தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

Thinamurasu_01Oct10யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் 06ல்  நடைபெறுகிறது. நான்கு அமர்வுகளில் நடைபெறும் இந்த விழாவின் மூலம் 1075 பேர் பட்டம் பெறுகிறார்கள். தமிழ் பேசும் சமூகத்தின் முக்கியமான கல்வி நிறுவனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் வாழ்வில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

இன்று தமிழ் மக்கள் வாழ்வுக்காக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சுய அடையாளங்களுக்காகவும் உரிமைக்காகவும் வாழ் நிலத்திற்காகவும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று எங்களிடம் இருக்கும் கருவியாகவும் கருத்தாகவும் இறுதிச் சொத்தாகவும் கல்விதான் இருக்கிறது. இந்தப் பட்டத்தினைப் பெற்றுச் செல்லும் நாம் நமது சமூகத்திற்காய் உழைக்க வேண்டிய பெருங்கடமையில் இருக்கிறோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடத்திய பட்டமளிப்பு விழாவில் மூலம் மூவாயிரம் பேர் பட்டம் பெற்றிருந்தார்கள். உலகத்தில் வெறு எங்கேனும் அப்படி ஒரு பட்டமளிப்பு விழா இடம்பெற்றிருக்காது என்றே நினைக்கிறேன். 2005ஆம் ஆண்டின் பிறகு ஏற்பட்ட யுத்தம் காரணமாக வருடா வருடம் நடைபெற வேண்டிய பட்டமளிப்பு விழா நான்கு வருடங்களாக நடைபெறாமலிருந்தது. நான்கு ஆண்டுகளுக்குரிய மாணவர்களும் மூன்று நாட்களில் நடைபெற்ற 15 அமர்வுகளில் 3328 பேர் பட்டங்களைப் பெற்றார்கள்.

இந்தப் பல்கலைக்கழகம் யுத்தத்தின் விளைவுகளுக்கு அதிகம் முகம் கொடுத்து வந்திருக்கிறது. தமிழ் தேசிய இனத்தின் மீதான ஓடுக்கு முறைக்கு எதிரான ஆழமான கருத்தியலை தெளிவாக அறிவுரீதியாக உருவாக்கியதில் யாழ் பல்கலைக்கழக சூழல் பங்காற்றியிருக்கிறது. ஈழப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் விரிந்த உரையாடலை முன்னெடுத்த களமாக இந்த வளாகம் இருந்திருக்கிறது. இன்று பட்டம் பெறும் நிலையில் இந்த மாணவர்கள் கடந்த காலத்தை எப்படி கடந்து வந்தார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றைப் பொறுத்த வரையில் 2006 ன் பின்னர் ஒரு இடர்மிக்க காலத்தை கடந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது. வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பொழுது யுத்தம் எமது இனத்தை வதைத்துக் கொண்டிருந்த பொழுது அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் எதையும் செய்ய முடியாத கையறு நிலைச் சூழலுக்குள் பல்கலைக்கழக சமூகம் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

