![]()
![]()
நாளைக்கு (16.09.10) கத்தோலிக்கர்களின் புனிதத்தலமான வத்திக்கன் நகரின் 265வது மதத்தலைவரான கத்தோலிக்க புனித தந்தை போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் அவர்கள் பிரித்தானியாவுக்கான தனது முதலாவது வருகையை மேற்கொள்கிறார். 1982ம் ஆண்டில் அன்று போப்பாண்டவராகவிருந்த புனித தந்தை, மதிப்புக்குரிய 2வது போல் அவர்கள் இங்கிலாந்துக்கு வருகைதந்தார். அப்போது ஒரு கோடிக்கும் மேலான மக்கள் அவரை மிகவும் உற்சாகமாக வரவேற்றார்கள். உலகின் மனிதத் தொகையில் 17 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க மதத்தைந் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பில்லியன் உலக மக்கள் தொகையில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டவர்கள்.
இங்கிலாந்தில் 61 கோடி மக்களில், பல தரப்பட்ட கிறிஸ்தவ (கத்தோலிக்க அங்கிலிக்கன் போன்ற) தேவாலயங்களுக்கும் 4 விழுக்காடு மக்கள் மட்டும்தான் பிரார்த்தனைக்குச் செல்வதாக் கணிப்பீடுகள் சொல்கின்றன. கத்தோலிக்க மத குருமார்கள் 21ம் நூற்றாண்டின் யதார்த்தமான வாழ்க்கை முறையைப்புரிந்து கொண்டு பொது மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காததால் போப்பாண்டவரின் பிரித்தானிய வருகையை ஒட்டிப் பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
1982ம் ஆண்டு புனித தந்தைக்குக் கொடுத்த வரவேற்புக்கு எதிர்மாறக, இப்போது, பல தரப்பட்ட குழுக்கள் போப்பாண்டவரின் வருகையை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன.
2005ம் ஆண்டு போப்பாண்டவராகப் பதவி பெற்ற புனித தந்தை பெனடிக்ட் போப்பாண்டவராக முதலே, தனது பழமையான கத்தோலிக்கக் கருத்துக்களால், பொது மக்கள், அரசியல்வாதிகள், பெண்ணியவாதிகள், மதத் தலைவர்கள் என்ற மட்டங்களில் பல விவாதங்களை உருவாக்கி விட்டவர்.
1927ம் ஆண்டு பவேரியா என்ற இடத்தில் பிறந்த போப்பாண்டவரின் இயற் பெயர் யோசேவ் அலோயிஸ் ரட்சிங்கர் என்பதாகும். இவர் தனது 14வது வயதில் ஹிட்லரின் இளைஞர் படையில் (1941ல்) சேர்ந்தார். ஹிட்லரின் திட்டத்தின்படி ஆயிரக்கணக்கான ஊனமற்ற மக்கள் கொல்லப்பட்டார்கள் இவர்களின் குடும்பத்தில் உள்ள மூளை வளர்ச்சி குறைந்த ஒருவரும் ஹிட்லரால் கொல்லப்பட்டார். இவரின் தந்தையார் நாஷிகளின் எதிரியென்று குறிப்பிடப்படுகிறது. போப்பாண்டவர் ஹிட்லரின் இளைஞர் படையில் சேர்ந்தாலும் கட்சிக் கூட்டங்களுக்குப் போவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் 16வது வயதில் ஹிட்லரின் போர்ப் படையிற் சேர்ந்தார் போர் முடிந்ததும், அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளுக்குத் தப்பியோடினாலும் அமெரிக்கராற் பிடிக்கப்பட்டுச் சிறைவைக்கப் பட்டார்.
