முன்னாள் புலிகள் விபத்தில் குண்டுவெடிப்பில் இறந்த செய்தியை பொலிஸார் மறுத்துள்ளனர். : மட்டக்களப்பு வெடிகுண்டு விபத்து

batti222.jpgகரடியனாறு வெடிவிபத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.

கரடியனாறு குண்டுவெடிப்பில் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளும் உயிரிழந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளம் என்று அறியப்பட்ட தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியான செய்தியை பொலிஸ் மறுத்துள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முன்னாள் புலிப்போராளிகள் பலியாகியிருக்க சாத்தியமில்லை எனவும், இது குறித்து தமக்கு எவ்வித தகவலோ அறிக்கையோ கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிப்போராளிகள் சீன நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்றும், குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவர்களும் பலியாகினர் என்றும் தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் தொகை 60 என சம்பவம் நடைபெற்றவுடன் முதலில் வெளியான செய்திகள் தெரிவித்திருந்தன. பின்னர் கொல்லப்பட்டவர்களின் தொகை 26 என பொலிஸார் தெரிவித்திருந்தனர். பொலிஸ்மாஅதிபர் மகிந்த பாலசூரிய வெளியட்டிருந்த அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் 19 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாறுபட்ட தகவல்கள் குறித்து சந்தேகங்கள் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 பொலிஸ் குழுக்கள், புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் நிரப்பிய கொள்கலன் வெடிப்புக்கு திடீர் விபத்தே காரணம்; நாசவேலை காரணமல்ல என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரும், குற்ற புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் நடாத்திய புலன் விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் வெடி மருந்து நிரப்பிய இரு கொள்கலன்கள் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறிய சம்பவத்தைக் கேள்வியுற்றதும் நேரில் சென்று திரும்பிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இச் சம்பவத்தில் 12 பொலிஸாரும், 07 பொது மக்களும், 02 சீன பிரஜைகளுமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இச் சம்பவத்தில் 19 பொலிஸாரும் 21 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸாரில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர். இவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் நேற்று கூறின.

இதேவேளை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களில் எவரும் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்படவில்லை. இச் சம்பவத்தில் காயமடைந்து எமது ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை தேறிவருவதாக ஆஸ்பத்திரி பணிப்பாளர் டொக்டர் கந்தசாமி முருகானந்தம் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு தொகுதியினர் இன்று அல்லது நாளை வீடு திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

துக்கம் அனுஸ்டிப்பு

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டுகிறது. மட்டக்களப்பு நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம், அரசடி ஆஞ்சநேயர் மணிக்கூட்டுக்கோபுரம், மற்றும் பிரதான வீதிகள் , ஏனைய பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கரடியானாறு வெடிவிபத்து குறித்து சீனத்தூதரகம் விசாரணை நடத்துகிறது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்குண்டு வெடிப்பு நடைபெற்ற கரடியனாறு பகுதிக்கு சீனத்தூதரகம் குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளது.

கிழக்கில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கொள்கலனிலிருந்த வெடிப்பொருட்களே நேற்று வெடித்து பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திருந்தது. இதில் இரு சீனப்பிரஜைகளும் உயிரிழந்தனர்.  இவ்வெடிவிபத்து எவ்வாறு எற்பட்டது என்பது தொடர்பாக முழுமையான விசாரணைகளை சீனத்தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை உடனடியாக நடத்துமாறு தற்போது அமெரிக்கால் தங்கியுள்ள ஜனாதிபதி மகந்த ராஜபக்ச அங்கிருந்து பாதுகாப்புத்தரப்பிற்கு  உத்தரவிட்டுள்ளார்.

 மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய குண்டு விபத்தில் 25 பேர்வரை மரணம்

மட்டக்களப்பில கரடியனாறு பகுதியில் கட்டிட வேலைக்கு பயன்படுத்த வழங்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. இச்சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளிவந்த போதும் பாதுகாப்புத் தரப்புகளிலிருந்து கிடைத்த செய்திகளின் படி 25 பேரின் மரணமே உறுதிப்படுத்தப்பட்டன. 52 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலியானவர்களில் இருவர் சீன பிரஜைகளாவர். காயமடைந்தவர்களில் 24 பேர் பொலிஸார் எனவும் 28 பேர் சிவிலியன்கள் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

 கட்டிட வேலைகளுக்கு வெடிபொருட்களை வழங்க நிறுத்தப்பட்ட வாகனம் அப்பகுதியில் இருந்த பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கும் வெடிப்புக்கு உள்ளாகியதால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

பாரிய சத்தத்துடன் இடம்பெற்ற இந்த வெடிவிபத்து வேலைநேரத்தில் இடம்பெற்ற விபத்து என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மே 18இன் பின் ஏற்பட்ட மிகப்பெரும் குண்டு வெடிப்பு இதுவாகும். இலங்கையில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பாரிய விபத்து மரணமாகவும் உள்ளது. வெடிபொருட்களைப் பயன்படுத்தம் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினாலேயே இப்பாரிய அழிவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

batti222.jpgஇவ்விபத்தில் அருகில் இருந்த பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணியாளர்களும் எனத் தெரியவருகின்றது. கொல்லப்பட்டவர்களில் சீனப் பணியாளர்கள் இருவரும் அடங்குவதாகத் தெரியவருகிறது.

இதுபற்றி தேசம்நெற் இணையத்திற்கு தகவல் அளித்த வி மகேந்திரன் கூட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கும் போது இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். இலங்கை நேரம் காலை 10:40 க்கு நிகழ்ந்த இப் பாரிய குண்டுவெடிப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் தெரிவித்தார்.

