வியூகம் இதழ் 2 ஒரு பார்வை: பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்… தேவை ஒரு புதிய கோட்பாடு : மீராபாரதி

Viyoogam_02_Coverநட்புடன் நண்பர்களுக்கு…
முதலில் வியூகம் இதழ் 2இல் உள்ள “பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்” என்ற கட்டுரை தொடர்பாக எனது கருத்தைக் கூற அழைத்தமைக்கு வியூகம் நண்பர்களுக்கு நன்றிகள். இன்றைய சூழலில் நம்பிக்கையுடன் இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை நண்பர்கள் முன்னெடுப்பதில் உள்ள மன பொருளாதார கஸ்டங்களைப் புரிந்துகொள்கின்றேன். இவ்வாறன தடைகளையெல்லாம் தாண்டி இராண்டாது இதழை வெளியீட்டமை மகிழ்வான விடயமே. வியூகம் இதழ் 2 முக்கியமான நான்கு கட்டுரைகளை தாங்கி வெளிவந்துள்ளது. அவையாவன “சிங்கள தேசியவாதத்தின் தோற்றம் குறித்து” “சுழலியலும் நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சியும்”; “விட்டு வேலைக்கு ஊதியம் தொடர்பான முன்மொழிவுகள்” “பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும்” மற்றும் ஆசிரியர் தலையங்கம் என்பனவாகும். இதில் முதலாவதும் மூன்றாவதும் சிறந்த மொழிபெயர்ப்புகள்.

நான் கருத்துக் கூறவேண்டிய கட்டுரை “பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும்” ஏன்பதாகும்.
இது மிகவும் முக்கியமானதும் ஆழமான கருத்துக்களைக் கொண்டதும் இந்த இதழின் அரைவாசிப் பக்கங்களை ஆதிக்கம் செய்துள்ள கட்டுரை. இக் கட்டுரை தொடர்பான கருத்தை அல்லது விரிவான விமர்சனத்தை முன்வைப்பதற்கு ஆகக் குறைந்தது இரு தடவைகளாவது வாசிக்க வேண்டியதுடன் விரிவான பரந்த ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்களைக் கொண்டதுமாகும். அப்பொழுதுதான் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி இக் கட்டுரையை நகர்த்துவதற்கு இக் கட்டுரை தொடர்பாக முன்வைக்கும் கருத்துக்கள் பயன்படும். ஆனால் ஒரு கிழமை அவகாசத்திற்குள் அவ்வாறன ஒன்றை செய்யமுடியாது என்பதை நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். ஆகவே நான் இங்கு முன்வைக்கும் கருத்துக்கள் இக் கட்டுரைபற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமாகவும் மற்றும் எனது தேடல்களுக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டதாகவும் ஆகவே மட்டுப்படுத்தப்பட்டதாகவுமே இருக்கும் என்பதை புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். இந்தடிப்படையில் சில கேள்விகளையும் இறுதியில் முன்வைக்கின்றேன்;.

இக் கட்டுரையை பின்வருமாறு முக்கியமான பகுதிகளாகப் பிரிக்கலாம் எனக் கருதுகின்றேன்.
முதலாவது “வர்க்கம், அரசு, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் தோற்றமும் இவை உருவாக்கிய
மேலாதிக்க சித்தாந்தமும் – ஒரு மார்க்சிய பார்;வை”
இரண்டாவது “ரஸியப் புரட்சி, மற்றும் சோவியத்யூனியன் கால ஆனுபவங்கள் – லெனினின் பார்வையில்”
மூன்றாவது “கட்சியும் பாராளுமன்றப் பாதையும்; புரட்சியாளர்களும் – ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை”
நான்காவது “புரட்சியாளர்களனதும் மார்க்ஸியவாதிகளதும் இடதுசாரிகளதும் பாராளுமன்ற பாதை – நேர் மறை,
எதிர் மறை அனுபவங்கள் – ஒரு வரலாற்றுப் பார்வை”
ஐந்தாவதும் இறுதிப் பகுதியும் “நமது நிலைப்பாடும் செயற்படுவதற்கான வழிமுறைகளும்”

என்று பல்வேறு உப தலைப்புகளைக் கொண்டதாக பிரிக்கலாம். ஆனால் நான் மேற்குறிப்பிட்டவாறு உப தலைப்புகளை வரிசைக் கிரகமாக கட்டுரையில் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறன ஒரு தொடர்ச்சியில்லாது ஒன்றிக்கும் பின் ஒன்று என மாறி மாறி இருப்பதானது வாசிப்பவர்களின் தொடர்ச்சியான ஒரு புரிதலுக்கு தடையாக இருப்பதாக அல்லது இருக்கலாம் என ஒரு வாசகராக உணர்கின்றேன். உப தலைப்புகளுடன் தொடர்ச்சியான தன்மை ஒன்று இருந்திருப்பின் வாசிப்பவர்களுக்கு விடயங்களைப் புரிந்துகொள்வதற்கு இலகுவானதாக இருந்திருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறு கூறுவதானது எந்தவகையிலும் கட்டுரையின் முக்கியத்துவத்தையும் அது கூறும் விடயங்களையும் குறைத்து மதிப்பிடுவதாகாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். ஏனனில் மேற்குறிப்பிட்டவாறான உப தலைப்புகளின் அடிப்படையில் விடயங்களை விரிவாகவும் ஆழமாகவும் கட்டுரை ஆராய்கின்றது. அதாவது கோட்பாடு, மூலோபாயம் தந்திரரோபாயம் மற்றும் செயற்பாடு என்றடிப்படையில் நோக்கமாகக் கொண்டு கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் “வர்க்கம், அரசு, அரசாங்கம், மற்றும் பாராளுமன்றத்தின் தோற்றமும் இவை உருவாக்கிய மேலாதிக்க சித்தாந்தமும் – ஒரு மார்க்சிய பார்வை” ஏன்ற உப தலைப்பிற்;குள் கட்டுரைiயில் மார்க்ஸின் 1843ம் ஆண்டிலிருந்து 1872ம் ஆண்டு வரை எழுதிய நூல்களில் உள்ள கருத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதைத் தவிர ஏங்கல்ஸ் லெனின் ஆகியோரது நூல்களும் இதில் கூறப்பட்ட கருத்துக்களை வலியுறுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் பின்வருவனவற்றை முக்கிய நிலைப்பாடுகளாக மார்க்ஸியப் பார்வையில் சுட்டிக்காட்டுகின்றது. என நான் விளங்கிக்கொள்கின்றேன்.

வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடே அரசு தோன்றுவதற்கு காரணம் ஆகும். ஆகவே அரசு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டால் வரலாற்றில் இடையில் தோன்றியது. ஆகவே வரலாற்றில் அது நிரந்தரமாக நிலைபெற்றும் இருக்காது என்றும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இல்லாதுபோகும் பொழுது அரசு என்பது தேவையற்ற ஒன்றாகி வலுவிழந்து இல்லாது போகின்றது. ஆதிக்க வர்க்கங்களுக்கு இடையிலான போட்டியில் இறுதியாக முதலாளித்துவ வர்க்கம் தனது முழுமையான கட்டுப்பாட்டை அரசின் மீது செலுத்தும்வகையில் ஆதிக்க வர்க்கங்களுடனான உதாரணமாக நிலப்பிரபுத்துவ வர்க்கத்துனடான சமரசங்களுடாக வெற்றிபெறுகின்றது. இந்த சமரசத்தின்; விளைவாகவே அனைத்து ஆதிக்க வர்க்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் உருவாக்கப்படுகின்றது. இதில் பொதுவாக அரசு என்பது அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தின கருவியாக செயற்படுகின்றது. இந்த அரசைக் கட்டிக்காப்பதற்காக அரசின் இயந்திரமாக அரசாங்கமும் மற்றும் சமூக நிறுவனங்களான கல்வி சமயங்கள் காவற்துரை இராணுவம் என்பனவறின் துணையுடன் செயற்படுகின்றது. ஆகவே அரசு என்பது நடுநிலையானதல்ல எனவும் சுரண்டப்படும் வர்க்கத்தை அடக்குவதற்கான கருவியாக செயற்ப்படுகின்றது. ஏனனில் முதலாளித்துவ அரசானது முதலாளிகள் அதிகாரத்திலும் இருப்பதற்கும் தொழிலாளர்கள் அடக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படுவதுடன் அவ்வாறே தன்னைக் கட்டமைத்துமுள்ளது.

மறுபுறம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய சிந்தனையாளர்களான கிராம்சி அல்தூசார் போன்றவர்களின் கருத்துக்கள் இக் கட்டுரையில் பயன்படுகின்றன. கிராம்சியின் முக்கியமான கேள்வி ஒன்று இங்கு எடுத்தாளாப்படுகின்றது. அதாவது அரசானது தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுகின்ற முதலாளித்துவ வர்க்கத்தின் கருவி எனின் எவ்வாறு இந்த ஆளும் வர்க்கமானது தான் அடக்குபவர்களிடம் இருந்தே தனது ஆட்சிக்கான சம்மதத்தைப் பெருகின்றது. இதற்குக் காரணமாக சிந்தாந்த மேலான்மை என்ற கருத்தின்; முக்கியத்துவத்தை கிராம்சி வலியுறுத்துகின்றார். அதாவது அரசு என்பதை ஆதிக்கம் மற்றும் மேலான்மை என்பவற்றின் இணைவாகவே இவர் பார்க்கின்றார். அல்துசாரோ இதை சிந்தாந்த அரச இயந்திரம் என்று ஒரு கட்டமைப்பாகவே அழைக்கின்றார். அதாவது தமது ஆதிக்கத்தை தொடர்வதற்காக வன்முறையை மட்டும் நம்பிருக்காது சிந்தாந்தம் ஊடான ஆதிக்க வழிமுறைகளான கல்விமுறை, மத நிறுவனங்கள், குடும்பம், மற்றும் அரசியல் கட்சிகள் என்பவற்றிக்கூடாக ஆற்றுகின்றனர். முதலாளித்துவ கட்சிகள் தமது சித்தாந்த மேலான்மையை நிறுவுவதற்கு இவ்வாறு பண்முகத்தன்மையுடன் செயற்படுகின்றனர். மேலும் சில சிந்தனையாளர்கள் அரச கட்டமைப்பு மற்றும் தனிநபர் சார்ந்ததும் இவற்றுக்கும் இடையிலான இயங்கியல் உறவின் அடிப்படையிலும் பார்த்தனர். மனிதர்கள் சித்தாந்தத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் அல்ல. மாறகா சித்தாந்தத்தினுடாகவே தொடர்புகொள்கின்றனர் என்பதும் இது ஆதிக்க சித்தாந்தமாக இருப்புது உண்மையானவையே என்ற கருத்து முக்கியத்துவமானதும் ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்றுமாகின்றது. இத்துடன் இன்னுமொன்றையும் வலியுறுத்த விரும்புகின்றேன். ஆதாவது மனிதர்களது பிரக்ஞையற்ற ஒரு நிலையே தம்மையே அடக்கி ஒடுக்குகின்ற இச் சிந்தாத்தங்கைளை ஏற்றுக்கொள்வதுடன் இச் சிந்தாந்தங்களினுடாகவே சிந்திக்கவும் தொடர்பும் கொள்கின்றனர் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். இதனால்தான் மனித பிரக்ஞையின் நிலை தொடர்பாக எனது கட்டுரைகளில் நான் தொடர்ந்தும் முக்கியத்துவமளித்து வலியுறுத்துகின்றேன்.

அரச அதிகார வர்க்கமும் முதலாளித்து வர்க்கமும் தேச நல்ன்கள் எனக் குறிப்பிடுவது தமது மூலதனத்தின் நலன்களே. இவ்வாறு நம்பும் படியே சகல சமூக நிறுவனங்களினுடாகவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக செயற்படுகின்றனர். மேலும் இவர்களால் உருவாக்கப்ட்ட தனிச்சொத்துரிமை சட்டமானது பல்வேறு எதிர்விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தியபோதும் அவை குற்றங்களாக கருதப்படுவதில்லை. இவ்வாறு முதாலாளித்துவ வர்க்கம் தனது செயற்பாடுகளை தங்ககு தடையின்றி தொடர்வதற்கான சகல வசதிகளையும் அதிகாரவர்க்கம் செய்து கொடுக்கின்றது என உதாராணங்கள் மூலம் நிறுபிக்கின்றனர். இதேபோல் முதாலாளித்துவ வர்க்கமும் அதிகாரவர்க்கத்தின் தேவைகளை அதாவது தனக்காக மேற்கொள்ளும் அரசியல் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக நிறைவேற்றுகின்றன. குறிப்பாக பணத்தின் தேவை முக்கியமானது. இந்தப் பணத்தை முதலாளிகள் தமது மூதலிலிருந்தல்ல மாறகா தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலமாகவே சேகரித்த மேலதிக பணத்திலிருந்தே அதிகாரவர்க்கத்திற்கு கொடுக்கின்றனர்.