தினமும் நிமிடத்திற்கு நிமிடம் மரணத் தொகை பற்றிய செய்திகளுக்குள் தங்கள் உறவுகளை நினைத்து இந்த வளாகத்திலும் விடுதியிலும் மாணவர்கள் துடித்தபடி இருந்திருக்கிறார்கள். கடுமையான உயிர் அச்சுறுத்தல் நெருக்கடிகளுக்குள்ளும் அப்பொழுது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தன் பணியை செய்து கொண்டிருந்தது. விரிவுரைகள் புறக்கணிப்பட்டும் தமிழ் மக்களின் நிலமை எடுத்துச் சொல்லப்பட்டது. ஈழத் தமிழ் மக்கள் மீதான கொடும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தி சமாதான வழிகளுக்கு சென்று வன்னி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பல்கலைக்கழக சமூகத்தால் தொடர்ந்தும் குரல் கொடுக்கப்பட்ட பொழுதும் யுத்தம் நீடிக்கப்பட்டு மக்கள் அழிவு நீடிக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலைகளால் கல்வி கற்கும் மாணவர்களது நிலைமை பாதிப்பிற்கு உள்ளான பொழுது இந்த மாணவர்களை உளவியல் ரிதியாக அணுகி கல்வி கற்பித்து வந்த விரிவுரையாளர்களின் பணி முக்கியமானது. பல விரிவுரையாளர்கள் மாணவர்களது எதிர்காலத்திற்காய் அந்நாட்களில் அக்கறையுடன் கவனித்து செப்பனிட்டிருக்கிறார்கள். யுத்தக் கனவு கண்டு மாணவர்கள் துடிக்கும் விடுதிகளும் உறவுகளின் நினைவுகளால் பேசித் துடிக்கும் வளாகமும் அந்நாட்களில் இந்தப் பல்கலைக்கழகம் எதிர்கொண்ட துயர்கொண்ட கதைகள் மிகத்துயரமானவை. எங்களைப் பற்றி நாங்களே பேசும் நிலை மறுக்கப்பட்டு அபாய வலை கொண்ட சூழலாக பல்கலைக்கழகம் காண்காணிக்கப்பட்டது.

Thinamurasu_01Oct10பெற்றோர்களது தொடர்பற்று துடித்த பல்கலைக்கழக மாணவர்களின் மனிதாபிமானத் தேவைகளை கவனித்து அவற்றை பூர்த்தி செய்வதில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் நிர்வாகமும் அன்று முழுமையாக இயங்க வேண்டியிருந்தது. பெற்றோர்களிடமிருந்து நிதி வந்தால்தான் படிக்கலாம் என்ற வன்னி மாணவர்களின் நிலை 2009 அக்டோபர் மாதத்திலேயே முற்றாக பாதிக்கப்பட்டது. மாணவர்களுக்கான முழு நேர உணவு, நிதி உதவிகளை பல்கலைக்கழகம் மேற்கொள்ளுவதற்கு பலரது பங்களிப்பு கிடைத்திருந்தது.

துயர்க்கால மாணவர்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதில் முழு அக்கறை கொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன் அவர்களின் பணி காலத்தால் மேன்மையானது. அகில இலங்கை இந்துமாமன்றம், போஸ்டோ, மனித உரிமைகள் இல்லம், கரிதாஸ் நிறுவனம் போன்றவை இந்தப் பணியில் பங்கெடுத்தன. சில புலம்பெயர்ந்த பழைய மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடாக தமது உதவிகளை செய்து வந்தார்கள்.

பெற்றோர்கள். உறவுகளை இழந்து பல மாணவர்கள் துடித்தார்கள். யுத்தம் முடியும் தருணத்தில் நிறைய மாணவர்களின் பெற்றோர்கள், உறவுகள் கொல்லப்பட்டதாக அறிய நேர்ந்தது. சிலர் குடும்பத்துடன்கூட உறவுகளை இழந்தார்கள். இதே காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். பல்வேறு விசாரணைகளும் தேடுதல்களும் நுழைவுகளும் நடந்தன. பல்கலைக்கழகத்தில் எல்லா வகையிலும் மேலும் மேலும் கல்விக்கு மாறான சூழலே நிர்ப்பந்திக்கப்பட்டது. கல்வியை தொடர முடியாத இடர்காலத்திலும் எப்படி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து அதன் மூலம் மாணவர்களது மனநிலைகளை பாதுகாக்க வேண்டியிருந்தது.

