ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

EPDPNewsLogoதமிழ் குறிப்பாக யாழ்ப்பாண சமூகம் கல்விசார் சமூகம், தமது பிள்ளைகளின் கல்வியில் 100 சதவிகிதம் அக்கறையுடன் செயற்படும் சமூகம். கடந்த 30 வருட போர் நடவடிக்கைகளினால் தமது கல்வியை சீரழித்து இலங்கையில் கல்வியில் பின்தங்கிய சமூகம் என்ற நிலைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டு உள்ளது. இதற்குக் காரணம் சமூகத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளாத கல்விமான்கள், அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் இன்னும் பல காரணங்களைக் கூற முடியும்.

தவறிப்போன – தோற்றுப்போன எமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட கல்வி சம்பந்தப்பட்ட ஒருதலைப்பட்சமான முடிவுகளினாலேயே ஆயுதம் தூக்கும் போராட்டமாக மாறியது என்பது வரலாறு. இதில் யாழ் மாவட்ட மாணவர் சமூகத்தின் எழுச்சி மிக முக்கியமானது. இந்த கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்களுக்காகவும் கல்வி வெள்ளை அறிக்கையை எதிர்த்தும் நாம் பாரிய எழுச்சிக் கூட்டங்களையும் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக பல்கலைக்கழக தெரிவுகள் பற்றிய விடயத்திலும் அரசுக்கு எதிராக பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதனைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய போராட்த்தை மேற்கொண்டோம்.

இந்தப் போராட்டங்களில் அன்றைய மாணவர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பெற்ற ஈழமாணவர் பொதுமன்றத்தின் நடவடிக்கைகளில் ஒருவனாக நான் என்னையும் அன்று இணைத்துக் கொண்டிருந்தேன் இந்த போராட்டங்களில் இன்றுள்ள ஈபிடிபி தோழர்களில் பலரும் இணைந்தே செயற்பட்டிருந்தனர்.

இந்தப் போராட்டங்களை செழுமைப்படுத்தி இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் இப்போராட்டங்களை தங்கள் கட்சி சார்ந்தும் தங்கள் சொந்த விரும்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும் பயன்படுத்திக் கொண்டனர். கட்சி நலன்சார்ந்த அல்பிரட் துரையப்பாவின் படுகொலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர் படுகொலை வரை இவற்றை ஆதரித்த அரசியல் தலைவர்களும் கல்விமான்களும் எமது சமூகத்தில் இருந்துள்ளனர் என்பது வேதனையானது. ஒவ்வொரு கொலையிலும் இரத்தம் காயுமுன்னரே அதனை நியாயப்படுத்த எமது கல்விமான்கள் தயங்கியதில்லை. இவற்றை ஆதரித்த பேராசிரியர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியேயும் இருந்துள்ளனர். இன்னமும் இருக்கின்றனர். ஆனால் இப்போது தங்கள் நிறத்தை மாற்றிக் கொண்டு விட்டனர்.

இன்று தமிழ் சமூகம் தனது போர்க்கால அவஸ்தைகளில் இருந்து இளைப்பாறி தமது பிள்ளைகள், அவர்களின் கல்வி என்பவற்றை முன்வைத்து தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இந்தவேளையில் இலங்கை அரசினதும் தமிழ் அரசியல் தலைமைகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றனர். இந்த தமிழ் அரசியல் தலைமைகளில் வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாது அதற்கு அப்பாலும் மக்களினது குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வல்லமையை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஈபிடிபி கட்சியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமே கொண்டுள்ளனர்.

அரசாங்கத்துடன் இணக்கப் போக்கைக் கடைப்பிடித்து தமிழ் மக்களது வாழ்வை வளம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எப்போதும் கூறிவருகின்றார். இப்போது ஈபிடிபி கட்சிக்கும் அதன் அமைச்சருக்கும் தமிழ் மக்களது வாழ்வை வளம்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் உள்ளது. அதனை வடமாகாண மக்கள் அவர்களுக்கு வழங்கி உள்ளனர்.

