இந் நாட்டு முஸ்லிம்களுக்கு கௌரவம் வழங்கி அதிகளவு சேவைகளை முன்னெடுத்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும் என்று அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். கம்பளை இல்லவதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது; மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் 18 பேர் இருக்கின்றனர். இது அரசாங்கம் முஸ்லிம்களுக்கு வழங்கிய கௌரவமாகும். இந்த அமைச்சுப் பதவிகள் மூலம் முஸ்லிம் சமூகம் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக செயற்பட்ட பதியுதீன் மஹ்மூத் முஸ்லிம்களுக்கு அளப்பரிய சேவையாற்றினார். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்களுக்கு இத்தகைய அமைச்சுப் பதவிகளை வழங்கவும் இல்லை, நாம் வழங்கிய அமைச்சுப் பதவிகள் மூலம் சேவையாற்ற இடமளிக்கவும் இல்லை. மத்திய மாகாண சபைத் தேர்தல் வட,,கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமானதோர் தேர்தலாகும்.எனவே முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.