யுத்தம் பேரழிவுடன் முடிந்த பொழுது ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நலன்புரி நிலையம் எனப்படுகின்ற தடுப்பு முகாங்களில் இருந்தார்கள். முன்னாள் போராளிகளாகவும் தடுக்கப்பட்டார்கள். பல்கலைக்கழகத்தின் அடுத்த பிரச்சினையாக அதுவே உருவெடுத்தது. நாளும் பொழுதுமாக தடுப்பு முகாங்களில் உள்ள மாணவர்களது கடிதங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து கொண்டிருந்தன. தங்களை மீட்க வேண்டும். தாங்கள் படிக்க வேண்டும். அவர்கள் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தார்கள். யுத்தம் காரணமாக சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக கல்வியை தொடராதவர்கள் கூட முகாங்களில் இருந்தார்கள்.

முகாமில் உள்ள மாணவர்கள் பல்வேறு கட்டங்களில் பலதரப்புக்களின் ஊடாக கோரியதற்கிணங்க கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டார்கள். முதலில் ஐம்பது மாணவர்கள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய மாணவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். இந்த விடயத்திலும் துணைவேந்தரது அயராத முயற்சியும் உழைப்பும் இருந்தது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அதற்காக சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. அப்படி மீட்கப்பட்டு வந்த பல மாணவர்கள் நாளைய பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுகிறார்கள். யுத்தத்தின் காயங்களும் அங்க இழப்புக்களுக்கும் உள்ளான மாணவர்கள் பலர் நாளை பட்டம் பெறுகிறார்கள். இதைப்போலவே முன்னாள் போராளி மாணவர்களும் விடுவிக்கப்பட்டு இன்று பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடருகிறார்கள். அவர்களில் சிலரும் பட்டம் பெறுகிறார்கள்.

யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களும் இடர்களும் பல்கலைக்கழகத்தை இப்படியே கடுமையாக பாதித்தது. இன்று பட்டம் பெறுகிற மாணவர்கள் இத்தகைய நிலையிலேயே தங்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். மாணவர்களது கல்வி, அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான தேவைகள், உளவியல் ரீதியாக சூழலுக்கு ஏற்ப அணுகுவது என்பவற்றின் ஊடாக நமது சமூகத்திற்கு வலுவான சந்ததியை உருவாக்கும் முக்கியமான பணியாகவே இந்த பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள்.

Sigaram_Mag_Launch_02Oct10கலை ரீதியாகவும் மனிதாபிமான ரீதியுயாவும் கடந்த காலத்தில் பணி செய்த சிலர் இந்த பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப் பட்டங்களை பெறுகிறார்கள். சத்திரசிகிச்சை நிபுணராகவும் யாழ் பல்கலைக்கழக மருத்துவத் துறையின் முக்கியமானவரும் நெருக்கடி மிக்க காலத்தில் தாய்நிலத்தில் பணியாற்றியவருமான வைத்தியக்கலாநிதி கணேசரத்தினம், பாரம்பரிய கலைகளிற்கு மதிப்பளிக்கும் முகமாக நாதஸ்வர வித்துவான் பஞ்சாபிகேசன், திருமறைக் கலாமன்ற இயக்குனரும் நாடக்கலை என்ற பண்பாட்டு தொடர்பாலுக்கு பங்காற்றியவரும் கலைமுகம் இதழின் ஆசிரியருமான வணக்கத்திற்குரிய மரிய சேவியர் அடிகளாரும் பட்டம் பெறுகிறார்.

அத்துடன் விழிப்புலனற்ற பிள்ளைகளை கல்வி கற்பித்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வாழ்வில் ஒளியேற்றிய பணியை ஆற்றியவரும் ‘வாழ்வகம்’ என்ற விழிப்புலனற்ற பிள்ளைகளுக்கான இல்லத்தை உருவாக்கியவருமான அமரர் செல்வி சின்னத்தம்பி தேகாந்திர நிலையில் (அமரத்துவமடைந்த நிலையில்) பட்டமளித்து கௌரவிக்கப்படுகிறார். இம்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்களும் முதன் முதலில் பட்டம் பெறுகிறார்கள்.