கொழும்பு  – மட்டக்களப்பு பாதையை திருத்தி அமைக்கும் சீன நிறுவனம் புல்லுமலையில் உள்ள குன்றுகளைத் தகர்ப்பதற்கு பெருமளவு டைனமைட் வெடிபொருட்களை அப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இவ்வெடிபொருட்கள் கரடியனாறு பொலிஸ் ஆயுதக்கிடங்கிலும் சேகரிக்கப்ட்டு இருந்து. இந்த டைனமைட்டை கையாளும் போதே இந்த வெடிவிபத்து நிகழ்ந்து பொலிஸ் ஆயுதக் கிடங்கிலும் விபத்தை ஏற்படுத்தி உள்ளது என வி மகேந்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இந்பாரிய விபத்தால் பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மருத்துவமனையும் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த பேருந்தும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தாங்கள் அறிவதாகவும் வி மகேந்திரன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் நிலையத்திற்கு தங்கள் முறைப்பாடுகள் மற்றும் காரணங்களுக்காகச் சென்ற சிலரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இப்பகுதி முற்றாக பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டு இருப்பதாகவும் வி மகேந்திரன் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சு தகவல்

batti17.jpgகரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் 10 பொலிஸார், 2 சீன நாட்டவர்கள் மற்றும் 7 பொதுமக்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 52 பேர் காயமுற்றவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை 44 பேர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 4 பொலிஸ் உத்தியோகத்தரகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 40 பேரில் 21 பொதுமக்களும் 19 பொலிஸார்கள் உள்ளடங்குவதாகவும் மட்டு.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் 6 பொதுமக்கள், 2 பொலிஸார், 2 சீனநாட்டவர்கள் உட்பட 10 பேரின் சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Comments

  • பாமரன்
    பாமரன்

    எனக்கென்னவோ இது ஒரு எச்சரிக்கை மாதிரித்தான் தெரிகிறது. இதைப்போல புலிகளின் காலத்திலும் கொழும்பில் பல குண்டுகள் புலிகளுக்கு தெரியாமலேயே புலிகளின் பெயரால் வெடிக்கவைக்கப்பட்டன???

    Reply
  • Abdul
    Abdul

    பாமரனின் சந்தேகம் நியாயமானது.

    சீனர்களின் பிரசன்னத்துக்கு எதிரான அரசியல் வெடி குண்டாகவும் இதைப் பார்க்கலாம்.

    Reply
  • pandithar
    pandithar

    யமன்
    வேலை நிறுத்தம்!…
    தன் தொழிலுக்கு
    யாரோ போட்டியாக
    வந்து விட்டதால்…

    கடந்த வருடம்
    யமன் கடமைக்குதிரும்பியாக
    செய்தி வந்தது
    போட்டி தொழிலதிபர்கள்
    இல்லை என்பதால்…

    இப்போது புரிகிறது
    யமன் இன்னமும்
    முழுமையாக
    கடமைக்கு திரும்பவில்லை என்று…

    இது சீனாவிற்கு எதிரான
    இனாவின் வேலையுமல்ல
    சிலர் நினைப்பது போல்
    புலியின் வேலையுமல்ல…

    வெறும் விபத்து….

    Reply
  • Ajith
    Ajith

    Commission is already appointed. So no need to worry. Anything can happen in Sri Lanka. The murderer of 600 policeman is now a minister.

    Reply
  • மாயா
    மாயா

    எனக்கென்னவோ இது வேறு கோணத்தில் நினைக்கத் தோன்றுகிறது? சரத் பொன்சேகாவின் சிறைத் தண்டனை. அதிபரின் அமெரிக்க பயணம். ஐநாவில் எதிர் கொள்ளவிருக்கும், கடைசி யுத்த பிரச்சனைகள் மற்றும் மீள் குடியேற்றம் ஆகியன இந் நிகழ்வால் திசை திருப்பப் படலாம்? பாவம் உயிரிழந்த அப்பாவிகள்? எல்லாம் அரசியல்.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    வெடிக்கவைக்காமல் எந்த வெடிமருந்தும் வெடிக்காது, வெடிமருந்தை நெருப்பில் போட்டால்கூட அது எரிந்து சாம்பலாகுமே தவிர அது வெடிக்காது! விங்ஞானம் இப்படியிருக்கையில், இந்த “டைனமற்றை” வெடிக்கவைக்க “கெற்பு” பொருத்தியவர்கள் அல்லது “நேரவெடிக்கெற்பு” பொருத்தியவர்கள் யாராக இருப்பார்கள் – எல்லாம் “கெற்பு” பொருத்தியவனுக்கும் அதைப்பொருத்த ஏற்பாடுசெய்தவனுக்குமே வெளிச்சம். இங்கு கோட்டபாயவின் சீன விஜயம் முக்கியம் பெறுகிறது.

    Reply
  • BC
    BC

    செய்தியை தொடர்ந்து வந்த பின்னோட்களை பார்த்துவிட்டு நல்ல இராணுவ புலனாய்வுகள் எல்லாம்வரப் போகிறது என்று ஆவலாய் இருந்தேன். அப்படி எல்லாம் படித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. பண்டிதர் வந்து இப்படி முடித்துவிட்டார்.

    Reply
  • peter
    peter

    தளபதி சரியாக சொன்னீர்கள். அரச களஞ்சியங்களில் சில அரசதேவைகளுக்காக பொட்டாசியம் பேர்மங்கனேற்று (kmno4), கந்தகம், ஜெலிக்னைட் , கெப்,திரி என்பன இருப்பது வழமை. இது பாலம் கட்ட, மற்றும் மலைகளை உடைக்க அவ்வப்பகுதி கிராமசேவகர், அரச அதிபர், பொலிஸ் நிலைய பொறுப்பாளர் ஆகியோரின் அனுமதியுடன் வழங்கப்படும்.

    இப்பொருட்கள் எக்காரணம் கொண்டும் தானாகவோ, எரியூட்டப்பட்டாலோ வெடிக்கவே வெடிக்காது. எரியூட்டினாலும் கந்தகம் உருகி மஞ்சள் புகை வரும். பொட்டாசியம் பேர்மங்கனேற்றும் அப்படியேதான். இவற்றை எவராகிலும், எடுத்து, தொகுத்து, பக்குவப்படுத்தி, மெருகேற்றினால்தான் வெடிக்கும். வெடித்து சிதறும். அனர்த்தங்களும் பாரிய அளவில் ஏற்படும். இது எங்கேயோ, யாருக்கோ, யாரோ விட்டிருக்கும் எச்சரிக்கையாகத்தான் தெரிகிறது.

