சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் கொழும்பில் அடுத்த மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு’ தொடர்பான தகவல் அமர்வுக் கூட்டம் இன்று சனிக்கிழமை யாழப்பாணத்தில் நடைபெறுகின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 6. 7. 8. 9 ஆம் திகதிகளில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டமே இன்று பிற்பகல் 2மணிக்கு நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறுகின்றது.
இக்கூட்டத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அமைப்பாளர் லெ.முருகபூபதி மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் மற்றும், நோக்கங்கள் குறித்து தமிழ் எழுத்தாளர்கள மத்தியில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Articles:
யாழ்ப்பாணத்தில் இன்று ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு’ தொடர்பான சந்திப்பு.
jivan_raj
உங்கள் மாநாட்டிற்கு எழுத்துப்போர் நடாத்தியதுபோல்> உலகில் வேறெந்த மாநாட்டிற்கும் நடைபெறவில்லை என நினைக்கின்றேன். அந்தளவிற்கு நாடுகடந்தவர்களுக்கு (ஈழம்போல்) தொப்புள்கொடி உறவுகளுக்கு கலை- இலக்கியத்தில் ஓர் அளவு கடந்த அலாதி! இதில் சில பெண் எழுத்துப் போராளிகளும் பெரும் போராட்டம். இவர்களும் துள்ளிக் குதிக்காமல் அமைதியாக தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை உள்ளடக்கிய நிகழ்வுகளை நடாத்தலாம் அல்லவோ? “பெண்கள் சந்திப்பு- இலக்கியச் சந்திப்புக்கார்கள்” தங்கள் தேவைக்கெல்லாம் தாயகம் சென்னு வருகின்றார்கள் தானே? பிறகு ஏனிந்த அரச-மகிந்த “ஊச்சி பிடிக்கிறார்கள்” புலம்பெயர் தலித்முன்னணியினர் கூட தங்கள் அடுத்த மாநாடு இலங்கையில்தான் என அறிவித்துள்ளார்களே!