ஆகவே சுரண்டப்படும் வர்க்கங்கள் இந்த அரசைக் கைப்பற்றாது தமது இலக்குகளை உதாரணமாக வர்க்கமற்ற சமுதாயத்தை அடையமுடியாது என்கின்றனர். மேலும் இவ்வாறு கைப்பற்றப்படும் அரசை தமது நோக்கங்களுக்காக அப்படியே பயன்படுத்த முடியாது என்பதால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும் எனவும் வாதிடுகின்றனர். இதன் நீட்சியாக வர்க்க முரண்பாடுகள் இல்லாது போகும் போது அரசும் அதன் தேவைகளும் இல்லாது போகும். ஆகவே, முதலாளித்துவ அரசுக்குப் பதிலாக புரட்சியின் பின் பட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கொண்டது தான் புரட்சிகர அரசு என முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான புரட்சிகர அரசை வன்முறையுடன் கூடிய புரட்சி இல்லாது முதலாளித்து அரசை இல்லாது ஒழிக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

அதேவேளை அரசு தொடர்பாக இப்படியான ஒரு கோட்பாட்டை அல்லது கருத்தை இலகுவாக முன்வைக்கலாமா என்கின்ற் கேள்வியையும் எழுப்புகின்றனர். காரணம் அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவு இருக்கின்றதா அல்லது இரண்டும் சார்பளவில் சுயாதினமாவையா? அரசு ஆளும் வர்க்கத்தின் அடிமையாகவா அல்லது அதன் நலன்களைக் காப்பனவாக மட்டுமா செயற்படுகின்றது?. அவ்வாறு எனின் எப்படி தொழிலாளர்களது நலன்கள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பான சட்டங்களையும இயற்றுகின்றது?. என சில கேள்விகளையும் முன்வைக்கின்றர்.

பாராளுமன்றம் என்பது மன்னராட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கம் மற்றும் வளர்ந்து வந்த முதலாளித்து வர்க்கத்திற்கும் இடையிலான மோதல்களின் விளைவாக இவர்களைக் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் உருவான ஒரு பொதுவான அமைப்பு. இதிலிருந்து எவ்வாறு கட்சிகள் குறிப்பாக சட்ட வல்லுனர்களை பிரதிநிதிகளாக கொண்ட கட்சிகள் உருவாகின்றன என குறிப்பிடுகின்றனர். இவ்வாறன பிரதிநிதிகளாக ஆளும் வர்க்க ஆண்களாகவே ஆரம்பத்தில் இருந்தனர். பின்பு படிப்படியாக போராட்டங்களின் மூலம் தொழலாளர் பிரதிநிதிகளுக்கும் பெண்களுக்கும் மற்றும் பல்வேறு நிறத்தவர்களுக்கும் அந்தந்த நாட்டின் தன்மைக்கு ஏற்ப அங்கத்துவம் கிடைத்தன. ஆகவே முதலாளித்துவ மற்றும் ஆதிக்க சக்திகள் தமது ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்காக இவ்வாறன குழுக்களுக்கிடையில் சமரசபோக்குகளை அரசு, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் என்பவற்றில் உருவாகின என்கின்றனர். இந்தடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் அதற்கான தேர்தல்கள் என்பது வரையறுக்கப்பட்ட பாத்திரத்தையே வகிக்கின்றது என்கின்ற போதும் இவற்றில் பங்குபற்றுவதற்கும் இவற்றினுடாக செயற்படுவதற்குகான அரசியல் உரிமைகள் சமூக விடுதலைக்கான பயணத்தில் முக்கியத்துவமானவை என்கின்றனர்.

ஆகவே பாரளுமன்றத்தில் புரட்சியாளர்கள் பங்குபற்றுவதற்கான முக்கியமான காரணங்களை ஆதராங்களாக சிலவற்றை முன்வைக்கின்றனர். இதற்காக லெனினின் கருத்துக்களையும் சோவியத்யூனியனின் கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகளையும் அப்படியே ஆதாரமாக முன்வைக்கின்றனர். இதனை “சோவியத்யூனியன் கால ஆனுபவங்கள் குறிப்பாக லெனினின் பார்வையில்” என்ற உப தலைப்புக்குள் அடக்கியிருக்கலாம். இவ்வாறான ஒரு நீண்ட இணைப்பை கட்டுரையின் ஒரு பகுதியாக சேர்த்தமைக்காக இவர்கள் தமது கவலையை தெரிவித்தபோதும் அதன் முக்கியத்துவம் கருதி வெளியீடுவதாக கூறுகின்றார்கள். இதில் கூறப்படுகின்ற விடயங்கள் முக்கியத்துவமானவை ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி இவ்வாறான பகுதிகளை கட்டுரையின் தொடர்ச்சியாக இல்லாது உப தலைப்புகளுடன் வெளிப்படுத்தும் பொழுது வாசிப்பவர்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவானதாக இருந்திருக்கும்.

அடுத்த பகுதி “கட்சியும் பாராளுமன்றப் பாதையும் புரட்சியாளர்களும் ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை.” இதில் முதன்மையான கருத்தாக முன்வைக்கப்படுவது, பராளுமன்றத்தை “செயல்பூர்வமான புறக்கணிப்புடன்” பொது மனிதர்களின் அரசியல் உரிமை பற்றிய பிரக்ஞையை, வாதப்பிரதி வாதங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களினுடாக வளர்ப்பதற்கான ஒரு களமாக பார்க்கின்றனர். தேர்தல் காலங்களில் பொது மனிதர்கள் அரசியல் கருத்துக்களை அறிவது தொடர்பான விழிப்படன் இருப்பதாலும் அவர்களே தேடுவதாலும் அவர்களிடம் செல்வதற்கான நல்லவொரு சந்தர்ப்பமாக கருதுகின்றனர். மேலும் ஆதிக்க முதலாளித்துவ சக்திகளின் சித்தாந்த மேலாண்மையை விமர்சிப்பதற்கான பொது தளமாக இது இருக்கின்றது. புரட்சிகர சக்திகளை பொது மனிதர்கள் புர்pந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த களங்கள் பயன்படுகின்றன. ஏனனில் அராஜகவாதிகள் நினைப்பதுபோல் போல் எடுத்த எடுப்பில் அரசை கைப்பற்றவோ கவிழ்க்கவோ முடியாது. திட்டமிட்ட செயற்பாடுகள் மூலமாக படிமுறையாகத்தான் செய்யலாம்;. இந்தடிப்படையில் பாராளுமன்றம் என்பது கடந்து செல்லவதற்கான ஒன்றே தவிர அதன் மூலம் முழுமையான நோக்கத்தை அடையமுடியாது. ஆகவே பாராளுமன்றத்திற்கு வெளியேயான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும். ஆகவே புரட்சியாளர்கள் பல்வேறு வழிமுறைகளை அதாவது சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பன்முகத்தன்மைகளையும் சமூகமாற்றத்திற்கான செயற்பாட்டிற்காக பயன்படுத்தவேண்டும் என்கின்றனர்.

சோவியத் புரட்சியின் பின்பு கடந்த 60 ஆண்டுகளில் பரட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகளின் அனுபவங்களையும் அதை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையும் அடுத்த பகுதிக்குள் அடக்கலாம். அதாவது, “புரட்சியாளர்களின் பாராளுமன்ற பாதை நேர் எதிர் மறை அனுபவங்கள் ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற உப தலைப்புக்குள் இதை அடக்கலாம். இதன் மூலம் பாராளுமன்றப் பாதையின் நேர் எதிர் மறைப் பாத்திரங்களை விவாதிக்கின்றனர். உதாரணமாக சிலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் அதைத் தொடர்ந்தும் காப்பாற்ற முடியாமல் போனமையும் இந்தியாவில் தொழிலர்களுக்கு எதிராக மார்க்ஸிய கட்சிகளின் மாநில அரசாங்கங்கள் செயற்பட்டதையும் இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலமைப்பையே இந்த மார்க்ஸியவாதிகள் வடிவமைத்ததையும் பாராளுமன்றத்தின் எதிர்மறை காரணங்களாக குறிப்பிடுகின்றனர். மறுபுறம் நிகரக்குவா வெனிசுலா பொலிவியா நேபாள்ம் போன்ற நாடுகளில் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிது மட்டுமல்லாது முதலாளி வர்க்கம் மற்றும் அமெரிக்க அரசுகளின் மறைமுக நேரடி அழுத்தங்களுக்கு எதராகப் போராடி புரட்சிகரமான முடிவுகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர் என பாராளுமன்றப் பாதையின் நேர்மறை உதாரணங்களையும் விளக்குகின்றனர்.

மேலும் குளோபல் சௌவுத் எனக் கூறப்படுகின்ற மூன்றாம் உலக நாடுகளில் கட்சி, பாராளுமன்றம், மற்றும் தனிநபர் சார்ந்த பிரச்சனைகளையும் அலசுகின்றனர். ஏனனில் இவை ஐரோப்பிய நாடுகளிலிருந்து வித்தியாசமான தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகின்றனர். அதாவது எவ்வாறு ஒரு தனிமனிதர் முழு ஆதிக்கத்தையும் தன்னுள் கொண்டிருக்கின்றார் என்பதையும் அவரே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கின்றார் என்பதையும் விளக்குகின்றனர்.

இறுதிப் பகுதியை “நமது (வியூகம்) நிலைப்பாடும் செயற்படுவதற்கான வழிமுறைகளும்” எனக் கூறலாம். மார்க்சிய வுராலாற்றில் பாராளுமன்றம் தொடர்பாக மூன்று பார்வைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஒன்று பாராளுமன்றப் பாதையே ஒரு வழி என அதில் முழுமையாக நம்பியும் தங்கியும் தேங்கியும் சரணாகதியடைந்திருப்பவர்களது நிலைப்பாடு. இரண்டாவது முற்றகாப் புறக்கணிப்பவர்களான அராஜகவாதிகளது நிலைப்பாடு. மூன்றாவது பாராளுமன்றப் பாதையின் வரையறைகளைப் புரிந்துகொண்டு சமூக மாற்றத்திற்காக அதை எவ்வாறு ஆரோக்கியமாக தமது இலக்கு நோக்கி பயன்படுத்துவது என்ற நிலைப்பாடு. வியூகம் குழுவினர் மூன்றாவது பாதையையே தமது பாதையாக கொண்டுள்ளதுடன் அதற்கான வரையறைகள் பொறுப்புகள் என்ன என்பது தொடர்பாகவும் கவனங் கொண்டுள்ளனர். புரட்சிகர சக்திகளின் சித்தாந்த மேலான்மையை நிறுவுவதற்கான பாதைகளில் இதுவும் ஒரு முக்கியமான செயற்பாட்டிற்கான வழி என்கின்றனர்.

எனது முதலாவது கேள்வி லெனினின் அறிக்கையின் அல்லது கோட்பாட்டு வெளிவந்த பின் பாட்டாளிவர்க்க சர்வதிகாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட அனுபவத்தை குறிப்பாக சோவியத்யூனியன் மற்றும் சீனாவிடம் இருந்தும் நாம் பெற்றிருக்கின்றோம். இந்த சர்வதிகாரமானது பல அல்லது சில அடிப்படை பிரச்சனைகளை தீர்த்திருந்தாலும் மனிதர்களை தங்க குண்டிற்குள் அடைத்தது போலானது எனவும் குறிப்பிடலாம். இதன் அர்த்தம் முதலாளித்து அரசிற்குள் அனைத்தும் நன்று என்பதல்ல. ஆனால் முதலாளித்துவ அரசின் கீழ் அனுபவிக்கப்படுகின்ற அடிப்படை ஐனநாயகம் மனித உரிமைகளைக் சோவியத் மற்றும் சீன அரசின் கீழ் வாழ்கின்ற மனிதர்கள் அனுபவித்தார்களா என்பது கேள்விக்குரியே. ஏனனில் இவ்வாறன ஐனநாயக உரிமைகள் எல்லாம் இந்த நாடுகளில் அர்த்தமிலந்து காணப்படுகின்றன. ஒரு கட்சி ஆட்சிமுறை பன்முகத்தன்மையையும் ஐனநாயக உரிமைகளையும் ஒருபுறம் அழித்துள்ளது என்றால் மிகையல்ல. மறுபுறம் புரட்சிகர கட்சியே ஆதிக்க வர்க்கமாக மாறியுள்ளமை கண்ணால் காண்கின்ற உண்மை. முதலாளித்துவ அரசு கைப்பற்றப்பட வேண்டும் இல்லாது செய்யப்படவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்ற சொல்லாடல் அல்லது அந்த செயற்பாட்டுமுறைமை இப்பொழுதும் சரியானது என ஏற்றுக்கொள்கின்றோமா? ஆம் எனின் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பான பதில் என்ன? ஏற்றுக்கொள்ளவில்லை எனின் மாற்று செயற்பாட்டு முறைமை என்ன? என்பதற்கான பதில்கள் முன்வைக்கப்படவேண்டும். இதன் தொடர்ச்சியாக வன்முறை செயற்பாட்டின் மூலம் அரசை கைப்பற்றுவது தொடர்பான விரிவான விளக்கமும் முன்வைக்கப்படவேண்டும். ஏனனில் வன்முறை பாதை என்பது ஆணாதிக்கப் பார்வையிலமைந்த ஒரு செயற்பாட்டு வடிவம் என்பதே எனது புரிதல்.

