புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்

anbhazagan.jpgஇலங்கை அரசு 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?. இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது. புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார் அன்பழகன்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • thurai
    thurai

    வன்னியில் பலிக்கடாவாகி அல்லலுற்று அழியும் தமிழர்களை படம் பிடித்துக் காட்டி, இனத்துவேசத்தை வளர்ப்பதும், புலிகளிற்கு ஆதரவு தேடுவதுமே இந்த மெளனத்தின் இரகசியம்.

    புலிகள் வாழ வேண்டுமானல் ஈழத்தமிழர் அழிய வேண்டும்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை அமைச்சர் அன்பழகன். இந்த பொல்லாத ஆயுதங்களும் இந்த அப்பாவி மக்களும் இல்லாதபோது புலிகள்தான் ஏது? அது உயிர்வாழத்தான் முடியுமா?
    இது இன்றைக்கு நேற்று நடந்துகொண்டிருக்கிற சம்பவமல்ல. இருபத்திஆறு வருடங்களாக இதுவே வழமையாகிப்போய் விட்டது. ஆமிக்கு குண்டடிச்சுவிட்டு ஓடுகிறதும் ஆமி கலைக்கிறபோது மக்களை தமக்கு பாதுகாப்பு கவசமாக பிடித்து வைத்திருப்பதிருப்பதும் தான் புலிகளின் போராட்ட தந்திரத்தின் உயிர் மூச்சாக இருந்து வருகிறது. புலிகளின் முழு ஆதரவளர்களான வை.கோ. ராமதாஸ.திருமால்வளவன் மூலமாக தமிழ்நாட்டிலேயே நேரடியாக கண்டு கழிக்கிற வாய்ப்பு ஏற்படவாய்புண்டு. இதற்கு நீங்கள் வெகுகாலம் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

    Reply
  • palli
    palli

    இதை தாங்கள் சொல்லுவது (அன்பழகன்) அதைவிட வியப்பாக இருக்கிறது.

    திறமையான ஒரு நடிகன்.
    மனிதநேயம் தெரிந்த மனிதன்.
    வாழ்க்கையில் பல காலம் சோகம்.
    அதனாலே நடிப்பிலே தணியாத சிரிப்பு.
    பல்லி

    Reply