புலித்தோல் போர்த்திய பச்சோந்திகளும் புலி வியாபாரமும் – புலி ஊடகங்கள் (1) ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Orupaper_Title

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந்த தகைமை யவர்
                       (குறள் 447)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வீழ்ச்சியும் அழிவும் பல்வேறு காலகட்டங்களில் நியாயமான விமர்சனங்கள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டு வந்ததுடன் எவ்வாறான அணுகுறைகள் தவறானவை என்பதும் எவ்வாறான அணுகுமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மிகத் தெளிவாகவே சுட்டிகாட்டப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாறான ஆரோக்கியமான விமர்சனங்களை எல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது என்றும் அவ்வாறான விமர்சனங்களை வைத்தவர்களை எல்லாம் துரோகிகளாக முத்திரை குத்தி ஒதுக்குவதில் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் முன்நின்றன.

இந்த ஊடகங்கள் என்றைக்குமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கையை எந்தச் சந்தர்ப்பத்திலும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதற்குக் காரணம் அவர்களிடம் கேள்வியோ விமர்சனமோ இல்லை என்பதல்ல. ஆனால் கேள்வியை எழுப்பினால், விமர்சனத்தை முன் வைத்தால், எங்கே தங்களை ‘கழற்றி’ விடுவார்கள், தங்கள் பிழைப்பு படுத்துவிடும் என்ற பயம். இந்த ஊடகங்களும் கட்டுரையாளர்களும் செய்தது முற்று முழுதான ஊடக விபச்சாரம். இந்த ஊடகங்களின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் வாழ்வை வளம்படுத்திக்கொண்ட இவர்கள், தாயக மக்களின் பெருமூச்சில் குளிர்காய்ந்தனர். அங்கு நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றையும் காசாக்கிக் கொண்டனர். அதற்காக தங்களை புலியாக்கிய பச்சோந்திகள் இவர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் ஆயுதம் ஏந்திய அல்லது ஆயுதம் ஏந்தாத எந்தவொரு அமைப்பையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கு எதிரான அல்ல ஆதரவு இல்லாத எந்தவொரு அமைப்பையும் அவர்கள் இயங்க அனுமதிக்கவில்லை. தங்களுக்கு ஆதரவான அமைப்புகளையும் அவர்கள் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கவில்லை. தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். இந்த நிலை இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் உருவாக்கப்பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர்கள், ஆயுதம் தரிக்காத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும். ஒரு பேப்பர், ஈழமுரசு, தமிழ் கார்டியன், ரிரிஎன் (ஜிரிவி), ஐபிசி (ஐஎல்சி) போன்றனவும் இணையங்களும் இதில் முன்னின்றன.

தங்களுக்கு எதிரானதும் ஆதரவு இல்லாததுமான அமைப்புகளை அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகளும் வெகுவிரைவிலேயே, அதே அமைப்பைச் சார்ந்தவர்களாலேயே வீழ்ச்சி அடைந்து. அதன் தலைமைகள் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட உடனேயே புலம்பெயர் நாடுகளில் 300 மில்லியன் டொலர்கள் வரை ஆண்டு வருமானத்தைக் கொண்ட 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்கள் மே 18 2009ல் காணாமல் போனது. இதற்கு மேல் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பில் எப்படியானவர்கள் இருந்தனர், உள்வாங்கப்பட்டனர் எனபதற்கு விளக்கம் அவசியமில்லை. (லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி விடயங்களுடன் தொடர்பு உடையவர்களின் பட்டியல் தயாராகிக் கொண்டு உள்ளது. மேலதிக தகவல் வைத்துள்ளவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும். வெகுவிரைவில் தேசம்நெற் இல் இப்பட்டியலைக் காணலாம்.)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வீழ்ச்சிக்கு மாத்தையா, கருணா பிளவு மட்டும் காரணமல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டவர்களும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுக்குப் புலம்பெயர்ந்த பல பச்சோந்திகள் தங்கள் சுயலாப நோக்கங்களுக்காக, புலித்தோல் அணிந்துகொண்டு உள்ளே சென்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு கட்டமைப்புகளிலும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறான கட்டமைப்புகளில் இந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் முக்கியமானவை. இந்த ஊடக ஒட்டுண்ணிகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவான அத்தனை சிந்தனைகளையும் விவாதங்களையும் ஓரம்கட்டி ‘ஜிஞ்சா’ கலாச்சாரத்தை உருவாக்கி வளர்த்து, உடுக்கடித்து உடுக்கடித்து புலியை முருங்கை மரத்தில் ஏற்றிவிட்டனர்.

இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் உணர்வாளர்களோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் உணர்வாளர்களோ அல்ல. தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தங்கள் சொந்த லாபங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியிலும், அழிவிலும், வன்னி மக்களுடைய அழிவிலும் இவர்களுடைய கரங்கள் இரத்தம் தோய்ந்தவை. இலங்கை அரசும் அதன் படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய எதிரி. ஆனால் அவர்களுடன் கூட இருந்த புலித்தோல் போர்த்திய இப்பச்சோந்திகள் கூட இருந்தே குழி பறித்த மோசடியாளர்கள்.

இவர்களைப் பற்றி தொண்ணூறுக்களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.  கேணல் கிட்டு தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டதிலும் வேறுபல படுகொலைகளிலும் சித்திரவதைகளிலும் நன்கு அறியப்பட்டவர். பெண்கள் தொடர்பில் அவருக்கு இருந்த பலவீனமே அவருடைய கால் கைக்குண்டில் பறிபோனதற்குக் காரணம். லண்டன் வந்திருந்த வேளையில் அவருடைய மரணத்துக்கு அண்மையாக சில மாற்றங்கள் அவரிடம் இருந்தது. கிட்டு லண்டனில் உள்ள தமிழர் தகவல் நடுவத்தில் தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் கூட்டி ஒரு கூட்டம் வைத்தார். அதற்கு மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். கிட்டுவினால் சித்திரவதைக்கு உட்பட்டவர்களும் வந்திருந்தனர்.

கிட்டுவின் கவனத்தை ஈர்க்க பலர், சிலரை தமிழினத் துரோகிகள், புலிகளுக்கு எதிரானவர்கள் என முண்டியடித்துக் கொண்டு வசைபாடிக் கொண்டிருந்தனர். கிட்டு அனைத்தையும் செவிமடுத்துவிட்டுச் சொன்னார் “ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அல்லது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக எழுதினால் அதில் எமக்கு பெரிய பிரச்சினையில்லை. ஏனெனில் சம்பந்தப்பட்டவரின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று எமக்கு தெட்டத்தெளிவாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை யார் ஆபத்தானவர்கள் என்றால் எம்மைத் துதிபாடிக்கொண்டு, எமக்கு விசுவாசமானவர்கள் போல் நடித்துக் கொண்டு தமது சொந்த அபிலாசைகளை எம்மை வைத்துக் கொண்டு நிறைவேற்றுபவர்கள் தான் எனக்கு கவலை அளிக்கின்றது” எனக் கூறினார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அன்று கிட்டு கூறியது இன்றும் பலருக்கும் பொருத்தமாக இருக்கிறது. புலி ஊடகங்களுக்கு குறிப்பாக ஒரு பேப்பர் கோஸ்டிக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
                      (குறள் 448)

ஆட்சி அதிகாரத்தில் உள்ளோருக்கு இடித்துக் கூறும் குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டி வழிபடுத்துவோர் அவசியம். அவ்வாறான ஆலோசனையைப் பெற்று திருத்திக் கொள்ளும்போது அவர்கள் நல்லமுறையில் நிர்வாகத்தை ஆட்சியை நடத்த முடியும். ஆனால் அவ்வாறு இடித்துரைப்பவர்கள் இல்லையாயின் பகைவரின்றியே அரசு கெடும். இக்கட்டுரையின் ஆரம்பத்திலும் மேலேயும் குறிப்பிடப்பட்டுள்ள இரு குறள்களும் இதனையே விளக்குகின்றன.

இலங்கையின் வடக்கு கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடிப்பாரையாக இருந்து குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் தாங்களும் இடிப்பாரையாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழிப்படுத்தவில்லை. இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நல்ல நண்பர்களாக இருந்திருந்தால் புலிகளுக்கு கசப்பான விடயங்களையும் சுட்டிக்காட்டி அவர்களை வழிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் இவர்கள் அவ்வாறு வழிப்படுத்த முயன்றவர்களையும் அதனைச் செய்ய விடவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஊடகங்களால் அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட மாயைக்குள் சிக்கி வீழ்ச்சி அடைந்து அழித்தொழிக்கப்பட்டனர். இந்தப் புலி ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே இருந்த உறவு ஊடக விபச்சாரமே.

11 – 17 டிசம்பர் ஈழமுரசு பத்திரிகையில் இருந்து: ”….. அண்மையில் பிரித்தானிய வெளியிட்ட காணொளி ஆவணத்தில் காணப்படும் மட்டக்களப்பு கட்டளைத் தளபதி ரமேஸ்க்கு கொடுக்கப்பட்ட பணியும் அதுதான். அதாவது இறுதிக்கட்டச் சமரின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய உத்திகள் என்பது ஸ்ரீலங்கா அரசை போர்க்குற்றங்களில் சிக்க வைப்பதை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது…..

தான் அவமானப்படுத்தப்பட்டு கோரமாகக் கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார்.

….. நாலாவது ஈழப்போர் என்பது இறுதிப் போர் எனவும் அதில் 50000ற்கும் மேற்பட்ட மக்களை ஸ்ரீலங்கா அரசு படுகொலை செய்யலாம் எனவும் விடுதலைப் புலிகள் முன்னரே எதிர்வு கூறி இருந்தனர். ஆனால் அவர்களின் கணிப்புகள் இதுதான் என்பதை யாரும் கணிப்பிடவில்லை.”

ஈழமுரசு என்ன சொல்ல வருகிறது. தேசியத் தலைவரின் போரியல் வழிகாட்டலில் போரிட்டோம். தலைவரின் இராணுவத் தந்திரோபாய வழிகாட்டலில் பின்வாங்கினோம். தலைவரின் வியூகத்தில் உள்ளுக்கு விட்டு அடித்தோம். பிறகு தலைவனின் கட்டளையை ஏற்று கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றோம்.

ஈழமுரசு ஒரு பேப்பர் மற்றும் புலி மீடியா,
ஐயாமாரே அண்ணாமாரே அக்காமாரே தம்பிமாரே தங்கச்சிமாரே உந்தத் தலைவன் உதை ஒரு மாசத்துக்கு முதல் தன்னும் சொல்லி இருந்தா எத்தினை ஆயிரம் உயிர்கள் பிழைச்சு இருக்கும். நாங்கள் சொன்னம் துரோகிகள் நீங்கள் கேக்கமாட்டியல். நீங்கள் உங்கட மீடியாக்கள் எல்லாம் காவடி எடுத்தியளே சிவாஜிலிங்கம் அந்தாள் மூன்று மாதத்துக்கு முதல் சொல்லிச்சே. கேட்டியளோ. நாசமாய் போவாரே உங்கட சொந்தப் பிள்ளையளா இருந்தால் இப்பிடியா செய்வியல்? அந்த வன்னிச் சனம் எல்லாம் வெள்ளைக் கொடியோட புலிகளைத் தாண்டிப் போக சுட்டுக் கொன்றான்கள். தப்பிப் போக நிண்ட சனத்தை செல் அடிச்சு கொன்றியளே. அப்பிடிப் போன சனத்தை கூச்சமில்லாமல் துரோகி என்றியள். சிங்கள இராணுவத்தை எதிரிப்படை என்று சனத்துக்கு தெரியும். ஆனால் 300 000 வன்னி மக்களை மந்தைகளாக அடைத்து வைத்து எதிரியை வைச்சு 50 000 சனத்தை கொன்று அதை வைச்சு மனித உரிமை அரசியல் செய்கிறம் என்று சொல்லுறியளே இதைவிட ஒரு பொறுக்கி அரசியல் உலகத்தில எங்கேயும் நடகேல்லை.