இரண்டாவது தனிமனிதர்களும் புரட்சிகர கட்சியும் சமூகமும் பொது மனிதர்களும் மற்றும் இவற்றுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான பிரச்சனை. புரட்சி நடைபெற்ற நாடுகளில் குறிப்பாக மேற்குறிப்பிட்ட இரு நாடுகளிலும் தனிமனிதர்கள் குறிப்பாக கட்சித் தலைவர்கள் மிகப் பெரும் அதிகாரம் உள்ள ஆதிக்க சக்திகளாக எவ்வாறு வளர்ச்சி பெற்றனர். இவ்வாறான வளர்ச்சியை தடுப்பதற்கு புரட்சிகர கட்சிக்குள் பொறிமுறை வடிவங்கள் இல்லையா? இந்த நாடுகளில் புரட்சியின் பின் சமூக கட்டமைப்பிலும் பொது மனிதர்களது வாழ்விலும் ஆதிக்க சிந்தனைகளிலும் மாற்றங்கள் இடம் பெற்றனவா? இடம் பெற்றன எனின் எவ்வாறான மாற்றங்கள்.?. இல்லை எனின் ஏன் மாற்றம் ஏற்படவில்லை? புரட்சி நடைபெற்று இவ்வளவு காலத்தின் பின் இன்று இந்த மனிதர்களினதும் சமூகத்தினதும் அதன் ஆதிக்க சித்தாந்தத்தினதும் நிலை என்ன? இவைபற்றிய ஆய்வுகள் முக்கியத்துவமானவை இல்லையா?

வெற்றி பெற்ற புரட்சிகள் எல்லாம் சரியான கோட்பாடு இருந்ததனால் மட்டும் வெற்றி பெற்றன எனக் கூறலாமா? அதற்கான சூழலும் ஆதிக்க சக்திகளது பலவீனமான நிலையும் புரட்சிகளின் வெற்றிக்கு காரணமாக இருக்கவில்லையா?

மூன்றாவது மார்க்ஸ்pன் புகழ் பெற்ற வசனம் இதுவரை தத்துவவாதிகள் சமூகத்தை வியாக்கினமே செய்து வந்தனர். ஆனால் நாம் சமூகத்தை எப்படி மாற்றப் போகின்றோம் என்ற நடைமுறை செயற்பாட்டுற்கான தத்துவத்தை முன்வைக்கின்றோம் என்றார். இதுவே இவர் கடந்தகாலத்திலிருந்து தன்னை முறித்துக் கொண்டு உருவாக்கிய புதிய கோட்பாடு எனலாம். இதேபோல் லெனின் மார்க்ஸின் முன்மொழிவான முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் வர்க்க முரண்பாடுகளின் உச்சத்தில் தான் புரட்சி சாத்தியம் என்பதற்கு மாறாக நிலவுடமை சமூகக் கட்டமைப்பின் இறுதிக் கட்டங்களில் அல்லது முதாலாளித்து சமூக அமைப்பிற்கான ஆரம்ப கட்டங்களில் இருந்த ரஸ்சிய சமூகத்தில் அன்றைய சுழ்நிலைகளால் புரட்சி சாத்தியம் என கண்டு முன்னெடுத்தார். இதுவே இவர் மார்க்ஸியத்தின் உதவியுடன் உருவாக்கி புதிய கோட்பாடு எனலாம். இதேபோல் மாவோவும் இறுக்கமாக நிலவிய சீன நிலவுடைமை சமுதாயத்தில் அதுவும் முதலாளித்துவ வாசனை அற்ற கிராமப் புறங்களிலிருந்தே சீனப் புரட்சியை ஆரம்பித்தார். இப்படி வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் தம் தம் சமூக சுழ்நிலைகளுக்கு ஏற்பவே புதிய கோட்பாடுகளை உருவாக்கி புரட்சியை வழிநடாத்தினர். வியூகம் குழுவினர் இவ்வாறு தமது நிலைப்பாடாக முன்வைக்கும் தமிழ் சமூகம் அதற்கான மாற்றம் தொடர்பான புதிய கோட்பாடு என்ன?

பாராளுமன்றம் தொடர்பாக மார்க்ஸ் மற்றும் லெனினின் வாதங்களை முன்வைத்தனர். பல்வேறு நாடுகளில் வரலாற்று ஆதராங்களை நேர் எதிர் அனுபவங்களை முன்வைத்தனர். இதன் மூலம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் எந்த முரண்பாடு இல்லை. ஆனால் கடந்த காலங்களில் புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தியதிலிருந்து பெற்ற நேர்மறை எதிர்மறை அனுபவங்களில் இருந்து நாம் கற்றது என்ன? கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பயன்படுத்திய புரட்சியாளர்களிலிருந்து வியூகம் குழுவினர் எந்தவகையில் வேறுபடுகின்றனர்.? இவற்றிலிருந்து எவ்வாறான புதிய கோட்பாட்டை முன்வைக்கின்றார்கள்? அல்லது பாராளுமன்றத்திற்கு செல்வதை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட சாதகமான வாதங்களா இவை?

இலங்கை இடதுசாரிகள் குறிப்பாக சிங்கள தேசத்தின் இடதுசாரிகளில் என்எஸ்எஸ்பி அதனது தலைவர் விக்ரமபாகுவின் தலைமையில் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் ஜனநாய விரோத மற்றும் இனவாத செய்றபாடுகளுக்கு எதிராக செயற்பட்டபோதும் மற்றும் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொண்டு அதற்காக செயற்பாடுகளை மதிக்கலாம் ஆதரிக்கலாம். ஆனால்; சமூக மாற்றம் புரட்சி என்ற தளத்தில் அவர்களது செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டனவாக அல்லது பூச்சிய நிலையிலையே இருக்கின்றன. இவர்கள் பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மட்டும் துடிப்பாக செயற்படுகின்றவர்களா மட்டுமே இருக்கின்றனர். இதற்கு காரணம் இவர்களிடம் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட பழைமைவாத மார்க்ஸிய கருத்துக்களா? அல்லது புதிய கோட்பாடுகள் தொடர்பான அக்கறையினமா? ஒரு முறை விக்கிரமபாகுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது தங்களது வீட்டின் விலாசமாக இன்றும் தங்களது சாதிய அடையாளம் உள்ளது என்றும், இது நீங்கள் இன்னும் சாதிய அடையாளத்தை பயன்படுத்துகின்றீர்கள் என்பதற்கு சாட்சியாகவும் இருக்கின்றது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அவ்வாறு சாதிய அடையாளத்தை முனநிறுத்தவில்லை எனின் அதை ஏன் மாற்றக் கூடாது எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த அடையாளத்தைத்தான அனைவரும் குறிப்பாக தபால் தருகின்றவர் அறிந்து வைத்திருக்கின்றர். ஆகவே கடிதங்கள் வந்து சேர்வதற்கு வசதியான தெரிந்த அடையாளமாக அது உள்ளது என ஒரு பொருப்பற்ற உப்புச்சப்பற்ற பதிலை கூறியிருந்தார்.. மேலும் சமூக மாற்றம் ஒன்று நடைபெற்றபின் அதன் தேவை இருக்காது என்றும் அப்பொழுது அந்த அடையாளம் பயன்படுத்தப்படமாட்டாது என்றார். என்னைப் பொருத்தவரை இது ஒரு முக்கியமானதும் விமர்சனத்திற்கும் உரிய ஒரு விடயமாகும். இங்குதான் நாம் நம் மீதான ஆதிக்க சக்திகளது சித்தாந்தங்களை பிரங்ஞைபூர்வமாக நாம் கட்டுடைப்பு செய்யவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. அதாவது நாம் சமூக மாற்றத்திற்காக செயற்படும் அதவேளை சமாந்தரமாக நம்மை நாம் மாற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். புரட்சி ஏற்படும்வரை காத்திருப்பதோ அல்லது புரட்சியின் பின் மாறிவிடுவோம் என்பதோ பொறுப்பற்ற தப்பிக்கும் காரணமே. இவ்வாறு நாம் செய்வது நடைமுறை வாழ்வில் கஸ்டமானதாக இருந்தபோதும், நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமான சகல கணங்களிலும் தளங்களிலும் புரட்சிகரமானவர்களாக நாம், நம் உள் தன்மையிலும், சிந்தனையிலும், வெளி பழக்கவழக்கங்களிலும், உறவுகளிலும்; மாறாதவரை, நாம் எதிர்பார்க்கின்ற சமூக மாற்றத்தை முழுமையாக சாத்தியமாக்க முடியாது என்பது நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விடயமாகும்.

மறுபுறம் வியூகம் நண்பர்கள் உயிர்பு காலத்திலிருந்து புதிய கோட்பாடுகளை உருவாக்குவதில் அக்கறை உள்ளவர்களாகவும் அதை நோக்கிய முழுமையாக பங்களிப்புடன் செயற்படுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் பொதுவான சமூக தளத்தில் அவர்களது செயற்பாடு என்பது பூச்சியம் என்றே கூறவேண்டும். இவ்வாறான செயற்பர்ட்டின் வெளிப்பாடுதான் 1998ம் ஆண்டு கட்சியாக தம்மை பிரகடனப்படுத்தி பொது மனிதர்கள் மத்தியில்செயற்பட ஆரம்பித்தபோது அவர்கள் எதிர்கொண்ட அமைப்புத்துறை மற்றும் தனிமனித செய்பாடுகள் தொடர்பான் பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாது இரண்டு வருடங்களுக்குள் கட்சியை களைக்கவேண்டி ஏற்பட்டது. எனது புரிதலில் இதற்கு காரணம் கோட்பாட்டுருவாக்கத்தில் அக்கறையாக செயற்படும் அதேவேளை சமூக மட்டத்திலான செயற்பாடின்மை காரணம் எனலாம். அதாவது தாம் உருவாக்கிய கோட்பாட்டை சரியானதா பிழையானதா என யதார்த்த சமூக அரசியல் நீரோட்டத்துடன் சமாந்தரமாக உரசிப்பார்க்காததே காரணம் என்பேன். இவை இரண்டும் சமாந்தரமாக நடைபோடவேண்டும் என்றே கருதுகின்றேன்.

