக்குக் கேளுங்கோ. அதுவும் தப்பில்ல.
palli
சங்கரியர் விருது வாங்க போன இடம் பரிஸ் என நினைக்கிறேன். அவர் போன விருதை வாங்கி கொண்டு ஜேர்மனுக்கு ஒன்றாய் ஓலமிடுவோம் என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொல்ல வந்திருந்தார். பல்லியும் பூராடம் பார்க்க சென்றது. உன்மையில் அதன்பின் தான் எனக்கு தெரியும் சங்கரியரை ஜேர்மனுக்கு வரவழைச்சது அவரது சம்பந்தி குமாரதுரைதான் என. அந்த கும்மாழத்தில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்தது. அதை பின்பு பார்ப்போம். அதில் ஒரு பாரிஸை சேர்ந்த நண்பர் சொன்னார். சங்கரியருக்கு பரிசுடன் ஒரு பணமுடிச்சும் கொடுதார்களாம். அதை பாரிசில் உள்ள ……..இடத்தில் வைத்து பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தாராம். இதில் இவரது மகன் கனடாவில் இருந்து வந்தவர் அடக்கம். ஆனால் அவர் கனடாவில் புலியின் ஏரியா பொறுப்பாளராம். இதைவிட கொடுமை என்னவெனில் இவரையும் இவரது ஆட்களையும் சில தினங்கள் பராமரிக்கும் பொறுப்பை பாரிசில் உள்ள ஜயா விசுவாசிகள் மீது செலுத்தி விட்டாராம். அதை விட இவரது விருது பொறுக்கும் நிகழ்வில் 70 தமிழரும்; 250சிங்களரும் கலந்து சிறப்பித்தார்களாம். இப்போ புரியுமே யார் இந்த தாதாவென.
தொடரும் பல்லி.
பார்திபன்
பகீ வெளிநாடு சுற்றிக் கொண்டிருக்கும் கூத்தமைப்பினர பாராளுமன்றத்தில் 3 மாதம் விடுப்பு எடுத்து நிக்கினம். இதை நீங்கள் ஊடகங்களில் பார்க்கவில்லையா?? இந்த 3 மாதங்களுக்குள் நிலைமை மோசமானால் இப்ப தங்கியிருக்கற அந்தந்த நாடுகளில் அகதியாகப் பதிந்து விடலாம் என்றும் எண்ணுகின்றார்கள். இவர்கள் ஏற்கனவே தமது மனைவி பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பதும் எல்லோரும் அறிந்தது தானே..
பகீ
கஜன் பொன்னம்பலம் பார்லிமண்ட் போய் 3 மாதத்டுகு மேலாகுது எண்டு நினைக்கிறன். சிவாஜி லிங்கம் இந்தியாவுக்கு போயே 3 மததுக்கு மேலாகுது. அவர் இந்தியாவில அசைலம் கேட்டு விட்டார். பத்மினி, கஜேந்திரன், அரியநேந்திரன் எல்லாம் ஊரை விட்டு வெளிக்கிட்டே 3 மாததுக்கும் மேலால போட்டுது. அப்ப பென்சனுக்காக தலையை பிக்கிறகதையை எங்க பொறுக்கினியள்?
பார்த்திபன்
பகீ குறிப்பிட்டளவு பாராளுமன்ற கூட்டங்களில் இவர்கள் கலந்து கொள்ளாமல் விட்டால் பதவி பறி போகும். அவர்கள் கலந்து கொள்ளாது விட்டதற்கும் போதிய காரணம் காட்டினால் தப்பி விடலாம். ஏற்கனவே ஒருவருக்கு இப்படிப் பதவி பறி போனது தெரியும் தானே. அதற்கும் கூட இருந்த சிலரே குழிபறித்தாக செய்தி வந்தது. மேலும் நீங்கள் குறிப்பிடும் கூத்தமைப்பு எம்பிக்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் தங்கியிருக்கவில்லை. இடையில் இலங்கை வந்தே சென்றுள்ளனர். பென்சன் விடயமாக சம்பந்தர் போன்றோரின் நிலைப்பாடு என்று சில ஊடகஙகளில் செய்தி வந்ததை நீங்கள் அறியவில்லையோ??