தளபதி ரமேஸ் மட்டுமல்ல தலைவரும் கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றது காணொளியாக உள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்ட நாடகத்தில் சரணடைந்தார். இந்த ஒளிப்பதிவு சிலரால் பார்க்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனை என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை இந்தியா இலங்கையிடமே விட்டுவிட, வே பிரபாகரனுக்கு சயனைட் வழங்கப்பட்டது. ஆனால் வே பிரபாகரன் அதனை எடுக்கவில்லை. அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார்.

இந்த நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சுற்றி மாயைவலை கட்டமைத்து அவர்களே தங்கள் பலம், பலவீனங்களை அறிய முடியாத அளவுக்கு அவர்களை உசுப்பேத்திய ஜம்பவான்கள் இந்த ஒரு பேப்பர் மற்றும் புலித்தோல் போர்த்திய பச்சோந்திகள். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் அழிக்கவில்லை அவர்களுக்காக வன்னி மக்களையும் அழித்து, தங்கள் சுய இருப்பையும், சுயலாபத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் மே 18 2009 வரை எழுதி வந்த பொய், புரட்டுக்கள் அனைத்தும் அம்பலத்திற்கு வந்து, அவர்களுடைய ஒவ்வொரு செய்தியும் கட்டுரைகளுமே அம்மணமாகி உள்ளது. ஆனாலும் தங்கள் சுய இருப்பையும் எதிர்கால சுயலாபத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக உண்மைகளை மறைத்து தொடர்ந்தும் மாயைகளையே கட்டமைக்கின்றனர்.

மற்றையவர்களை ‘பொறுக்கிகள்’, ‘நக்குபவர்கள்’ என்றும் விமர்சிக்கும் இவர்கள், தங்கள் ‘மேதகு தேசியத் தலைவர்’ இலங்கை இராணுவத்தின் பூட்ஸ்களை நக்குகின்ற நிலைக்கு தள்ளியவர்கள் என்பதனை வரலாறு குறித்துக் கொள்ளும்.

இன்னும் தொடரும்…..

(அடுத்த பாகத்தில்: ஒரு பேப்பர் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதரன் பார்த்தீபன் (பார்த்தீபன்), பொறுப்பாசிரியர் கோபால் தேவதாசஸன் கோபிரட்ணம் (கோபி), ஆசிரியர் குழு மன்மதக்குஞ்சு இரவி அருணாச்சலம், சாந்தி வவுனியன், சுகிர்தகலா கோபிரட்ணம், தமிழ் உணர்வாளரும் சீலை வியாபார நிபுணருமான சிவானந்த சோதி ஆகியோருடைய அரசியல் பற்றி அலசி ஆராயப்படும்.)

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 Comments

 • rohan
  rohan

  //அடுத்த பாகத்தில்: ஒரு பேப்பர் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதரன் ஸ்ரீபார்த்தீபன் (பார்த்தீபன்), பொறுப்பாசிரியர் கோபால் தேவதாசஸன் கோபிரட்ணம் (கோபி), ஆசிரியர் குழு மன்மதக்குஞ்சு இரவி அருணாச்சலம், சாந்தி வவுனியன், சுகிர்தகலா கோபிரட்ணம், தமிழ் உணர்வாளரும் சீலை வியாபார நிபுணருமான சிவானந்த சோதி ஆகியோருடைய அரசியல் பற்றி அலசி ஆராயப்படும்.)//

  சிலர் பகிரங்கமாகத் துகில் உரியப்பட வேண்டியவர்கள் தான். ஆனால், இந்த ‘மன்மதக் குஞ்சு’, ‘சீலை வியாபார நிபுணர்’ போன்ற சில்லறைப் பட்டம் சூட்டல்களை விடுத்து கொஞ்சம் objectiveஆக – logicalஆக எழுதுவது ஊடக தர்மத்துக்கு அழகாகாதா?

  //இந்த நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சுற்றி மாயைவலை கட்டமைத்து அவர்களே தங்கள் பலம், பலவீனங்களை அறிய முடியாத அளவுக்கு அவர்களை உசுப்பேத்திய ஜம்பவான்கள் இந்த ஒரு பேப்பர் மற்றும் புலித்தோல் போர்த்திய பச்சோந்திகள். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் அழிக்கவில்லை அவர்களுக்காக வன்னி மக்களையும் அழித்து, தங்கள் சுய இருப்பையும், சுயலாபத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் மே 18 2009 வரை எழுதி வந்த பொய், புரட்டுக்கள் அனைத்தும் அம்பலத்திற்கு வந்து, அவர்களுடைய ஒவ்வொரு செய்தியும் கட்டுரைகளுமே அம்மணமாகி உள்ளது. ஆனாலும் தங்கள் சுய இருப்பையும் எதிர்கால சுயலாபத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக உண்மைகளை மறைத்து தொடர்ந்தும் மாயைகளையே கட்டமைக்கின்றனர்.//

  Absolutely!!!

  Reply
 • S. சுகுணகுமார்
  S. சுகுணகுமார்

  ஈழமுரசு பத்திரிகை ஐரோப்பாவில் மக்களை மடையர்களாக்கும் பணியில் நன்கே பணிக்கிறது. தலைவர் உயிருடன் உள்ளார் வெவகுவிரைவில் வருவார் என்று கதையளக்கும் ஈழமுரசின் நிர்வாக இயக்குனர்களிற்கு பேப்பர் அடிப்பதை விடுத்தால் வேறு தொழில் கிடையாது! தலைவரை காசாக்கும் இந்த பேப்பரின் சுத்துமாத்தை சில புலம்பெயர்ந்தவர்கள் மடத்தனமாக நம்புவதுதான் கொடுமை! ஜெயபாலன் நீங்கள் மட்டுமல்ல துரோகி இந்த ஈழமுரசிற்கு – கீழ் வரும் பகுதி புலிகளால் இந்த கயவர்கள் பற்றி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி! கட்டுரைத்தலைப்பு புலம்பெயர் தேசங்களில் வழங்கப்படும் துரோகி பட்டியலின் பின்னணி என்ன?

  -முள்ளிவாய்க்கால் பேரவல நாட்களில் அந்த மக்களையும், மண்ணையும் மீட்பதற்கு எம்முறவுகள் அள்ளிவழங்கிய பெருந்தொகை நிதி எங்கே போனது?. அந்நிதி தமிழீழத்தை நிச்சயமாகச் சென்றடையவில்லை. அப்படியாயின் அந்த நிதி தனிநபர்களிடம் எங்கோ முடங்கிக் கிடக்கின்றது. அந்தநிதியை வெளியே காட்டாமல் பதுக்கி வைத்துக்கொண்டு இறுதிக்கட்டப் போரில் அநாதரவாக்கப்பட்ட மக்களுக்கோ, போராளிகளுக்கோ எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல் அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களுக்கான செயற்திட்டங்களை பேச்சளவில்கூட அறிவிக்காமல் கடந்த ஒன்றரை வருடங்களைக் காலங்கடத்தி. தமிழீழத் தேசிய நிதியைச் சூறையாடுவதையே குறிக்கோளாகக் கொண்டு தம்மை அனைத்துலக தொடர்பாளர்கள் என்று பறைசாற்றிக் கொண்டு. அதேநேரம் எமது தேசத்திற்காக ஏதாவது செய்ய முனைவோரையும், எமது போராட்டத்தின் அடுத்த படிநிலைச் செயற்பாடுகளைச் செய்ய முனையும் தேசாபிமானிகளையும், போராளிகளையும் துரோகிகள் பட்டம் சூட்டுவதிலேயே இவர்கள் குறியாக இருக்கின்றார்கள்.

  உருத்திரகுமார் துரோகி. விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்கள் துரோகி. இடைக்கால தன்னாட்சியை உருவாக்கிய மதியுரைஞர் குழு துரோகி. இறுதிக்கட்டப் போரில் வெடிபொருட்கள் தீரும் வரை போராடி ஈற்றில் மக்களோடு மக்களாக வந்த போராளிகள் துரோகி. புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு நாட்டுக் கிளைகளாலும் சேகரிக்கப்பட்ட தமிழீழத் தேசிய நிதி சார்பான கணக்கறிக்கைகளைக் கேட்போர் துரோகி. உருப்படியான செயற்திட்டங்களைக் கொடுத்து இவர்களைச் செய்யச் சொன்னால் அவர்களும் துரோகி. இவர்கள் எதுவும் செய்யாதவிடத்து தாமே புதிய அமைப்புக்களை உருவாக்கி உருப்படியான தமிழர் நலத்திட்டங்களைச் செய்ய முனைவோரை அச்சுறுத்துவது, தடுப்பது அதுவும் சரிவராதவிடத்து அவர்களுக்குத் துரோகிப்பட்டம் கொடுப்பது. இதுதான் இவர்களது தேசியப்பணி ஆகிவிட்டது.

  இப்படியே எல்லாரையும் துரோகி என்றால் உண்மையில் யார் துரோகி. மக்களே சிந்தியுங்கள். இவர்கள் சொல்கின்ற துரோகிப் பட்டியலில் 98வீதான மக்கள் அடங்கிவிடுவர். அப்படியாயின் துரோகிகள் யார்? யார் மற்றவர்களைத் துரோகி என்கின்றானோ அந்த நபர்தான் உண்மையில் துரோகி. தம்முடைய இருப்பைத் தக்கவைக்கவும், தம்மைக் காத்துக் கொள்வதற்குமே இவ்வாறு எடுத்தவுடன் துரோகிகள் ஆக்கப்படுவதைக் காணமுடிகின்றது. மக்களை முட்டாள்கள் ஆக்கியும், ஈழமக்கள் இரத்தம் சிந்தி உழைத்த தழிழீழத் தேசிய நிதியைச் சுருட்டி அதனூடே வாழ்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இவர்களை மக்கள் இனங்காணாது விட்டால் இவர்கள் நினைப்பது போல் மக்களும் முட்டாள்கள் ஆகவே ஆகிவிட நேரிடும்.

  Reply
 • thurai
  thurai

  புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகள்போல வாழ்ந்து தமிழினத்தின் வாழ்வோடு விளையாடி, ஈழத்தமிழினத்தின் துயிலுரிந்துவிட்டு விட்டனர். சிங்கள அரசின் தவறுகளை கண்டறியு முன்னர் தமிழர்களொடு வாழ்ந்து கொண்டு தமிழர்களை ஏமாற்ரியவ்ர்களை வெளிப்படுத்தல் அவசியம். -துரை

  Reply
 • மாயா
  மாயா

  நல்லதொரு பணியை தொடங்கியுள்ளீர்கள். பாராட்டுகள். இவர்களது முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். இதே போல ஏனைய நாட்டு புலிக் கொள்ளையர் விபரங்களையும் தெரிந்தோர் இணைக்க வேண்டும்.