மிகவும் பழைமைவாதக் கருத்துகளுடன் வாழும் போப்பாண்டவர் பூனைகளில் மிகவும் விருப்பம் கொண்டவர். வத்திக்கான் மாளிகையில் மிருகங்கள் வைத்திருக்ககூடாது என்ற சட்டம் இருப்பதால் தனது இரு பூனைகளையும், தனது தனிப்பட்ட வீட்டில் வைத்திருக்கிறாராம். இவரது தாய் மரியா ஒரு காலத்தில் செய்து கொடுத்த பஞ்சடைத்த விளையாட்டுப் பொருளான பூனையை இன்னும் தன்னோடு வைத்திருக்கிறாராம். இசையில் மிகவும் மிகவும் பிரியமுள்ள புனித தந்தை பியானோ வாசிப்பாராம் அத்துடன் பேத்தோவன், மோஷார்ட் போன்றோரின் இசையை விரும்பிக்கேட்பாராம். புத்தகங்களில் மிகவும் ஆர்வமுள்ள போப்பாண்டவர் நிறைய வாசிப்பது மட்டுமன்றி நிறையப் புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். புத்தகங்கள் உலகம் பரந்த கத்தோலிக்கரால் கோடிக்கணக்காக வாங்கப்படுகிறது, முற்போக்குச் சமுதாயவாதிகளால் பல விமர்சனங்களுக்கும் உள்ளாகிறது.
இரண்டாவது உலக யுத்தத்தின்பின் சமயப் படிப்பில் இறங்கிய ரட்சிங்கர் அவர்கள் தனது கலாநிதி பட்டத்திற்கான மேற்படிப்புக்களை முடித்தபின் சமயப் பேராசிரியராகப் பல பல்கலைக்கழகங்களிற் பணியாற்றினார். இவரது பழைமைசார்ந்த சமயக் கருத்துக்களைப் போகுமிடம் எல்லாம் போதித்தார். முற்போக்கு கொள்கைளை எதிர்த்தார். உதாரணமாக 1968ம் ஆண்டுகளில் பாரிஸில் மாணவர் நடத்திய சமுதாயப் போராட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
எயிட்ஸ் நோய் பரவியபோது அதைத் தடுக்கப் பாலுறவின்போது ஆணுறையைப் பாவிக்க வேண்டும் என்று அகில உலக சுகாதார சபை அறிக்கை விட்டபோது அதை எதிர்த்தார். எயிட்சைத் தடுக்க ஒரேயோரு வழி பொதுமக்கள் பாலியல் உறவுகளை வைத்திருக்காமற் தடுப்பது என்பது இவரது வாதம். அத்துடன் உலகில் இன்று பெருகிவரும் சனத்தொகைகையைக் கட்டுப்படுத்தவும் வறுமையைத் தடுக்கவும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் தேவை என்பதையும் புனிதத் தந்தை எதிர்த்துப் பலரை விரோதித்துக் கொள்கிறார். அவரின் கருத்துப்படி ‘படைத்த கடவுள் உணவு கொடுப்பான், இயற்கை விதிகளை மீறக் கூடாது’ என்பதாகும். வளர்ந்து கொண்டுபோகும் மனிதப் பெருந்தொகைக்குத் தேவையான வாழ்க்கை முறைக்கு உலகத்தினில் போதிய உணவோ, நிலமோ கிடைக்காது என்ற வாதத்தை இவர் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.
இவரின் இப்படியான கருத்துக்களுக்கு உலகப் பொருளாதார நிபுணர்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அத்துடன், ‘குழந்தை பெற்றுக்கொள்வது என்பது பெண்களின் தீர்மானத்தில் தங்கியிருக்கிறது, எங்கள் சொந்த விடயங்களில் தலையிடப் போப்பாண்டவருக்கு எந்த உரிமையும் கிடையாது’ என்று பெண்ணியவாதிகள் புனித தந்தைக்கு எதிரான பதாகைகளுடன் புறப்படுகிறார்கள்.