    Reply
  • malini
    malini

    அதுதானே பார்த்தன் என்னடா இது முன்பெல்லாம் ஏதாவது மனித உரிமை தொடர்பான கூட்டத்திட்கு போகேக்கை இதைப்போல புலிகளின் காலத்திலும் கொழும்பில் பல குண்டுகள் புலிகளுக்கு தெரியாமலேயே புலிகளின் பெயரால் வெடிக்கவைக்கப்பட்டன. இப்ப இவர் அமெரிக்கா போரார் என்ன செய்ய போகினம் அவைன்ட(புலிகளின்)பெயரால் வெடிக்கவைக்கப்பட முடியாதே என்னன்டு சமாளிக்கப்போரார் எனநினைச்சன் சூப்பர்- சமாளிச்சிடுவார். பாவம் உயிரிழந்த அப்பாவிகள்.

    Reply
  • பாக்ஸர்
    பாக்ஸர்

    // பாவம் ஈழத்தமிழன். நன்கு நொந்துவிட்டான். இனியாவது அவனைப் பிழைக்க விடுங்கள்// — “ஈழத்தமிழர்களை” கொன்று,போராளியாக புதைக்குழிக்குள் தள்ளி,அதனால் பிழப்புவாதிகளாக இலாபம் அடைந்தவர்கள்,தமிழ் நாட்டில் அதே பிழைப்பை நடத்துவதை ஏன் அடையாளம் காட்டவில்லை,பாதுகாப்பது எதனால்?.
    மேலே உள்ள செய்தி விபத்து என்கிறார்கள்,இருந்தாலும் சில விளக்கங்கள்!.

    ” இந்தியாவுக்கும் சீனாவுக்கும்” இடையே மோதல் இல்லை!.சீனாவே பொருளாதாரத்தில் முன்னேறுகிறது.இந்தியாவின் பொருளாதார அதிசயம்?,பெரும்பாலும் அமெரிக்காவால்(தகவல் தொழில் நுட்பம்,சேவைத்துறை),ஜெர்மனியால்(கனரக தொழில்நுட்பங்கள்),சிறிதளவு ஜப்பானால்(மோட்டார் வாகனம்),முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது!.
    ஆப்பானிஸ்தானத்தில் நிலைக்கொண்டுள்ள “சிலுவைப் போர்” துவங்கி விட்டது?.

    முதலீட்டு சேவைத்துறையில் இருக்கும் அமெரிக்காவை சீனா ஒத்துப் போகிறது ஏனென்றால் அமெரிக்க – கிருஸ்தவத்தின் பின்னால் கலாச்சார பின்னணி இல்லை.அடிப்படையில் கலாச்சார பின்னணி கொண்ட ஐரோப்பிய தொழில்நுட்பம்,கிரிஸ்தவமே போட்டியாக அமைகிறது(First Opium War from 1839 to 1842 and the Second Opium War from 1856 to 1860 – The Boxer Rebellion, also called The Boxer Uprising, by some historians or the Righteous Harmony Society Movement in northern China, was an anti-colonialist, anti-Christian movement by the “Righteous Harmony Society”,or “Righteous Fists of Harmony” or “Society of Righteous and Harmonious Fists” (known as “Boxers” in English),in China between 1898 and 1901).இதில் “ஓப்பியம் போரிலும்”,”பாக்ஸர் எதிர்ப்பிலும்” ஜெர்மனியே கலாச்சார,தொழில்நுட்ப பின்புலமாக இருந்துள்ளது.
    2010 ஆண்டின் ஜெர்மனியின் சீனாவுக்கான ஏற்றுமதி 16 பில்லியன் யூரோவிலிருந்து 25.2 யூரோ(+56%).2010 பொருளாதார “நெருக்கடியில்” ஜெர்மனியின் வளர்ச்சி 0.5 லிருந்து 2.2,அமெரிக்காவின் வளர்ச்சி 0.9 லிருந்து 0.6,பிரான்ஸின் வளர்ச்சி 0.2 லிருந்து 0.6,ஜப்பானின் வளர்ச்சி 1.1 லிருந்து 0.1. 2010 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அமெரிக்கா(பெரும்பாலும் சேவைத்துறை) 14.8 பில்லியன் டாலர்,சீனா 5.36 பில்லியன் டாலர்,ஜப்பான் 5.27 பில்லியன் டாலர்,ஜெர்மனி 3.33 பில்லியன் டாலர்.

    இந்த நிலையில் “இலங்கைத் தமிழர்கள்” தங்களுடைய பிழைப்பு?(சமூக வாழ்வியல்)எந்த இடத்தில் நாறடிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய வேண்டும்.”தமிழ்நாட்டிற்குள்” வந்து சீன – சிலுவைப்போரில்? அணிசேரக்கூடாது.தங்கள் தஞ்சம் அடைந்து வாழும் நாட்டில் எல்லாவசதிகளும் செய்துதரப்படுகிறது பிறகு ஏன் தமிழ்நாட்டில் பிரச்சனை?.”பிரச்சனைகளை உண்டு பன்னுகிறவர்கள்” இலங்கையிலிருந்து வரும் பதிக்கப்பட்ட புனர்வாழ்வு சம்பந்தமாக ஆலோசனை பெற வரும் இலங்கைத்தமிழர்கள் அல்ல!.

    கனரக தொழில்நுட்பம் சம்பந்தமான அணிசேரல் மிகவும் சிக்கலானது,பெரும்பாலான கட்டுமான நிறுவனங்களில் பெரும் முதலீட்டை செய்திருக்கும் “இந்தியாவிலுள்ள சில மத நிறுவனங்கள்(சி அண்டு ஏ துணிக்கடை போன்று)” தங்களின் தொண்டு நிறுவனங்களுக்கு இலங்கையில் பங்கு தரவில்லை என்ற பிரச்சனைக்கு எதிராக,இலங்கை இராணுவத்தினால் “தமிழ்நாட்டிற்குள்” சில விஷயங்கள் கையாளப்படலாம்!. இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் இதற்கு வழி வகுத்துக் கொடுக்கலாமா?….