  Reply
 • BC
  BC

  இப்போதும் துரோகி முத்திரை குத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். கொடுமையின் உருவமான புலி, அதற்க்கு தாளம் போட பச்சோந்தி ஊடகங்கள். ஈழமுரசு, ஒரு பேப்பர் மற்றும் புலி மீடியாவோடு அதே வேலையை செய்பவர்களும் உலாவருகிறார்கள்.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்க ஐ.எம்.எப் மும்முரம்……….

  தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முயற்சித்து வருகிறது. உலகின் பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் காணப்படுவதாகவும் அந்தச் சொத்துக்களைச் சுவீகரித்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 1267ம் மற்றும் 1373ம் பிரகடனங்களின்படி சொத்துக்களை சுவீகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரகடனங்களை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கக் கூடிய சிக்கல்களுக்கு சர்வதேச நாணய நிதியம் தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 1267ம் பிரகடனத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள், பயங்கரவாதிகள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை முடக்குதல்,பயணக் கட்டுப்பாடு விதித்தல்,ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென இந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  //வே பிரபாகரனுக்கு சயனைட் வழங்கப்பட்டது. ஆனால் வே பிரபாகரன் அதனை எடுக்கவில்லை. அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார்.//
  என்ன இன்னமும் படப்பிடிப்பு முடியவில்லையா! அல்லது மிக்ஸிங் எடிரிங்க்கிலிருக்கா!

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  திரு.கொன்ஸ்டைண்டன், ஜெயபாலன், நீங்கள் “பச்சோஞ்திகள்” என்ற ஒரு சொல்லை உபயோகித்துள்ளீர்கள், ஆகையால் முக்கியமான இக்காலகட்டத்தில், நான் கூறியபடி இலங்கைத் தமிழர்கள் கடந்த முப்பதாண்டுகளில் “இலங்கையர்களாக நடந்து தங்கள் வன்முறையை இலங்கை இராணுவத்திடமே கையளித்துள்ளனர்”. அதுதான் உங்கள் தகவலின்படி பொருப்பை இந்தியா இலங்கையிடம் ஒப்புவித்துவிட்டது. ஆகையால் இந்திய தமிழர்கள் தங்கள் உரிமையை “இந்திய” ஜனநாயகத்தினுள் ஒப்படைப்பது பலவீனமல்ல என்பது “திராவிடநாடு கேட்ட” உலகத்தமிழின தலைவர்கள்தான்? முடிவு செய்யவேண்டும். ஆனால்,/ அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார்./-
  இதனால்,தற்போது சிலர், ஐந்து பில்லியன் டாலர்களை பதுக்கியவர்கள் தங்கள் “இலங்கையர்கள் இல்லை இந்தியர்கள்” என்று “பச்சோஞ்திகளாக கலர் மாறுகிறார்கள்”!.
  இவர்கள் தங்களை “காந்தியவாதிகள்” என்கிறார்கள் இதற்கு சிங்சாங் அடிக்க 5பில்லியன் டாலர் இந்தியவிலும் சிலரை உருவாக்குகிறது!.
  ஆகையால் “காந்தி” என்றால் யார்?.

  மோகன் சந்த் கரம்சந்த் காந்தி தேசப்பிதா என்றாலும், அவருடைய தந்தை ஒரு பிரிட்டிஷ் ஆதரவு “திவான்”. பார்சிய(பனியா) வியாபாரி. காந்தி இலண்டனில் பாரிஸ்டர் பட்டப்படிப்பு படித்தவர். தென்னாப்பிரிக்க சென்று வக்கீல் தொழில் செய்யும் அளவுக்கு ஐரோப்பிய சட்ட நிபுணுத்துவம் கொண்டவர். வெள்ளைகாரர்கள் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு இந்தியவைபற்றி எடுத்துச்சொல்ல கூடியவர். விவேகானந்தரும் சிகாகோவில் இதனைதான் செய்தார். ஆனால் இவர்கள் மகாத்மாக்கள் அல்ல!. இவர்களைபோல் பல காந்திகள் இந்தியாவில் அடையாளம் தெரியாமல் உள்ளனர். காந்தி கதராடை உடுத்தி, குஜாராத்திகளின் காலனியஆதரவு தொழிலான (திருப்பூர் துணி வியாபாரம் போல்) பருத்தி ஆடை ஏற்றுமதி தொழிலில் பனியாக்கள் இலாபமடைய வேண்டும் என்பதற்காக நூல் நூற்றார்!. ஆனால் அவர் “உலகுக்கு தந்தது” அற்புதமான இந்துத்துவம்(இந்தியத்துவம்), அதாவது “அஹிம்ஸை” என்ற ஒரு துளியை எடுத்து உலகிற்கு தெளிவாக புரியவைத்தார். இது புரியாமல், லண்டனில் படித்துவிடால், ஆப்பிரிகாவில் அக்கெளண்டண்டனாக வேலை செய்துவிட்டால், திருப்பூரில் வியாபார முதலீடு செய்துவிட்டால், லண்டனில் குஜராத்திகளுக்கு சமமாக உலாவந்து ஒட்டுமொத்த தமிழர்களையும் மிரட்டி நிர்வாணமாக்கி வசூல் செய்யலாம் என்று நினைத்தால், வே.பிரபாகரனின் நிலையை கண்டபிறகு, இந்த கூட இருந்தே குழிப் பறிக்கும் “பச்சோஞ்திகளை” எண்ணி “லக்ஷ்மி மிட்டலுக்கே” குலை நடுங்குகிறது!. ஐயகோ எம்மை காப்பாற்றுவாரில்லையா?!.

  அஹிம்ஸை எனபது வன்முறையை நியாயத்தின் மூலம் நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தில் செலுத்துவது, தியானம். சும்மா உதை வாங்கிக்கொண்டு வருவதல்ல!. ச.அ.டேவிட் செய்த கந்தீயம், வன்னி யுத்தத்தில் மலையக குடியேற்றவாசிகள், மிகக் கீழ்மையாக பயன்படுத்தப்படவே வழிவகுத்தது!. திலீபனின் உண்ணாவிரதம் நியாயத்தை வலியுறுத்தியதா?, அல்லது தங்களுக்கு “அளிக்கப்பட்ட” கிரீடம் போய்விட்டது இனி கிடைக்காது என்ற விரக்தியில் ஏற்பட்ட கரும்புலி உணர்வா?. நான் அனைத்தையும் விமர்ச்சிக்க விரும்பவில்லை, நியாயமான எதிர்கருத்தை எதிர்ப்பார்க்கிறேன்!.

  Reply
 • london boy
  london boy

  பிரபாகரனை கோவணத்துடன் பார்க்க வைத்ததில் இந்த பத்திரிகைகள் பங்கு வகித்துள்ளன. மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓடியவர்களை துரோகிகள் என்று கூறி அவர்களுக்கு உதவ முன்வராதவர்கள். தமது பிழைப்புக்காக தாம் செய்யும் துரோகங்களை மற்றவர்கள் முகத்தில் துரோகிகளாக்கியவர்கள் இந்த ஒருபேப்பர் ஜபிசி இவர்களே பிரபாகரனின் துரோகிகள்.

  இன்று இவர்களுக்கு தப்பிவாழும் புலிகளும் துரோகிகள் புலிகளுக்கு உதவுபவர்களும் துரோகிகள் கேபி தனக்கு முடிந்த உதவிகளை புலிகளுக்கு செய்வதையும் துரோகி என்றால் இந்த ஊடகவியலாளர் என் தான் சொல்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டாமா?

  தப்பிவாழும் புலிகளுக்கு உயிர் தப்பிவாழும் விதவைகள் அனாதைகளாகிவிட்ட குழந்தைகளுக்கு ஏன் புலிகளின் பணங்கள் சொத்துக்கள் ஏன் உதவவில்லை. எங்கே இந்தப்பபணங்கள் போனது புலிகளுக்காக பணம்சேர்த்தவர்கள் புலிகளுக்காக உதவி செய்தவர்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்தவர்கள் இதை வெளிவந்து வெளியிட வேண்டும். இந்த பணங்கள் யார்கைகளில் உள்ளது பற்றிய விபரங்கள் வெளிவர குறைந்த பட்சம் தப்பிவாழும் புலிகளின் வாழ்வை மீட்டு தமது சுய வாழ்வை தொடர இப்பணங்கள் உதவ வேண்டும்.

  புலம்பெயர் மக்களில் எந்த ஊடகவியலாளர்கள் யார் புலிகளுக்கு புத்திமதி சொன்னவர்கள் என்ற பட்டியலை வரிசைப்படுத்தி, லண்டன் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் வெளிவரும்போது புரியும் யார் புலிகளின் துரோகிகள் என்றும் யார் மக்களின் துரோகிகள் என்றும்.

  Reply
 • Mohamed Shareef Asees
  Mohamed Shareef Asees

  I feel sorry for the supporters who still believe that Mr. Prabakaran is still alive. It seems that they dont want to accept the fact.
  Mohamed Shareef Asees

  Reply
 • kannan
  kannan

  //வே பிரபாகரனுக்கு சயனைட் வழங்கப்பட்டது. ஆனால் வே பிரபாகரன் அதனை எடுக்கவில்லை. அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார்.//
  இத்தகைய உணர்ச்சிகரமான புலியெதிர்ப்பாளர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் செய்திகளை அவர்சொல்ல இவர்கேட்டு எழுதும் பாணியால் வேறுபல நல்ல விடயங்களை வெளியிடும் தேசத்தின் பணி நம்பகத்தன்மையற்றதாகி விடுகின்றது.

  பிரபாகரனை உயிருடன் கைப்பற்றவில்லை- அவரது இறந்த உடலைத்தான் இராணுவச்சிப்பாய் அடையாளம்கண்டு தெரிவித்தான் என்று இலங்கை இராணுவத் தலைமையகமே சொல்லும்போது எங்கிருந்து இத்தகைய வலிந்த கற்பனைகளைத் திணிக்கவேண்டும்? ஒட்டுமொத்த இராணுவமும்> சிங்கள அரசியல்வாதிகளும் பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொண்டுள்ள இவ்வேளையில்- நாம் தமிழரே அதற்கு வரிந்துகட்டி புதுக்கதை விடுவது விடுதலைப் புலிகளின்பாலுள்ள எதிர்ப்பினை மட்டும் காட்டவில்லை. அதற்கும் அப்பால் தமிழர் என்ற எம்மினத்தின் இயல்பான ஒரு குணத்தையும் தான் காட்டுகின்றது. இந்தக் குணம்தான் இலங்கையிலும் சரி. தமிழ்நாட்டிலும்சரி- பிற புலம்பெயர்ந்த நாடுகளிலும்சரி தமிழன் ஒற்றுமையற்றதொரு சமூகமாக இருப்பதற்கு காரணமாகின்றது.– kannan, Harrow

  Reply
 • haran
  haran

  புலிகளை போராளிகள் என்று நினைத்க் கொண்டு எழுதுகிறீர்கள் பலர். புலிகள் பயங்கரவாதிகள் அதனை இந்த சுத்துமாத்து கொம்பன்களுக்கும் தெரியும் ஆனால் தங்கள் பணவருவாய்க்கே இந்த திருதுதாளம் போட்டார்கள். இப்பவும் இவர்கள் வசம் உள்ள பலிகளின் சொத்தின் காரணமாகவே இவர்கள் இப்படி ஆடுகிறார்கள்.
  கனடா லண்டன் என்று வந்து 20 வருடங்கள் ஒருநாள் வேலைக்கு போயிராதவர்கள் எ;படி இரண்டு வீடு வைத்திருக்கிறார்கள் திடீரென கடைகள் ஆரம்பித்தனர் பல லட்சம் பெறமதியான கார்களில் திரிகிறார்கள். புலிகளுக்கு நிதி சேகரிக்கபோன போது எப்படியான கார்களில் போனார்கள் என்பது தெரிந்த விடயம்.