இந்த வடமாகாண மக்களின் முக்கிய தேவையாகி உள்ள கல்விசார் நிலைப்பாடுகள் உட்பட முக்கிய முடிவுகளை எடுக்கின்ற பொறுப்பு ஈபிடிபி கட்சியின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உள்ளது. இந்த முக்கிய முடிவுகளில் ஈபிடிபி கட்சியும் அமைச்சரும் தமிழ் மக்களுக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய எந்தவொரு முடிவும் எடுக்கப்படாது என்ற உறுதியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் வேளையிலேயே பிரபல பாடசாலையொன்றின் மூன்று மாணவிகளின் தற்கொலை முயற்சி பற்றிய செய்தி வந்துள்ளது. அதற்கு முன்னதாக பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கு விரிவுரையாளராக இருக்கும் பிரபல மருத்துவ நிபுணரின் பாலியல் துஸ்பிரயோகம் அம்பலமாகி உள்ளது. இவற்றுக்கும் மேல் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழக மாணவிகளின் தற்கொலை முயற்சிகள் பற்றி வெளியிட்ட கருத்துக்கள். இவையெல்லாம் வடமாகாண மாணவர்களின் பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் பற்றிய பயப்பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இவற்றைப் பார்க்கும் போது தமிழ் கல்விச் சமூகத்திற்கு நம்பிக்கையூட்ட வேண்டிய தேவை இப்போது மிக அவசியமாகி உள்ளது. தேசம்நெற்றில் வெளியான கட்டுரைகள் தமிழ் கல்விச் சமூம் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதனை வெளிக்கொண்டு வந்துள்ளன.

தமிழ் மக்கள் தமது இன்றுள்ள பிரச்சினைகளில் தமது பிள்ளைகளின் கல்வி, சர்வதேச தரத்திலான கல்வியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தமது பிள்ளைகள் பெறும் பட்டம் – பட்டம் விடுவதற்கு அல்ல, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.  தமது பிள்ளைகள் பெறும் கல்வித்தரம், புலம்பெயர்ந்து வாழும் தமது உறவுகளின் கல்வித் தரத்திற்கு நிகராக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

தமிழ் மக்கள் கல்விசார் நிலையில் தமது இருப்பை மீண்டும் உறுதிசெய்ய யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு தகமையின் அடிப்படையிலும் முகாமைத்துவ ஆளுமையின் அடிப்படையிலுமே அமைய வேண்டும் என கல்விசார் தமிழ் சமூகம் எதிர்பார்க்கின்றது. அதனை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. குறிப்பாக அந்தத் தெரிவை மேற்கொள்கின்ற அரசியல் பலத்தை உடைய ஒவ்வொரு ஈபிடிபி உறுப்பினரும் அதன் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அமைச்சரும் அரசியல் நேர்மையுடன் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

தகமையின் அடிப்படையிலும் முகாமைத்துவ ஆளுமையின் அடிப்படையிலும் அல்லாமல் யாழ்-சைவ-வேளாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரோ அல்லது ஈபிடிபி கட்சிக்கும் அமைச்சருக்கும் நன்றாக வாலாட்டக் கூடிய ஒருவரையோ நியமிக்க முற்படுவது தமிழ் கல்விசார் சமூகத்திற்கு செய்யப்படும் பாரிய அநியாயமாகும். இன்றும் ஈபிடிபி கட்சிக்கும் அமைச்சருக்கும் வால் ஆட்டுபவர்கள் முன்னர் வேறு யாருக்கோ வால் ஆட்டியவர்களே. அவர்கள் நாளை இன்னுமொரு எஜமானர் வந்தால் அவருக்கு வாலில் குஞ்சமும் கட்டி ஆட்டுவார்கள். இவர்களுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன எல்லாம் ஒன்றுதான்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சில்வேஸ்திரி அலன்டின் (உதயன்), முருகேசு சந்திரகுமார் (அசோக்), மற்றும் ஈபிடிபி யின் முக்கிய உறுப்பினர்கள் பொறுப்பாளர்களான தோழர் தவராஜா, தோழர் மித்திரன், தோழர் மார்டின் ஜெயா, தோழர் ஆறுமுகம், தோழர் விந்தன், தோழர் திலக், தோழர் ஜெயராஜா மற்றும் தோழர்கள் தங்களுடைய கட்சி எப்போதும் தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி சரியான முடிவை எடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தவறான தெரிவுகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் இவர்கள் பொறுப்பாவது தவிர்க்க முடியாதது. தமிழ் கல்விசார் சமூகத்திற்கு எதிராகச் செயற்பட்ட அரசியல் சக்திகள் அதற்கான விலையைச் செலுத்தியே உள்ளனர். தமிழ் சமூகம் தங்கள் கல்வியை பாதிக்கும் விடயங்களை நீண்டகாலத்திற்கு பொறுத்துக் கொள்ளப் போவதில்லை.

