சீனாவில் பீஜிங் நகரில் உள்ள ஒரு காலணிக்கடையில் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள புஸ்ஸின் உருவப்படத்தின் மீது குறிவைத்துக் காலணியை வீசுபவருக்கு விஸேட தள்ளுபடி கிடைக்கின்றது.
உருவப்படத்தின் உயரத்தில் A யிலிருந்து D வரை குறிக்கப்பட்டிருக்கும் இடங்களின் மீது தூரத்திலிருந்து குறிபார்த்து வீசுபவருக்கு காலணி படுமிடத்தைப் பொறுத்து 20-50 வரையிலான தள்ளுபடியில் அக்காலணியைப் பெற்றுக் கொள்ளலாம்
.
ஈராக் பிரதமருடன் சேர்ந்து புஸ் பேட்டியளித்த போது ஊடகவியலாளர் ஒருவர் வீசிய காலணி வகைக்கே இந்தப் பெருமை கிடைத்துள்ளது. இது பற்றி கடை உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கும் போது ஈராக்கில் நடந்த காலணி எறியப்பட்ட சம்பவம் எங்களைக் கவர்ந்தது. வாடிக்கையாளரின் பொழுதுபோக்கிற்காக தள்ளுபடி அளிக்கின்றோம். அதற்கு உலகப்புகழை நோக்கி அதிர்ஸ்டம் வெல்லுங்கள் என்று தலைப்பு இட்டுள்ளோம் என்கிறார்.
indiani
பரவாயில்லையே.செருப்பு வாங்கப் போறவர்களுக்கு இப்படியெண்டாலும் ஒரு தள்ளுபடி கிடைக்கிறதே. இந்தமட்டில் செருப்பெறிஞ்ச பத்திரிகையாளனுக்குப் புண்ணியம்கிடைக்கட்டும்.
saam
இது ஒரு அனாகரிகமான செயல்.