ஈராக்கில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இத் தேர்தலை வெற்றிகரமாக நடாத்துவதன் மூலம் ஈராக் அரசும் இராணுவமும் உறுதியான நிலைப்பாட்டிலுள்ளதை உலகுக்கு எடுத்துக்காட்டவுள்ளது.
இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், அனைவரையும் வாக்களிப்பில் பங்கேற்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறைக் கைதிகள், வைத்தியசாலைகளில் உள்ளோர் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் இவர்கள் கடந்த புதன்கிழமை வாக்களித்தனர். வைத்தியசாலைகளிலுள்ளோர், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறைக்கைதிகள் ஆகியோரிடம் வாக்குச் சீட்டுகள் அவர்களது காலடிக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரமான ஈராக்கைத் தெரிவு செய்யவும் பங்கரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவும் நாங்கள் வாக்களித்ததாக அவர்கள் கூறினர்.
பின்னர் வாக்குப் பெட் டிகள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட் டன. இரண்டாம் கட்ட வாக்களிப்பு நாளை நடை பெறவுள்ளது. ஈராக்கில் மொத்தமாகவுள்ள 18 மாகாணங்களில் 14 மாகாணங்களுக்கு நாளை தேர்தல் இடம்பெறுகிறது. இதுவரை ஆபத்தான தாக்குதல்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது ஈராக் அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும். வீதியோரக் குண்டுத் தாக்குதல்களைத் தவிர்க்க பெரும்பாலான வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் விமான நிலலயங்களும் இன்றும், நாளையும் மூடப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் தலைமையிலான ஷியா அரசுக்குச் சவாலாக உள்ள ஈராக் கெளன்ஸில் குர்தீஷ்க ளைப் பெரும்பான்மை யாகக் கொண்ட சுயாட்சியை வட ஈராக்கில் கோருகின்றது.
ஈரான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணும் ஈராக் கொன் ஸிலின் இக் கோரிக்கையை அமெரிக்காவும், ஈராக்கும் நிராகரித்துள்ளன. மாகாண ரதியான அதிகாரங்களைக் கைப்பற்றுவதனூடாக தங்களது இன அடையாளங்களை ஓங்கச் செய்ய ஷியா, சுன்னி, குர்தீஷ் இனங்கள் கடும் பிரயத்தனங்களில் இறங்கியுள்ளன. ஈராக்கில் தற்போதுள்ள மத்திய அரசு ஷியாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. ஈராக்கில் நடைபெறும் 14 மாகாணங்களுக்கான தேர்தல்களில் மொத்தம் 14 ஆயிரத்து நானூறு வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் மூவாயிரத்து தொளாயிரம் பேர் பெண்களாவர். 440 மாகா ண சபை ஆசனங்களுக்கு இத் தேர்தல் நடைபெறு கின்றது. ஈராக் அரசின் நாகரிக சர்வாதிகாரம் இது வென இஸ்லாமிய அமைப்பு விமர்சனம் செய்துள்ளது