ஆகவே ஈபிடிபி கட்சி பொறுப்பான முடிவுகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். இன்று நவம்பர் 17 யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிக முக்கிய முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன்னுடைய ஆதரவை அல்லது அதற்கான சமிஞ்சையை அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தமிழ் கல்விசார் சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.

ஈபிடிபி தோழர்களே நல்லதொரு இதய வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். 

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • Suppan
    Suppan

    Sothi,

    The election would be held on Nov. 27th, before that there is is Council meeting on Nov. 21st in order to finalize the list of candidates. Please check the information twice.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில்! தழிழ்வின் செய்தி

    இங்கு முக்கியமான மாணவர்களின் ஒரு கோரிக்கையை குறிப்பிடவில்லை, அதாவது, “நிர்வாகத்தின் ஒருதலைபட்சமான முடிவால் 1ம் வருட மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டமையை கண்டித்து!”

    இதில் உள்ள விடையம் என்னவெனில், 1ம் வருட மாணவர்கள் நோய்வாய் பட்டமையால் (சிரேட்ட மாணவர்களினது பகிடி வதை காரணமாக; மருத்துவ அறிக்கையின் படி) கடந்த வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளிக்கபட்டது.

    இதனை காரணமாக வைத்து மாணவர்களை கலாநிதி கிருஸ்ணகுமார் (ஒர் துறைத் தலைவர்) தூண்டிவிட்டதே இந்த போராட்டம். எனெனில் இடப் பற்றாக்குறை என்னும் விடயம் இன்று நேற்று உள்ளது அல்ல இது காலம் காலமாக உள்ள விடையம்.

    இது கிருஸ்ணகுமார் இற்கும் குகநேசனுக்கும் உள்ள தனிப்பட்ட விடையம். மேலும் கிருஸ்ணகுமார் பல நிர்வாக சீர்கேடுகளுடன் சம்பத்தபட்டவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவைகளை மறைக்க மாணவர்களை தூண்டி விடுவது என்பது இவரது வாடிக்கை. ஆனால் மாணவர்களது கல்வி???

    எனவே இங்கு குறிப்பிட விரும்புவது என்னவென்றால் யாழ் பல்கலையில் ஊழல் என்பது தலை முதல் கால் வரை பரவி உள்ளது. எனவே இப் பல்கலை கழகத்தை மீட்டெடுப்பது இமாலய சாதனை தான் என்பதில் அய்யமில்லை.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    நான் காலேலை எழும்பி தேசத்தைத் திறந்துபோட்டு வீணையைக் கண்டதும் சைற் மாறி வந்திட்டன் எண்டு நினைச்சேன். எண்டாலும் நல்லாத்தான் வாசிச்சிருக்கிறாங்கள்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    இன்று நவம்பர் 17ல் நடைபெற இருக்கும் கூட்டம் உத்தியோக பூர்வமற்றது suppan நீங்கள் சொல்வது உத்தியோக பூர்வமான கூட்டம் பற்றியதே. பெரும்பாலான முடிவுகள் உத்தியோக பூர்வமற்ற கூட்டங்களிலேயேதான் எடுக்கப்படுவது.

    Reply
  • Suppan
    Suppan

    Sothi,

    Are you referring to the meeting between External Council members and the Minister? That is not a council meeting whether it is is formal or informal. I am not aware of that, but I referred to the Council meeting only.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    தான் நடுநிலையாக நிற்க போவதாக அமைச்சர் கூறியதாக கேள்வி.

    அது என்ன நடுநிலை?

    அமைச்சர் நீதியின் பக்கமா இல்லையா என்பதுதான் கேள்வி.

    இல்லையேல் முள்ளிவாய்க்கால் தான் வேறு என்ன.

    Reply
  • karuna
    karuna

    நடுநிலை என்பது மதிலிலை நடுவிலை குந்தியிருந்து கணக்கா சாயவேண்டிய பக்கம் சாயிறது ஆனால் சாயிறது தெரியதமால் சாயிறது. சாய்ந்தபின் சாய்ந்த பக்கமே நடுநிலையான பக்கம் எனவே சாயவில்லை என்று கூறுவது! நடு நிலைக்கு இன்னுமொரு விளக்கமும் உண்டு! நடு வீட்டுக்கை உள்ள நிலை! இதாலை யாரும் வரலாம் போகலாம்.