    Reply
  • கருணா
    கருணா

    Ajith on September 17, 2010 6:06 pm

    Commission is already appointed. So no need to worry. Anything can happen in Sri Lanka. The murderer of 600 policeman is now a minister.//

    The murderer of 600 policeman And the order was given by Mr V. Prabahran the LTTE leader.

    Reply
  • Ajith
    Ajith

    The murderer of 600 policeman And the order was given by Mr V. Prabahran the LTTE leader./Karuna

    Dear mr Karuna,
    It may be true or false that LTTE leader ordered was given by LTTE leader Mr. V. Pirabakaran . The fact is that Karuna was the commander in Cheif in the east carried out that order. If Pirabakaran is murder then Karuna also a murderer. If you are aware that Sri Lanka Judiciary under honourable President Rajapakse has given ministerial posts whereas the Army commander who fought against LTTE was given sentance. Mr, President sent MR. Karuna to London using illegal passport to that crimninal Karuna later sentnced for nine months in UK. The reality is the Whole Sinhala country is run by criminals like Rajapakse, Karuna and Douglas. Don’t you think these are facts. Are you denying these facts?

    Reply
  • SUDA
    SUDA

    //ஆப்பானிஸ்தானத்தில் நிலைக்கொண்டுள்ள “சிலுவைப் போர்” துவங்கி விட்டது?.//பாக்ஸர்

    ஆமாம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில்……கதையாய் பாகிஸ்தானுக்குள்ளும் கால் வைத்தாச்சு. இன்னும் சில நாட்களில் எட்டி உதைக்கும் தூரத்தில் இந்தியாவும் அந்தக் கழுகுகளின் எல்லைக்கு வந்து விடும்.

    இதையெல்லாம் பற்றி எமக்கென்ன கவலை? நாம் எல்லாவற்றிலும் தன்னிறைவு கண்டு தற்போது அடுத்தவனின் குறைகளை புலனாய்வு செய்யும் மேதாவிக் கட்டத்துக்கு வந்திருக்கின்றோம்.

    தலைவரைக் காப்பாற்ற புறப்பட்ட கழுகு இப்பொழுதாவது வந்ததே என்று பெருமை கொள்வோம். அன்று பிரித்தானிய முதலாளிக்கு சேவகம் செய்த எம் சமூகத்தில் இன்று அமெரிக்க முதலாளிக்கு சேவை செய்வதற்கா ஆட்கள் பஞசம்?

    Reply
  • vijayan
    vijayan

    ..இது சீனாவிற்கு எதிரான
    இனாவின் வேலையுமல்ல
    சிலர் நினைப்பது போல்
    புலியின் வேலையுமல்ல…

    வெறும் விபத்து….

    எல்லோரையும் சிந்திக்க முடியாத முட்டாள்களாகவே இருங்கள் எனச் சொல்லும் தார்மீக உரிமையை யார் உங்களுக்குக் கொடுத்தது?

    -vijayan-

    Reply
  • Ajith
    Ajith

    அன்று பிரித்தானிய முதலாளிக்கு சேவகம் செய்த எம் சமூகத்தில் இன்று அமெரிக்க முதலாளிக்கு சேவை செய்வதற்கா ஆட்கள் பஞசம்?

    More thn that there are no drought in people to serve Sinhala racist capitalist masters.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கற்பனையில் கதை அளப்பதில் பலர் கை தேர்ந்து விட்டார்கள். விஜயன் குறிப்பிட்டது போல் இது வெறும் விபத்துத் தான். இதனை சம்பவ இடத்தில் விபத்தின் போது நின்று உயிர் பிழைத்தவர்களும் உறுதி செய்துள்ளார்கள்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள் ஏன்?,இதை தடுக்க வழியில்லையா?
    இது “பில்லினேயர்கள்” விளையாட்டு?
    குமரன் பத்மநாதனால் இவ்வளவு கனரக ஆயுதங்களை அதற்குறிய சுடுகலஙளை(அம்யூனிஷன்)”வன்னிக்கு” கடத்த முடிகிறதென்றால்,தன்னை ஏன் கைதிலிருந்து கடத்தமுடியவில்லை?.புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து வசூலித்த? பணத்தை பிடுங்கிக் கொண்டு ஆயுதங்கள் வன்னிவரை “முதலீட்ட பில்லினேயர்களால்” அழகாக கையளிக்கப்பட்டுள்ளது?.காரியம் முடிந்ததும் கே.பி.யை பழைய இரும்பாக(ஸ்கெரப்)ஆக்கிவிட்டார்கள். இவர்களே,”சிங்களவர்களின் சக்திக்கு மீறிய” யுத்த விமானங்களையும் விற்றார்கள்?,அதை அழிக்க புலிகளையும் அனுராதபுரம் அனுப்பினார்கள்(புதிதாக விற்கலாமே)?.
    அமெரிக்காவின் பில்லினேயர் மைக்ரோசாப்ட் “பில்கேட்ஸை” சிறைக்குள் தூக்கி போட முடியுமா?.ஜெர்மனியின் பில்லினேயர் “பி.எம்.டபிள்யூ” முதலாளி “னோர்பர்ட் ரெய்த்தோஃபர்” ரை சிறையில் தூக்கி போடமுடியுமா?.இவர்கள் உற்ப்பத்தியின் ஆதாரத்திலிருந்து வந்தவர்கள்.நம்ம மானாட மயிலாட கலாநிதி மாறன்,1993 ல் சிறிய வீடியோ காமாராவில் படம்பிடித்து,வீடியோ காசட்டில் பதிவு செய்து விற்று இன்று இவர்களுக்கு சமமான “பில்லினேயர்” ஆகிவிட்டாராம்!.அமெரிக்க – ஜெர்மனியிலிருந்து சில பில்லியன் டாலர்கள் சக்சேனாக்கள் மூலம் துக்கிப் போடப்பட்டுள்ளது,”முகவர்களாக” இவர்கள்,இவர்கள் மனைவிகள் எடுக்கும் பெரும் சம்பளமே இவர்களுடையது? அதற்கு பிரதிபலனே முள்ளியவாய்க்கால் போன்ற நிகழ்ச்சி நிரல்கள்?.இப்படிதான் “அமெரிக்க தமிழ் ஹெட்ச் பண்ட் பில்லினேயர்” ராஜ் ரத்தினத்தையும் காரியம் முடிந்ததும் சிறைக்குள்ளே தூக்கிப் போட்டார்கள்?.
    அடப்பாவிகளா,தமிழர்கள் அனைவரும் “காஸ்டிலியான நரகல் என்றால்” அடித்துக் கொண்டு தின்னும் கோமாளிகளா?.என்னைப் போன்ற பரதேசியானலும் பரவாயில்லை,”தமிழ்த்தேசிய இறுமார்பும்,”ராஜராஜ சோழனாக” முடிசூட்டிக் கொண்டவர்களுமா?
    “நிகழ்ச்சி நிரலின்”(பில்லினேயர் விளையாட்டு),தமிழர்களின் அடையாளத்தை அழிப்பதுதான் என்றால் அழித்துக் கொள்ளுங்கள்!.எங்களின் உடல்களை விட்டுவிடுங்கள்.கை கால்களை இழந்து காலம் முழுவதும் கஷ்டப்பட முடியலைடா சாமி.முஙூட்டியே சொல்லிவிடுங்கள்,”அடையாளங்களை” உங்களுக்கு தகுந்தமாதிரி மாற்றிக் கொள்கிறோம்.அல்லது,”தமிழ்தேசிய இறூமார்பு கொண்டோர்,ராஜராஜ சோழனின் முடியை அலங்காரமாக்கிக் கொண்டோர்” உங்களுக்கு எந்த இரகசிய சேவை செய்கிறார்கள் என்பதையாவது தயவுசெய்து சொல்லுங்கள்,அதை நாங்கள் செய்கிறோம்,எங்களுக்கும் சிறிது பிச்சை போடுங்கள்!.அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சி நிரலை மாற்றிவைத்து செயல் படுகிறார்களா என்று சொல்லுங்கள்,அவர்களிடம் ஓடி விடுகிறோம்!.

