தமிழர்களின் புது வருடப் பிறப்பாகிய தைப்பொங்கல் லண்டன் ஈஸ்ற்ஹாம் பகுதியில் தெரு விளக்குகள் ஒளியூட்டப்பட்டு அமைதியான முறையில் நடைபெற்றது. ஐரோப்பாவில் தைப்பொங்கல் தினம் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படும் ஒரே நகரம் லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஹாம் துணை மேயர் கிறிஸ்ரைன் போல்டன் தெருவிளக்குகளுக்கு ஒளியூட்டி தமிழ் புதுவருடத்தை வரவேற்றார்.
2001 முதல் கடந்த எட்டு ஆண்டுகளாக தைப்பொங்கலையொட்டி வீதி விளக்குகளுக்கு ஒளியூட்டும் நிகழ்வு ஈஸ்ற்ஹாமில் இடம்பெற்று வருகிறது. இந்நிகழ்வில் மத வேறுபாடுகளைக் கடந்து இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் என அனைவரும் பங்கேற்பது வழமை. இன்று இலங்கையில் நிகழும் யுத்த சூழல் காரணமாக இந்நிகழ்வு மிக எளிமையான முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டது.
ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரிற் நோத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் துணைமேயருடன் கவுன்சிலர்கள் சிவிக் அம்பாசிடர் கவுன்சில் அலுவர்கள் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டனர். நியூஹாம் கவுன்சிலுக்கு மூன்றாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்ட கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை கடந்த எட்டு ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகிறார்.
இன்று ஏற்றப்பட்ட இவ்வெளிச்சம் இலங்கையிலும் உலகிலும் சமாதானத்திற்கான வெளிச்சம் இந்த வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும் என்று குறிப்பிட்டார். பல்கலாச்சார மக்களும் வாழும் நியூஹாமில் தமிழர்களுடைய புது வருடத்தை குறிக்கும் இந்நிகழ்வு இடம்பெறுவது நியூஹாமிற்கு பெருமை சேர்க்கிறது என்று குறிப்பிட்ட போல் சத்தியநேசன் நியூஹாம் மக்களுடன் சேர்ந்தே முன்னேறுகிறது என்று குறிப்பிட்டார்.
துணை மேயர் கிறிஸ்ரின் போல்டன் பேசுகையில் இலங்கையில் நடைபெறும் யுத்தம் பற்றிய தனது வேதனையை வெளிப்படுத்தினார். துன்பங்கள் வந்தாலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது அவசியம் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களுடைய ஒரு நம்பிக்கையாக இருந்து வந்தது. இதையொட்டி எண்பதுகளின் நடுப்பகுதிகளில் அடுத்த பொங்கலில் தமிழீழம் என்பது போன்ற கருத்துக்கள் தமிழீழ விடுதலை இயக்கங்களால் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருந்தது. ஆனால் இன்று நிலைமை மறுதலையாகி விட்டது. தங்களுக்குள் முட்டி மோதிய தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஒன்றையொன்று அழித்துக்கொண்டு தங்களையும் அழித்துக் கொண்டன.
இன்று இலங்கைத் தமிழர்கள் தை பிறந்தாலும் சமாதானத்திற்கு ஏதும் வழி இருக்கா என்ற அங்கலாய்ப்புடனேயே உள்ளனர்.
padamman
புலிகளின் மிரட்டல்லையும் மிறி நடைபெற்ற நிகழ்வு வரவேட்கத்தக்கது.
kamal
பொங்கல் விழாக்கள் ஒண்டும் வேண்டாம் எண்டினம். ஆனால் கோயில்களில் மட்டும் வியாபாரம் அந்தமாதிரி நடக்கும். பல கடைகளுக்கு சொந்தமான ஒருபுலி ஆதரவாளர், சங்கம் ஒன்றில் தன் செலவில்(?) பெரிய பூஜையே செய்தார்.
ranjan
எப்பிடியும் 2010 பொங்கலில் தமிழீழம் கிடைக்கலாம் என நம்பிக்கை கொள்வோம்.
lavan
புலிஆதரவாளர்கள்……………. போன்றேர் செய்த மிரட்டல்களையும் பொருள்படுத்தாமல் பொங்கள் விழா சிறப்பக நடைபெற்றது. அறஜகங்களுக்கு அடிபனியபோவதுயில்லை……….
Poddu
தங்களுக்கு தேவையென்றால் விழாக் கொண்டாடலாம் இல்லை என்றால் நாட்டில பிரச்சினை என்று கொண்டாடக் கூடாது என்று தடுக்கிறது. இந்த சேட்டையளை எப்ப விடப் போறம். பாடகி ஜனானகியைக் கூப்பிட்டு பொங்கல் கொண்டாடப் போறம் என்ற ஐபிசி அடுத்த 48 மணித்தியாலத்தில கொண்டாட்டம் ஒன்றும் வேண்டாம் என்று அறிவிக்கினம். தமிழ் சனம் என்ன மந்தைக் கூட்டமே. நீங்கள் புலிக்கு பின்னால் நிக்கும் போது சனமும் புலிக்குப் பின்னால் நிக்க வெணும். நிங்கள் பொங்கல் கொண்டாட வேண்டாம் என்றால் சனமும் கொண்டாடக் கூடாது? நல்ல கொள்கை.
இன்றைக்கு உள்ள யுத்த சூழ்நிலையில் களியாட்டங்கள் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்படுவது நல்லது. ஆனால் ஆடம்பரமற்ற அமைதியான நிகழ்வுகளை நடத்துவதில் எவ்வித தப்பும் இல்லை. போல் சத்தியநேசன் சிம்ரனைக் கூப்பிட்டு வைத்து கூத்துக் காட்டி இருந்தால் (வழமையாக புலிகளெ அதனை செய்வதற்கு ஏகபோக உரிமையுடையவர்கள்) அது தவறு. போல் அந்தத் தவறைச் செய்யவும் இல்லை.
எட்டு வருடமாக நடந்த வரும் ஒரு அடையாள நிகழ்வு தான் பொங்கல் தினத்தன்று தெருவிளக்கை ஏற்றுவது. நாங்கள் ஒரு பல்கலாசாரப் பகுதியில் இருந்து கொண்டு இதனைச் செய்யாமல் இருக்க முடியாது. இது ஒரு கொண்டாட்டம் அல்ல. ஏதோ மக்கள் மீது அக்கறை இருப்பது போல் காட்ட இந்த புலிவால்கள் செய்கிற தொல்லை பெரும்தொல்லை.
இவர்கள் யாராவது நாளைக்கு இலங்கைத் தூதரகத்திற்கு முன் வந்து இலங்கை அரசாங்கத்தை கண்டிக்கட்டும் பார்ப்பம்.
uma
Cllr Paul Sathianesan could not be contacted for comments. But the news has spread across some Tamil shops in East Ham. When inquired as to who is carrying out such a campaign, a shop owner in anonymity said it involved few desperate chaps like Mr Bose who runs the Estate Agency business Select Property Services who is also the Secretary of the World Tamil Movement of Pala Nedumaran, the Tamil funeral service orator Muruganantham and LTTE’s Lawrence Thilagar’s brother Ragu.
Despite intimidations and threats the Thai Pongal celebrations went ahead at the Council with religious service attended by Councillors and hundreds of Tamils. There were two other Thai Pongal events organised by established Tamil organisations and they too went ahead despite threats and intimidations by the LTTE goons
thenee.com/html/160109-4.html