    Reply
  • jakanathan
    jakanathan

    நடுநிலை நாட்டில் உள்ளவர்கள் எடுக்கும் முடிவு சரியானது

    Reply
  • vinthan
    vinthan

    வணக்கம் தோழர் சோதிலிங்கம்!….

    உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. சிறந்த ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளீர்கள்.
    ஏற்கனவே தேசம் நெற்றில் நீங்கள் இட்ட பதிவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவை. அவைகள் போலவே இதுவும் உள்ளது. தேசம் நெற்றில் வெளியிடப்படும் உங்களது விருப்பங்கள் மற்றும் ஆரோக்கியமான விமர்சனங்கள் குறித்து நாம் எமக்கிடையில் கலந்து பேசி கருத்துக்களை
    பறிமாறுவதுண்டு. எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனும் இவைகள் குறித்தும் சில வேளைகளில் பேசுவதுண்டு. இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் குறித்தும் சரியான தீர்மானமே எடுக்கப்படும்.. நல்லது தோழரே… சந்திப்போம்…மறுபடியும்…

    தோழமையுடன்
    விந்தன்

    Reply
  • ARUMUGAM
    ARUMUGAM

    வணக்கம் தோழர் சோதிலிங்கம்!….

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான…
    தேசம் நெற்றில் T. Sothilingam இட்ட பதிவு உபவேந்தரைத் தெரிவு செய்யும் பாரிய பொறுப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அவரது கட்சியின் தோழர்களுக்கும் (பெயர்கள் குறிப்பிடப்பட்டு) உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதியுடையவர்கள் பட்டியலில் அரசியல் கட்சிகளோ அமைச்சர்களோ தோழர்களோ சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
    யாழ். பல்கலைக்கழக நடவடிக்கைகள் சிறந்தமுறையில் கையாளப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கி வளர்த்தெடுக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

    யாழ்ப்பாணச் சமூகத்தின் விலைமதிப்பற்ற சொத்தே கல்வியாளர்கள். கடந்த 30 வருட காலப் போராட்ட காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது தனித்தன்மையை இழந்து கொண்டது. அரசியலும் அச்சுறுத்தலும் களம் புகுந்ததன் விளைவாக கல்விச்சீர்கேடுகள் மரண அச்சுறுத்தல்கள் தொடர பல்கலைக்கழம் தன் இலட்சியத்தை வழிதவற விட்டு மாணவசமூகத்தை திறம்பட வழி நடத்தஇயலாமல் நின்றது.

    இன்றுள்ள சூழ்நிலையில் கிடைக்கக்கூடிய வளங்களை கொண்டு இழக்கப்பட்ட எமது கல்விச்சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு புதிதாக தேர்வு செய்யப்படும் பல்கலைக்கழக உபவேந்தரின் கரங்களிலேயே உள்ளது.

    பல்கலைக்கழக உபவேந்தரைத் தெரிவு செய்யும் வாக்களிக்கத் தகுதியுள்ளோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 25 உறுப்பினர்களுக்கே உபவேந்தரைத் தீர்மானிக்கும் பொறுப்பு உள்ளது.

    இவ்வாறு வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ள கவுன்சில் உறுப்பினர்களில் 12 பேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்களாகவும் 13 பேர் சமூகப் பொறுப்புடையவர்களாகவும் உள்ளனர்.

    சமயத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், சமூகத்தின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த வாக்களிப்பில் உபவேந்தரைத் தீர்மானிக்கும் பொறுப்பு கல்விச் சமூகத்திடமும் சமூக அக்கறை கொண்டவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடுகளோ கட்சிகளின் ஆளுமையோ செலுத்தப்படுவதற்கு இடமில்லை என்பதையும் ஈபிடிபி தோழர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இந்த விடயத்தில் இல்லை என்பதையும் அதேவேளை வாக்காளர்களைக் கட்டுப்படுத்தும் தகுதியும் அவர்களுக்கில்லை என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