இன்று அவலம் மிகுந்து போயிருக்கிற எங்கள் சமூகத்திற்காய் பட்டம் பெறும் மாணவர்களாகிய நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பரந்த நிலமெங்குமிருந்து வந்த நாம் ஓவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சமூக அக்கறையுடன் வினைத்திறனாக செயற்பட வேண்டும்.

சமூகப் பொறுப்புள்ள மனிதர்களாக வாழ வேண்டும். பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த காலத்தை கடந்து கல்வி கற்று பட்டம் பெறும் நாங்கள் சிதைந்து தவித்துக் கொண்டிருக்கிற நமது சமூகத்திற்காய் நமது தேசத்திற்காய் உழைக்க வேண்டிய இன்றைய காலத்தின் பொறுப்புடையவர்கள். இருண்டிருக்கிற நமது காலத்திற்கு ஒளி ஏற்றுவோம்.

பாலேந்திரன் பிரதீபன்.B.A (Hons) Tamil SPL
முன்னாள் செயலாளர்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

 • தமிழன்
  தமிழன்

  யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் “முன்னாள்” செயலாளர் பிரதீபன் எழுதிய மேற்படி கட்டுரை சண்முகலிங்கனது இன்னுமொரு 3 வருட நிலைபேற்றுக்கு கொள்கைபரப்பும் விளம்பரத்தைப் போலத்தான் உள்ளது. இந்தக்கட்டுரைக்குப் பின்னால் சண்முகலிங்கனது ஊடுருவல் தெட்டத் தெளிவாகவும் தென்படுகின்றது.

  //துயர்க்கால மாணவர்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதில் முழு அக்கறை கொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன் அவர்களின் பணி காலத்தால் மேன்மையானது.// சரிதான், ஒருவர் தான் வகிக்கும் பதவி சார்ந்து செய்ய வேண்டிய அத்தியாவசிய செயற்பாடுகளுக்காகப் புகழப்படுதல் – ஒரு பேரூந்து சாரதியை “இவர் வவுனியா-யாழ் பாதையில் பஸ் செலுத்திய மாபெரும் சேவையாளர்” என்றோ, ஒரு ஆசிரியரை – “அவர் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பதின்மூன்றாம் வாய்ப்பாடு படிப்பித்த மாமேதை” என்றோ புகழ்தலுக்கு ஒப்பானது.

  ஆக மொத்தத்தில்’ – சமூகத்துக்காக எவ்விதமாக உழைக்க வேண்டும்? சண்முகலிங்கன் தலைமையில் அது நடந்தேற முடியாதது என்றுதான் நினைக்கின்றேன்.

  இங்கு வருந்த வேண்டிய விடயம் என்னவென்றால், யாழ் பல்கலையின் மாணவர்களுக்கு, தங்களுக்கு தரக்குறைவானதொரு கல்வியே புகட்டப்பட்டு பட்டம் என்ற பெயரில் ஏதோ ஒன்று தரப்படுகின்றது என்பது இன்னமும் விளங்கவில்லை என்பதே! அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை – தொடரலையாய் வந்து அட்டூழியம் செய்யும் புல்லுருவிகள் அவர்களுக்கு காட்டிய உலகம் அவ்வளவேதான். இதை நிச்சயமாக ஹூலின் வருகை மாற்றியமைக்கும் என நம்புகின்றேன்.

  Reply
 • Veluppillai
  Veluppillai

  ஐயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் யாழ் பல்கலைக்கழகமா அல்லது ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியா? பாலேந்திரன் பிரதீபன் முன்னைநாள் செயலாளர் இன்றைய மாணவர் ஒன்றிய பெயரைப்பாவித்து எழுதுவது மோசடியானது.பிரதீபன் என்னவகையில் நீங்கள் சண்முகலிங்கத்திடம் கடமைப்பட்டுள்ளீர்கள். தேசம் நெற் எழுத்தாளர்களின் ராடார் வலையமைவுக்குள் வருகிறீர்கள். உங்கள் புகைப்படங்களில் நல்லதை நீங்களே தந்துதவுங்கள்.
  -வேலுப்பிள்ளை

