பாடசாலை மாணவர்களிடையே ஊடகத்துறை கல்வியை விருத்தி செய்யவும் ஊடகத்துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக பாடசாலை மட்டத்தில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாக ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சு, தகவல் திணைக்களத்துடன் இணைந்து குளியாப்பிட்டிய கல்வி வலய பம்மன்ன அல்கமர் மத்திய கல்லூரியில் நடாத்திய மாணவர்களுக்கான கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘சிறந்த ஊடக கலாசாரத்திற்கான எமது மாணவர்கள்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற இக்கருத்தரங்கை ஆரம்பித்து வைத்துள்ளது. மேலும் உரைநிகழ்ச்சிய அமைச்சர், மாணவர்களிடைய ஊடகத்துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு இத்துறையில் பயிற்சிகளை வழங்குவது ஊடக எதிர்காலத்தில் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்க முடிவதுடன், சிறந்த ஊடக கலாசாரமொன்றை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
இத்துறையை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதுடன் ஆய்வுத் துறையாகவும் ஊடகத்துறை விளங்குகின்றது. சர்வதேச மட்டத்தில் சிறந்து விளங்கும் ஊடக வியலாளர்கள் பலர் இந்நாட்டில் எதிர்காலத்தில் மேலும் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான மொழி விருத்தியும் மாணவர்களிடையே உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சு உறுதியாக உள்ளது.