    Reply
  • BC
    BC

    //விஜயன்- எல்லோரையும் சிந்திக்க முடியாத முட்டாள்களாகவே இருங்கள் எனச் சொல்லும் தார்மீக உரிமையை யார் உங்களுக்குக் கொடுத்தது? //
    எல்லோரையும் சிந்திக்க முடியாத முட்டாள்களாகவே இருங்கள் என்று பண்டிதர் எங்கே கூறினார்? தலைவர் வந்துட்டாரோ?

    Reply
  • thurai
    thurai

    சிங்கள ஆட்சியாளர் பயங்கரவாதிகளென குற்ரம்சாட்டும் அஜீத் அறிவது.
    தமிழர்கள் தங்களைத் தாங்கள் அரசு செய்வதற்கு ஈழ்த்தமிழர்களின் தகைமைகளென்ன?

    30 வருட போரிலும் தற்போதும் நாட்டை விட்டு வெளியேறியே ஈழத்தமிழர் வாழ விரும்புகின்றார்கள். இதற்குக் காரணம் இலங்கை அரசோ, தமிழ்மொழி மீதுகொண்ட பற்ரோ காரணமல்ல. ஆண்டாண்டுகாலம் அடிமைவாழ்வில் சுகம் கண்ட குணமேயாகும்.
    ஈழ்த்தமிழரின் சனத்தொகை முஸ்லிம்களினதும், இந்தியத்தமிழர் தொகையிலும் குறையத் தொடங்கிவிட்டது. இனிமேலும் ஈழத்தமிழர் சிறுபான்மையினரில் பலம் கொண்டவர்களா?

    உருமை கேட்கவும் போராடவும் வேண்டியவர்கள் ஈழ்த்தில் வாழும் சிறுபான்மைய்னரேயாகும். புலத்தில் வாழும் தமிழர்களிற்கு முஸ்லிம்களையோ அல்ல்து தோட்டத் தொழிலால்ர்களையோ தங்களின் தமிழிற்கு உயிர் கொடுக்கும் போராட்டத்தில்
    பங்கு கொள்ள வைக்கவேண்டும் என்ற எண்ணம் எப்போதவ்து இருந்ததுண்டா?

    சிங்களவரிலும் பார்க்க தமிழரில் ஒரு சாரார் தமிழரை அழித்து அந்த அழிவில் வாழ்க்கை நடத்துகின்றார்கள். இவர்கள் சிங்கள்வோரோடும் சேர்வார்கள், இந்தியாவுடனும் சேர்வார்க்ள். ஆனால் இவர்கள் பேச்சில் மட்டும் தமிழ் பற்று வழிந்தோடும்.
    இவர்களே ஈழத் தமிழர்களின் அரசியலை தங்களின் பரம்பரைச் சொத்தாக காத்து பலனடைகின்றார்கள். இலங்கையிலும் இவர்கள்தான், புலம்பெயர்நாடுகளிலும் இவர்கள்தான் எதற்கும் முன்நிற்கின்றார்கள்.

    சென்ற வருடம் நடந்த பேரழிவைத்தடுக்க முடியாமல் செய்தது இவர்களின் செயல்களேயாகும்.இவர்களிற்கு தேவை புகழும் பணமுமேயாகும். இவர்களிற்கு உதவியும், பாதுகாப்பும் ஈழத்தமிழர் வழங்கும்வரை ஈழத்தமிழர்களை கடவுளாலும் காக்கமுடியாது.

    துரை

    Reply
  • nantha
    nantha

    வெடி விபத்துக்கள் பற்றி அபிப்பிராயஙகள் சொல்லுபவர்கள் உண்மையக்குப் பதிலாக “ஏதாவது” வெடித்து வெளினாடுகளில் சில்லறை சேர்க்க வழி பிறக்காதா என்று ஆதஙப்படுவதும் தெரிகிகிறது.