  Reply
 • தேவராசா
  தேவராசா

  //பாலேந்திரன் பிரதீபன் முன்னைநாள் செயலாளர் இன்றைய மாணவர் ஒன்றிய பெயரைப்பாவித்து எழுதுவது மோசடியானது//Veluppillai on October 6, 2010 8:51 am

  இது யாழ் பல்கலையில் மிகச் சாதாரணமான விடயமே. பதவியில் இருந்து ஓய்வு பெற்றுப் பலகாலமாகி விட்ட பிற்பாடும் பாலசுந்தரம்பிள்ளை இன்னமும் சண்முகலிங்கத்தின் செயற்படுத்தும் நிர்வாகியாக இருக்கும் போது, பிரதீபன் செய்ததில் பிழை ஒன்றும் இல்லைத்தானே?

  பிரதீபன் மேற்படி கட்டுரையில் எந்தளவிற்கு தன் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார் என்று தெரியவில்லை?!?எல்லாமே சண்முகலிங்கன் மற்றும் பாலசுந்தரம்பிள்ளை முதலாயோரின் வறட்டுத் தந்திரக் கதைகள் போற்தான் தென்படுகின்றது. இதற்கு சண்முகலிங்கன் உங்களுக்கு என்ன பரிசில் தருவார் பிரதீபன்? அடுத்த பட்டமளிப்பு விழாவில் கெளரவ கலாநிதிப்பட்டமா?

  அப்படியாயின், சண்முகலிங்கத்துக்கு ஆமா போட்டால் பி.எஸ்.சி, பி.ஏ, எம்.ஃபில், பி.எச்.டி என்று இலவச பட்டங்களை எம் பெயர்களுக்குப் பினால் அடுக்கிக் கொண்டே போகலாமா?

  என்னமோ, ‘பாலேந்திரன் பிரதீபன்’ என்னும் பெயரில் சண்முகலிங்கம் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கலாம் என்றுதான் புலப்படுகின்றது.

  அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் என்று யாழ் பல்கலையைச் சொல்தலாககாது. உண்மையில் சண்முகலிங்கம் தலைமையில் இயங்கும் இன்றைய யாழ் பல்கலைக்கழகம்தான் சர்வதேச ரீதியில் ஊழல் செய்பவர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

  //நீங்கள் விடுக்கப்பட்ட தகவலில் கருத்து வேறானது கே.கணேஸ். அவர் கடமையுணர்வாகவே இருநதவர்//Venu on October 4, 2010 2:32 pm

  இதே கடமையுணர்வாளப் பேராளர் தான் வவுனியாவில் அரச அதிபராக இருந்த காலத்தில் – வீதியோரங்களில் உள்ள முதிரை, பாலை மரங்களை பெருந்தெரு அபிவிருத்தி என்ற பெயரில் வெட்டித்தள்ளி இலட்சம் இலட்சமாக சம்பாதித்ததாக அனைவரும் கூறுகின்றார்கள். ஒரு வேளை அரச அதிபருக்கு தான் கடமை புரிகின்ற மாவட்டத்தின் அனைத்து வளங்களில் இருந்தும் சுயலாபம் காணும் உரிமையும் இருக்கின்றதோ என்னமோ?

  கே. கணேஸ் தனது குடும்பம், தனது சுய(பண) முன்னேற்றம் என்கின்ற இரு தலையாய கடமைகளில் கண்ணும் கருத்துமாகவே இருந்திருக்கிறார் போல!

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //பாலேந்திரன் பிரதீபன் முன்னைநாள் செயலாளர் இன்றைய மாணவர் ஒன்றிய பெயரைப்பாவித்து எழுதுவது மோசடியானது//Veluppillai on October 6, 2010 8:51 am

  அவர் என்ன ‘மோசடி’ செய்து விட்டார். தன்னை முன்னைநாள் செயலாளர் எனத்தானே சொல்லி இருக்கிறார். அமைப்பின் பெயரைப் போடாவிட்டால் எந்த அமைப்பின் முன்னை நாள் செயலாளர் எனக்கேள்வி ‘சுடச் சுட’ வருமே!