சமூக மாற்றத்திற்கா செய்ற்படுகின்றவர்களின் வழிகாட்டியாக இருக்கின்ற மார்க்ஸ் லெனின் மாவோ போன்ற பிரதான கோட்பாட்டாளர்கள் சிந்தனையாளர்களாக இருந்தால் என்ன, அதன் பின் வந்த பிற புரட்சியாளர்களாக இருந்தால் என்ன, அனைவரும் அந்த சுழலுக்கான கோட்பாட்டை தாம் உருவாக்கிய அதேநேரம் நடைமுறை அரசியலிலும் பங்கெடுத்ததுடன் அதற்கும் வழிகாட்டினர் என்பதே எனது அறிவு. நடைமுறை அரசியலுக்கு உடாகத்தான தமது கோட்பாடுகளை செழுமைப்படுத்தின்ர் என்பதே எனது புரிதல். ஆனால் தமிழ் சுழலில் உதாரணமாக செந்தில் வேல் தலைமையிலான புதிய ஐனநாயக கட்சியினர் நீண்ட காலமாக இடதுசாரி அரசியலில் செயற்படுகின்றனர். ஆகக் குறைந்ததது அவ்வாறான ஒரு தோற்றத்தை தருகின்றனர். ஆனால் அவர்களிடம் காணப்படும் மரபுவாத சிந்தனையும் அதை அப்படியே பின்பற்றுகின்ற போக்கும் புதிய கோட்பாடுகள் தொடர்பான அக்கறையீனமும் அவர்கள் செயற்படும் சமூகத்தில் குறிப்பான எந்தவொரு தாக்கத்தையும் அவர்களால் ஏற்படுத்த முடியாமலிருக்கின்றது. மறுபுறம் வியூகம் நண்பர்கள் புதிய கோட்பாட்டுருவாக்கத்தில் காண்பிக்கும் அக்கறையை நடைமுறை அரசியலில் காண்பிப்பதாக தெரியவில்லை. பொதுவான அரசியலில் செயற்படுவதற்காக தமக்கான கோட்பாட்டை உருவாக்கும் வரை காத்திருப்பதாகவே தெரிகின்றது. அவ்வாறு இவர்கள் கோட்பாட்டை உருவாக்கும் பொழுது புறச் சுழல் புதியதொரு நிலைமைக்கு மாறியிருக்கும். மீண்டும் அப் புதிய சுழலுக்கு ஏற்ப புதிய கோட்பாட்டின் தேவை ஏற்படும். இதுவே கட்ந்தகாலத்திலும் நடந்தது. இப்பொழுதும் இவர்களுக்கு நடக்கின்றது என்றால் மிகையல்ல. ஆகவே வியூகம் நண்பர்கள் தாம் இருக்கின்றன நாடுகளில் ஒரு சிறு குழுவையாவது அமைத்து கோட்பாட்டுருவாக்கத்திற்கு சமாந்தரமாக நடைமுறை அரசியல் செயற்பாட்டிலும் பங்குபற்றுவதே ஆரோக்கியமானது என்பது எனது நிலைப்பாடு. ஆல்லது 2000ம் ஆண்டும் தமிழிழ மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே மீண்டும் இவர்கள் உருவாக்கப் போகும் கட்சிக்கு எதிர்காலத்தில் எற்படும் என்பதில் சந்தேகமில்லை.

உதராணமாக கனடாவில் வாழும் பெரும்பான்மையான தமிழ் பேசும் மனிதர்கள் தமது வர்க்க சாதிய சமூக மற்றும் புலம் பெயர் தகுதி அல்லது அந்தஸ்திற்கு ஏற்ப லிபரல் கட்சிக்கும் பழைமைவாதக் கட்சிக்குமே அதிகமாக ஆதரவளித்து வாக்களிக்கின்றனர். புதிய ஐனநாயக கட்சி பல விடயங்களில் லிபரல் கட்சியை போன்றது எனவும் வெற்றி பெறாத கட்சி என்ற கருத்துக்கள் பொது மனிதர்கள் மத்தியில் சர்வசாதராரணமாக நிலவுகின்றது. இருப்பினும் தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை தமது அரசியல் கோரிக்கைகளுக்காகவும் இலங்கையின் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் விடுதலைக்காகவும் உறுதியாக ஆதரவளிப்பது மட்டுமல்ல குரலும் கொடுக்கின்ற கட்சி புதிய ஐனநாயக கட்சி என்றால் மிகையல்ல. தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியலின் அடிப்படையில் இக் கட்சிக்கே தமிழ் பேசும் மனிதர்கள் ஆதரவளிக்கவும் இக் கட்சியின் சார்பாகவே தமது பிரதிநிதிகளை ஒன்றுபட்டு நிறுத்தவும் வேண்டும். அவ்வாறு செய்ய முடியுமாயின் நிச்சயமாக புலம் பெயர் தமிழ் பேசும் மனிதர்களுக்கான கனடியப் பிரதிநிதி ஒருவரை தெரிவுசெய்யலாம். ஆனால் தமிழ் பேசும் மனிதர்கள் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு தமக்கு யார் இடம் தருகின்றார்களோ அவர்களுடனையே சந்தர்ப்பவதா பயன்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் தமிழ் பேசும் மனிதர்களுக்கான ஒழுங்கான அரசியல் கட்சி இல்லாமையே. ஆவ்வாறு ஒரு கட்சியை உருவாக்குவதன் மூலம் கனடிய புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சித்தாந்த மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் இம மனிதர்களை சமூக நலன் சார்ந்த அரசியல் செயற்பாட்டிற்காக வழிநடாத்தலாம். இதையே வியூகம் குழுவினர் தமது கோட்பாட்டு செயற்பாடடுக்கு சமாந்தரமாக பொதுவான தளத்தில் தமது ஆரம்ப செயற்பாடாக முன்னெடுக்கவேண்டும். ஏனனில் எதிர்கால அரசியல் என்பது தளத்திலும் புலத்திலும் சர்வதேரீதியிலும் என் மூன்று தளங்களில் செயற்படவேண்டியிருக்கும். மற்றது புலத்தில் இருக்கின்றவர்களில் அதிகமானவர்கள் தள அரசியல் கதைத்தாலும் அங்கு சென்று செயற்படமாட்டார்கள் என்பது திண்ணம். ஆகவே அவர்கள் புலம் பெயர் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே தமிழ் தேசிய விடுதலைக்கான சமூக விடுதலைக்கான பங்களிப்பை சிறிதளவாவது செய்யலாம். இதை உணர்ந்து வியூகம் குழுவின்ர் செயற்படுவார்களா அல்லது அக்கறை உள்ளவர்களுக்கு வழிகாட்டுவார்களா?

வியூகம் இதழ்கள் 1-2 இல் ஒன்றை நீங்கள் நன்றாக கவனித்தால் ஒரு விடயத்தைப் புரியலாம். அதாவது இக் கட்டுரைகள் ஒரு குழுவின் அல்லது தனிமனிதரின் கருத்துக்களையா பிரதிபலிக்கின்றன என்பதில் சஞ்சிகை முழுக்க தடுமாற்றம் காணப்படுகின்றது. சில கட்டுரைகளில் பொதுவான தளத்தில் “நாம்” எனவும் சில இடங்களில் தனிநபர்சார்ந்து “நான்” என்ற சொற்பிரயோகங்கள் மாறி மாறி வருகின்றன. இது பார்ப்பதற்கு சிறிய பிரச்சனையாக இருக்கல்hம். ஆனால் இது முக்கியமான ஒரு பிரச்சனை. வியூகம் ஒரு குழுவாக செயற்படுகின்றதாயின் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்துக்களாக இருப்பதுடன் இக் கட்டுரைகளில் அவை பிரதிபலிக்கவேண்டும். அல்லது தம் குழுவிற்குள் அவ்வாறான ஒருமித்த பார்வை அல்லது அனைத்துக் கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை எனின் அதை பொது இடத்தில் முன்வைத்து வெளிப்படுத்து வேண்டும். மேலும் இந்த இதழ்களில் வரும் கருத்துக்கள் கட்டுரையை எழுதியவரின் சொந்தக் கருத்துக்கள் எனவும் வீயூகத்தின் கருத்துக்கள் அல்ல எனவும் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இவர்கள் அனுப்பு மின்னஞ்சல்களில் அனுப்புகின்றவர்களின் பெயர் ஒன்றும் இருக்காது. மற்றும் நாம் அனுப்பும் மின்னஞல்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல ஆகக் குறைந்தது மின்னஞ்சல் கிடைத்ததா என கூட உறுதிசெய்வதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் இவர்களது பொறுப்பற்றதன்மையை அக்கறையின்மையை காண்பிக்கின்றது.

இச் சந்தர்ப்பத்தில் மனிதர்களின் பண்பு தொடர்பாக நிச்சயமாக கதைக்கப்பட வேண்டும். குறிப்பாக புரட்சிகர மற்றும் சமூக மாற்றத்திற்கான அரசியல் கதைப்பவர்களிடம் இது குறித்த பிரக்ஞை நிச்சயமாக இருக்க வேண்டும். நாம் ஏன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம். அரசியலில் அக்கறை இருப்பதற்கு என்ன காரணம்? அநீதி நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லையா என்பதாலா? அல்லது மனித இனத்தின் மீதான அன்பினால், மனிதர்கள் சுரண்டப்படாது கஸ்டப்படாது சகல உரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு நலமாக இன்பமாக வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமா? ஆல்லது புpற தொழில்கள் போல் இதுவும் பணம் பெருக்கும் ஒரு தொழிலா? அல்லது பணம் இருப்பவர்களுக்கான பொழுது போக்கான செயற்பாடா அல்லது தமது சமூக அந்தஸ்ததை நிறுவிக்கொள்வதற்கான ஒரு வழியா? இப்படி பல காரணங்களுக்கா சாதாரண அரசியலில் மட்டுமல்ல புரட்சிகர அரசியலில் கூட ஈடுபடுகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

நாம் எந்தளவு உயர்ந்த இலட்சியங்கள் கோட்பாடுகள் தத்துவங்கள் கருத்துகள் என்பவற்றைக் கதைக்கலாம் எழுதலாம். ஆனால் அடிப்படையில் நாம் கதைப்பதன்படி எழுதுவதன் படி நமது இலட்சியக் கனவுபடி ஒரு சிறிதளவாவது செயற்படுகின்றோமா அல்லது மாற்றத்திற்கான முதற்படியகா நம்மை மாற்றுகின்றோமா அல்லது அது தொடர்பாக பிரக்ஞையாவது கொண்டுள்ளோமா என்றால் இல்லை என்றே கூறுவேன். இது தொடர்பான பிரக்ஞை இல்லாது தம்மை மாற்றுவதைப் பற்றிய அக்கறை இல்லாது இருப்பவர்கள் அனுவமும் கல்வியறிவு குறைந்தவர்கள் என்றால் புரிந்துகொள்ளலாம். ஆனால் பல கால வித விதமான சமூக அரசியல் செயற்பாட்டு அனுபவங் பெற்றுக்கொண்டவர்களும் சமூகப் பிரக்ஞையுடன் உயர் கல்வி கற்றவர்களும் கூட இவ்வாறு நடந்து கொள்வது நம்பிக்கையீனத்தையே தருகின்றது. குறிப்பாக நமது பொதுவான சமூக பிரச்சனைகளை கதைக்கும் போது; குறிப்பாக தனிநபர்சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படையாகவும் நேரிடையாகவும் கதைக்கும் பண்பு நம்மிடம் இல்லை. மாறாக ஒருவருக்கு பின்னால் கதைக்கும் பண்பே பரவலாக காணப்படுகின்றது. ஒருவருக்குப் பின்னால் கதைப்பது தவறல்ல. ஆனால் அதற்கு முதலில் குறித்த நபருக்கு முன்னால் கதைத்த அல்லது விமர்சனத்தை வைத்த பின்பே அந்த நபர் இல்லாதபோது கதைப்பது பண்பாகும். அப்பொழுது அதில் தவறில்லை. ஆனால் நாம் மறுதலையாகவே செய்கின்றோம். குறித்த நபருக்கு முன்னால் அவரது வாழ்க்கை கல்வி தொழில் சமூக பதவி தரம் அந்தஸ்து என்பவற்றைப் பொருத்து அவருடனான உறவின் தரத்தைப் பேணுகின்றோம். குறித்த நபர் தொடர்பான விமர்சனங்கள் இருந்தால் அவரது சமூக அந்தஸ்து தேவை என்பவற்றுக்கு ஏற்ப விமர்சனங்களை தவிர்க்கின்றோம் அல்லது காரசாரமாக முன்வைக்கின்றோம். இவ்வாறு விமர்சனங்கள் முன்வைக்காமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணம் இருக்கின்றது. விமர்சனங்களை ஆரோக்கியமாக ஏற்கின்ற மனப் பக்குவம் பண்பு நம்மிடம் இல்லை. மறுபுறம் ஒருவரை நம்க்கு பிடிக்கவில்லை அல்லது உடன்பாடு இல்லை எனின் மூன்றாம்தர பாணியிலான ஆரோக்கியமற்ற பிரயோசனமற்ற விமர்சனங்களை முன்வைப்பது. இவ்வாறன அனுபவங்களே கடந்தகால செயற்பாடுகளின் மூலம் நான் பெற்றவை. இவ்வாறான எதிர்மறை மனிதப் பண்புகள் மற்றும் மனித உறவுகளை நாம் கொண்டிருக்கும் பொழுது சமூக மாற்றத்தை எப்படி ஏற்படுத்துவது. தனி மனித மாற்றம் அவசியமில்லையா? சக மனிதர்களுடனான நமது உறவுகள் மேம்படத்தேவையிலலையா?