  Reply
 • karuna
  karuna

  தலையங்கமே தப்பாக உள்ளதே! இவர்கள் புலித்தோல் போர்த்திய குள்ள நரிகள்! பச்சோந்தி ஒரு அப்பாவி விலங்கு. தான் தப்பிவாழத் தான் அது தன் நிறத்தை மாற்றுகிறது. இவர்கள் தங்கள் சுகபோக வாழ்விற்கும் அடுத்தவன் குடியை கெடுக்கவுமே இன்று புலித்தோல் போர்த்தியுள்ளனர். ஈழமுரசு என்ற பெயரில் வரும் அண்டப்புழுகு பிரச்சார பீரங்கிகள் முதலில் போர்க்குற்றவாளிகளாக்கப்பட வேண்டியவர்கள்! இந்த பத்திரிகைளை குப்பைத் தொட்டிக்குள் போட்டாலும் அந்த குப்பைத் தொட்டிகளேயே நாசம் செய்ய வல்லன! ஓரு பேப்பரும் அதன் ஆசிரியர்களும் மனித நேயத்தை தொலைத்த கும்பல்! இன்றும் வன்னி மக்கள் புலிகளால் பட்ட வேதனைகளை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்! மிகமோசமான பிரதேசவாதத்தை கிளப்பும் ஊடகங்கள்! இவற்றைப்பற்றி இங்கு எழுதுவதே ஒரு அசிங்கம்! இந்த பத்திரிகைகளால் மலத்தை துடைத்தால் மலம் கூட அசிங்கப்படும்!

  இந்த புளி(லி) வியாபாரிகளின் சுத்துமாத்து இலங்கை ஐலன்ட் பத்திரிகையில் வந்துள்ளது! ஜனாதிபதி விஜயத்தை வைத்து எப்படி இந்த புலி வியாபாரிகள் பணம் பண்ணியுள்ளார்கள் என்ற விபரம் வெளிவந்துள்ளது. தேசம்நெற் இதை மொழிபெயர்த்துப்போட்டால் நல்லது!

  -http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=13247

  Reply
 • வாசுதேவன்
  வாசுதேவன்

  இந்த போலி புலிகளால் உண்மையாக போராடியவர்களிற்கே எம்மால் உதவ முடியாதுள்ளது. முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இம்முறை 360 பேர் தோற்றி அவர்களில் 211பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியைப் பெற்றுள்ளதுடன் இருவர் மருத்துவ பீடத்திற்கும் செல்ல முடியும் எனவும் தெரியவருகிறது. இந்தப் பரீட்சார்த்திகளுக்கான கல்வியூட்டலுக்கு நேர்டோ மற்றும் வொவ்கொட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் தேவையான உதவிகளையும் அனுசரணையையும் வழங்கியிருந்தன. அத்துடன் பரீட்சை நடந்த போது அவர்களிற்கான பயண ஒழங்க மற்றும் காலையில் உண்ண பணீஸ் மற்றும் தேனீர் போன்றவற்றை நேர்டோ அமைப்பு செய்திருந்தது. இதை நக்கலடித்த இந்த ஊடகங்கள் கேபி பணிஸ் வாங்கி கொடுப்பதே செய்ய முடியும் என ஏளனமும் செய்திருந்நது. அனால் இந்த 200இற்கும் மேற்பட்ட போராளிகளை விடுவிக்க பாடுபட்ட கே.பியை ஓருபேப்பர் கோபி துரொகி என்று கூறியதுடன் இந்த அமைப்புகளிற்கு உதவ வேண்டாம் என தன் பத்திரிகையில் எந்தவித மனச்சாட்சியும் இன்றி எழுதுகிறார்! அவரின் பிள்ளைகள் இங்கு கிறமர் ஸ்கூலில் படிக்க அங்கு முன்னை நாள் போராளிகள் நாசமாக பேவதில் அவருக்க அக்கறையில்லை! இந்த புல்லுருவிகளை மேலும் இனம்காட்ட தேசம் நெற் உதவவேண்டும்! வாசுதேவன் – Harrow

  Reply
 • Nathan
  Nathan

  ஜெயபாலன், இப்படி நடந்திருக்கக்கூடாதா என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது ஆனால் அதற்காக நீங்கள் கனவில் கண்டவற்றை நேரி;;ல் பார்த்தது போல எழுதுவது கொஞ்சம் ஓவரா தெரியவி;லை?

  சும்மா சேறடிக்க இப்ப நிர்வாணநடனம் காலைநக்குதல் என்று தான்தோன்றித்தனமாக எழுதுவது உங்ளினதும் கொன்ஸ்ரன்ரைனினதும் பத்திரிகை தர்மத்தை தோலுரித்து காட்டுகிறது. பல மாதங்களிற்கு முன்னர் பரமேஸ்வரனை பற்றி தவறாக எழுதியதற்காக மனவருத்தத்தை தெரிவித்துக் கொண்டது மறந்திருக்க மாட்டீர்கள். அதாவது ஆங்கில பத்திரிகையை நம்பி மக்கள் போரட்டத்தை கொச்சைப்படுத்த நீங்கள் எழுதியது எனலாம். இந்த சேரடித்தலுக்கு அடிப்படை ஆதாரமே இல்லை. இருந்தும் பக்கததி;;ல் நின்று நீங்களிருவரும் பார்த்த மாதிரி விவரணம் வேறு. எதற்கும் இன்ஸ்டன்ட மன்னிப்பை கீ போட்டில் வைத்திருக்கவும்

  அது சரி, இதென்ன ரஜனி படம் மாதிரி வெளிவரும் ஆனால் எப்ப என்று தெரியாது. அதேட 2 சயனைட் வைத்தார்கள் என்று ஒரு பின்னுட்டக்காரர் எழுத அதை இன்னும் பெருப்பித்து நிர்வாண நடனம் அது இது என்று கொன்ஸ்ரன்ரைன் கதைஎழுத ஜெயபாலன் டைரக்ட் செய்த இந்தப்படத்தை எப்ப திரைக்கு விடப்போறியல்????

  இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
  கெடுக்குந்த தகைமை யவர் (குறள் 447)

  என்பது உங்களுக்கும் பொறுந்தும்.

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  //…தளபதி ரமேஸ் மட்டுமல்ல தலைவரும் கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றது காணொளியாக உள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்ட நாடகத்தில் சரணடைந்தார். இந்த ஒளிப்பதிவு சிலரால் பார்க்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனை என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை இந்தியா இலங்கையிடமே விட்டுவிட, வே பிரபாகரனுக்கு சயனைட் வழங்கப்பட்டது. ஆனால் வே பிரபாகரன் அதனை எடுக்கவில்லை. அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார்.//

  போர்க்குற்ற விசாரணைக்குரிய தடயங்களைப் பார்வையிட்டு, அதை சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்த முன்வராதவர்களை, போர்க்குற்றத்திற்கு உடந்தையானவர்களாகக் கருதப்படும் சாத்தியக்கூறுகள் இந்தக் கட்டுரையாளார்களுக்குண்டு.

  Reply
 • padamman
  padamman

  புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் தப்பி ஒடுவதுக்காக எத்தனையோ பேரிடமும்(இந்தியா) மன்டியிட்டர்கள் துரோகி என்றவர்களின் காலில் விழக்கூடி இருந்து கடைசியாக மகிந்தாவின் காலில் விழுந்து நக்கினார்கள் இதைப்பற்ரி ஒரு பேப்பர்தினருக்கு நன்றகவே தெரியும் வெளியில் சொன்லால் தங்கள் பிழைப்பு நாறிவிடும் இவர்கள் தான் தமிழ் இனத்தின் துரோகிகள்

  Reply
 • நந்தா
  நந்தா

  “ஈழமுரசு” என்ற பெயரின் சட்ட பூர்வ உரிமையாளர்கள் புலிகளினால் கொல்லப்பட்ட மயில் அமிர்தலிங்கமும் அவரது குடும்பத்தினருமே ஆவர்.

  தமிழ்நாட்டில் ………………………….

  ஈழமுரசு பத்திரிகையை கிட்டு கூட்டம் கொள்ளையடித்து புலிப் பிரச்சாரத்துகுப் பயன்படுத்தினார்கள்.

  கொன்ஸ்ன்டன்டயின் முயற்சி செய்து மயில் அமிர்தலிங்கம் குடும்பத்தின் மூலம் ஒரு வழக்கை தாக்கல் செய்தால் ஈழமுரசு வெளினாடுகளில் மூடப்படும் சாத்தியம் உண்டு!

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  //இந்த புளி(லி) வியாபாரிகளின் சுத்துமாத்து இலங்கை ஐலன்ட் பத்திரிகையில் வந்துள்ளது!//
  பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவிலுள்ள புளி(லி) வியாபாரிகளின் சுத்துமாத்துகளை இலங்கை ஐலன்ட் பத்திரிகை வாசித்து அறியும் வல்லமையை வாழ்த்துகிறேன்.

  Reply
 • thurai
  thurai

  புலம் பெயர்நாடுகளில் புலிக்கொடியின் பின்னால் என்ன நடந்தது என்பதை யாருமே இலகுவில் அறியமுடியாது. புலிகளை மட்டும்தான் இப்போ உலகம் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இலங்கையில் புலிகளை இராணுவம் அழித்து விட்டது. புலம்பெயர் நாடுகளில் புலிக்கொடி இன்னமும் வலம் வருகின்றது.

  இலங்கைத் தமிழர்களை எவ்வாறு இந்த நிலைமைக்கு கொண்டுவந்து விட்டார்களோ அதே போல் புலம் பெயர் நாடெங்கும் தமிழர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவார்கள். புலி வர்த்தகர்கள் உலகமெங்கும் தங்களின் பரம்பரைக்கு தேவையான சொத்துக்களை சேர்த்துவிட்டார்கள். சேர்க்கத்தவறியவர்கள் திரும்ப முயல்கின்றார்கள்.