அத்துடன், போப்பாண்டவர் ஓரினச் சேர்க்கை உறவுக்கு எதிரானவர். இந்த மாதிரியான ‘இயற்கைக்கு உதவாத’ உறவுகள் வளராமல் கத்தோலிக்க மதம் போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இங்கிலாந்து, அமெரிக்கா, பெரும்பாலான மேற்கு நாடுகளில் ஓரினபாலுறவு சட்டமயமாக்கப் பட்டிருக்கிறது. ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம், அன்பு என்பதற்கு சமயம் வரைவிலக்கணம் கொடுத்து கட்டுப்படுத்த முடியாது என்று ஓரினச்சேர்க்கையாளர்கள் போராடுகிறார்கள். போப்பாண்டவரின் இங்கிலாந்து வருகையின்போது ஓரினச்சேர்க்கையாளரின் போப்பாண்டவர் எதிர்ப்பு பதாதைகள் உயர்த்தப்படும் என்று ஓரினச்சேர்க்கையாளர்களின் அமைப்பாளர் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாகக் கத்தோலிக்க பாதிரிமார்கள், தங்களின் தேவாலயங்களுக்கு பிரார்த்தனைக்கு வந்த அறியாப் பருவத்திலுள்ள சிறுவயது ஆண் பெண் குழந்தைகளுக்குச் செய்த பாலியற் கொடுமைகளை புனித தந்தை பெனடிக்ட் அவர்கள் சரியாக விசாரிக்கவில்லை, குறிப்பிட்ட பாதிரிகைளைப் பதவிகளிலிருந்து உடனடியாக நிறுத்தவில்லை, இந்தக் கொடிய பாலியல் வன்முறைச் செய்திகளைப் பொலிசாருக்கு அறிவிக்கவில்லை என்ற பல தரப்பட்ட கோபங்களில் பலர் போப்பாண்டவர் வரவை எதிர்ப்பதாக பிபிசி ‘பனராமா’ டொக்குயுமென்றரி 13.09.10 இரவு எடுத்துக்காட்டியது.
அத்துடன், பெண்களைக் கத்தோலிக்க ஆலயங்களில் பாதிரியார்கள் போன்ற மேற்பதவிகளில் வைக்கவும் புனித தந்தை எதிர்க்கிறார் என்பதும் அவருக்கு எதிராக வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டாகும்.
இவைக்கும் மேலாகச் சமய ரீதியிலும் போப்பாண்டவர் மற்ற சமய மக்களின் மனதைத் துன்பப் படுத்தியிருக்கிறர் என்றும் சொல்லப்படுகிறது.
ஹிட்லரால் ஆறு கோடி மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இடதுசாரிகள், ஜிப்ஸிகள், ஊனமுற்றோர், ஹிட்லருக்கு எதிராக எழுதிய பத்திரிகையாளர்கள என்று பல தரப்பட்டோர் கொல்லப்பட்டார்கள். முக்கியமாகக் கொல்லப்பட்டவர்கள் – இன அழிப்பு செய்யப்பட்டவர்கள் யூத மக்களாகும். ஆனால், ஹிட்லரின் படையிலிருந்த போப்பாண்டவர் இதுவரையும் ஹிட்லரால் யூத மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமையை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை என்று யூதமக்கள் பொருமுகிறார்கள்.
யூத மக்களால் மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும், துருக்கிய முஸ்லிம் மன்னர்கள் பற்றிப் போப்பாண்டவர் சொன்ன கருத்துக்கள் கோபத்தை உண்டாக்கியிருக்கின்றன. 12.09.2006ம் ஆண்டு, அவர் பேசும் போது கிறிஸ்தவ மன்னரான மானுவல் 2வது பாலுலாக்கஸ்ஸைத் துருக்கிய மனனர் 1391ல் கொன்ஸ்ரான்ரினோப்பிளில் வெற்றி கொண்ட பின் கிறிஸ்தவ மக்களைத் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி மதம் மாறச்செய்தார் ஏன்று குறிப்பிட்டதும் முஸ்லிம் அதிகாரம் வன்முறையானது என்றதொனியில் பேசியதும் பல முஸ்லிம் மக்களைக் கோபப்படுத்தியிருக்கிறது.
போப்பாண்டவர் அவர்கள் பொதுவுடமை நாடான சைனாவின் பரம எதிரியான தலாய்லாமாமைச் சந்தித்ததால் 2007ல் சீனாவின் கண்டிப்புக்கும் ஆளாகினார்.