இன்று இக் கூட்டத்திலும் இதற்கு முன் வியூகம் ஒழுங்கு செய்த கூட்டங்களுக்கும் வந்த பலர் நாம் முன்பு தமிழிழ மக்கள் கட்சியாக செயற்பட்டபோது எம்மைக் கண்டுகொள்ளவே இல்லை. புறக் கணித்தார்கள். ஜான் மாஸ்டர் இன்று செய்வதைத் தான் அன்றும் செய்தார். ஆனால் அன்று இவருக்கு கனடாவிலுள்ள வேறு நபர்களின் ஆதரவு இருந்தது. இன்று அவர்கள் ஆதரவு இல்லை என்றவுடன் இவர்கள் ஆதரிக்கின்றார்கள். ஆகவே இங்கு கருத்துக்களுக்கா கொள்கைகளுக்கா அல்லது தனி மனிதர்களுக்கா முக்கியத்துவம் கொடுத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் என்பது எனக்கு கேள்வியாகவே இருக்கின்றது. அன்று ஒரு மாற்றாக உருவான அக் கட்சியை திறந்த மனதுடன் விமர்சனங்களை முன்வைத்து ஆதரித்திரிந்தால் தமிழ் பேசும் மனிதர்களுக்கு எதிரான போர் நடைபெற்றபோது புலிகளின் தலைமைக்கு சார்பற்ற பொது மனிதர்களின் நலன் சார்ந்த உரிமைகள் சார்ந்த ஒரு போராட்டத்தை நாம் ஆகக் குறைந்தது புகலிட நாடுகளிலாவது மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாமல் போய்விட்டது. இதற்கு இப்படியான நமது பண்புகள் தான் காரணம் என்றால் மிகையல்ல.

கட்சிக்குள் புலிகள் இருக்கின்றார்கள் என கூறி அன்று கட்சியை புறக் கணிகத்தவர்கள் இன்று வியூகம் குழுவினர் முன்வைக்கும் கருத்துக்களின் படி முன்னால் புலி உறுப்பினர்களை இனிவருங் காலங்களில் உள்வாங்குவது தவிர்க்க் முடியாது என்பதற்கு என்ன சொல்லப்போகின்றார்கள். நான் இப்படி கூறியவுடன் நான் இன்னாரின் ஆள் என உடனடியாக முத்திரை குத்தாதீர்கள். இன்று நான் எந்த அமைப்பு சாரத ஒரு நபர். ஆனாhல் சமூக மாற்றத்திலும் அதற்காக செயற்பட வேண்டும் என்பதில் மட்டும் அக்கறை கொண்டுள்ள மனிதர். ஆகவே நான் முன்வைக்கும் சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கே முக்கியத்தும் கொடுங்கள். இதன் மூலம் அவற்றுக்கான தீர்வுகளை கண்டுபிடிப்போம். மாறாக வழமைபோல் முத்திரை குத்தி முன்வைக்கும் பிரச்சகைகளை ஓதுக்கிவிடாதீர்கள்.

இப்படியானவர்கள் தான் சமூமாற்றம் மற்றும் புரட்சிகர அரசியல் என்பவற்றில் அக்கறை கொண்டு செயற்படுகின்றோம். உயர்ந்த தத்துவங்கள் கோட்பாடுகள் கருத்துக்கள் என்பவற்றை அள்ளி விசுகின்றோம். என்னைப் பொருத்தவரை நமது மாபெரும் தவறுகளுக்கான அடிப்படை முரண்பாடு இங்குதான் இவ்வாறன பண்புகள் சிந்தனைகள் செயற்பாடுகளில்தான் ஆரம்பிக்கின்றது என்கின்றேன். இதற்குக் காரணம் நாம் எவ்வளவுதான் நமது வாசிப்புக்கள் எழுத்துக்கள் தொடர்பாக பிரக்ஞையாக இருந்தாலும் நம்மைப் பற்றிய பிரக்ஞை நம்மிடம் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதாவது நமக்கு வெளியே உள்ள அனைத்தையும் பற்றி ஒரளவாவது பிரக்ஞையுடன் செயற்படுவோம் செயற்படலாம். ஆனால் நமக்குள்ளே நடப்பவை பற்றிய நம் மன சிந்தனையோட்டங்கள் தொடர்பான பிரக்ஞை என்பது நம்மிடம் மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை எனக் கூடக் கூறலாம். புரட்சிகர முன்னேறிய கோட்பாடு என்பது பிரக்ஞையுடன் தமக்கு வெளியில் அதாவது சமூகத்தில் நடப்பவற்றவை அறிவது புரிவதும் அதிலிருந்து உருவாக்குவதுமாகும். இது உள் அதாவது தனிமனித பிரக்ஞையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? ஒரு புரட்சியில் தனிமனித பிரக்ஞையின் முக்கியத்துவம் என்ன? இவைபற்றிய விரிவான விளக்கத்தை இவர்கள் முன்வைக்க வேண்டும். மனிதப் பிரக்ஞை என்பது முக்கியமான விடயமாக இருந்தபோதும் அது தொடர்பாக விரிவாக கதைப்பதற்கு இது பொருத்தமான இடமல்ல என்பதாலும் இன்றைய எனது பணி அதுவல்ல என்பதாலும் இத்துடன் நிறுத்திக்nhகள்கின்றேன்.

இறுதியாக புரட்சி செய்வது அல்லது சமூகமாற்றத்திற்கான செயற்பாடு என்பது ஒரு அரசாங்கத்தை அல்லது முதலாளித்துவ கம்பனி ஒன்றை நிர்வகிப்பதற்காக செயற்படுவதைவிட பன்மடங்கு ஆற்றலும் மனித வலுவும் தேவைப்படுகின்ற ஒன்று. விஞ்ஞானிகளை விடவும் சமூக அறிஞர்கள் சிந்தனையாளர்களை விடவும் புரட்சியாளர்கள் தமது முழுமையான உடல் மனம் மற்றும் சிந்தனை செயற்பாட்டு பங்களிப்பை முழுமையாகவும் பிரக்ஞைபூர்வமாகவும் வழங்க வேண்டியவர்களாக உள்ளார்கள். அவ்வாறு வழங்காதவிடத்து மேற்குறிப்பிட்ட நிறுவனங்களாலையே முழுநேரம் வேலை செய்தும் தமது நோக்கங்களை நிறைவு செய்ய அவர்களால் முடிவதில்லை. அப்படியிருக்கும் பொழுது இவ்வாறான புரட்சிகர வேலைகளை அரை நேரம் வேலை செய்து நமது உயர்ந்த நோக்கங்களை அடையளாமா என்பது என்முன் உள்ள மிக்பெரிய கேள்வி. ஏனனில் என்னிடம் சிலர் முன்னாள் அல்லது இடதுசாரி மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்வருமாறு கூறினார்கள். சில முன்னாள் தோழர்கள் கட்சி அங்கத்தவர்கள் போராளிகள் முழுநேரம் கட்சி வேலை செய்ததால்தான் அவர்களது குடும்பம் அழிந்தது அல்லது கஸ்டப்பட்டது. தம்மைப் போல பகுதி நேரம் வேலை செய்திருந்தால் அவ்வாறு நடைபெற்றிருக்காது என. ஆகவே நண்பர்களே சமூக மாற்றத்திற்கான செய்ற்பாட்டில் எது சரியான பாதை? முழமையான அர்ப்பணிப்பா? ஆல்லது பகுதி நேர பங்களிப்பா? ஆல்லது பொழுது போக்கான செயற்பாடா?

புpன்வரும் குறிப்புகள் கடந்த காலங்களில் பழகிய உறவுகளிலிருந்து நான் பெற்ற அனுபவங்கள்.

பல் வேறு தொழிற்சங்க அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து இப்பொழுது வயதுபோனதன் காரணமாக பேச்சு தடுமாறும் பலர் நம் மத்தியில் இருக்கின்றனர். இவர்கள் கதைக்கும் பொழுது குறிப்பாக அரசியல் கதைக்கும் பொழுது அவர்களை புறக்கணிப்பது அல்லது நையாண்டி செய்வது. இவ்வாறு பலவற்றை அவர்களுக்கு எதிராக அல்லது அவர்களை அசிங்கப்படுத்த செய்கின்றோம். இந்த் வயதுப் புறக்கணிப்பும் மதியாமையும் எதானால் செய்கின்றோம்? நாம் செய்கின்ற அரசியலுக்கும் இதற்கு சம்பந்தம் இல்லையா?

பொது இடங்களில் கதைக்கும் பொழுது தாம் மிகவும் நியாயமானவர்களாகவும் உயர்ந்த பண்புள்ளவர்களாகவும் சிலர் கதைக்கின்றனர். ஒரு முறை தமிழீழ மக்கள் கட்சியின் தமிழீழம் பத்திரிகை விற்பதற்காக ஒரு நபரிடன் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து அனுமதி பெற்றுவிட்டே சென்றிருந்தேன். அவருக்கு அந்தப் பத்திரிiகையை வாங்க விருப்பமில்லை. தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை எனவும் விட்டில் பல இடங்களிலும் தேடித் தேடி ஒரு சதம் ஐந்து;சதம் போன்ற சில்லறைகளைச் சேர்த்து 25 சதமோ 50 சதமோ தந்தார். இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்பவர்களை பகிடி செய்து துன்புறுத்துவது. புத்திரிகை வாங்க விருப்பமில்லை எனின் விருப்பமில்லை என நேரடியாக கூறலாம். அதுவே நேர்மையான பண்பு.

இன்னுமொருவர் பெயர் பெற்ற மனித உரிமையாளர் மற்றும் சிந்தனையாளர். என்னுடன் என்ன பிரச்சனையோ எனக்குத் தெரியாது ஆனால் என்னைக் கண்டவுடன் திரும்பிவிடுவார். ஆல்லது வேறு வழியில் சென்றுவிடுவார். அதாவது என்னுடன் கதைப்பதை தொடர்ந்து தவிர்க்கின்றார். எதுவும் என்னுடன் பிரச்சனை என்றால் நேரடியாக கதையுங்கள் என மின் அஞ்சலும் அனுப்பியிருந்தேன். கதைப்போம் என் பதில் எழுதியிருந்தார். ஆனால் நேரில் கண்டவுடன் பழைய கதையே. ஒருவர் என்னுடன் கதைக்க விரும்பாதபோது அவருக்கு தொந்தரவு செய்வதை நான் விரும்புவதில்லை. ஆனால் பிரச்சனை என்னுடன் கதையாமலிருப்பதல்ல. சமூக அக்கறை உள்ள ஒருவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர் மனித உரிமைகளில் அக்கறை உள்ளவர் மற்றும் மனிதர்களின் நூண்உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடியவர் என அறியப்பட்டவரின் செயற்பாடுகள் இப்படித்தான் இருக்கும் எனனின் அவர் எழுதுபவைகளிலும் பேசுபவைகளிலும் உள்ள அறம் என்ன? அர்த்தம் என்ன.? பயன் என்ன? அல்லது அவ்வாறு தன்னை வெளிப்படுத்துவதற்காக பகட்டு வேசமா?

சிலர் மனிதர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாம் விரும்பியவர்களை கட்சியின் அதிகாரப்பிடங்களுக்கு தள்ளிவிடுவதும் விருப்பாதவர்களை வெட்டி விடுவதும் என மனிதர்களையும் அவர்களுடனான உறவுகளை கையாள்பவர்கள். அதாவது மறைமுக செயற்பாடுகள் மூலமாக பயன்படுத்தி தமது நோக்கங்களை முன்னெடுப்பவர்கள்.

இன்னுமொருவர் சமூக மாற்றத்திற்கான அரசியல் செயற்பாட்டாளர். ஆனால் மனித நட்பைவிட தனது உடமைகளை மிகப் பெரிதாக மதித்து நட்பை கொச்சைப்படுத்தி உதறியவர். தனது தவறை இவர் உணர்ந்தார என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

தமிழ் பேசும் சமூகத்தில் இருக்கின்ற மார்க்ஸியர்கள் கம்யூனிஸட்டுக்கள் தமது வீடுகளுக்குள் சாதி பார்ப்பதும் தமது பெண்களை அடக்குவதும் அவர்களது வேலைகளுக்கு மதிப்பு கொடுப்பாததும் சர்வசதாரணமாக நடைப்பவை. இவர்களது பிரக்ஞை சமூகத்தை கட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே. தம்மைப் பற்றிய தமது பிரக்ஞை நிலைபற்றிய மற்றும் சக மனித உறவுகள் பற்றிய பிரக்ஞையில்லாதவர்களாகவே இவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

ஆனால் இவ்வாறன மனிதர்களுடன்தான் நாம் ஆரம்ப அரசியல் செயற்பாடுகளையும் செய்யப்போகிறோம் எனின் நாம் நமது நோக்கத்தை அடைவோம் என்பதில் எனக்கு சந்தேகமே.