  இவர்களை அம்பலப்படுத்தி சட்டத்தின் முன்நிறுத்த புலம்பெயர் தமிழர் தவறினால் இலங்கையில் வாழும் தமிழர்களிற்கு ஏற்பட்ட நிலைமையிலும் மோசமான நிலைமையில் தமிழினம் உலகினில் வாழவேண்டி வரும். துரை

  Reply
 • ஜெயா
  ஜெயா

  சொல்ல வந்த செய்தியும் செய்யப்போகிற பணியும் நல்ல விடயம் ஒவ்வொரு நாடுகளிலும் இவர்கள் இனம் காணப்பட வேண்டியவர்கள். முள்ளிவாய்க்கால் அழிவிற்கு இவர்கள் தான் காரணம். ஆனால் நிர்வாண ஆட்டம் பூட்களை நக்கியது என்பது இந்த கட்டுரைக்கும் தரமான தேசம் தளத்திற்கும் சரியாகப்படவில்லை. அப்படி நடந்து இருந்தாலும் திருந்திவருகிற புலியை மீண்டும் மரத்தில் ஏற்றுவதாகத்தான் அமையும். எல்லாம் முடிந்த பின்பும் அசிங்கமான சில விடயங்களை பேசாமல் விடுவது நல்லது.– ஜெயா பிரான்ஸ்

  Reply
 • BC
  BC

  தோற்கடிக்கபட முடியாத மாவீரன் பிரபாகரன், முருகன் கடவுளுக்கும் மேலானவன், பெற்றோல் ரின்னுடன் ஒருவரை தயாராக தலைவர் வைத்திருக்கிறார், பிடிபட வேண்டிவந்தால் ராணுவத்துக்கு தனது உடல் கிடைக்காமல் தன்னை எரித்துவிடும்படி உத்தரவிட்டுள்ளார், இப்படியாக பிரசாரம் செய்து மக்களை படு முட்டாள் ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஆகவே நிர்வாண ஆட்டம், பூட்களை நக்கியது என்ற உண்மையை கூறி இந்த போலிதனத்தை உரித்த தேசம்நெற் பாராட்டுக்குரியது. இது ஒரு சேவை.
  மற்றும்படி புலிகள் சொல்வது போல் டக்ளஸ், கருணா, கேபி மகிந்தாவின் காலை நக்கும் தமிழ் துரோகிகள் என்பது போல் அல்ல இது. மற்றவர்களை அவதூறு செய்யும் புலிகளின் கவரிமான் பரம்பரையில் வந்த தலைவர் எப்படி நடந்தார் என்கின்ற உண்மை.

  Reply
 • gopal
  gopal

  கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்படும் வீடியோக்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன் வந்தபோது அதில் சுடுபவர்கள் யார் என்றும் சுட்டுக் கொல்லப்படுபவர்கள் யாரெனவும் தெரியக்கூடியதான காட்சிகள் எதுவும் காட்டப்படவில்லை. தற்போது அதே வீடீயோ வருகின்றது மேலதிக காட்சிகளுடன். இவை ஏன் முதலேயே காட்டப்படவில்லை??

  முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களின் படங்கள் வந்த காலத்தில் துவாரகா படம் வந்ததும் அது துவாரகா இல்லை. இசைப்பிரியா என்றார்கள். ஆனால் அந்தநேரம் இசைப்பிரியாவின் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. தற்போது காட்டப்பட்ட வீடியோவுடன் தொடர்ந்து இசைப்பிரியாவின் படங்கள், கானொளிகள், செய்தி வாசிப்பவராக என்றெல்லாம் வீடியோக்கள் உடனே வெளிவந்தன. இவையெல்லாம் இவ்வளவு காலமும் ஏன் வெளியிடப்படவில்லை??

  தற்போது காட்டப்படும் வீடியோக்களில் பலர் முகம் தெளிவாகத் தெரிந்தபோதும் அவர்கள் அடையாளம் காணப்படாததன் காரணம் என்ன??

  சரணடைந்தபின் கொல்லப்பட்டார் என்று காட்டி வோர்கிரைமிற்கு ஆதாரமாக வெளியிட்ட தளபதி ரமேஸ் வீடியோ புலிகளின் கோழைத்தனத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விட்டதை உணர்ந்ததும் அவரைப்பற்றிய கதைகளும் ,படங்களும் புலியூடகங்களில் உடனே வெளிவந்தது.
  தளபதி ரமேஸ் உயிருக்காகக் கெஞ்சும் வீடியோ வந்ததும் அவருக்கு தலைவர் இப்படிச் சொன்னார். அப்படி வியூகம் வகுத்தார். தளபதி சயனைட் குப்பியை கழட்டி எறிந்துவிட்டு தலைவன் கட்டளையை முன்னெடுத்தார் என்று வீராவேசக் கதைகள் இன்று எழுதுபவர்கள், பக்கத்தில் இருந்து கேட்டமாதிரி உரையாடல்களை இன்று எழுதுபவர்கள், ஏன் 2009 மே 19லிருந்து இவ்வளவு காலமும் அதை வெளிக் கொணரவில்லை?? தளபதி ரமேஸ் வீடியோ வந்ததும்தான் எல்லாம் ஞாபகம் வந்ததா??

  அல்லது எல்லாத்துக்கும் மகிந்தா லண்டன் வரும்வரை காத்திருந்தீங்களா??

  மொத்தத்தில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு கதைகளை அவ்வப்போது புலி ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பது நேரிடையாகத் தெரிகின்றது.

  Reply
 • rohan
  rohan

  //..இப்படியாக பிரசாரம் செய்து மக்களை படு முட்டாள் ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஆகவே நிர்வாண ஆட்டம், பூட்களை நக்கியது என்ற உண்மையை கூறி இந்த போலிதனத்தை உரித்த தேசம்நெற் பாராட்டுக்குரியது. இது ஒரு சேவை.//

  இந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது – நான் உண்மை அறியும் ஆவலுடன் உள்ளேன். ஆனால், உண்மை தான் என்று பிசிக்கு எப்படித் தெரிந்தது என அறியவும் ஆவலாக உள்ளேன்.//

  //மற்றும்படி புலிகள் சொல்வது போல் டக்ளஸ், கருணா, கேபி மகிந்தாவின் காலை நக்கும் தமிழ் துரோகிகள் என்பது போல் அல்ல இது. மற்றவர்களை அவதூறு செய்யும் புலிகளின் கவரிமான் பரம்பரையில் வந்த தலைவர் எப்படி நடந்தார் என்கின்ற உண்மை..//

  புலிகளின் பாசறையில் வளர்ந்தவர்கள் செய்ததை விட மேலான ‘துரோகம்’ யாரும் செய்யவில்லை. அவர்களின் ‘நம்பர் ரூ’ ‘நம்பர் வண்’ என்று இருந்த மாத்தையா, கருணா, கேபி என இந்தப் பட்டியலைத் தொடங்கலாம். பொட்டருக்குப் பயத்தில் வேறு பலர் துணியவில்லை – அல்லது புலி என்றோ பரலோகம் போயிருக்கும்.

  Reply
 • rohan
  rohan

  //கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்படும் வீடியோக்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன் வந்தபோது அதில் சுடுபவர்கள் யார் என்றும் சுட்டுக் கொல்லப்படுபவர்கள் யாரெனவும் தெரியக்கூடியதான காட்சிகள் எதுவும் காட்டப்படவில்லை. தற்போது அதே வீடீயோ வருகின்றது மேலதிக காட்சிகளுடன். இவை ஏன் முதலேயே காட்டப்படவில்லை??//

  //மொத்தத்தில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு கதைகளை அவ்வப்போது புலி ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பது நேரிடையாகத் தெரிகின்றது.//

  இந்தப் படங்களையெல்லம் புலி தான் வெளியில் விட்டது என்று யார் சொன்னார்கள்? இராணுவத்திலிருந்து வெளிவந்து சிங்கள செயற்பாட்டாளர்களின் மூலம் பகிரங்கமானவை அல்லவா இவை?

  பெண் புலிப் போராளிகள் இறந்த பின்னும் இரணுவத்தினரால் ஆடை களையப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட விடயத்தை பகிரங்கப் படுத்தாது புலியும் சுய தணிக்கை செய்து புலி ஆதரவு ஊடகங்களும் அமைதி காத்தது உண்மை தான். அவை பழங்கதைகள் ஆகி விட்டன.

  Reply
 • danu
  danu

  படங்கள் எடுத்தவர்கள் பல பேர். பல நாட்டவர்களும் அடக்கம். அப்படியிருக்க சிங்கள ராணுவம்தான் அவற்றை பகிரங்கப்படுத்துகிறார்கள் என எந்த ஆதாரத்தை வைத்துச் சொல்கிறீர்கள்?

  Reply
 • தேசியம்
  தேசியம்

  கொன்ஸ்டைண்டன், ஜெயபாலன்-
  இனபடுகொலை (சிலருக்கு இச்சொல் கசக்கும்), அதனைவிட நீங்கள் அல்லது உங்கள் நம்பிக்கை மிகுந்தவர்கள் கண்கொண்ட சாட்சியை (//….தளபதி ரமேஸ் ……. வேலுப்பிள்ளை பிரபாகரன் …….. சரணடைந்தார். இந்த ஒளிப்பதிவு சிலரால் பார்க்கப்பட்டு உள்ளது. ……… பூட்ஸ்களை நக்கியும் உள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார்…//)
  அம்பலபடுத்தி, அந்த பாவப்பட்ட மக்களுக்கு “ஏதாவது” கிட்ட நீங்கள் உதவி புரியுங்கள். இதனால் உங்கள் மனித நேய பணி மிளிரும், இல்லையேல் நீங்கள் ஒரு கீழ்தர வக்கிர எழுதினர் என்பது வெளிப்படும்.( இதை எழுதுவதற்கு என்மீது “புலி” முத்திரை குத்திவிட வேண்டாம். புலியின் “துரோகி” முத்திரை போல் )

  வாசுதேவன்-
  உங்கள் முன்னைய கட்டுரை போல், இப் பின்னுட்டமும், நீங்கள் ஒரு மனித நேய வாதியாக, இளகிய மனம் கொண்டவராக கொண்டவராக எடுத்துக்காட்டுகிறது. நீங்கள் சுடு கருவிகளை கவித்திரிந்த போது, உங்கள் துப்பாக்கி இரவைக்கு பதில் ரோஜா பூக்களையா உதிர்ந்தது? போராளிகளின் நலன்கள் முக்கியமானது தான். ஆனாலும் அதனைவிட இனமும், அதன் இருத்தலும் உயர்ந்தது. எம் மக்களின் போராட்டத்தை தேனீருக்கும், பணீசுக்குமாக குறுக்கி, போராளிகளை அசிங்கப்படுத்துகிறது உங்கள் மனித நேயம். வாழ்க நேர்டோ வளர்க உம் பணி. நேர்டோ வை நெறிப்படுத்திய கோதாபயவுக்கு நன்றி.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  கருத்தாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
  1.
  //சிலர் பகிரங்கமாகத் துகில் உரியப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் இந்த ‘மன்மதக் குஞ்சு’ ‘சீலை வியாபார நிபுணர்’ போன்ற சில்லறைப் பட்டம் சூட்டல்களை விடுத்து கொஞ்சம் ஒப்ஜெக்ற் ஆக – லொஜிக் ஆக எழுதுவது ஊடக தர்மத்துக்கு அழகாகாதா?// றொகான்

  ஊடக தர்மத்துக்கு கட்டுப்பட்டே எப்போதும் எழுதுகிறேன். சிலருக்கு இந்த பாசையில் சொல்லும் போது தான் தெளிவாக விளங்குகிறது. அதனால் சில விடயங்களை பச்சையாகவும் சொல்ல வேண்டி உள்ளது. ஆனால் ஒப்ஜெக்ற் உம் லொஜிக்கும் நிச்சயம் இருக்கும்.

  2.
  //என்ன இன்னமும் படப்பிடிப்பு முடியவில்லையா! அல்லது மிக்ஸிங் எடிரிங்க்கிலிருக்கா!// தோஸ்து

  //அது சரி இதென்ன ரஜனி படம் மாதிரி வெளிவரும் ஆனால் எப்ப என்று தெரியாது. அதேட 2 சயனைட் வைத்தார்கள் என்று ஒரு பின்னுட்டக்காரர் எழுத அதை இன்னும் பெருப்பித்து நிர்வாண நடனம் அது இது என்று கொன்ஸ்ரன்ரைன் கதைஎழுத ஜெயபாலன் டைரக்ட் செய்த இந்தப்படத்தை எப்ப திரைக்கு விடப்போறியல்????// நாதன்

  இது கொஞ்சம் பெரிய பட்ஜட் படம். பெரிய தலையலும் தலையீடு செய்யினம். அதனால் தேசம்நெற் போன்ற சின்ன ஆட்களிட்ட தர ஒருவரும் விரும்பீனம் இல்லை. சனல் 4, பிபிசி லெவலில தான் ரேட் பேசப்படுவதாகக் கேள்வி. பெரும்பாலும் தைப்பொங்கல், தீபாவளி வெளியீடாகத் தான் வரவாய்ப்பு உள்ளது.