  முன்னை நாள் யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள் “University Teachers for Human Rights (Jaffn)” என இன்றும் தம்மை அழைப்பதுபோலத்தான் இதுவும் என எடுத்துக்கொள்ளலாமே!

  Reply
 • தேவராசா
  தேவராசா

  //முன்னை நாள் யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள் “University Teachers for Human Rights (Jaffn)” என இன்றும் தம்மை அழைப்பதுபோலத்தான் இதுவும் என எடுத்துக்கொள்ளலாமே!// சாந்தன் on October 6, 2010 6:38 pm

  “முன்னாள்” என்கின்ற அடைமொழியை எந்தளவிற்குப் பாவித்து ஆதாயம் தேடலாம் என்பதற்குச் சிறந்த உதாரணம் இன்று வடக்கு மர்றும் கிழக்கு மாகாணசபைகளில் ஆதிக்கம் வாய்ந்ததொரு நிர்வாகப் பெருமகனாக ஆதாயம் காணுகின்ற திருவாளர். எஸ். மரியதாசன் குரூஸ்.

  ஒரு காலத்தில் புலிவாலைப் பிடித்துச் சாகசம் பல புரிந்தவர். தான் ஒரு நியாயவாதி என்று சொல்லிச் சொல்லியே பணம்பண்ணும் கெட்டிக்காரார்.

  வடக்குக் கிழக்கு கரையோர சமூக அபிவிருத்தித் திட்டம் (North East Coastal Community Development Pjoject: NECCDEP) என்பதற்கு அத்தியட்சகராக கடமையாற்றி வடக்கு கிழக்கு கரையோர சமூகத்தை மேலும் பின்னடைவடைவதற்கு வழிவகுத்தவர். NECCDEP has been declared as a glorious failure, and Croos has been criticized heavily by the Asian Development Bank who was the donor. Despite all these negative names, Croos is still managing to be a big-shot in the North and East Provincial Council machinery. He is way past his retirement… retired, but not retarded – in the pursuit of making money!

  என்ன என்னமோ பிரச்சைனைகள் சமூகத்தில் இருக்க, கண்டல் தாவரங்களை மக்கள் அழிக்காமலிருக்க அவர்களுக்கு சிக்கன அடுப்புக்களை வழங்கும் திட்டத்தை நெக்டெப் மூலம் முன்னெடுத்தார் இவர். அதற்காக தென்னிலங்கையில் அடுப்புத் தயாரிக்கும் களிமண் பாண்ட தொழிற்சாலையில் கையூட்டும் பெற்றுக் கொண்டவர். நெக்டெப்பின் பின் இவருக்கு கொழும்பில் சொத்துக்கள் பெருகினவாம். இதுவும் அபிவிருத்தி தானா?

  கே. கணேஸினையும் விடவும் தந்திரக்காரர் இவர் – எந்தச் சலசலப்புக்கும் அஞசாது தன் சுயலாபம் காணும் வழியில் தழும்பாமல் செல்லும் காரியவீரர்!

  மரியதாசன் குரூசின் வாகனத்தை ‘வேகமதிகமென்று’ ஒருமுறை ட்ரஃபிக் பொலிசார் மறித்துச் சோதித்த போது – தான் ஒரு முன்னாள் அரச அதிபர் என்று இவர் கொச்சைச் சிங்களத்தில் உளறிவைத்தாராம்… அதற்கு அந்தப் பொலிஸ்காரர்… “முன்னாளோ இன்னாளோ எதற்கய்யா அசுரவேகமாக வாகனத்தில் செல்லுகின்றீர்கள்… நாடு என்ன உங்கள் தகப்பன் உங்களுக்கு தந்த சீதனமா”? என்று கேட்டாராம்…

  முன்னாள் அரச அதிபர்கள், முன்னாள் பேராசிரியர்கள்… முன்னாள் உபவேந்தர்கள்… “முன்னாள்” என்கின்ற தகுதி கூட இவர்களுக்கு பணம் பண்ண ஒரு சிறந்த யுக்திதான்!

