1984 மற்றும் 2000 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதிகளில் புலிகள் 168 தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த காலப்பகதிகளில் இதுதான் ஒரு பயஙகரவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் அதிகளவிலான தற்கொலைத்தாக்குதல் எனவும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
குருநாகலில் உள்ள யு.பி.எவ்.ஏ யின் அலுவலகத்தில் சனிக்கிழமை (10.01.009) நடைபெற்ற தேர்தல் சந்திப்பின்போது அமைச்சர் டி சில்வா இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பாகங்களில் அப்பாவிப் பொதுமக்கள் மீதான 346 தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் 1984-2006 காலப்பகுதிகளில் 3,262 பொதுமக்களைக் கொன்றுள்ளனா. இதில் 2,252 சிங்கள மக்களும் 309 தமிழ் மக்களும் மற்றும் 701 முஸ்லிம் மக்களும் அடங்குவர். மற்றும் 3,494 பொதுமக்கள் கடுமையான காயங்களுக்குள்ளாகினர் எனவும் அவர்களில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாரும் அடங்குவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.