  3.
  //திலீபனின் உண்ணாவிரதம் நியாயத்தை வலியுறுத்தியதா?, அல்லது தங்களுக்கு “அளிக்கப்பட்ட” கிரீடம் போய்விட்டது இனி கிடைக்காது என்ற விரக்தியில் ஏற்பட்ட கரும்புலி உணர்வா?.// டெமொகிரசி

  விரக்தியால் ஏற்பட்ட கரும்புலி உணர்வு என்றே சொல்வேன். தன்னுயிரைத் தவிர வேறு எவரது உயிரின் மதிப்பையும் அறியாத சர்வதிகாரிகள் கோழைகள் தங்கள் வாழ்வுக்காக மற்றவர்களின் உயிரைப் பறிக்கின்றனர். இந்த உளவியலே வே பிரபாகரனுடைய உளவியலும். 50 000க்கும் அதிகமானோரைப் பலி கொடுத்து தன்னைக் காப்பாற்ற முயற்சித்தார். அது தவறியதும் தன் இன்னுயிரைக் காப்பாற்ற சரணடைந்தார்.

  4.
  //பிரபாகரனை உயிருடன் கைப்பற்றவில்லை- அவரது இறந்த உடலைத்தான் இராணுவச்சிப்பாய் அடையாளம்கண்டு தெரிவித்தான் என்று இலங்கை இராணுவத் தலைமையகமே சொல்லும்போது எங்கிருந்து இத்தகைய வலிந்த கற்பனைகளைத் திணிக்கவேண்டும்?// கண்ணன்

  இசைப்பிரியாவினது உட்பட சனல் 4 வெளியிட்ட அத்தனை காணொளிகளுமே மோசடியானது என்று இலங்கையின் இராணுவத் தலைமையகம் சொல்கிறது. அவர்கள் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டதாகவும் சொல்கிறது.

  //ஜெயபாலன் இப்படி நடந்திருக்கக்கூடாதா என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது ஆனால் அதற்காக நீங்கள் கனவில் கண்டவற்றை நேரில் பார்த்தது போல எழுதுவது கொஞ்சம் ஓவரா தெரியவிலை?// நாதன்

  இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமையும் ரமேஸ்க்கு நடந்த கொடுமையும், கெஞ்சலும் கனவில்லை என்றே எண்ணுகிறேன். அந்தக் காணொளிகள் உண்மையானவை என்றே நம்புகிறேன். அப்படி இருக்கும் போது தலைவருடையது மட்டும் ஏன் கனவு எண்கிறீர்கள். இசைப்பிரியா மீதும் ரமேஸ் மீதும் மட்டுமா இலங்கை இராணுவம் யுத்தக் குற்றம் புரிந்தது?

  நந்தா இங்கு உங்களுக்குள்ள பிரச்சினை நீங்கள் தலைவருக்கு கட்டிய விம்பத்தை நீங்களே உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. வாரங்கள் மாதங்கள் வருடங்கள் ஆகலாம். அதற்காக வரலாறு காத்திருக்காது. அது தனது பதிவை மேற்கொள்ளத்தவறாது. மே 17 2009ல் எழுதிய கட்டுரையிலேயே வே பிரபாகரன் உட்பட புலிப் போராளிகள் சரணடையப் போகிறார்கள் என்பதனையும் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் என்ற அச்சத்தையும் எழுதி இருந்தேன். மே 21 2009இலேயே வே பிரபாகரன் உட்பட சரணடைந்த தளபதிகள் படுகொலை செய்யப்பட்டதையும் எழுதி இருந்தேன். தற்போது மேலதிக ஆவணங்கள் வெளிவருவதையே குறிப்பிட்டு உள்ளேன்.

  இப்போதெல்லாம் என் கனவில் வருவது 20 வருடங்களுக்குப் பின் சென்று பார்த்த எனது தாயக மண்ணின் வாசனை மட்டுமே.

  5.
  //போர்க்குற்ற விசாரணைக்குரிய தடயங்களைப் பார்வையிட்டு அதை சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்த முன்வராதவர்களை போர்க்குற்றத்திற்கு உடந்தையானவர்களாகக் கருதப்படும் சாத்தியக்கூறுகள் இந்தக் கட்டுரையாளார்களுக்குண்டு.// விளங்காமுடி

  நீங்கள் சொல்கிறபடி சாத்தியக்கூறு இருந்தால் இலங்கைத் தமிழன் ஒவ்வொருவரும் போர்க் குற்றத்திற்கு உடந்தையானவர்களாகக் கருதப்பட்டு கூட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏனென்றால் கடந்த மூன்று தசாப்தங்களாக போராட்டம் என்ற பெயரில் நடைபெற்றது பயங்கரவாதம் மட்டுமே. துரையப்பா கொலையில் இருந்து ஆரம்பித்து எத்தனை கொலைகள் எத்தனை கூட்டுக்கொலைகளுக்கு நாம் சாட்சியமாக உள்ளோம்.

  யாரங்கே? யூஎன் எங்கே? சாட்சியம் இங்கே! விளங்கும்!

  6.
  //முள்ளிவாய்க்கால் அழிவிற்கு இவர்கள் தான் காரணம். ஆனால் நிர்வாண ஆட்டம் பூட்களை நக்கியது என்பது இந்த கட்டுரைக்கும் தரமான தேசம் தளத்திற்கும் சரியாகப்படவில்லை. அப்படி நடந்து இருந்தாலும் திருந்திவருகிற புலியை மீண்டும் மரத்தில் ஏற்றுவதாகத்தான் அமையும். எல்லாம் முடிந்த பின்பும் அசிங்கமான சில விடயங்களை பேசாமல் விடுவது நல்லது.// ஜெயா

  உங்கள் ஆதங்கம் புரிகிறது. இவ்வளவு அழிவுக்கு காரணமானவர்கள் தங்கள் தவறை ஏற்று தங்கள் நடவடிக்கைகளை மீளாய்வுக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். இதுவரை அவர்கள் அதனைச் செய்யவில்லை. தலைவர் கட்டளையை ஏற்று சயனைட்டைக் கழற்றி எறிந்து சரணடைந்து இலங்கை இராணுவத்தை மனித உரிமை குற்றச்சாட்டில் சிக்க வைத்தார்களாம். இந்த தலைமை வழிபாட்டு விம்பத்தை தவிடுபொடியாக்கி நிஜத்தை உணர்த்தியே ஆக வேண்டும். அசிங்கமான வரலாறுகள் உருவாக்கப்பட்டுவிட்டது. அதனைப் பற்றிப் பேசாமல் அடுத்த அடியை நகர்த்த முடியாது.

  Reply
 • arul
  arul

  லண்டனில் இயங்கும் பிரிஎப் ரிவைஓ வின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் இலங்கைப் புலனாய்வுத்தறையின் இருப்பவரின் சிங்கள உறவுக்காரர் இவர் பல உண்மையான திடுக்கிடும் தகவல்களை பிரிஎப் னுடைய அங்கத்தவர்கள் அதன் முக்கிய உறுப்பினர்கள் அவர்களின் விலாசங்கள் தொடர்புகள் போன்றவற்றை இலங்கை அரசிடம் கையளித்துள்ளார் இதை இலங்கையில் சிறைச்சாலையில் உள்ள புலிகளின் கேணல் ஒருவர் தன்னைப்பார்க்க வந்த உறவுகளிடம் கூறியுள்ளார் அதேபோல புலிகளின் அமைப்பினுள்ளே பல அரச உளவாளிகள் செயற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்

  இவர் இன்னமும் அரச படையினரால் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்றே அறியப்படுகின்றது இவர் சிலவேளைகளில் சீக்கிரம் விடுதலையாகலாம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் இவர் மூலம் வெளிவருகின்றன.

  Reply
 • gopal
  gopal

  றோகன் நான் எழுதியதில் முதல் வரியையும் கடைசி வரியையும் மட்டும் வெட்டி எடுத்து பதில் சொல்ல வேண்டாமே

  Reply
 • kannan
  kannan

  இசைப்பிரியாவினது உட்பட சனல் 4 வெளியிட்ட அத்தனை காணொளிகளுமே மோசடியானது என்று இலங்கையின் இராணுவத் தலைமையகம் சொல்கிறது. அவர்கள் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டதாகவும் சொல்கிறது.

  காளொணியின் பின்னணி ஒலியில் துப்பாக்கி ஓசைகள் து}ரத்தில் கேட்கவில்லையா? இராணுவ அணியின் தலைவன்- சடலங்களை ஒன்றுசேர்ப்பவர் மட்டும் இருங்கள் மற்றவர்கள் தயவுசெய்து அங்கால் போங்கள் என்று கூறும் சிங்கள வசனங்களை யாரும் உங்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லவில்லையா? நான் பார்த்த காணொளியில் அது இருந்தது.

  ஊடக தர்மத்துக்கு கட்டுப்பட்டே எப்போதும் எழுதுகிறேன். சிலருக்கு இந்த பாசையில் சொல்லும் போது தான் தெளிவாக விளங்குகிறது. (ஜெயபாலன்)/
  தேசம்நெற் வாசகர்களை இவ்வளவு ச்சீப்பாக எடைபோட்டிருக்கக்கூடாது.– kannan, Harrow

  Reply
 • Nathan
  Nathan

  ஜெயபாலன், நான் சொல்லவந்தது ஆதாரம் இல்லாமல் ஊடகங்களில் எழுதாதீர்கள் என்பதே. தலைவர் நீங்கள் சொன்னமாதிரி சரணடைந்திருந்தால் அது வரலாறு அதை மாற்றி எழுத முடியாது. அவருக்கு கட்டிய விம்பம் உடையுமா என்பதல்ல பிரச்சனை. உண்மையில் என்ன நடந்தது என்பதே பிரச்சனை. ஏனெனில் அவரே இல்லை என்றபின் விம்பத்தை பற்றி யார் கவலைப்பட்டார்? நீங்கள்பாட்டில் வாயில் வந்ததை இப்ப கூறுவீர்கள் பின் தவறென்றவுடன் வெறும் மனவருத்தத்துடன் முடித்துக்கௌ;வீர்கள். உண்மையை வெளிகொணர்வதே ஊடகவியலாளரின் பணி, தாங்கள் விரும்புவதை எழுதுவதல்ல. அப்படியென்றால் நீங்கள் குறை கூறும் ஓரு பேப்பருக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு??

  இங்கு பிரபாகரன் மீது நீங்கள் காட்டும் அதீத அக்கறை அவரை இழிவாக்கி பழி தீர்த்துக் கொள்வதே அன்றி நடந்த போர் குற்றங்களை அம்பலப்படுத்தவல்ல. அப்படியாயின் எத்தனையோ போர்குற்ற ஆதாரங்கள் வெளிவந்த போதும் நீங்கள் வாயே திறக்கவில்லை. ஆகவே இது உங்கள் தனிப்பட்ட புலி எதிர்ப்புக்கௌ;கைக்கு ஏதுவாக சேரடிக்க உங்களால் சோடிக்கப்பட்ட கற்பனை.

