தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்குபற்றும் தமிழ் கட்சிகளோடு ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று கொழும்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற போது இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது கடும் விவாதங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தின் இறுதியில் ஏனைய தமிழ் கட்சிகளோடு கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்துவது தொடர்பாக தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) எஸ்.சிறிதரன், இடம்பெயர்ந்த மக்களின் பனர்வாழ்வுக்கழகத் தலைவரான எஸ்.சந்திரகாசன், தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆகியோரை முதலில் சந்தித்து கலந்துரையாடுவதென்று தற்பொது கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழ் கட்சிகளின் அரங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் பல தடவைகள் தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தமிழ் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதான கருத்தை தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கூடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் நலன் கருதி எந்தவொரு கட்சியுடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
palli
//பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் நலன் கருதி எந்தவொரு கட்சியுடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.//
அப்போ இதுவரை யார் நலன் கருதி தனிகுடிதனம் நடத்தினியள்; ஜயா நாடும் அரசும் ரெம்ப கெட்டுபோய் கிடக்குது என நாக்கு முக்கா பாடாமல் ஏதோ தமிழர் நலன் கருதி பிரபாபோல் யாரிடமாவது எழுது வாங்கியாவது வாசிப்பதுதான் உங்கள் மிகுதிகால பதவிக்கு நல்லது இது பல்லியின் பலன் அல்ல; மக்களின் முணுமுணுப்பு, இது உங்களுக்கும் கடசி பஸ் விடாமல் ஏறிவிடுங்கோ;
Selva
Hello Mr.Suresh,
When you refused to show the accounts of the party and walked away did you do that in the interst of the Tamil peole?
When you enjoyed honey moon with the Tiger terrorists after the GREAT leader Comrade Pathmanaba being killed by the LTTE ,did you take that decision in the interest of the Tamil people?
When a land belonged to Comrade Pathmanaba’s wife was transferred fraudently in your name did you do that also in the interst of Tamil people?
Selva
jakanathan
புலிப் பினாமிகள் புணத்தை வைத்து பிலைப்பு நடத்தும் நாள் நவம்பா 27 இனனாளில் இனறு புலித்தலைமை அழிந்த பின் மக்களை நம்ப வைத்து பணம் வசுலிக்க நடாத்த படுகிற நாடகம் தான இந்த விநாயகர் நாடகம்
sumi
கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போனபின்பும் இந்த மீதி நாலு பேரும் எதை வைத்து பிழைப்பு நடத்தப் போகின்றார்களோ தெரியவில்லை.
மாயா
மனதில் அரசியல் தீர்வொன்றை வைத்திருக்கின்றேன்.அந்தத் தீர்வானது மக்களினாலும் அரசியல் கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.- Mahinda Rajapakse
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருப்பவர்களோ ஒன்றுபட்ட இலங்கைக் கட்டமைப்புக்குள் அதிகாரப்பகிர்வுப் பொதியை ஏற்றுக்கொள்ள முடியுமென முதற்தடவையாகக் கூறியுள்ளமை கவனத்திற்கெடுக்கக்கூடிய விடயமாகும். அதனை எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்கள்?
இது மிகவும் சிறப்பான முன்னேற்றமாகும். ஏனெனில் அவர்கள் முன்னர் தனிநாட்டை விரும்பியிருந்தார்கள். இது மிகவும் சிறப்பான முன்னேற்றம். இப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தையை நாம் ஆரம்பிக்க முடியும்.
அவர்களிடமிருந்து நீங்கள் அதிகளவை எதிர்பார்க்கிறீர்களா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மட்டுமல்லாமல் சகல தமிழ்க் கட்சிகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். எமக்கு அவர்களின் ஆதரவும் தமிழ் மக்களின் ஆதரவும் தேவை. இது மிகவும் முக்கியமானதாகும். பிரபாகரன் விரும்பியிருந்ததை தங்களால் பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அவர்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகும். அதாவது துவக்குகள்,ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் பிரபாகரன் விரும்பியிருந்ததை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அவர்கள் உணர்ந்துகொள்வது அவசியம். அந்த வழி முறையில் அவர்களால் நாட்டை அச்சுறுத்த முடியாது. பிரபாகரனுக்கு நாங்கள் எதனைக் கொடுக்க மறுத்தோமென்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனையவர்களுக்கும் நாங்கள் கொடுக்கமாட்டோம். இந்த நடவடிக்கைகளில் நியாயமான முறையில் யதார்த்தமான வழியில் அவர்கள் இருப்பது அவசியமாகும். ஏனையோரின் உணர்வுகளையும் அவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
– இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் என்.ராமுக்கு ஜனாதிபதி வழங்கிய செவ்வி