    யாழ்.பல்கலைக்கழகத்திற்கு நிர்வாகத் திறமையும் ஆளுமையும் நேர்மையும் கொண்ட ஒருவர் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டு ஆசியாவிலேயே பேசப்படக்கூடிய கல்வியாளர்களை உருவாக்கக்கூடிய சிறந்த பல்கலைக்கழகமாகத் திகழவேண்டும் என்பதே எல்லோரதும் பேரவா. இதனை நிறைவேற்றக்கூடிய பொறுப்பு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 25 உறுப்பினர்களையே சார்ந்துள்ளது.
    -salasalappu.com

    Reply
  • பேராசிரியர் பெக்கோ
    பேராசிரியர் பெக்கோ

    தோழர் ஆறுமுகம் நீங்கள் இன்னும் தத்துக்குட்டியாகவே இருக்கிறீர்கள். 12 சக 13 சமன் 25 என்றது பள்ளிப்பாடம் 12 சக 13 சமன் அமைச்சர் என்றது அரசியல் பாடம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பள்ளிக்கூடம் தான். அதுக்காக பிரான்ஸில் உள்ள நீங்களுமா பள்ளிக்கூட லெவலிலேயே பேசுறீங்கள். எதுக்கும் தோழர் விந்தனுக்கு போன் போட்டு பேசுங்கள். நிறைய விசயம் தெரியவரும்.

    பேராசிரியர் பெக்கோ (யாழ் பல்கலை)

    Reply
  • jakanathan
    jakanathan

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒன்றும் சுயநல வாதியல்ல குடும்பம் குட்டி குடியும்மாக நாட்டை விட்டு ஓடியவரும் இல்லை இன்று வரையும் தன் மக்களின் துயரங்களுடன் மக்கள் மத்தியில் நிற்கின்றார் அங்குள்ள நிலமையை புரியாமல் புலம்பெயர்தவர்கள் கதைப்பதில் அர்த்தம் இல்லை..!

    Reply
  • Nadchathran Chev-Inthian
    Nadchathran Chev-Inthian

    கட்டுரைக்கு நன்றி தோழர் சோதிலிங்கம்.
    நியாயப்படி பார்த்தால் சண்முகலிங்கம் இம்முறை போட்டியில் இருந்து விலகியிருக்க வேண்டும். அமைச்சர் தேவானந்தா மனது வைத்தால் இதனை செய்திருக்கலாம். சண்முகலிங்கமோ தனது ஆட்களை போட்டியிடுமாறு செய்து வாக்குக்களைப்பிரித்து “ரெக்னிக்கலாக” தான் மீண்டும் வர பிரயத்தனம். இதற்கு அமைச்சரும் உடந்தையா?

    -நட்சத்திரன் செவ்விந்தியன்.

    Reply
  • Martin Jeya
    Martin Jeya

    வணக்கம் தோழர் சோதிலிங்கம்!….
    நீண்டதொரு இடைவெளியின் பின்னர் தங்கள் விமர்சனங்களிற்கு விடையளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி.

    தக்க நேரத்தில் சமூதாய விழிப்புணர்வுடன் தாங்கள் செயற்படுவதற்கு ஈபிடிபி கட்சியினதும் எனது பாராட்டுகளும் உரித்தாகுக. அதேவேளை எம்மை நோக்கி விழிக்கப்பட்ட விமர்சனங்களிற்கு விடையளிக்க பொறுப்புள்ளவர்கள் என்ற வகையில் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் எமக்குள்ளது.

    பாரம்பரிய முறையிலும் தகைமை அடிப்படையிலும் முகாமைத்துவ முதிர்ச்சி அடிப்படையிலும் தெரிவு செய்யப்படும் ஒருவரின் தெரிவில் எமது கட்சியின் தலையீடு இருக்காதென்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம். நாம் அறிந்தவரை நான்கு நபர்கள் தெரிவு செய்யப்பட்டு அதில் மூன்று நபர்கள் முன்மொழியப்பட்டு அதிலிருந்து ஒருவரை தெரிவுசெய்யும் நடைமுறை காணப்படுவதாகவும் இம்முறை பெண் ஒருவரின் பெயரும் முன் மொழியப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