  பிரபாகரனின் முடிவை லண்டனில் இருக்கும் நீங்களே எதிர்வுகூறும்போது களத்தில் நின்ற அவருக்கு தெரிந்திருக்காது என நினைப்பது நகைப்பிற்குரியது. இராணுவம் அவரை தூக்கி தலையில் வைத்து கொண்டாடும் என நினைப்பதற்கு அவர் பால்குடியில்லை என்றே நினைக்கிறேன். ஏலவே மத்திய வங்கி குண்டு வெடிப்பில் அவருக்கு 100 வருட சிறைத்தண்டணையும் வழங்கப்பட்டிருந்தது. அதைவிட பல வழக்குகள் நிலுவையிலிருக்கின்றன மற்றும் இந்தியா இவை அனைத்தையும் தண்டி தான் சுதந்திரமாய் இருக்கலாம் என்று நம்பி சரணடைந்திருப்பரா?

  நீங்கள் சென்ன எதற்கும் ஆதாரமில்லை. சும்மா BBC, Chanel 4 இடம் தான் ஆதாரம் வருமென்றால் நீங்கள் தேசம் நெற்றை மூடிப்போட்டு BBC இலோ Chanel 4 இலோ வேலை தேடலாமே?

  Reply
 • வாசுதேவன்
  வாசுதேவன்

  தேசியம் – தேசியத்தின் அடுத்த கட்டம் பாசிசம். அதை தான் நீர் இங்கு வந்து கொட்டுகிறீர். உமது மன உணர்வுகளை திருப்பதி படுத்த நாம் அவர்களை பட்டினிபோட்டு கொலை செய்ய வேண்டும்! அதை வைத்து நீங்கள் தேசியம் என்று காசு உழைக்க முடியுமல்லவா? அடிக்குமேல் அடிவாங்கி நலிந்து போய் அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்கும் ஒருவனை வைத்து நீர் உதைபந்தாட்ட போட்டி நடாத்த முனைகிறீர்! நாம் அவனை கொஞ்சமாவது நிமிரவைத்து முனைகிறோம். இதுதான எமக்கும் உமக்கும் உள்ள வித்தியாசம். மனித நேயமற்று அராஜகமாக கருத்தெழுதும் நீர் போராட்டம் பற்றி பேசவேண்டாம்! ஒருபோராளிக்குத்தான் இன்னுமொரு போராளியின் வலி தெரியும்! உம்போன்று பார்வையாளர்களிற்கு அல்ல!

  Reply
 • நந்தா
  நந்தா

  //நந்தா இங்கு உங்களுக்குள்ள பிரச்சினை நீங்கள் தலைவருக்கு கட்டிய விம்பத்தை நீங்களே உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. //

  புரியவில்லையே!நான் எங்கும் தலைவருக்கு விம்பமும் கட்டவில்லை கும்பமும் காவவுமில்லை. தவிர இந்த “ஈழக்காச்சல்” தொடங்கிய காலத்திலிருந்து அதனை எதிர்த்தவன் என்பதும் உண்மைகளை எழுதினால் புலி போட்டுத் தள்ளும் என்ற நிலைமையில் நாட்டை விட்டு ஒட்டம் பிடித்த எனக்கு “இப்படி” ஒரு அபவாதம் சுமத்தப்படுவதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

  எந்த அடிப்படையில் இந்தக் கருத்தை அள்ளி வீசுகிறீர்கள் என்பது தெரியவில்லை.

  “தமிழ்” என்ற அரசியல் யாழ்ப்பாணிகளின் சுயனல தேவைகளுக்கான ஒன்று சேர்ப்பு என்பதை பாடசாலை நாள்க்களிலேயே புரிந்து கொண்டவன். இன்று அது உண்மை என்பது மட்டும் அல்லாமல் “தமிழ்” என்று தொடங்கும் எந்த அரசியலும் தமிழர்களுக்கு தலையில் மிளகாய் அரைக்கும் செயல்பாடு என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

  Reply
 • BC
  BC

  நந்தா, நாதனுக்கு பதிலாக நந்தா என்று எழுதிபோட்டார் என்று நினைக்கிறேன்.
  //தேசம் நெற்றை மூடிப்போட்டு BBC இலோ Chanel 4 இலோ வேலை தேடலாமே//
  தேசம்நெற் பெரிய தலையிடியாக இருப்பதும், மூடுப்பட வேண்டும் என்ற விருப்பமும் ஏற்கெனவே அறிந்தது.

  Reply
 • rohan
  rohan

  //“தமிழ்” என்ற அரசியல் யாழ்ப்பாணிகளின் சுயனல தேவைகளுக்கான ஒன்று சேர்ப்பு என்பதை பாடசாலை நாள்க்களிலேயே புரிந்து கொண்டவன். இன்று அது உண்மை என்பது மட்டும் அல்லாமல் “தமிழ்” என்று தொடங்கும் எந்த அரசியலும் தமிழர்களுக்கு தலையில் மிளகாய் அரைக்கும் செயல்பாடு என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.//
  ஏதோ கிடைத்ததை வைத்துக் கொண்டு – அல்லது புதிதாக ஒன்றை உருவாக்கிப் போட்டுக் கொண்டு – தானே ஒவ்வொருவரும் அரசியல் நடாத்துகிறார்கள்! இதில் தமிழை வைத்துத் தமிழ் அரசியல்வாதிகள் பிழைப்பு நடாத்துவது ஒன்றும் புதிதல்லவே.

  இந்த ‘யாழ்ப்பாணிகள்’ என்ற லேபல் குத்துதலே எழுதுபவரின் குறுகிய மனத்தைக் காட்டுகிறது என்று தான் நான் பார்க்கிறேன். 1958இலேயே சிங்களம் மட்டும் வந்தது. தோசை – வடை – நல்லெண்ணெய் என்று அரசாங்கம் ஸ்பொன்சர் பண்ணிய ஊர்வலங்கள் நடந்தன.

  சுயநலமும் பிற்போக்குத் தனமும் கொண்ட யாழ்ப்பாணத் தமிழர் போதிய பின்னணித் தொல்லைகள் இல்லாது தமிழரசு , கூட்டணி, இயக்கங்கள் என விலை போயிருக்க மாட்டார்கள்.

  Reply
 • கந்தையா
  கந்தையா

  /இசைப்பிரியாவின் கொலை வீடியோவை சற்று நோக்கினால் பின்னணியில் கேட்டும் வசனம் முஸ்லீம்கள் இதில் முக்கிய பங்கேற்றுள்ளனர் என்பதை புரியவைக்கும். இசைப்பிரியாவின் ஒளிநாடாவில் கேட்கும் வசனம். “ஐயோ” “தமிலனின் மானம் போவுது” இங்கே சிங்கள இராணுவத்தை மட்டும் சாட்டிவிட்டு முஸ்லீம்களோ புலிகளோ தப்பி விட முடியாது./
  இது குசும்பு சொல்வது.

  /காளொணியின் பின்னணி ஒலியில் துப்பாக்கி ஓசைகள் து}ரத்தில் கேட்கவில்லையா? இராணுவ அணியின் தலைவன்- சடலங்களை ஒன்றுசேர்ப்பவர் மட்டும் இருங்கள் மற்றவர்கள் தயவுசெய்து அங்கால் போங்கள் என்று கூறும் சிங்கள வசனங்களை யாரும் உங்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லவில்லையா? நான் பார்த்த காணொளியில் அது இருந்தது//..
  இது கண்ணன் சொல்வது.

  இவ்வளவும் தானோ அல்லது இன்னும் இருக்கோ….

  போறபோக்கைப் பார்த்தால் துரையப்பா கொலைவழக்குதான் ஞாபகம் வருகிறது

  Reply
 • nanee
  nanee

  புலியிடமும், புலியை வைத்து வியாபாரம் செய்பவர்களிடமும் நாங்கள் ஏன் தோற்றோம் என்றால் எங்களிடமுமே ஒற்றுமை இல்லை. தளத்தில் விடுங்கள். புலம் பெயர்ந்த மண்ணில் இவர்களை நாம் ஒன்று சேர்ந்து ஒரு குறைந்த அளவிற்காவது மக்களுக்கு இனம் காட்டியிருக்கலாம். தேசம் நெற் அந்த பணியை ஓரளவு செய்தது ஆனால் ஒரு அமைப்பாக இவர்களை எதிர்க்க நாம் ஒன்றுபடாதது பெருங்குறையே. ஒரு 5 நிமிடம் இங்கு வந்து கருத்தெளிதிவிட்டு போவதில் ஆகப்போவதொன்றுமில்லை. முடிந்தளவு ஒரு அடிப்படை புரிந்துணர்வுடன் இனியாவது இவர்களை மக்கள் மத்தியில் தோலுரிக்க வேண்டும். இவர்கள இப்படியே விட்டால் தமது அடுத்த கட்டவியாபாரத்திற்கு எம்மவரை மீண்டும் பலிக்கடா ஆக்கிவிடுவார்கள்.
  கனடாவிலும் இதே நிலைதான். அவர்களுக்கு தாங்கள் செய்வது போக்கிலித்தனம் என்று தெரியும் அதனால் தங்களுக்குள் ஒற்றுமையா பிரித்துக் கொள்கின்றார்கள்.

  Reply
 • thurai
  thurai

  //புலம் பெயர்ந்த மண்ணில் இவர்களை நாம் ஒன்று சேர்ந்து ஒரு குறைந்த அளவிற்காவது மக்களுக்கு இனம் காட்டியிருக்கலாம்.//நானீ
  இங்கு யாரை எங்கு எப்படி நம்புவதென்பதே பிரச்சினையாக்வுள்ளது. யார் புலி, யார் புலிஎதிர்ப்பு யார் கள்வன் யார் பொலிஸ் என்பதே தெரியாது. ஒவ்வொருவரும் தமது குடும்பத்தினரை முதலில் தெளிவு படுத்தினாலே போதும்.– துரை

  Reply
 • rohan
  rohan

  //இங்கு யாரை எங்கு எப்படி நம்புவதென்பதே பிரச்சினையாக்வுள்ளது. யார் புலி, யார் புலிஎதிர்ப்பு யார் கள்வன் யார் பொலிஸ் என்பதே தெரியாது. ஒவ்வொருவரும் தமது குடும்பத்தினரை முதலில் தெளிவு படுத்தினாலே போதும்.– துரை//

  அச்சொட்டாகச் சரி! புலி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கே தங்களுக்குள் யார் நம்பத்தக்க புலி யார் அரசின் வால் பிடி – யார் நெடியவன் வால் பிடி – என்று தெரியாதிருப்பது ஒரே அக்கப்போர்!