    கெற்பு என்பதனை திரி வைத்து தீ மூட்டினால் மாத்திரமே வெடிக்க வைக்க முடியும் என்பதல்ல. ஒன்றை வாங்கி சுத்தியலால் ஒரு தட்டு தாடிப் பாருங்கள். கூடிய அமுக்கம் கூட அதனை வெடிக்க வைக்கும்.

    ஏற்றி இறக்கும் பொழுது சில பொதிகள் கட்டவிழ்ந்து போய் இந்த “கெற்புகள்” அமுக்கத்துக்குட்பட்டு வெடித்திருக்கலாம்!

    Reply
  • BC
    BC

    பார்த்திபன், வெறும் விபத்துத் தான் என்று குறிப்பிட்டது பண்டிதர். விஜயன் கற்பனை கதையில் எல்லோரும் மிதக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்திபன், வெறும் விபத்துத் தான் என்று குறிப்பிட்டது பண்டிதர். விஜயன் கற்பனை கதையில் எல்லோரும் மிதக்க வேண்டும் என்று விரும்புகிறார்.- BC//

    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி BC. பண்டிதரின் உவமானம் என்று விஜயன் குறிப்பிடாமல் எழுதியதால் அதனையும் விஜயனின் கருத்தாகவே நினைத்ததால் வந்த தவறு இது. என்ன செய்வது விஜயன் போன்றவர்கள் தமிழர்களை தொடர்ந்து முட்டாள்களாக வைத்திருந்தால்த் தான், தமது பிழைப்பு நடக்குமென்று தொடர்ந்து கனாக் காணுகின்றார்கள்.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    இதுதான் எமது சமுதாயம்!
    விங்ஞானத்தை விடிய விடிய பாடமாக்கி பரீட்ச்சைஎழுதி பட்டங்கள் பெற்றபின், படித்ததையெல்லாம் சீதனித்திற்கு விலைபேசி விற்றுவிட்டு, பாமரன் எனக்கு சீதனம் தந்தான் அதனால், எல்லாப்பாமரனும் பத்திரிகையும் அரசும் அதனை விபத்தென்கிறது, ஆதலினால் அது ஒரு விபத்தே என்று நிரூபிக்க முற்படுவது! 30 வருட உள்நாட்டுப்போரையும், உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பான புலிகளையும் வென்றுகாட்டினோம் என்று இறுமாப்புக்கொள்ளும் அரசபடைகளுக்கு, வெடிமருந்துகளை எப்படிக் கையாள வேண்டுமென்பதை உலகம் பாடங்களாக சொல்லிக்கொடுத்தும் கையாளாதவர்களையும், அவர்களுக்காக எந்த விங்ஞான அறிவையும் பெற்றிராதவர்கள் இங்கு வாதடுவது – தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்வைத்த தனிநாட்டுக்கோரிக்கைக்கு ஒப்பானது.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //வெடி விபத்துக்கள் பற்றி அபிப்பிராயஙகள் சொல்லுபவர்கள் உண்மையக்குப் பதிலாக “ஏதாவது” வெடித்து வெளினாடுகளில் சில்லறை சேர்க்க வழி பிறக்காதா என்று ஆதஙப்படுவதும் தெரிகிகிறது.

    கெற்பு என்பதனை திரி வைத்து தீ மூட்டினால் மாத்திரமே வெடிக்க வைக்க முடியும் என்பதல்ல. ஒன்றை வாங்கி சுத்தியலால் ஒரு தட்டு தாடிப் பாருங்கள். கூடிய அமுக்கம் கூட அதனை வெடிக்க வைக்கும்.

    ஏற்றி இறக்கும் பொழுது சில பொதிகள் கட்டவிழ்ந்து போய் இந்த “கெற்புகள்” அமுக்கத்துக்குட்பட்டு வெடித்திருக்கலாம்!//nantha on September 19, 2010 3:47 pm

    “கெற்பை” என்ன சொப்பிங் பாக்கிலா கட்டிக் கொடுக்கிறார்கள் – அது சிதறுண்டு போய் கதவுகளில் நெரிபடுவதற்கு!

    Reply
  • nantha
    nantha

    //“கெற்பை” என்ன சொப்பிங் பாக்கிலா கட்டிக் கொடுக்கிறார்கள் – அது சிதறுண்டு போய் கதவுகளில் நெரிபடுவதற்கு//

    விபத்து என்பது திட்டமிடப்பட்டு நடத்தப்படுவது அல்ல. சொப்பிங் பாக்கிலா என்பது வெறும் கோமாளித்தனம். மனிதர்களின் செயல்பாடுகளில் இந்த கெற்பு சரியாக பக்கேஜிங் செய்யப்படவில்லை என்பதெ என் கருத்து.

    அப்பலோ ரொக்கட் சிதறியது எப்படி? சில வேளைகளில் கம்யூனிஸ்ட்டுக்களின் சதி என்றும் இனி கண்டுபிடிப்புக்கள் வரலாம்!

    Reply
  • ஜெயராஜ்
    ஜெயராஜ்

    மே 18க்கு முன்பே வெளியேறிய ராம் தலைமையிலான புலிகளின் தாக்குதல் பிரிவு கொக்கட்டிச்சோலைக் காட்டிற்குள் தங்கியிருந்தது. காட்டு விலங்ககளையே உணவாக உட்கொண்டவாறு தலைமையிடம் இருந்துவரும் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள். செய்மதி மூலம் அவர்களுக்கு ஒரு தகவல் வந்தது. சீனா -இந்தியா முரண்பாட்டை வைத்து ஒரு தாக்குதல் திட்டம். காரணம் சீனா -இந்தியா முரண்படுவார்கள் என்று பார்த்தால் அவர்களுக்குள் ஒரு பரஸ்பரம் நிலவுகிற மாதிரித் தெரிகிறது. இந்தியாவை நம்பி இனிப் பலனில்லை. சீனாவுடன் தொடர்பு கொண்டு அதன்மூலம் தாக்குதல் நடத்துவது. இதில் புலிகள் தொடர்பு கொண்ட சீன அதிகாரிகள் சிலர் இவர்களின் நடந்து முடிந்த போராட்டம், அதில் பலியான மக்கள், தாக்குதல் தன்மை, கரும்புலிகள் தாக்குதல் இவற்றை எல்லாம் அறிந்து தாங்கள் இரு அதிகாரிகளும் கரும்புலிகளாக மாறுவதாக ஒப்புக் கொண்டார்கள். அதன் அடிப்படையிலேயே தாக்குதல் நடாத்தி முடிக்கப்பட்டது. இதன்மூலம் இது இந்தியாவின் றோ வின் வேலை என்றும் மக்கள் குழம்புவார்கள் என்றும் இந்தச் செய்தி மூலம் இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.– இப்படியும் சொல்லலாம்.

