அமெரிக்காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம். இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் ஒபாமா.

obama.jpgஅமெரிக் காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.அமெரிக்கா என்றாலே இஸ்லாமிய நாடுகளில் வெறுப்பு நிலவுகிறது.இதை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒபாமா. மத்திய கிழக்கு நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்முதலாக பேட்டி அளித்த ஒபாமா முஸ்லிம் நாடுகளுடன் சமாதானமாக செயல்படுவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

பேட்டியில் அவர் கூறியதாவது: எனது குடும்பத்தில் முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர்.இஸ்லாமிய நாடுகளில் நான் வசித்தவன்.இஸ்லாமிய நாடுகளுக்கு விரோதியாக அமெரிக்கா செயல்படுகிறது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.அதை புரியவைப்பதே எனது பணி.  பரஸ்பர நலன்,மரியாதை அடிப்படையில் புதிய கூட்டாளி உறவை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.இதை அரேபிய,இஸ்லாமிய நாடுகள் ஏற்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் அமெரிக்கா திடமாக உள்ளது.இப்படிச் செய் என்று கட்டளையிடுவதற்கு பதிலாக மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்பதே நல்லது என்று அமெரிக்கா கருதுகிறது. பதவியில் அமர்ந்து 100-நாள் ஆனதும் இஸ்லாமிய நாடு ஒன்றின் தலைநகரிலிருந்து இஸ்லாமிய நாடுகளிடம் நேரடியாக நான் பேச விரும்புகிறேன். அல் காய்தா தலைவர்களான ஒசாமா பின்லேடன்,ஜவாஹிரி ஆகியோரின் கருத்துகள், யோசனைகளை யாரும் இப்போது செவிகொடுத்து கேட்பது இல்லை. எவற்றை அழித்தோம் என்பதை விட என்ன செய்தோம் என்பதை வைத்தே நாம் மதிப்பிடப்படுகிறோம்.

பின்லேடன்,ஜவாஹிரி போன்றவர்கள் செய்வது அழிவுவேலைதான். இதனால் மரணமும் அழிவும்தான் விளையும் என்பதை முஸ்லிம் நாடுகளுக்கு புரிந்துவிட்டது.முஸ்லிம் நாடுகள் முன்னேற்றம் அடைய தன்னாலான அனைத்தையும் அமெரிக்கா செய்யும். அமெரிக்கா தவறிழைத்துள்ளது என்பதை ஏற்கிறேன்.பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருந்த நட்புறவு மீண்டும் உருவாக பாடுபடுவேன் என்றார் ஒபாமா.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • MANITHAN
    MANITHAN

    //அமெரிக் காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார் அதிபர் பராக்//

    நேசக் கரமல்ல இது. மத்திய கிழக்கில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டு வரும் மாற்றத்தையும் விழிப்புணர்வையும் மழுங்கச் செய்யும் நோக்குடன் செஞ்சிலே வஞ்சகத்தை மறைத்துக் கொண்டு தம்மை நல்லவர்களாக நம்ப வைத்து அவர்களது முதுகிலே குத்துவதற்காக நீட்டப்படும் மோசக் கரம்.

    Reply