கொலப்பஸ் தென்னமெரிக்க நாடுகளுக்கு வந்தபின்தான் மனிதப் பண்பாட்டை மேன்படுத்தும் கிறிஸ்ரியானிட்டியால் மக்கள் நன்மையடைந்தார்கள் என்று சொன்னதால், தங்களது ஆதிகால வணக்க முறைகளைப் போப்பாண்டவர் அவமதித்ததாக வெனிசுவேலாவின் அதிபர் சவாவோசின் கண்டனத்துக்கம் ஆளானார் புனித தந்தை.
உலகின் பல நாடுகளிலுமுள்ள பல கிறிஸ்தவ ஆலயங்களிற் பணி புரிந்த போதகர்களால் பாலியற் கொடுமை செய்யப்பட்ட குழந்தைகள்; இருக்கிறார்கள். குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்கிறார்கள். ஆண்களும் பெண்களும் பல ஊடகத்துறைகள் மூலம், கத்தோலிக்கப் பாதிரிமார் தங்களுக்குச் செய்த பாலியல் கொடுமைகளை விபரிக்கிறார்கள். ஜேர்மனியில் ரடசிங்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்தபோது (1977) பீட்டர் குலமன் என்ற பாதிரி செய்த கொடுமையைப் போப்பாண்டவர் சரியாக விசாரிக்கவில்லை என்றும், அமெரிக்காவின் ஓக்லாண்ட் கத்தோலிக்கப் பாதிரிகளின் நடத்தையை, அக்கால கட்டத்தில் (1998) வத்திக்கானில் கார்டினலாகவிருந்த ரடசிங்கரிடம் அறிவித்தும் அவர் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி பனராமா செய்தியிற் சொன்னார்கள்.
புனித தந்தை அவுஸ்திரேலியா சென்றிருந்து போதும், அமெரிக்கா சென்றிருந்த போதும் கிறிஸ்தவ பாதிரிகளாற் பாலியற் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடினார். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, பெல்ஜிய நாட்டில் உள்ள கிறிஸ்தவ பாதிரிகளால் பாலியற் கொடுமைகளுக்காளாளவர்களின் வாக்கு மூலங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
மக்கள் தங்களுக்க நன்மை செய்யும் மதத்தைத் தழுவுவது என்றும் நடந்து கொண்டிருக்கிறது அத்துடன் அரசியல் காரணங்களால் பலர் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டார்கள் என்று சரித்திரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் இந்து மத அடிப்படையின் சாதிக் கொடுமையால் துன்புறுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் மதம் மாறுகிறார்கள். வெளிநாட்டிலும் இலங்கையிலும், இலங்கைத் தமிழர்களில் சிலர் இன்று தங்களின் பழைய வாழ்க்கை பிடிக்காமல் புதிய சமயங்களைத் தேடுகிறார்கள். கிறிஸ்தவர்களாகி வெளிநாட்டுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போவதால் இவர்கள் மேற்கத்திய நாகரிகத்தைத் தழுவிக்கொண்டு தாங்கள் புலம் பெயர் நாடுகளின் அங்கிகாரத்தையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ள கத்தோலிக்கர்களாக மாறுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆசிய நாடுகள் ஆபிரிக்க நாடுகளிலிருந்த கத்தோலிக்க மதத்திற்கு மாறுபவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. மிகவும் பண வசதியுள்ள சமயம் கத்தோலிக்க மதமாகும். உலகில் மிகவும் செல்வாக்கான மனிதர்களில் ஒருத்தராகப் போப்பாண்டவர் கருதப்படுகிறார். வளரும் நாடுகளில் பாதிரிமாரின் செல்வாக்கு அளப்பரியது. அவர்களால் தேவாலயங்களில் பாலியற்கொடுமைகள் நடந்தாலும் யாரும் வாய் திறக்க மாட்டார்கள்.