புரட்சிகர மாற்றம் என்பது சமூகத்தில் நடப்பது அல்லது சமூகத்தில் உருவாக உழைப்பது மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதரிலும் புரட்சிகர மாற்றத்திற்கான அடிப்படைகளாவது உருவாகவேண்டும். புரட்சி செய்யும் மனிதர்கள் புரட்சியாளர்கள் அல்ல. மாறாக அவர்கள் எந்தளவு தாம் நம்பும் கோட்பாடுகள் கொள்கைகளின் அடிப்படையில் தம்மை மாற்றியுள்ளார்கள் அல்லது மாற்ற முற்படுவதற்கு முயற்சிக்கின்றார்கள் என வாழ்பவர்களளே உண்மையான புரட்சியாளர்கள் என்பது எனது நிலைப்பாடு.

நட்புடன்
மீராபாரதி

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

வியூகம் இதழ் 2- ஒரு பார்வை: பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்…- தேவை ஒரு புதிய கோட்பாடு : மீராபாரதி

வியூகம் சஞ்சிகையின் இதழ் 2 வெளியீடு

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • Jeyabalan T
    Jeyabalan T

    வணக்கம் மீராபாரதி

    வியூகம் இதழ் 2 இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் ‘பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்… தேவை ஒரு புதிய கோட்பாடு’ கட்டுரை மீதான உங்கள் பார்வையை எழுதியதில் இருந்து அதனைப் படித்த உணர்வு ஏற்பட்டு உள்ளது. நன்றி.

    மேற்படி கட்டுரை தொடர்பாக நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தங்கள் ஏற்புரையில் வியூகம் அமைப்பினர் பதில் அளித்திருந்தால் அதனையும் கட்டுரையுடன் சேர்ந்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். அவர்கள் அப்படிப் பதிலளித்திருக்காவிட்டால் உங்கள் கேள்விகள் தொடர்பான அவர்களது பதிலைப் பெற்று அனுப்பி வைப்பீர்களானால் இவ்விவாதத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும்.

    இக்கட்டுரை தொடர்பாக எனக்கு எழுந்த சந்தேகங்களை இங்கு பதிவிடுகிறேன்.
    1. வர்க்கங்களற்ற சமூதாய உருவாக்கம் பற்றியது. இதுவரை காலத்தில் இன்றுவரை சோசலிச அரசுகள் உருவாகவில்லை. அவ்வாறான நிலையில் வர்க்கங்களற்ற வர்க்க முரண்பாடுகள் அற்ற உலகு எவ்வளவு து}ரம் சாத்தியமானது?

    2. சித்தாந்த மேலாண்மை பற்றியது. உதாரணமாக மலையகத்தை எடுத்துக்கொண்டால் அங்கு மலையகத் தொழிலாளர்களை – பாட்டாளி வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தொழிற்சங்கங்களைக் காட்டிலும் முதலாளித்துவக் கட்சிகளின் தொழிற்சங்கங்களிலேயே பெரும்பாலான தொழிலாளர்கள் – பாட்டாளிகள் இணைந்துள்ளனர். இந்த முரண்நகையை
    அ) சிந்தாந்த மேலாதிக்கம் தான் காரணம் என்று கூறி இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தப்பிக்க முடியுமா?
    ஆ)இந்த தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் சித்தாந்த மேலாதிக்கத்தை தகர்ப்பதில் இந்த இடதுசாரித் தொழிற்சங்கங்கள் முதற்படியைக் கூட கடந்த 60 வருடங்களில் தாண்டவில்லை என்றே நினைக்கிறேன். ஏன் இதுவரை இந்த சித்தாந்த மேலாதிக்கத்தை தகர்க்க முடியவில்லை என்று என்றைக்காவது இந்த இடதுசாரித் தொழிற்சங்கங்கள் சிந்தித்தது உண்டா?
    இ) இடதுசாரித் தொழிற்சங்கங்களின் பெருமளவு காலமும் நேரமும் தமக்கிடையேயான போட்டிகளில் கருத்தியல் நுண் அரசியலில் செலவிடுவதால் இவர்கள் மக்களிடம் இருந்து அந்நியப்படுகின்றனரோ என எண்ணத் தோண்றுகிறது.

    3. பாராளுமன்றத்தைக் கைப்பற்றும் புரட்சிகரக் கட்சிகள் பற்றியது. ஜேவிபி யை முற்போக்கான புரட்சிகரக் கட்சி என்ற வரையறைக்குள் பார்க் முடியாது. ஆனால் முதலாளித்துவக் கட்சிகளின் போக்கில் இருந்து மாறுப்பட்ட கட்டமைப்பை அவர்கள் கொண்டுள்ளனர். கணிசமான பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்று மூன்றாவது பிரதான கட்சி என்ற இடத்தை தக்க வைத்தனர். அப்போது அவர்கள் பின்பற்றிய அணுகுமுறை (கொள்கைகள் பற்றியல்ல) கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கிராம மட்டங்களில் அரிக்கன் லாந்தர் கொண்டு சென்று கூட்டங்களை நடாத்தினர். தேர்தலில் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிறிய அபிவிருத்திகளில் மக்களுடன் இணைந்து செயற்பட்டனர். சிரமதானம் உட்பட. தங்களால் ஊழலற்ற ஆட்சியை வழங்க முடியும் என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தினர். தொண்டர் படைகளை அமைத்து மக்களுடன் மக்களாகப் பணியாற்றினர். சுனாமி தாக்கப்பட்டதன் பின்னர் கிழக்கில் இவர்களுடைய தொண்டர்படை குறிப்பிடத்தக்க பணிகளில் ஈடுபட்டது. இன்று கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும் ஜேவிபி குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்று வருகின்றது. இது ஊடகங்களுக்கு இதுவரை எட்டாத செய்தி. இனவாதக் கட்சியாக முத்திரை குத்தப்பட்ட ஒரு கட்சி தமிழ் மக்களின் ஒருசாராரிடம் செல்வாக்குப் பெறுகின்றது என்றால் எமது புரட்சியாளர்கள் து}ங்குகிறார்கள் என்று தான் கொள்ள வேண்டி உள்ளது.

    மார்க்ஸிஸ தத்துவங்களை பைபிளாகக் கொண்டு மாற்றத்தை மறுக்கிறவர்கள் மத்தியில் கடந்த கால வரலாற்றில் இருந்து இன்றைய புவியியல் அரசியல் நிலைமைகளை மீள்மதிப்பீடு செய்து புதிய கோட்பாடுகளின் அவசியத்தை வியூகம் உணர்ந்திருப்பது அவர்கள் யதார்த்தத்துடன் செயற்பட முனைகின்றனர் என்பதனையே காட்டுகின்றது.

    ”பாராளுமன்றப் பாதையின் வரையறைகளைப் புரிந்துகொண்டு சமூக மாற்றத்திற்காக அதை எவ்வாறு ஆரோக்கியமாக தமது இலக்கு நோக்கி பயன்படுத்துவது என்ற நிலைப்பாடு.” சரியான நிலைப்பாடு என்றே நான் நம்புகின்றேன். சுதந்திர இலங்கையில் இந்நிலைப்பாட்டை எடுத்த கட்சிகள் எங்கு தவறின என்பதனை ஆராய்ந்து அத்தவறுகளைக் கடந்து செல்வதற்கான வழிமுறைகள் பற்றி வியூகம் தீவிரமாக ஆராய்வதுடன் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • meerabharathy
    meerabharathy

    நட்புடன் ஜெயபாலனுக்கு…
    எனது கேள்விகள் முழுவதையும் நேரமின்மையால் கூட்டத்தில் முன்வைக்க முடியவில்லை.. இருப்பினும் சுருக்கிமான சிறிய பதிலை முன்வைத்தனர்.. ஆனால் முழுமையான பதிலை எழுத்துவடிவில் அவர்கள் முன்வைப்பது தான் நல்லது என நினைக்கின்றேன்…..

    தங்களது முதலாவது கேள்விக்கு எனது புரிந்துணர்வினடிப்படையிலான பதில் என்னவெனின்….

    ஆதிக கால சமூகங்கள் வர்க்கமற்ற சமூகமாகவே இருந்திருக்கின்றது…என்பதை நீங்களும் அறிந்துள்ளீர்கள் என்றே நினைக்கின்றேன்….
    ஆகவே இன்றை வர்க்கங்கள் மற்றும் சாதிய பெண்ணிய பால் அடக்குமுறைகள் எல்லாம் ஆதிக்க வர்க்கங்கள் சாதிகள் ஆண்கள் என்பவற்றால் உருவாக்கப்பட்டவை என்பதிலும் தங்களுக்கு முரண்பாடு இருக்காது என்றே நினைக்கின்றேன்…

    ஆகவே ஆதிக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட இவ்வாறன வர்க்கப் பரிவுகள் இல்லாது போகவேண்டியது இல்லாது செய்ய வேண்டியது தானே நியாயமானது…நீதியானது….சரியானது….

    இதற்காக சோசலிச கட்சிகளோ அல்லது அவ்வாறன ஒரு சமூமோ உருவாகவில்லை என்பதற்காக சுரண்டும் சுரண்டப்படும் வர்க்கங்கள் இருப்பது நியாயமானது எனக் கருதுகின்றீர்களா?
    மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவுகள் இல்லாமால் போவது இயல்பானதாகத் தானே இருக்கவேண்டும்..அல்லது அதை இல்லாமல் செய்வதில் என்ன தவறு?

    தங்களது இரண்டாவது கேள்விக்கு…
    ஒருபுறம் நீங்கள் கூறியதுபோல்…
    அதிகமான தொழிலாளர்கள் முதலாளித்துவ கட்சிகளின் மலையகம் போன்ற பிரதேசங்களில் இனைந்துள்ளமை ஆச்சரியமானதல்ல…..
    இன்று தமிழ் பேசும் மனிதர்களது அடிப்படை அரசியல் பிரச்சனைகளை தீர்க்காது….
    வெறும் அபிவிருத்தி என அரசியல் இல்லாத செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்…
    இது ஒருவகையில் தமிழ் பேசும் மனிதர்களின் தமது நாளாந்த வாழ்வை கொண்டு செல்ல உதவவே செய்யும்…..
    ஆகவே மனிதர்கள் இயல்பாகவே இவ்வாறன செய்ற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு ஆதரவளிப்பது ஆச்சாpயமானதல்ல…..
    டக்ளஸ் அதிக விருப்பு வாக்குகளை பெற்றது இந்தடிப்படையில்தான்…….
    இதுபோன்று முதலாளித்து கட்சிகள் தொழிலாளர்களின் அடிப்படை அரசியல் பிரச்சனைகள் பேசாது முடிமறைத்து….தொழிலாளர்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைத்து அவர்களை சமாதானம் அல்லது அமைதிப் படுத்துகின்றனர்…..

    இங்கு தான் புரட்சிகர கட்சியின் தேவை ஏற்படுகின்றது….
    இவர்கள் இந்தத் தொழிலாளர்கள் மீது சித்தாந்த மேலான்மையை செலுத்தாதவரை இவர்களுடன் அவர்கள் இணையப்போவதில்லை…..

    தங்களது மூன்றாவது கேள்விக்கான பதில் இன்னுமொரு நண்பருக்கு அளித்த பதிலே பொருத்தமானது எனக் கருதி கீழே இணைக்கின்றேன்.

    என்னைப் பொருத்தவரை கட்சிக்கு தெளிவான ஒரு கோட்பாடு ஒன்று இருக்க வேண்டும்…
    ஆகவே அதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு முரண்பாடு இல்லை….
    பிரச்சனை என்னவெனின் நாம் உருவாக்கும் கோட்பாடுக்கான மூல விடயதானங்கள பல தளங்களிலிருந்து எடுக்கப்பட வேண்டும்….
    ஒன்று சமூக இயக்கத்தின் கடந்தகால அனுபவத்திலிருந்து…
    இரண்டு இந்த சமூக இயக்கத்தை எந்த தத்துவார்த்த அடிப்படையில் நாம் பார்த்து புரிந்துகொள்கின்றோம் என்பது….
    மூன்றாவது இது இரண்டிலிருந்தும் பெற்ற படிப்பினையைக் கொண்டு சமூகத்தின் யதார்த்த இயக்கத்தை எவ்வாறு புரிந்து கொள்கின்றோம் என்பதும்
    இந்தடிப்படையிலையே நமது மூலோபயாம் தந்திரபுயாம் என்ன என்பதையும் தீர்மானிக்கவேண்டும்…
    இது செயற்பாடின் ஒரு தளம்…

    மறு தளம் அடக்கப்பட்ட மனிதர்களுடன் வாழ்வதும்…
    அவர்களது பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதும்…
    அதேநேரம் இந்த மனிதர்களை மேலாதிக்கம் செய்யும் ஆதிக்க சிந்தனையை அவர்களுக்கு புரியவைப்பதும் என்றடிப்படைகளில் சமாந்தர்மாக…
    பன்மூகத் தளங்களில் நாம் செயற்படவேண்டும்…

    ஆனால் அன்றிலிருந்து இவர்களுடனான பிரச்சனை இதுதான்… சிந்தனை மட்டத்தில் மட்டுமே செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது… இது முக்கியமானது என்பது உண்மையான போதும்… எந்த மனிதர்களுக்கா இவ்வாற சிந்தனை ரீதியான செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்களோ…. அந்த மனிதர்களுடன் இவர்களுக்கு எந்த உறவுமில்லமலிருப்பதுதான்… முரண்பாடாக இருக்கின்றது…

    கோட்பாடு என்பது இயக்கத்தை கட்சியை வழிநடாத்தும் அதேவேளை….
    ஒரு கோட்பாடு என்பது இறுக்கமானதோ முடிந்த முடிவோ அல்ல…
    நமது நடைமுறை அனுபவத்துடன் அதற்கான உறவு என்ன என்பதைப் பற்றிய பிரக்ஞை சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்களுக்கு இருக்கவேண்டும்….. ஆனால் இந்தப் பிரக்ஞை இவர்களுக்கு மட்டுமல்ல கடந்தகால மற்றும் பிற புரட்சியாளர்களுக்கும் இருப்பதாக நான் உணரவில்லை….