  நான் ஒரு முன்னாள் பாடசாலை மாணவன்… எனக்கும் மகாப்பொல புலமைப்பரிசில் கிடைக்குமா என்று கூட கேட்டு பென்சனியர்கள் யாராவது வரப்போகின்றார்கள் – கவனம்!

  Reply
 • தாமிரா மீனாஷி
  தாமிரா மீனாஷி

  பல்கலைக் கழகம் ஒரு கனவுத் தொழிற்சாலை மாதிரி.. நீங்கள் படிக்கப் போய் உங்களது படிப்பு முடிந்த பின்பும் சிலரால் ஈசியாக அதை விட்டு வெளியேற முடியாது.. தங்களால்தான் பல்கலைக் கழகமே இயங்குவது போலவும் தாங்கள் இல்லாவிட்டால் அங்கு எதுவுமே நடைபெறாது என்றும் பாவனை செய்யும் ஒரு மனச் சிக்கலில் மாட்டித் தவிப்பவர்கள் பலர்.. சிலர் இந்த சிக்கலுக்குப் பரிகாரம் தேடும் முயற்சியாக பட்ட மேற்படிப்பு படிக்க பதிவு செய்வார்கள் (முன்னாள் மாணவர்கள்)… சிலர் வாழ்நாள் பேராசிரியர் பட்டம் வாங்கிக் கொண்டு நிரந்தர அறை போட்டு தங்கி விடுவார்கள்..சிலர் அதுவுமில்லாமல் முன்னாள் மாணவர் தலைவர் தற்போதுள்ள ஒன்றியத்தின் சார்பில் அறிக்கை விடுகிறேன் என்று தமது மனநோய்க்குப் பரிகாரம் தேடுவார்கள்…அதுவும் போதாவிட்டால் அலுமாரிக்குப் பின்னால் மாணவியை முத்தமிட்டு மாட்டிக் கொண்ட உபவேந்தரை மனிதருள் மாணிக்கம் என்று சொல்லிக் கட்டுரை எழுதி விரைவில் பல்கலைக் கழகத்தினுள் ஏதாவதொரு பதவியையும் பெற்று விடுவார்கள்..யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அவர்களுடைய சொத்துதானே? இங்கே எது எப்படிப் போனால்தான் என்ன?

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //….நான் ஒரு முன்னாள் பாடசாலை மாணவன்… எனக்கும் மகாப்பொல புலமைப்பரிசில் கிடைக்குமா என்று கூட கேட்டு பென்சனியர்கள் யாராவது வரப்போகின்றார்கள் – கவனம்!…//

  இதேபோல் முன்னை நாள் செயலாளர் பிரதீபன் ஏதாவது பதவி கேட்டாரா? இல்லையே! மாறாக அவர் பல்கலைக்கழக முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும் எனத்தான் சொல்லி இருக்கிறார். முன்னை நாள் எனப்போட்டது ‘மோசடி’ எனச் சொல்லி இப்போது அவர் ஏதும் பதவி கேட்கப்போகிறார் என போகிறபோக்கில் ‘எடுத்து விடுவதில் வந்து நிற்கிறது. இப்படியே போனால் முன்னைநாள் ஜனாதிபதி என கிளின்ரன் போட்டாலும் விடமாட்டீர்கள் போல் இருக்கிறதே? பாவம் கிளின்ரன் ஸ்ரீலங்கா மாற்றுக்கருத்தாளர்கள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது!