பல நாடுகளில் கிறிஸ்தவ சமயக் குருமார்கள் பணத்தில் மட்டுமல்லாமல் அரசியல் சமூக செல்வாக்கிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை மக்கள் மட்டுமல்லாது அரசியற் தலைவர்களும் கேட்டுப்பணிகிறார்கள். அவர்களின் சமயப்பணிகள் பிரச்சினை நடக்கும் நாடுகளில் அதிவேகமாகப் பரவுகிறது. இலங்கையில் தொடர்ந்த போரின் கடைசிக் கால கட்டத்தில் ‘தேசியத் தலைவர்’ பிரபாகரனும், கத்தோலிக்க பாதிரிகளின் தூண்டுதலால் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினார் என்ற வதந்திகள் பரவின. மேற்கத்திய கிறிஸ்தவ தலைவர்களைச் (ஜோர்ஜ் புஷ், ரோனி பிளேயர்?) சந்தோசப்படுத்தவும் போப்பாண்டவர், கார்டினல்ஸ், போன்ற கிறிஸ்தவத் தலைமையின் உதவியை நாடவும், அத்துடன் இன்று வேகமாகக் கிறிஸ்தவ சமயம் பரவும் ஆபிரிக்க நாடுகளின் மூலம் ‘ஈழத்தமிழகத்திற்கு’ ஆதரவு பெறவும் அவர் சமயம் மாறியிருக்கலாம் என்ற அபிப்பிராயமும் அடிபட்டது. இன்று இலங்கையிலும் வெளிநாட்டிலும் பெரும்பாலான தமிழர்கள் சமயம் மாறுவதற்கு, ‘தேசியத் தலைவர்’ சமயம் மாறியது ஒரு காரணமா அல்லது வெளிநாடு வந்த தமிழர்கள் கத்தோலிக்கர்களாக மாறி வசதியாக வாழ்வதால் அவர்களைத் திருப்திப்படுத்தத் ‘தேசியத் தலைவர்’ சமயம் மாறினாரா? என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்படலாம். ஆனாலும், லண்டனில் நடக்கும் போப்பாண்டவர் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் புதிதாகச் சமயம் தழுவிய தமிழர்கள் தொகை பெரிதாகவிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sudha
ரதிவர்மன் ‘புனித தந்தை’ என்று பல இடங்களில் எழுதியிருப்பது தவறு. பாப்பரசர்கள் புனிதரல்ல. புனிதரென அங்கீகரிப்பது இவர்கள் மற்றவர்களை. தந்தை என்றால் பாதர். அடுத்தடுத்த பதவிகளாக வேறு பட்டங்கள் கொடுக்கப்படுகிறது. இறுதியான தலைமையே பாப்பு.
//கிறிஸ்தவர்களாகி வெளிநாட்டுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போவதால் இவர்கள் மேற்கத்திய நாகரிகத்தைத் தழுவிக்கொண்டு தாங்கள் புலம் பெயர் நாடுகளின் அங்கிகாரத்தையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ள கத்தோலிக்கர்களாக மாறுவதாகவும் சொல்லப்படுகிறது.//
புலம்பெயர்ந்து அதிகமானோர் மாறுவது ஏனைய சபைகளையே. அவை பைபிளை ஆதாரமாகக் கொண்டு விசவசிக்கப்படுகிறது. ஆகவே எல்லோரும் கத்தோலிக்கர்கள் அல்ல. பலர் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து (போலித்தனங்கள் மலிந்து கிடப்பதால்)விலகி வேறு சபைகளை நாடுகிறார்கள்.
//தமிழர்கள் கத்தோலிக்கர்களாக மாறி வசதியாக வாழ்வதால் //
கத்தோலிக்க திருச்சபை பணம் கொழிக்குதென்றால் அங்கு பாதராக சிஸ்ரராகத் தான் போய் அதை அனுபவிக்க முடியும். சாதாரண வேதக்காரரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தட்டத்தில் காசு போட வேணும்.வருசத்துக்கொருக்கால் குடும்பப் பணம் கட்ட வேணும். வெறும் மேலோட்டமான கருத்துகளை எழுதி உண்மை போல துணிவாக முடித்திருக்கும் தைரியம்
BC
போப்பாண்டவர் நாளை முன் வரிசையில் பெரும்பாலான தமிழர்கள் தன்னை தரிசிக்க நிற்கும் காட்சியை கண்டுகளிப்பார்.
chandran.raja
கொண்டலடி பிள்ளையாரையோ புளியடி வயிரவரையோ ஒருவன் வணங்கி வழிநடந்தால் அது கடவுளுக்குரிய பிராத்தனை கடவுள் நம்பிக்கை என்பேன்.