    தாங்கள் வைத்துள்ள அதீத விமர்சனங்களில் சாதிய மத பொருளாதர அடிப்படையில் எமது கட்சியின் நலன்சார்ந்து எந்த சமுதாய முடிவுகளும் எடுப்பதில்லை என்பதை நீங்கள் ஒரு சமூதாயத்தை நன்கு ஆய்வு செய்பவராக அறிந்திருக்க வேண்டும். எமது கட்சியின்பால் நின்று கடமை செய்யும் பாட்டாளிகளின் தகவல் அறிய எம்மையும் எமது கட்சியும் பற்றி சற்று விரிவாக நீங்கள் ஆய்வு செய்ய வேண்டுமென தோழமையுடன் அழைப்பு விடுகின்றேன்.
    நாம் கடந்துவந்த பாதையில் வாலை ஆட்டும் நன்றியுள்ள நாய்களையும் நரிகளையும் நயவ சகர்களையும் கண்டறிந்து காடுகளையும் மேடுகளையும் கடந்து புயலிடை எழுந்து வந்த வரலாற்றை பதிவு செய்த எமது கட்சியும் அதன் தலைமையும் அதன் தோழர்களும் என்றும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளுடன் செயற்படுவார்கள் என்பதை நாம் நம்புகின்றோம்.

    தோழமையுடன் தோழர் மாட்டின் ஜெயா

    Reply
  • s.selva
    s.selva

    Hello Mr Nadchathran Chev-Inthian,
    How can you ask Douglas Devananda to prevent Shanmugalingan from contesting. What moral right you people have to ask DD to do this and that. Let the selection process be independent. You worked against EPDP and spread rumours and lies against EPDP in the foreign soil. LTTE also did the same thing. LTTE is no more now and EPDP is serving the people especially among deprived ones. People with HINDU VELALA thinking wont like this. Mr.Hoole is an honest,well educated person.There is no doubt about it. But there is a system to select who to become the VC.Dont try to force or impose you idea on others.
    Selva

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    Dear Mr.Sothilingam,
    Appreciations for yr open policy.Yr para 2 reg educational policy-Traditional Tamil leadership is responsible for the plights of the Tamil people and country.They were/are liers. Tamil people were taken for ride by them. Have you objetively analysised standarisation. It was one of the best reforms ever undertaken in Sri lanka.Tamil students beyond Pallai, that is Kilinochchi, vavuniya, Mullaitivu, Batticaloa, Ampara, mannar Tamil students benefitted. Pl dont try to mislead the readers. Do you wnt the students from St Johns college, Jaffna Hindu, hartley to enjoy the benefits. Pl open a debate on Standadisation.

    Reply
  • Nadchathiran Chev-Inthian
    Nadchathiran Chev-Inthian

    Dear S.Selva

    1. Hon.Douglas Devanantha has the moral and political influence to ask President Mahinda Rajapakse to

    appoint a special presidential commission to investigate the criminal activities happening in Jaffna university. This commission should look into

    (a) Prof Shanmugalingham’s sexual assault or harassment of a foreign student in Jaffna university

    (b) Prof.Shanmugalingham’s sexual intercourse with a female student in the university premises ( top of a building)

    (These 2 incidents were mentioned in T.Jeyapalan’s article in thesam)

    (3) Prof Shanmualingham’s numerous sexual crimes committed in Jaffna university

    (4) Prof.shanmugalingham’s services to a banned terrorist organization the LTTE while working as University

    lecturer and vice chancellor. These include actively participating in the LTTE organised pongu Tamil events, writing a obituary poem to LTTE leader KITTU in a LTTE publication and serving as a LTTE agent.

    (5) Prof shanmugalingham allowing other sexual criminal lecturers like Ilankumaran, Ganeshalingham

    continue to work as university teachers and not taking actions for their sexual crimes.

    2. I never worked against EPDP nor spread rumours about EPDP. In fact, on the contrary I always criticised LTTE and its fascist policies and defended EPDP’s right to work as a political party. This was why

    LTTE’s dirty organ nitharsanam.com run by Nadaraja sethurupan of Norway in 2006 accused me as a foreign agent of EPDP and accused me as

    a homosexual.( It even accused me of spreading the practice of homosexuality among EPDP cadres)

    3. Prof Shanmugalingham should be interdicted pending the investigation. He is not a fit person to hold the high post. His English proficiency is of pathetic standard. He should have resigned or forced to resign long ago. Another university commission should look into the criteria used to grant him a Ph.D by Jaffna university.

    Nadchathiran Chev-Inthian

    Reply