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  தேசம்நெற்றின் காராசாரமான கண்டனங்கள் சண்முகலிங்கனைப் பாதித்ததாகத் தெரியவில்லை. “பனங்காட்டு நரி, சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது” என்று சொல்லிக் கொண்டே – வவுனியா வளாகத்தில் தன் கட்சிக் கொடி பிடித்துக் கூத்தாடும் புல்லுருவிகளைக் கொண்டு விசேட சபை அமர்வுகளைக் கூட்டி (special faculty board meetings and other forums) – தனக்கெனப் பிரச்சாரம் செய்யச் செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகத் தகவல் கிட்டியுள்ளது.

  இ. நந்தகுமாரன், புவனேஸ்வரி லோகனாதன், எஸ். குகனேசன் ஆகியவர்கள் சண்முகலிங்கன் புகழ்பாடித் திரிவதாகவும் தகவல். சண்முகலிங்கம் மறுபடியும் கதிரையில் வந்தமர்ந்தால், நந்தகுமாரனும் புவனேஸ்வரியும் பேராசிரியர்கள்… குகனேசன் ஒரு இணைப்பேராசிரியர் என்று பதவியுயர்வு பெற்று விடுவர்!

  சண்முகலிங்கத்துக்கு பதவியாசை அவரது வால்களுக்கு தமக்கு ஒருவித அருகதையுமே இல்லாத பேராசிரியர் பதவியுயர்வு வாய்ப்புகளில் ஆசை.

  இதற்கிடையில் யாழ் பல்கலைக்கழகத்தின் நிரந்தர விடுப்புக் காவியாகிய குகனேசன், பேராசிரியர் வசந்தி அரசரெத்தினத்திடம் “நீங்களும் வி.சி பதவிக்கு போட்டி இடவில்லையா மிஸ்?” என்று அண்மையில் கேட்டிருக்கின்றார் போல. அதற்கு பேராசிரியர் வசந்தி சொன்ன பதில், “ஐய்யோ, எனது பெயரும் தேசம்நெற்றில் வந்து அடிபடுவதை நீர் விரும்புகிறீரா குகனேசன்?”. வசந்தி அம்மையாருக்கு இருக்கும் பயத்தில் கொஞ்சமாவது சண்முகலிங்கத்துக்கு இருந்தால், அவர் ஊழல்பெருச்சாளியாக ஊதிப் பெருத்திருக்க மாட்டார் அல்லவா?

  விரைவில் எஸ். குகனேசன் இணைப்பேராசிரியராக பதவியுயர்வு பெற்று விட்டதை தேசம்நெற் அறிந்து கொள்ளும். அதன்பின், தேசம்நெற் பாணியில் விழாவும் கொண்டாடும்.

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  நாளை 13 ஒக்ரோபர் 2010 அன்று வவுனியா வளாக பிரயோக பீடத்தில் அண்ணன் சண்முகலிங்கம் புகழ்பாட, தம்பி குகனேசன் விசேட கூட்டம் (special faculty board meeting, at 10.30 am tomorrow) ஒன்றை கூட்ட உள்ளார். He is calling for the meeting for some other minor purpose, but (in-truth) it is for campaigning for Shanmugalingam!

  சுயலாபம் காண்பதென்றால் இவர் போன்றவர்கள் ஐ.நா சபையில் கூட விசேட கூட்டங்கள் நடத்தக்கூடியவர்கள்!

  And, as per UGC regulations; if a Dean of a faculty summons special faculty meetings for personal benefits (for himself or his partners-in-crime) – it will be considered as a violation of law/statutes. And, the Dean can be sacked (fired) from his post as a teacher in the University. S. Kuhanesan did the same thing (by summoning a special faculty meeting) when Puvaneswary Loganathan applied for the post of Associate Professor in Sep/Oct 2009. He called the special meeting, and the faculty board rejected Puvanewary’s application. Puvaneswary is not even qualified to be a lecturer in the first place, as it has been found out. But, Kuhanesan and R. Nanthakumaran (as usual in their illegal undercutting manner) – over-rid the board’s decision and sent it to Shanmugalingan.

  Reply