உயிரிழந்த நபர்களுக்கிடையே காதல் தொடர்பு

love-images.jpgசியம்பலா ஆண்டுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர் 2 பிள்ளைகளின் தந்தையார் எனவும் பதுளையில் வசித்தவர் எனவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இரணடு நபர்களுக்கிடையே காதல் தொடர்பு இருந்ததாக தெரிய வந்துள்ளது..

மேலதிக வாசிப்புக்கு முன்னைய செய்தி

அருட்சல்வன் வி, செய்திகள்
மொனரா கலை, சியம்பலாண்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சியம்பலாண்டுவ மத்திய மகா வித்தியாலயத்தில் அத்துமீறி, நுழைந்த ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியையொருவர் பலத்த காயங்களுக்குட் பட்ட நிலையில் மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று (23) காலை 8.45 மணியளவில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த ஆசிரியை குறித்த பாடசாலையில் சேவையாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியை லக்ஷிகா தமயந்தி (வயது 29) ஆபத்தான நிலையில் இருப்பதால் நேற்று மாலை அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட நபரின் மரண விசாரணைகள் நேற்று மாலை இடம்பெற இருந்தது. மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

http://thesamnet.co.uk/?p=22424

Show More
Leave a Reply to Kumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kumar
    Kumar

    இந்தச் செய்தியின் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஆவியுலகக் காதல் என்று தோன்றியது. அருட்செல்வன் செய்தித்தலைப்பை யோசித்து வைக்கவும்.

    Reply
  • fiona
    fiona

    நானும் என்னஇது தலைப்பு வித்தியாசமாய் இருக்கே என்றுதான் பார்த்தேன். உள்ளே சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களோ எப்ப நடந்தது என்று ஒரு விபரமும் இல்லை. இப்படிச் செய்திகள் போடுவதையும் ஒற்றை ரெட்டை வரியில் செய்தி என்று, தலைப்பைத் திருப்பி எழுதும் செய்திகளையும் அருட்செல்வன் தவிர்க்க வேண்டும்

    Reply