வத்திக்கானில் இருக்கும் இந்த சிற்றரசர் சக்கரவத்தியிடம் இருந்து கப்பம் வாங்குபவர். தொழில்புரட்சிக்கு முன்பு இந்த வத்திக்கான் உச்சநீதிமன்றமாக இருந்தது. தண்டனையும் வழங்கப்பட்டது. உழைப்பாளி மக்களுக்கு மட்டுமல்ல புரட்சிகரமான கதைகளை சொன்ன பாதிரிமார்களே உயிருடன் எரியூட்டப் பட்டார்கள். பாதிரிகளுக்கே இந்த நிலையென்றால் சாதாரணமக்கள் எம்மாத்திரம்?.தெய்வக்குற்றமல்லவா?
கோடானகோடி உழைப்பாளிமக்களுக்கு மேல்யுலகை காட்டிவிட்டு சகலசெளபாக்கியங்களையும் இந்த உலகில் சுவீகரித்துக் கொள்வதே இவர்கள் அபிலாஷை. ஏமாற்றப்படும் மக்கள் யதார்த்த உலகைக் கண்டுகொள்ளும் போது அரசியலை-தமது ஆயுதமாகப் பாவிக்கப்படும் போதுமட்டுமே! இந்த புரளிக்காரன் புரட்டுகளும் வெளிகொண்டுவர முடியும். அதற்கான வழியையே நடந்துகொண்டிருக்கிற வரலாறு வழிசமைத்து விட்டிருக்கிறது.
DEMOCRACY
/இலங்கையில் தொடர்ந்த போரின் கடைசிக் கால கட்டத்தில் ‘தேசியத் தலைவர்’ பிரபாகரனும், கத்தோலிக்க பாதிரிகளின் தூண்டுதலால் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினார் என்ற வதந்திகள் பரவின./–
“கல்தோன்றா,மண்தோன்றா காலத்தே மூத்தக்குடி” என்பது பொய்,மனித இனம் சமீபத்தியது!. பத்தாண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப்போரின் போது “ஹிட்லரை ஆதரித்த” “குரேஷியா” நாட்டை சேர்ந்த 85 வயதுகாரரை சந்தித்தபோது சொன்னார், ஜெர்மானியர்கள் என்றால் “ஓவ்கன் ஷைன்லிஷ்” அதாவது, விஞ்ஞான பூர்வமாக “கண்களால்” காண்பதை மட்டுமே நம்புபவர்கள் என்று. காரல் மார்க்ஸும் இங்கேதான் பிறந்தார், ஆல்பர்ட் ஐன்ஸ்டினும் இங்கேதான் பிறந்தார். அவர் சொன்னார், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு,ஒரு “எரிகல்(மெட்டிராய்ட்)”ஒன்று பூமியை தாக்கியது,அந்த மெட்டிராய்டுடன் வந்தவர்கள் இவர்கள் என்று (பார்க்க,சால்மான் ருஷ்டி “சாத்தானிக் வர்ஷஷ்”),அதனால்தான் அரிய கனிம வளங்கள் இங்குள்ளன என்று!.நிற்க!.
“தமிழர்கள் ஏன் அழிக்கப்படுகின்றனர்”!……தொடரும்….
DEMOCRACY
… அந்த மெட்டிராய்ட் விழுந்ததன் அழுத்தத்தினால்தான் “சுவிஸ் மலை” உருவாகியது என்றும் அவர் கூறினார்,உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.எதற்கும் ஆதாரமாக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த,”இயற்பியலாரான” “ஸ்டீபன் ஹாக்கின்ஸின்” “வேறு கிரக வாசிகளைப் பற்றியான” இந்த வரிகளை கவனிப்பது நல்லது “We only have to look at ourselves to see how intelligent life might develop into something we wouldn’t want to meet.–physicists Stephen Hawking.”!.