    இலங்கையில் ஒன்றும் வெடிக்கவில்லை வெடிக்காதோ என்று ஏங்கியவாறு இருந்தவர்களுக்கு இப்படி ஒரு வெடிப்புச் சம்பவம் நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    Reply
  • மாயா
    மாயா

    மேற் குறிப்பிடும் பாரிய வெடிப்பு தொடர்பாக சிங்கள ஊடகங்கள் வழி எழுந்துள்ள கேள்விகள் இவை:
    —————–

    //இராணுவ ஊடகத்துக்காக பேசவல்ல உபய மெதிவல ” பாதுகாப்பாக 3 கண்டேனர்களில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் காவல்துறை பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது……..”

    தேசிய பாதுகாப்புக்கான ஊடகம் இப்படித் தெரிவிக்கிறது. ” காவல் நிலையத்துக்கு வெளியே சீன நிறுவனமோன்றுக்கு தேவையான வெடி பொருட்கள் 2 கண்டேனர்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன…..”//

    இவை காவல் நிலையத்துக்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனவா அல்லது வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனவா என்பது தொடங்கி இறந்தவர்களது எண்ணிக்கைகளும் மாறுபட்டே சொல்லப்படுகின்றன.

    இவை தொடர்பாக எழும் சந்தேகங்கள்??
    ———-
    1. மேலே தகவல் தருவோர் மாறுபட்ட தகவல்களை வழங்குகின்றனர். ஒருவர் கொள்கலன்கள் உள்ளே இருந்தன என்றும் அடுத்தவர் அவை காவல் நிலையத்துக்கு வெளியே இருந்தது என்றும் தகவல் தருவது ஏன்?

    2. இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்களின்படி இவ்வளது தொகையான வெடி பொருட்கள் காவல் நியைம் ஒன்றின் அருகே வைக்கப்படுவதில்லை. வெடி பொருட்கள், சாதாரணமாகவே பாதுகாப்பு பொருந்திய , வெடி பொருட்கள் வைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இராணுவ முகாம்களில் மட்டுமே வைப்பது நடைமுறை. அப்படியானால் இவை காவல் நிலையத்துக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டது. எப்படி வந்தது? காவல் நிலையம் சிவில் நடைமுறைக்கு உட்பட்டதாக இருப்பதால் , அங்கு சாதாரண மக்கள் வந்து போகும் இடமாகும். தவிரவும் இக் காவல் நியைத்துக்கு அருகே , கடைகளும் , அரச காரியாலயங்களும் இருக்கின்றன. இப்படியாக சன நடமாட்டம் உள்ள ஒரு இடத்தில் வெடி பொருட்களை வைப்பதற்கு அனுமதியளித்த முட்டாள் யார்?

    3. வெளிநாட்டு நிறுவனங்கள் , தமக்கு தேவையான அளவு வெடி பொருட்களைக் கொண்டு வர அரசு அனுமதியளிக்கிறதா? இப்படியான ஒரு முறை இலங்கை சட்டத்தில் நடைமுறையில் இல்லை. இதுவரை வெடி பொருட்களை அரச அனுமதி பெற்று இராணுவ அல்லது கடற்படை முகாம்களில் இருந்தே தேவையான நிறுவனங்கள் பெறுவது வழக்கம். அதுவும் அப்போதைய தேவைக்கு மாத்திரமேயாகும். பெரும் தொகையிலான வெடி பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இல்லையென்றால் , இந்த சீன நிறுவனத்துக்கு விசேச அனுமதியொன்றை அரசு வழங்கியதா? அதற்கான சட்ட திட்டங்கள் இயற்றப்பட்டதா? அது குறித்த தகவல்கள் கெசட் மூலம் வெளிவந்துள்ளதா? எங்கே ? எப்போது?

    4. கிழக்கின் வசந்தம் எனும் வேலைத்திட்டதில், புலிகளின் புணர்வாழ்வு பெற்றவர்கள் பணியாற்றினார்களா? அவர்களில் எவராவது இவ் இடத்துக்கு வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டார்களா? அல்லது வந்தார்களா?

    5. இந் நிகழ்வு விபத்தாக இருந்தால் , இதற்கு பொறுப்பானவர்கள் இலங்கை அரசா? அல்லது சீன நிறுவனமா?

    இவை அரசியல் நோக்கைக் கொண்டவையா என்பதற்கு இச் சந்தேகங்கள் முன் வைக்கப்படுகின்றன.
    —————
    1.இலங்கையிலிருந்து ஒரு முக்கிய குழு வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது அல்லது வெளிநாடுகளில் இருந்து ஒரு முக்கிய குழு இலங்கைக்கு வரும் போது இது போன்ற சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. ஒரு முறை வெளிநாட்டு தூதுக் குழு ஒன்று இலங்கைக்கு வந்த போது யாழ் உதயன் பத்திரிகை நிறுவனம் குண்டு தாக்குதலுக்கு இலக்கானது. ஐநா தொடர்பான ஒரு அதிகாரி , கொழும்பு வந்த போது கொழும்பு கோட்டையில் வைத்து செஞ் சிலுவைச் சங்க ஊழியர்கள் கடத்தப்பட்டு , பின்னர் அவர்களது உடல்கள் கிடைத்தன.