  Reply
 • kamal
  kamal

  தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் எப்போதும் எதிரிகளை உருவாக்கும் அடிப்படையிலானது அவர்களது பிறப்பு முதலே அவர்களாகவே அவர்களது எதிரிகளை உருவாக்கி வந்துள்ளார்கள். யாரையாவது எதிரிகளாக குற்றம் சுமத்தாவிட்டால் அவர்களால் எதுவும் செய்யமுடியாது. இப்போதும் ஐரோப்பிய நாடுகளில் உயிர் பிழைத்திருக்கும் சில கடும்போக்கு தமிழீழ விடுதலைப் புலியினர் இதையே செய்கின்றனர் ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இன்னலுறும் தமிழ்மக்களுக்காக அவர்கள் எதையும் செய்ய இயலாதவர்களாய் இருக்கிறார்கள்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //ஒரு அமைப்பாக இவர்களை எதிர்க்க நாம் ஒன்றுபடாதது பெருங்குறையே. //
  இதில் பல்லிக்கும் வருத்தம்தான்; ஆனால் அதுமுடியாத காரியமாகவே உள்ளது; அதனால் தான் தேசத்தை தெரிவு செய்து ஒரு குத்துமதிப்பாய் என்னை நானே மனிதனாக்க முயற்ச்சிக்கிறேன்; முதலில் புலிக்காய் அரசை ஆதரிப்பதையும்; அரசுக்காய் புலியை விமர்சிப்பதையும் விட்டு மக்களுக்காய் இரு மிருகங்கள் தவிர்ந்த அனைத்து உயிரினங்களையும் யாருக்கும் பயப்படாமல் (முகத்தை மறைத்தாவது) விமர்சிக்கும் போது அமைப்பு அற்ற ஒரு மனிதநேய நட்புகள் உருவாகும்; அதில் வாதம் இருக்கும்; விமர்சனம் நெருப்பாய் கொதிக்கும்; ஆனாலும் எண்ணங்கள் மட்டும் மக்கள் பற்றியதாய் இருக்கும்; அது தேசத்தில் அரும்பியதாகவே கருதுகிறேன், அந்த வகையில் பல்லி பல நண்பர்களை இனைத்துள்ளேன், இது காலபோக்கில் பல நண்பர்களில் பல்லியும் ஒருவராக மாறும் என நம்புகிறேன்: இதுக்கு நானேயின் ஆரம்பபுள்ளியே ஆரம்பமாக அமைந்து அதுக்கான ஒரு வரவேற்பை தேச நிர்வாகம் செய்யலாமே என்பது பல்லியின் ஆசை மட்டுமே, கருத்து முரன்பாட்டுக்கு அப்பால் மக்களின் நலன்கருதி விட்டுகொடுப்புடன் தேச நண்பர்களுடன் இனைந்து செயல்பட பல்லி என்றுமே மறுப்பில்லாமல் இருப்பேன் என்பதை இங்கு பதிவு செய்கிறேன், எமது கருத்து இருட்டில் இருந்து வந்தாலும் நான் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன், சந்தர்ப்பம் கிடைத்தால் ஜெயபாலன்; சோதியுடன் நேரடியாக பேச முயற்சிக்கிறேன், இருட்டு வாழ்க்கை கனக்கிறது;

  Reply
 • நந்தா
  நந்தா

  யாழ்ப்பாணிகள் என்றவுடன் சிலருக்குக் கடுக்கிறது. ஆனால் ஈழம் என்று தொடங்கி விட்டு வெளினாடுகளுக்கு ஓடியவர்கள் யார்?
  வட்டுக்கோட்டை, கொட்டைப்பாக்கு என்று இன்னமும் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் யார்?
  இராஜபக்ஷவுடன் விருந்துண்ண வெளினாடுகளிலிருந்து படையெடுப்பவர்கள் யார்?
  யாழ்ப்பாணிகள்தான்.

  Reply
 • தேசியம்
  தேசியம்

  வாசுதேவன்:
  //..ஆனால் இசைப்பிரியாவின் மரணத்திற்கு இராணுவம் மட்டுமா பெறுப்பு? இறுதி யுத்தம் நடைபெறுகையில் புலிகளின் அரசில் பிரிவு முதல் ஊடகப்பிரிவுவரை ஆயுதம் ஏந்த நிரப்பந்திக்கப்பட்டார்கள்…// வாசுதேவன் on December 16, 2010 12:46 pm
  உங்கள் நோக்கம் என்ன? அவள் ஆயுதம் ஏந்திய காரணம் தான் விளைவு என்று சொல்லாமல் சொல்கிறார்கள். உங்கள் கருத்துகள் அரசின் கொடூரத்தை சாந்தப் படுத்துகிறது. புலி இருக்கையில் உங்கள் தேசியமும், இன்றைய உங்கள் மனித நேயமும் மக்களுக்கு உதவாது.
  //..ஒருபோராளிக்குத்தான் இன்னுமொரு போராளியின் வலி தெரியும்!..// வாசுதேவன் on December 16, 2010 12:11 pm
  பல போராளிகளை கொன்ற கிட்டுவும் ஒரு ”போராளி” தான்.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  யாழ்ப்பாணிகள் என்றவுடன் சிலருக்குக் கடுக்கிறது. ஆனால் ஈழம் என்று தொடங்கி விட்டு வெளினாடுகளுக்கு ஓடியவர்கள் யார்?-நந்தா on December 17, 2010 1:46 am.
  — “யாழ்ப்பாணம்” என்ற சொல்லே என்னுடைய 23 ஆவது வயதில்தான் எனக்கு அறிமுகம். 1992 ல் எம்பில் தீஸிசில் இலங்கை பற்றி எழுதுவது கைடால் மறுக்கப்பட்டது. 1989ல் சோவியத் உடைந்து ஆப்கானிஸ்தானில் மாற்றங்கள் ஏற்ப்பட்டதால் அதை தலைப்பாக்க சொன்னர்கள், சொன்ன பேச்சை கேட்டிருந்தால் உருப்பட்டிருக்கலாம். தமிழ் என்ற சொல்லை வைத்து அரசியல் நடத்தியது கலைஞரும் திமுகவும்தான். உலகம் முழுவதுமுள்ள “இலங்கைத்தமிழரிடம்” அவர்களின் நெருங்கிய உறவினரல்லாதவர்கள் பழகமுடியாது (பொது கருத்து இல்லை). இந்தியாவில் பிஸினஸ் பண்ணுகிறேன், கடை வத்திருக்கிறேன் அல்லது வெளிநாடுகளிலுள்ள கம்பெனிகளில் வேலை எடுத்து தரமுடியும் என்றால் பழகுவார்கள். இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைக்கான அதிகார மையங்களும் இத்தகையதாகவே அமைந்திருக்கின்றன. பிரபாகரன் சர்வாதிகாரி அவனால்தான் சீரழிவு என்பது ஏற்கமுடியாது. ஒரு தனிமனிதன் சர்வாதிகாரியாக இருந்தால் வீட்டைவிட்டுக்கூட வெளியே வரமுடியாது. டெலோ அழிப்பின்போது சோடா உடைத்து கொடுத்தது யார்?, உலகெங்கும் கொடி பிடித்தது யார்?… இப்படியான ஆதரவில்லாமல் ஒருவன் சர்வதிகாரியாக முடியாது!. ஓரளவுக்கு உருப்படியாக சிந்திக்ககூடிய? ஈராஸ் தலைவர் வே.பாலக்குமார், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர்களின் ஆதரவு இதற்கு உதாரணம்!.

  ஜனநாயகத்தில் (டெமகரஸி), மக்கள் தங்கள் “வன்முறையை” காவல்துறையிடம் அளிக்கிறார்கள். அது நீதித்துறையிடம் கையளிக்கப்படுகிறது. நீதித்துறை “வன்முறையை” இராணுவத்திடம் கையளிக்கிறது. இராணுவத்தின் தலைவராக ஜனாதிபதி உள்ளார், ஜனாதிபதியை நியமிக்கும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளின் தலைவர் (பிரதமர்)செய்கிறார். சட்டங்களை மக்கள் பிரதிநிதிகள் (லா மேக்கர்ர்ஸ்) இயற்றுகின்றனர். இந்த மக்கள் பிரதிநிதிகள் “பில்லினேயர்களாக” “கலர் டிவி” கொடுத்து வந்தால்,எப்படி இந்த சுழற்சிமுறை சரிப்பட்டுவரும்?!.
  இலங்கைத் தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக “ஜனநாயகரீதியாக” தங்கள் “வன்முறையை” விடுதலைப் புலிகளிடமும், பிரபாகரனிடமும் கையளித்திருந்தார்கள்!. இதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மதிக்க வேண்டும்!. இதை யாராவது மறுக்கிறீர்களா?. தற்போது ஜனநாயகரீதியாக “கூண்டோடு(இயக்கம்)” தங்கள் “வன்முறையை” இலங்கை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார்கள், மக்கள் ஆதரிக்கிறார்கள். இதையும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மதிக்கவேண்டும்.

  நடைமுறையில் உதாரணமாக இந்திய நீதித்துறை என்பது அலகாபாத் போன்ற உச்ச நீதிமன்றங்களில் ஊழல் நிரம்பியதாக உள்ளது. பணத்தைக் கொடுத்து யார் வேண்டுமானாலும், காரியம் சாதிக்கலாம். இதற்கு காரணம் பதவிகளை பிடித்திருப்பவர்கள் தங்கள் “உறவினர்களை” உள்ளே புகுத்தியிருப்பதுதான்.

  அதாவது, நான் மே 2,2009 ல் எழுதியிருந்தேன், பிரபாகரனுக்கு வன்னியில் இருப்பதற்கு உரிமையில்லை, சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது பயன்படுத்தி வெளியேற வேண்டும் என்று. “உறவினர்கள்” அடிப்படையிலேயே அதிகார மையம் அமைக்கப்பட்டது. அரசியல் முன்வைப்பு “தேசவழமைச்சட்டம்” அடிப்படையில் (இதுவும் உறவினர் அடிப்படையே) என்பதால்!. இந்தியாவின் பஞ்சாயத்து ரஜ் ஜும் சேசவழமைசட்டமும் ஒப்பிட முடியாது, ஏனென்றால் அதில் “பிரதேச ரீதியில்” சிறப்பு சலுகை கிடையாது. வன்னிக்கான, மட்டக்களப்பிற்கான தேசவழமிச்சட்டத்தை யாரும் சிந்தித்ததுண்டா?.
  “தமிழை” அரசியலாக வைத்து நடந்த ஒருங்கிணைப்பின் பின்ணணி இதுதான்!.

  இது தோல்வியில் முடிந்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது. இதை இட்டு நிறப்ப ஒரு அடிப்படை அலகு தேவை.
  பிரபாகரன் நிர்வாணமாக டான்ஸ் ஆடியிருப்பது உண்மையானால், எதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது?. மகாவம்சத்தின் அடிப்படையில் என்றால், இலங்கை நாட்டின் இறையாண்மை. தமிழ்நாட்டுதமிழர்கள் (இவர்கள் ஒன்றும் பெரிய புடுங்கிகள் அல்ல, விஷயம் தெரியாதவர்கள் தலைமீது “காந்திய வாதிகள்?!” பழியை தூக்கிப்போட்டுவிட்டு தாங்கள் தப்பித்துக்கொள்ளும் முயற்சியை விளக்கவே இது) இதை மதிக்க வேண்டும்!.

  தேசவழமைச் சட்டம் அடிப்படையில் என்றால், அது இலங்கைத் தமிழரின் “உரிமை?!” இதையும் மதிக்க வேண்டும்!.
  பயங்கரவாதம் என்ற அடிப்படையில் என்றால், ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டுள்ள சில தரவுகளின் அடிப்படையில் என்பதால் விமர்ச்சிக்கவும், விளக்கவும் வேண்டியுள்ளது!….

  Reply
 • jeyarajah
  jeyarajah

  கைவசம் இருந்தாலும் அந்த காணொளியைப் போடாமல் இருப்பது நல்லது. முழுத்தமிழினமும் தலைகுனிய வேண்டிவரும். இது சனல் 4ல் அல்லது பிபிசி யில் வந்தாலும் தலைகுனியவே முடியும். அந்த செயல் நம்மவர்களால் வேண்டாம்.

  Reply