    மேலும் இவ்வாறன விடயங்களை இரண்டு மணித்தியாலங்களுக்குள் விரைவாக பேசி கலந்துரையாட முடியாது….ஆறுதலாக தெளிவாக விரிவாக பேசி கலந்துரையாட வேண்டிய விடயங்கள்…

    ஆனால் நாம் வாழும் இந்த அவசர உலகில் இது சாத்தியமா என தெரியவில்லை…

    நன்றி
    நட்புடன்
    மீராபாரதி

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    மீராபாரதி உங்கள் பதில்களுக்கு நன்றி. ஆயினும் முதல் இரண்டு பதில்களும் எனது கேள்வியைப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
    1. வர்க்கங்களற்ற சமுதாயம் உருவாக்கப்பட்டால் நிச்சயம் அது நியாயமானது நீதியானதாகவே அமையும். அதில் எனக்கு முரண்பாடு இல்லை. ஆனால் அதன் சாத்தியத் தன்மை பற்றியே நான் உங்களிடம் கேட்கின்றேன். வர்க்கங்களற்ற சமூதாயத்தில் இருந்த சமூக அரசியல் பொருளாதார சூழல் இன்றுபோல் இருக்கவில்லை. இன்று இந்த வர்க்கங்களற்ற சமூதாயத்தை உருவாக்க முன்வருபவர்களே இலக்கை நோக்கி இல்லாமல் பகைமுரண்பாடுகளுடனேயே செயற்படுவதைக் காண்கிறோம். ஆகவே தத்துவார்த்த ரீதியில் வர்க்கங்களற்ற சமூதாயம் சாத்தியம் என நிறுவுவது ஒரு பிரச்சினையில்லை. அதன் நடைமுறை யதார்த்தத்தையே நான் கேட்கின்றேன்.

    2. எனது இரண்டாவது கேள்வியும் அவ்வாறே. புரட்சிகர கட்சி தொழிலாளர் மேல் சிந்தனை மேலாண்மை செலுத்த வேண்டும். ஆனால் எனது கேள்வி இதுவரை கடந்த 60 ஆண்டுகளாக செலுத்தவில்லை. இன்னும் 60 ஆண்டுகளுக்குப் பின்னும் புரட்சிகர சக்திகள் தொழிலாளர் மேல் சிந்தனை மேலான்மை செலுத்துவார்கள் என்பதற்று அறிகுறியில்லை. நடைமுறையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் நீங்களும் புத்தகப் புரிட்சியாளர் போன்றே விளக்கம் வைக்கிறீர்களோ என எண்ணத் தோண்றுகிறது.

    3. //மூன்றாவது இது இரண்டிலிருந்தும் பெற்ற படிப்பினையைக் கொண்டு சமூகத்தின் யதார்த்த இயக்கத்தை எவ்வாறு புரிந்து கொள்கின்றோம் என்பதும் இந்த டிப்படையிலையே நமது மூலோபயாம் தந்திரபுயாம் என்ன என்பதையும் தீர்மானிக்கவேண்டும்…//
    இந்த மூன்றாவது பாதை பற்றி இப்போது பலரும் பல ஆண்டுகளாகப் பேசிவருகின்றனர். ஆனால் அது இயக்கம் பெற இன்னும் பல பத்து ஆண்டுகள் ஆகலாம் என்றே தோண்றுகிறது.

    இந்த மூன்று விடயங்களிலும் எம்மால் முன்னோக்கி நகர முடியாமைக்குக் காரணம்
    1. இலக்கு நோக்கிய அர்ப்பணிப்பு இல்லை. மாறுபட்ட கருத்துக்களுடனும் பொது நோக்கில் இயங்குகின்ற விட்டுக்கொடுப்பு இல்லை. சகிப்புத் தன்மையில்லை. தனிமனித முரண்பாடுகளை பொதுமைப்படுத்தி பிளவுகளை ஏற்படுத்துவது.

    2. எல்லோரும் தங்களுக்கு அல்லது தங்கள் குழுவுக்கு ஒரு கட்சி கட்டுவது. கட்சியில் உள்ள எல்லோரும் தலைவராக வேண்டும் தத்துவ ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம். தாங்களே புனிதர்கள் புரட்சியாளர்கள் அதனால் அனைவரும் தங்கள் தலைமையில் போராட வரவேண்டும் என்று அழைப்பது. அதனால் புரட்சிகரக் கட்சிகள் பெரும்பாலும் தலைவர் தத்துவ ஆசிரியர்களுடன் மட்டும் கட்சி உறுப்பினர்கள் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றது.

    3. அர்ப்பணிப்பும் கூட்டு உழைப்பும் இல்லாமல் மக்களில் இருந்து அன்னியப்பட்டு நிற்கும் அதிகார விருப்புக் கொண்ட வைற்கொலர் மார்க்ஸிஸ்ட்டுக்கள் தான் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும்பாலும் உள்ளனர். அதனால் தான் தமிழர்கள் மத்தியில் இடதுசாரிகள் மீதும் புரட்சியாளர்கள் மீதும் மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.

    4. ‘மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்!’ என்று மா ஓ சேதுங் அவர்கள் என்று நினைக்கிறேன் கூறியதாக ஒரு கூற்று உள்ளது. ஆனால் எம்மவர்கள் மக்களிடம் கற்றுக்கொள்ள தயாரில்லை. மக்களுக்கு கற்றுக்கொடுக்கவே எமது தத்துவ ஆசிரியர்கள் முண்டியடிக்கின்றனர்.

    தொடரும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • meerabharathy
    meerabharathy

    நட்புடன்
    தங்களது இரண்டாவது பின்னுட்டத்தில் மூதலாவது கேள்வியில். மூன்று விடயங்கள் தொடர்பாக நீங்கள் கதைக்கின்றீர்கள்…
    முதலாவது…வர்க்கங்கள் அற்ற சமுதாயம் தொடர்பான சாத்திய தன்மை…
    இது நீங்கள் வாழ்வின் மீது நம்பிக்கையிழந்துள்ளதையே காண்பிப்பதாக நான் உணர்கின்றேன்….
    முதலாளித்துவ வர்க்கத்தால் அல்லது ஆதிக்க சக்திகளால் தாம் விரும்பியதை உருவாக்கவே நிறுவுவதோ சாத்தியம் எனின்…அதுவும் நியாயமற்ற அடக்குமுறை தன்மை கொண்டு அநீதியான சமூதாயத்தை உருவாக்குவது சாத்தியமெனின்… நீதியான நியாயமான அடக்குமுறையற்ற சமூதாயத்தை உருவாக்குவதும் சாத்தியமானதே என்பது எனது நம்பிக்கை…
    பிரச்சனை அதற்காக நமது உழைப்பு அர்ப்பணிப்பு எந்தளவு என்பதே கேள்விக்குறியானது…
    முதலாளித்துவ வர்க்கம் தான் விரும்பியவாறான சமூகத்தை உருவாக்க முழுமூச்சுடன் உழைக்கின்றது… ஆனால் சமூக மாற்றத்தை விரும்பும் நாம் அவ்வாறு உழைக்கவில்லை என்பதே யதார்த்தம்…

    இரண்டாவது வியடம் சமூகமாற்றத்திற்காக உழைப்பவர்கள் அல்லது உழைப்பவர்கள் எனக் கூறுகின்றவர்களுக்கிடையிலான உறவுகள் தொடர்பானது…
    முதலாளித்துவ ஐனநாயக முறைமைக்குள் கலந்துரையாடல்கள் இருந்தபோதும் அனைத்தும் கட்டளை இடுதலும் பணிவுடன் பின்பற்றுதலு; என்ற நடைமுறை இருப்பதால் விடயங்கள் இலகுவில் நடைபெறுகின்றன… ஆனால் சமூகமாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் மத்தியில் ஆதிக்கம் அற்ற ஜனநாயக முறைமை இருப்பதால் ஒருவரது கட்டளைப்படி கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதில்லை… ஆகவே கருத்து முரண்பாடுகளுக்கான சாத்தியங்களும் அதிகமாக இருக்கின்றன…. இங்கு சுய கட்டுப்பாடும் பொறுப்பு உணர்வும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றது…ஆனால் இது இரண்டும் நம்மிடம் இல்லை…இது ஒரு முக்கியமான பிரச்சனை எனக் கருதுகின்றேன்..

    மூன்றாவது தத்துவார்த்த விளக்கம் நம்பிடம் இல்லையாயின் சமூக மாற்றம தொடர்பாக நாம் சிந்தித்தே இருக்க மாட்டோம் அல்லவா? ஆகவே தத்துவார்த்த ரீதியாக ஒன்றை நிறுவுவது தவறல்ல…ஆனால் அதை எவ்வ்hறு நடைமுறைப்படுத்தப்போகின்றோம் என்பதில் நமக்கு போதிய அறிவு இல்லாமலிருக்கின்றது என்றே கூறலாம்…..இதை அறிவதற்கு மேலும் முழுமையான நமது உழைப்பு தேவைப்டுகின்றது என்றே நினைக்கின்றேன்…ஆனால் அவ்வாறன உழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இல்லை….

    நீங்கள் இவ்வாறன சாத்திய மின்மைக்கான காரணங்களாக தனிமனித முரண்பாட்டை முன்வைக்கின்றீர்கள்…
    தனி மனித முரண்பாடு ஏன் உருவாகின்றது என்பதைப் பற்றி நாம் சிந்திக்கவும் ஆய்வு செய்யவும் வேண்டும்…ஏனனில் சமூதாயத்தை மாற்றப் புறப்பட்டவர்கள் தமக்குள் மாற்றத்தை ஆகக் குறைந்தது சமூகமாற்றத்திற்காக செய்ற்படும் அதேவேளை சமாந்தரமாக ஏற்படுத்துவதில் அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பது எனது புரிதல்…

    மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுதல் என்பது மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும்பிரக்ஞையற்று அவற்றை எவ்வாறு தீர்க்க முற்படுகின்றனர் என்பவதற்றைப் புரிந்துகொள்ளுத்ல் என்றே நான் விளங்கிக்கொள்கின்றேன்…
    மீணடம் இந்த மனிதர்களுக்கு இதை பட்டை தீட்டி விளங்கப்படுத்தவேண்டும் எனவும் கூறியிருக்கின்றார்கள் என்பதையும் மறக்கவேண்டாம்…
    இவ்வாற செய்யும் பொழுது மட்டுமே இம் மனிதர்களிடம் புதிய சித்தாந்த மேலாதிக்கததை நிறுவலாம்….
    ஆனால் இன்று நாம் அவ்வறான புதிய கோட்பாடுகள் இல்லாமலும் அர்ப்பணிப்புள்ள செய்ற்பாட்டாளர்கள் இல்லாமலும் இருப்பதே குறையாக இருக்கின்றது என்பது எனது புரிதல்…..

