”தமிழ் மக்கள் மீதான பாரபட்சங்கள் அவர்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக அரசு நோக்குவதையே காட்டுகிறது.” புளொட் தலைவர்

sitharthan.jpgஅரச தொழில்துறைகளில் தமிழ்பேசும் மக்களுக்கு தற்போது இழைக்கப்படும் அநீதிகள், பாரபட்சத் தன்மைகள் என்பன விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை இந்நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே அரசாங்கம் நோக்குகிறது என்பதையே காட்டுகின்றன. இதனை அரசாங்கமே உறுதிப்படுத்துவது போன்றே உள்ளது என புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி, இந்நாட்டில் நல்லிணக்கம் உருவாகக் கூடாது என்ற நோக்கில்தான் அரசு செயற்படுகிறதா என்ற கேள்வியையும் இந்த செயற்பாடுகள் எழுப்புகின்றன. அரசாங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறோம். அதுமட்டுமல்ல, யுத்தத்தை வெற்றி கொண்ட மனோபாவத்தில் மமதையில்தான் அரசாங்கம் இவ்வாறெல்லாம் செயற்படுவதாகத் தமிழ்மக்கள் இன்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்மக்கள் தாம் இந்நாட்டின் ஒரு பிரிவினர் அல்லர் என்பதனை அரசாங்கமே அந்த மக்களுக்கு இன்று உணர்த்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

 • tamil
  tamil

  பாவம் சித்தார்த்தன் ஜயா உங்களுக்கும் இந்தநிலைமைய ஏன் அரசாங்கம் உங்களை கைவிட்டுடார்கள எனியாவது யாரையும் நம்ப நடவுங்கள்…..

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  அப்பப்பா…..தாங்கமுடியவில்லை இந்த புளொட் காரர்களின் அறிக்கைகள்!!
  எப்போதும் இல்லாத புதிதாக கண்டுபிடித்துவிட்டார் ஸ்ரீலங்கா அரசின் பாரபட்சத்தை!
  புலியை வைச்சு வாழ்க்கையை ஓட்டலாம் என நினைத்தவர்கள் நிலை இவ்வளவு விரைவாக அந்தரத்தில் தொங்கும் என நினைத்திருக்க மாட்டார்கள். பழையபடி லண்டனுக்க போய்ச்சேர வேண்டியதுதானே?

  அரசு யுத்தத்தில் வெற்றியடைவதற்கு நீங்கள் கொடுத்த முண்டுகளையும் நினைவில் கொண்டு உங்களுக்கும் ஆப்பு வைக்க தொடங்கியுள்ளனர் என நினைத்து நடுங்குகிறீர்கள் என அரசு நினைத்துவிடப்போகிறது கவனம்!

  Reply