யாழ். குடாநாட்டின் சட்டம், ஒழுங்கினைப் பேணும் முகமாகவும் பல்வேறு சமூக சிர்கேடுகள் மற்றும் பாதிப்புக்களை அகற்றும் முகமாகவும் ஊர்காவற் படையினை உருவாக்கும் திட்டம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ். தேசவள விவசாயிகள் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட யாழ். மாவட்ட விவசாய மக்களின் பிரதி நிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டில் கட்டாக்காலி கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளால் விவசாயச் செய்கைகள் பாதிக்கப்படுவதாக, மேற்படி விவசாய மக்களது பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டாக்காலி கால்நடைகளை அவ்வப் பகுதிகளிலுள்ள கிராம சேவையாளர்கள் மூலம் பிடித்து, உரிமையாளர்களை இனங் கண்டு அவற்றைக் கையளிக்கும் வரையில் கால்நடைப் பண்ணை அமைத்து அவற்றைப் பராமரிப்பதென்றும், உரிமையாளர்கள் இனங்காணப்படாத கால்நடைகளை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் ஜீவனோபாயத்தைக் கருத்தில் கொண்டு சட்டரீதியாக அவர்களிடம் வளர்ப்பிற்காக ஒப்படைப்பதென்றும் தான் ஆலோசித்துள்ளதாகத் தெரிவித்தார்.
காட்டு விலங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெறுதல் மற்றும் ஏனைய சமூக சீர்கேடுகள் மற்றும் பாதிப்புகளை இல்லாதொழிப்பதற்காக யாழ். குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நபர்களைத் தெரிவு செய்து அவ்வப் பகுதிகளுக்கு ஊர்காவற் படையை உருவாக்கி அதனை பொலிஸ் நிலையங்களுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
palli
புதுவிதமான அமைப்புக்கு ஆள் சேர்ப்பு.
நடக்கட்டும் உங்கள் திருவிளையாடல் தோழர்.
msri
காட்டுவிலங்குகளில் இருந்தல்ல> இனி உங்களிட்டை இருந்து யாழ்மக்களை பாதுகாக்க வேண்டும்!