    2. அதிபர் , ஏனைய நாடுகளுக்கு வழங்கிய உறுதி மொழிகளை மறந்து தற்போது சீனாவுக்கு வழங்குவதால் , எந்த நாடாவது மனவேதனை உற்று இருக்கிறதா? அது போன்ற நாடு எது?

    3.எதிர்வரும் 23ம் திகதி ஐநாவில் ” எமது நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் ” என அதிபர் சொல்ல இருக்கும் போது , கடந்த சில தினங்களுக்கு முன் பாதுகாப்பு படையில் இவ்வளவு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே எனஎவராவது கேட்டால் அதிபர், என்ன பதில் சொல்லு முடியும்?

    இப்படி லங்கா ஈ நியுசில் படை வீரன் என்பவர் சந்தேகங்களைத் தொடுத்துள்ளார்

    Reply
  • Ajith
    Ajith

    சிங்கள ஆட்சியாளர் பயங்கரவாதிகளென குற்ரம்சாட்டும் அஜீத் அறிவது.
    Mr. Thurai,
    That is a fact not an accusation.
    சிங்களவரிலும் பார்க்க தமிழரில் ஒரு சாரார் தமிழரை அழித்து அந்த அழிவில் வாழ்க்கை நடத்துகின்றார்கள். இவர்கள் சிங்கள்வோரோடும் சேர்வார்கள், இந்தியாவுடனும் சேர்வார்க்ள்.
    You are right. They also act as intelligent agents for them in foregin soilas.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    பின்னூட்டக்காறர்கள் இங்கு மெளனம் காப்பது ஏனோ?
    இது விபத்தா? அல்லது திட்டமிடப்பட்ட விபத்தா?

    புலிகள்கூட இப்படியான வேலைகளைச் செய்யும்போதும் – நீங்கள் மெளனம்காத்து ஒருபகுதி தமிழரை சுடுகாட்டுக்கு அனுப்பினீர்களல்லவா? அதே மெளனம் தானா இதிலும்?

    இறந்தவனின் சாம்பல் மேட்டின்மேல் தனது வாழ்வை கட்டியமைக்க முற்படும் எந்த சமூகமும் தனது வாழ்வை வாழ்ந்ததாக வரலாறு ஒருபோதும் இல்லை!

    எங்களின் அறியாமையும், எமது குரூர குணங்களுமே எங்களைக் கொல்கின்றன!

    Reply
  • பல்லி
    பல்லி

    //பின்னூட்டக்காறர்கள் இங்கு மெளனம் காப்பது ஏனோ?
    இது விபத்தா? அல்லது திட்டமிடப்பட்ட விபத்தா?//
    தளபதி உங்கள் மேல் வரி கேள்விக்கு கீழ்வரியே பதிலாகும்; பயமாக உள்ளது; யாரையும் நம்பமுடியவில்லை: ஆகவே சரியான தகவல்கள் கிடைக்கும் வரை மெளனம் காப்பதே நல்லது என்பது பல்லியின் நிலை;

    Reply
  • TULF
    TULF

    2010-09-21
    பத்திரிகை அறிக்கை

    கரடியன் ஆறு வெடிவிபத்தில் சிக்குண்டு மரணித்த அப்பாவிகளின் உற்றார் உறவினர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தொரிவிக்கின்றது. யாரோ ஒருவரின் கவனயீனத்தாலும் வெடி பொருட்களை கையாழும் முறையில் அனுபவம் இல்லாதவரின் செயலால் அப்பாவிமக்கள் 25 பேர் உயிரிழந்ததும் 50 பேருக்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததும் சிலர் படுகாயம் அடைந்ததும் துர் அதிர்ஸ்டமே.

    பலியானவர்கள் சகலரின் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளுவது முடியாதமையினால், கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர், சீன தூதராலயம், பொலீஸ் பிரதம அதிகாரி ஆகியோரை சம்பந்தப்பட்டவர்களின் உறவுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்குமாறு கூட்டணி வேண்டுகின்றது. காயமுற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம்

    வீ.ஆனந்தசங்கரி
    தலைவர்
    தமிழர் விடுதலைக் கூட்டணி

    Reply
  • மாயா
    மாயா

    இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா என்பது குறித்து இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. காரணம் அருகாமையில் இருந்த பலர் கொல்லப்பட்டிருப்பதால் விளக்கம் இல்லை. அடிப்படையில் இது போன்ற இடமொன்றில் வெடி மருந்து பொருட்களை வைக்க அனுமதியளித்ததும் , வைத்திருந்ததும் தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இக் குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் எனும் சந்தேகமும் இருக்கிறது. காரணம் , யுத்த காலத்தில் இந்தியா இலங்கை அரசுக்கு பேருதவிகளைச் செய்திருந்த போதிலும் , தற்போது சீன நிறுவனங்கள் இலங்கையின் சீரமைப்பு வேலைகளை செய்வதன் ஒரு சினமாகவும் இருக்கலாம். தவிர பிள்ளையானோடு , இந்தியா உறவுகளை மேம்படுத்தும் நிலையில் பல முன்னெடுப்புளை செய்துள்ளது. இவை குறித்து மட்டுமல்ல கருணா காலத்து ஆயுதங்களை தேடுவதிலும், கண்டெடுப்பதிலும் அரச தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது. பிள்ளையானுக்கும் , கருணாவுக்குமான அதிகார போட்டியில் இப்படியான நிகழ்வுகளுக்கு வழியாகவும் இருக்கலாம்? எது எப்படியாக இருந்தாலும் இறந்து போன அல்லது இறந்து போகும் அப்பாவிகள் குறித்த வேதனைகள் மனதை உலுக்குகின்றன. அவை சரியாக வெளி வரவில்லை. தத் தமது தவறுகளை மறைக்கவும் , அரசியலுக்காகவும் இந்த சோகம் நடை பெற்றுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனியும் தொடலாகாது. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடைபெறும் நேரத்தில் இது போன்றவை தடைக்கல்லாகிவிடலாம்?

    Reply