ஐக்கிய அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற பராக் ஒபாமாவுக்கு பாராளுமன்றத்தில் நேற்று நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அரசாங்கத்தின் சார்பிலும், எம்.பிக்கள் சார்பிலும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள பராக் ஒபாமாவுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக நேற்று பாராளுமன்றத்தில் கூறினார்.
அதேநேரம் இந்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அளித்த ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுர திசாநாயக்க நேற்று சபையில் எழுப்பிய கவனயீர்ப்பு கேள்விகளுக்கு சபாநாயகரின் அனுமதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பதிலளித்தார். இச்சமயமே வெளிவிவகார அமைச்சர் மேற்படி நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.