    ஆகவே சமூகமாற்ததை நோக்கி என்ன செய்யவேண்டும் என நாம் நினைக்கின்றோமோ அதை முழுமையான அர்ப்பணிப்புடனும் உண்மையான உழைப்பயைும் வழங்கி நேர்மையாக செயற்படுவோமானால் எதிர்கால தலைமுறையாவது செயற்படுவதற்கான சந்தர்ப்பம் இருப்பதுடன் சமூகமாற்றத்திற்கான சாத்தியமும் நிச்சயமாக இருக்கும் என நம்புகின்றேன்…

    இறுதியாக நீங்கள் கூறுவது போல் 2000ம ஆண்டின் பின் நானும் கீபோட் செயற்பாட்டாளர்தான்.. இதை நான் தேர்வு செய்தே செயற்படுகின்றேன். பொழுதுபொக்கிற்காக அல்ல…. ஆனால் ஒரு வித்தியாசம் கடந்த எட்டு வருடங்களாக நான் எந்த அரசியலும் கதைக்கவில்லை… என்னை மற்றும் மனிதர்களை நமது சிந்தனைகள் செயற்பாடுகள் என்பவற்றைபற்றிய தேடலில் ஈடுபட்டேன்….இன்று அதை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்…
    அதாவது ஒவ்வொரு மனிதரும தன்னைப் புரிந்துகொண்டு தன்னில் மாற்றத்தை ஏற்படுத்துவற்கு செயற்படுவார்களேயானால்…நிச்சயமாக சாத்தியம் அற்றது என கருதும் பல விடயங்களை சாத்தியமாக்கலாம் என நான் உறுதியாக நம்புகின்றேன்….

    நன்றி
    நட்புடன்
    மீராபாரதி

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    மீராபாரதி உங்கள் பதில்களுக்கு நன்றி. இன்னும் சில பத்து வருடங்களுக்குப் பின்னும் என்னைப்போல் இன்னும் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பும் நிலை இருக்காது என நம்புவோம்.

    த ஜெயபாலன்.

    Reply
  • meerabharathy
    meerabharathy

    நட்புடன் ஜெயபாலனுக்கு…
    அதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனனில் தங்களுக்கு முதல் 10 வருடங்களுக்கு முதல் இவ்வாறான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கும் 10 வருடங்களுக்கு முதல் … பைத்தியமாக விதியில் அலைவாய் என ஆருடம் கூறப்பட்டது… இவ்வாறன எதிர்வு கூறல்கள் மற்றும் ஆருடங்களை நினைத்து கவலையே… ஆனால் என்ன செய்ய… சமூகத்தின் சகல மட்டங்களிலும் சுரண்டல்களும் அநீதிகளும் நடைபெறும் பொழுது மனதை என்னவோ செய்கின்றதே… கண்முடி ஓதுங்கியிருக்க முடிவதில்லையே….

    ஆரோக்கியமான வழிகளில் செயற்படுவதற்கு பாதைகள் தெரியவில்லை.. மனிதர்களுடன் இணைந்து வேலை செய்வதற்கு…. ஆழமான புரிந்துணர்வும் நம்பிக்யைும் கொண்ட மனிதர்களை காணமுடியவில்லை…. இதற்கு ஆகக்குறைந்தது அடிப்படையாக இருக்கவேண்டிய…
    நம்பிக்கை தரக்கூடிய கருத்துக்கள் இல்லை… இப்படி பல இல்லைகள்…. இந்த இல்லைகளை இருப்பவைகளாக மாற்றுவதற்காகவாவது நாம் உழைக்கவேண்டுமல்லவா….

    சரி இவ்வளவு சந்தேகத்துடன் நம்பிக்கையில்லாது சாதியமில்லாத ஒன்றிக்கா…..ஏன் செயற்படுகின்றீர்கள்… நீங்கள் செயற்படுவதற்கான அடிப்படைதான் என்ன?

    நட்புடன்
    மீராபாரதி

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நட்புடன் மீராபாரதிக்கு
    //சரி இவ்வளவு சந்தேகத்துடன் நம்பிக்கையில்லாது சாதியமில்லாத ஒன்றிக்கா…..ஏன் செயற்படுகின்றீர்கள்… நீங்கள் செயற்படுவதற்கான அடிப்படைதான் என்ன?//
    தத்துவங்களையும் நடைமுறைகளையும் பற்றி விவாதிக்கும் போது அவற்றின் நடைமுறைச்சாத்தியப்பாடுகள் பற்றியும் அலசி ஆராய்ந்து விவாதிக்க வேண்டும். பைபிளோ குர்ஆனோ வேத ஆகமங்களோ என்றால் சொர்க்கத்திற்குப் போகலாம் என்பதை கேள்வி கேட்காமல் சாத்தியப்பாடு பற்றி யோசிக்காமல் நம்பத்தான் வேண்டும். ஆனால் நானும் நீங்களும் விவாதிப்பது சொர்க்கத்திற்கு எப்படிப் போவது என்பது பற்றி இல்லை என்பதால்

    வர்க்கங்களற்ற சமூதாயத்தை உருவாக்குவது பற்றியும் அதன் சாத்தியப்பாடுகள் பற்றியும் அலசி ஆராய்ந்து விவாதிக்க வேண்டும். சாத்தியமும் சாத்தியமின்மையும் சாத்தியப்படுத்தலும் பற்றி விவாதிப்பது நம்பிக்கை சார்ந்த விடயமல்ல. வீஞ்ஞான ரீதியிலான அணுகுமுறை என்றே நான் கருதுகிறேன்.

    த ஜெயபாலன்.

    Reply
  • மீராபாரதி
    மீராபாரதி

    நட்புடன்….
    இரண்டு விடயங்கள்…
    விஞ்ஞான முறை சரிதான்…
    ஆனால் நீங்கள் அடிப்படை அம்சத்தையே கேள்வி கேட்கின்றீர்களே…
    இதுவரை வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக மேற்கொண்ட நடைமுறை சரியானதா தவறான என விவாதிக்கலாம்…
    கோட்பாடும் நடைமுறையும் ஒன்றாக நடைபோட்டனவா என விவாதிக்கலாம்…
    மேலும் எனது புரிதலில் விஞ்ஞான முறைமை என்பது ஒன்று இருக்கின்றது என்பதை நமது த்த்துவார்த்த ஆய்வுகள் மூலம் நிறுவுவது…
    உதாரணமாக மின்சாரத்தை உருவாக்கலாம் என எடிசன் தனது ஆய்வுகள் மூலம் நம்பினார்…
    பின் அதை நிறுபிப்பதற்காக 999 தவறான பாதைகள் மூலம் முயற்சித்ததாக கூறப்படுகின்றது…
    இது தவறான பாதைகள் என்பதை விட அவர் கூறுகின்றார் 999 வழிகளில் மின்சாரத்தை காணமுடியாது என்பதை அறிந்ததாக…
    இறுதியாக 1000 தடவை கண்டறிகின்றார்…
    சமூக மாற்றத்திற்கான போராட்டமும் இவ்வாறு தான்…
    மார்க்ஸின் த்ததுவார்த்த முடிவுகள் வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்கவது சாத்தியம் எனக் கூறுகின்றது….
    இன்று நாம் அதற்கும மேலாக பெண் பால் காமம் சிறுவர்கள போன்றவர்கள் மீதான அடக்குமறை இல்லாத சமூகத்தை உருவாக்கலாம் உரவாக்க வேண்டும் என நம்புகின்றொம்…
    நமது தவறு என்னவெனின் எடிசனைப் போல் 999 வழிகளில் முயற்சிக்காது…
    லெனின் ஸ்டாலின் மாவோ காட்டிய வன்முறை பாதைகளில் மட்டுமே பயணிப்பது தவறானது என்பதே விஞ்ஞான முறைமைக்கு எதிரானது….
    ஏனனில் விஞ:ஞான முறைமூலம ;ஒரு பாதை தவறானது என உணர் பின்பு அந்தப் பாதையை தொடரக் கூடார்து….
    முக்கியமான பல்லாயிரக்கானக்கான மனிதாpகளின் உயிருடன் தொடா;பு பட்டிருப்பதால் அதிகமான பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றோம்…
    ஆகவே
    புதிய பாதை ஒன்றைக் கண்டுபிடிக்கவெண்டும்…
    வியூகம் குழுவினருடன் எனக்குள்ள் முரபாடு இது தான்…
    அவர்கள் உருவாக்கும் செயற்பாட்டிற்கான கோட்பாடுகளை
    நடைமுறையில் பரிச்சித்துப்பார்ப்பதில்லை….
    சிந்தனையில் மட்டுமெ செயற்படுகனிற்வர்களாக இருக்கின்றார்கள்….
    இது வே விஞ்ஞான முறைமைக்கு எதிரானது என்பது எனது நிலைப்பாடு….
    பரிச்சித்தல் இல்லாத கோட்பாடு என்பது வெறும ;கற்பனை வாதமே….
    நம்பிக்கை என்பது வெறும் கடவுள் சொர்க்த்துடன் மடடும் மடடுப்படுத்தப்பட்டதல்ல….
    இன்று மனிதா;களுக்கு இடையிலான உறவுகளை நம்மாபாதும்….
    அல்லது பிரபாகரனை நம்பியதுபோல் கேள்வியின்றி நம்புவது ….
    இவ்வாறன இரு எதிர் நிலைகளே காணப்படுகின்ற பிரச்சனையைhன அம்சங்களே….
    நாம தொடர்ந்து செயற்படுவதற்கு பல விடயங்களில் மாற்றங்களை உருவாக்கவேண்டியவர்களாக உள்ளோம்….
    நன்றி
    மீராபாரதி

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நட்புடன் மீராபாரதி
    //விஞ்ஞான முறைமூலம ஒரு பாதை தவறானது என உணர் பின்பு அந்தப் பாதையை தொடரக் கூடார்து….
    முக்கியமான பல்லாயிரக்கானக்கான மனிதாகளின் உயிருடன் தொடாபு பட்டிருப்பதால் அதிகமான பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்…’//

    இப்போது நாம் இருவரும் ஒரே மொழியில் பேசுகிறோம் என நினைக்கிறேன்.

    Reply
  • nantha
    nantha

    இலங்கைச் சூழ்நிலையில் தொழில் சங்கநடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் அனுபவங்களோ அல்லது குறைந்த பட்சம் “தொழிலாளர்”களாகவோ இருந்த அனுபவம் கூட இல்லாதவர்கள் “தொழிலாளர்” அரசியல் அல்லது மார்க்ஸியம் பற்றிப் பேசுவது வேடிக்கையான விஷயம்.

    வியூகம்நடத்துபவர்கள் உங்களுக்கு” வேண்டியவர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்பது மட்டும் புரிகிறது.

    வெளினாடுகளில் தாராளமாக புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் இலங்கயின் சுற்றுபுற சூழ்நிலைகள் பற்றி எதுவும் கண்டு பிடிக்க முடியாது.

    தவிர மக்களின் “உடன்பாடு” என்பது முக்கியமான விஷயம். இயக்கங்கள் இந்த “உடன்பாடு” பற்றி ஒருநிமிஷம் சிந்தித்திருந்தால் இன்று பல அவலங்களைத் தவிர்த்திருக்கலாம்.

    வெளினாடுகளில் இருக்கும் தொழிலாளர் பிரச்சனைக்கும் எங்கள் நாட்டுத் தொழிலாளர் பிரச்சனைக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு.

    மேற்குநாடுகளில் தெரு சுத்திகரிப்பாளர்கள் “வங்கி” ஊழியர்களை விட அதிகம் சம்பாதிக்கின்றனர். எங்களுடைய வவுனியாவில் “சக்கிலிய”நாய்களே என்று விரட்டப்படுகிறார்கள்.
    இது எப்படி?

    உடனேயே இது “இந்து” மதப் பிரச்சனை என்று கூற வேண்டாம். ஆனால் அந்த தொழிலாளிகளுக்கு “வங்கி” ஊழியரின் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்று போராடி கொடுத்துப் பாருங்கள். சாதியும் மதமும் காணாமல் போய் விடும்.

    அப்படிப்பட்ட போராட்டங்களை தமிழர்கள் எந்தக் காலத்திலும் நடத்தப் போவதில்லை! எனவே வெறும் “சித்தாந்தம்” பேசி ஆகப் போவது எதுவுமில்லை!

    Reply
  • meerabharathy
    meerabharathy

    please read my other comments about Viyooham magazine….
    thanks
    வீயூகம் சஞ்சிகை-1: எனது குறிப்புகளும் விமர்சனங்களும்-1

    வீயூகம் சஞ்சிகை-1: எனது குறிப்புகளும் விமர்சனங்களும் -2

    வீயூகம் சஞ்சிகை-1: எனது குறிப்புகளும் விமர்சனங்களும்-3
    பிரக்ஞை-கோட்பாடு-செயற்பாடு-ஏதிர்கால அரசியல்

    வீயூகம் சஞ்சிகை-1: எனது குறிப்புகளும் விமர்சனங்களும்-4
    பிரக்ஞை – தனிமனிதர் – அமைப்புத்துறை – அரசியல்

    to read….
    http://meerabharathy.wordpress.com/2010/08/

    it is important to consider nantha’s above comments.
    meerabharathy

    Reply