மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு – இருவர் பலி. 11 பேர் காயம்

batti-town.jpgமட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில்  பொலிஸ்  அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்தாகவும்  பொலிஸ் துறையினர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாகவும்  பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந் பொது மகன் ஒருவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 2  பொலிஸார்  மற்றும் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றில் இருந்தே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக  பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன்குண்டு வெடித்த இடத்தில் மேலதிகமாக  பொலிஸ் , இராணுவம், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்படுவதாகவும் நகரப் பகுதிக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • thambu
    thambu

    புலி எப்பவும் கொல்ல வேண்டியவர்களை கொல்லுவதில்லை. யாரை தோற்கடிக்க வேண்டுமோ அவர்களை தோற்கடிப்பதில்லை. அவல் என நினைத்து முப்பது வருடகாலம் உரலைத்தான் இடித்துக் கொண்டிருந்தது. தமிழ் மக்களின் புற்று நோய் புலிகளே. அது அவர்களை துடைத்தெறியாமல் அடங்காது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகள் செத்துஅழிஞ்சு அழித்தெழிக்கப்படும் போது அரசு தமிழ்மக்களுக்கு உரிய உரிமைகளை கொடுக்குதா? கொடுக்கவில்லையா? என சந்தேகக் கண்னோடுதான் பார்க்க வேண்டும். ஆனால் தமிழ்மக்களுக்கு உயிர்வாழுகிற உரிமை கிடைக்கிறது. வேலைசெய்கிற உரிமை கிடைக்கிறது. வியாபாரம் செய்கிற உரிமை கிடைக்கிறது. இலங்கையின் எந்தபகுதிக்கும் போய்வரக்கூடிய வசதியேற்படுகிறது. எல்லா இனங்களும் கூட்டுச்சேர்ந்து வாழ வழிவகுக்கிறது. பணவீக்கம் சுரண்டல் கொடுமையூடாகவும் தமது பிள்ளைகளை கல்விபயில வைக்கமுடிகிறது. ஒட்டுமொத்தத்தில் ஜனநாயகத்திற்கு உட்பட்ட போராட்டத்தை நடத்த முடிகிறது.

    மேற்சொன்ன உரிமைகள்தான் எல்லாஉரிமைகளிலும் தமிழ்மக்களுக்கு பயன் அழிக்கக்கூடியதும் வாழ்வாதாரம் மிக்கது எனக் கருதுகிறேன். மற்றும்படி கிறிமினல் பேர்வழிகளுக்கும் முப்பது வருடபோராட்டத்தில் பலன்அடைந்த புலம்பெயர்சில குழுக்களுக்கு உற்சாகம் கெடுகிறதல்லமால் அவர்களின் வாழ்வாதாரத்தையும் குட்டிச்சுவர்யாக்கிவிடுகிறது.

    Reply
  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    விமானப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பு வான் பரப்பில் வான் பாதுகாப்பு ஒத்திகையொன்றை மேற்கொண்டனர்.

    நேற்று இரவு 7.30 மணி தொடக்கம் 8.45 மணிவரை இந்த ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

    சிறிய விமானமொன்றை பறக்கவிட்டே இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வானத்தை நோக்கி ஒளி வெள்ளம் (சேர்ச் லைற்) பாய்ச்சப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையின் போது அதை அவதானித்த மக்கள் சற்று பதட்டமடைந்ததுடன் பின்னர் அது ஒத்திகை என்பதை அறிந்த பின்னர் ஆறுதலடைந்தனர்.

    Reply