காத் தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய மொன்றின் உரிமையாளர் நேற்று அதிகாலை இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தம்பிராசா ரவீந்திரன் (50) எனப்படுமிவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இவரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.