அரி யாலை, மாம்பழம்சந்தி, நாயன்மார்கட்டு மற்றும் ஆசீர்வாதப்பர் வீதி போன்றவற்றை உள்ளடக்கிய பகுதிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. அதிகாலை முதல் நண்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையின் போது வீதியால் சென்ற வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குள்ளாக்கப்பட்டதோடு பொதுமக்களின் அடையாள அட்டைகளும் பரிசீலிக்கப்பட்டன.
இந்தப் பகுதிகளை உள்ளடக்கிய வீடுகளிலும் படையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் போது வீடுகளில் இருந்தோர் விசாரணைகளுக்குட் படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, உடுவில ஈஞ்சடி வைரவர் ஆலயத்தை உள்ளடக்கிய பகுதியிலும் நேற்று முன்தினம் படையினரால் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.