ஈ.பி.டி.பி.யின் பெயரை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் உடனடியாக அறிவிக்கவும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

epdp-121208.jpgஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரால் அல்லது அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பெயரால் எவரும் கப்பம் கோரியோ, கடனுக்கு பொருட்கள் மற்றும் காசு கோரியோ அல்லது நிதி, நன்கொடைகள் கோரியோ வந்தால் அவ்விடயம் தொடர்பாக உடனடியாக தனக்கு அறிவிக்கும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ். வர்த்தகப் பிரமுகர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் பிரகாரம் தனது பெயரையோ, தனது அமைச்சின் பெயரையோ அல்லது தனது கட்சியின் பெயரையோ பயன்படுத்தி கப்பம் கோருதல், பணம் பறித்தல், பொருட்களை வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் எவரும் எந்தவொரு வர்த்தக நிலையங்களுக்கும் வந்தால் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் இல்லையேல் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும்படியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி வர்த்தகப் பிரமுகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தனது பெயரையும் தனது கட்சியின் பெயரையும் பயன்படுத்தி எவரேனும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டால் அல்லது அநீதி விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அவ்விடயம் தொடர்பில் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது பொதுமக்களிடம் எந்தவொரு அறவீடுகளையும் மேற்கொள்வதில்லை என்பதையும் மனித நேயமற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதையும் இங்கு உணர்த்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Rohan Rajasinghe
    Rohan Rajasinghe

    What are we doing here? Sharing a joke???

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    தேர்தல் வரபோகுதில்லையோ அதை குறியாகவைத்துதான் அமைப்பின் அடிப்படை கொள்கைக்கு எதிராக வெறும் ஊடக அறிக்கைவிட்டவர். தோழர்கள் துவண்டு விட வேண்டாம் உங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவதுதான் உண்மையான ஐனநாயகமறுப்பு.அதனால் அமைப்பின் அடிப்படை கொள்கை அப்படியேதான் இருக்கும். உங்கள் வாழ்வில் வசந்தங்கள் தொடரும்.

    Reply
  • anathi
    anathi

    “தேர்தல் வரபோகுதில்லையோ அதை குறியாகவைத்துதான் அமைப்பின் அடிப்படை கொள்கைக்கு எதிராக வெறும் ஊடக அறிக்கைவிட்டவர்”

    மிக நீண்ட காலம் மக்களாடு தொடர்புள்ள அரசியல்வாதிடக்ளஸ்.தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தும் தேவை அவருக்கு இல்லை.வடபகுதியில் அவர் என்ன செய்கிறார் என்ன செய்வதில்லை என்பது அந்தப் பகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.

    கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டு என சொலலுபவர்கள் சொல்வதை சொல்லி விட்டு போங்கள்!

    Reply
  • thushiyanthan
    thushiyanthan

    சிரிப்பு வருது சிரிப்பு வருது பார்க்கப்பார்க்க சிரிப்பு வருது.

    Reply