அறிஞர்களற்ற ஜாதியை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கட்சி த.தே.கூட்டமைப்பு – பா உ பியசேன

Piyasena_M_MP_TNA தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன மனம்துறந்த தமிழ் சிஎன்என் இணையத்திற்கு வழங்கிய பேட்டி மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.

அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கியதன் பின்னர் தமிழ் சிஎன்என் இணையத்திற்கு  கூறுகையில் இலங்கையில் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு கட்சி என்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பே எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கே தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் 40 வருடங்களுக்கு முன் மலையகத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை தற்போது வடக்கு கிழக்கு மக்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பொருட்படுத்ததாமல் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனா ஐக்கிய மக்கள சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாலேயே தான் அரசுடன் .இணைந்துள்ளதாக கூறுகின்றார். அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் அவருக்கு மேலதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

பா உ பியசேன வின் இந்நேர்காணல் அருகில் உள்ள இணைப்பில் கேட்கலாம். அவர் எவ்வித அரசியல் மேல்பூச்சும் இன்றி சாதாரண மக்களின் மொழியிலேயே தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார். http://www.youtube.com/watch?v=Q1htJPT8IBM&feature=player_embedded

._._._._._.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூத்துக்களை வெளிப்படுத்துகின்றார் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன. அரசமைப்புத் திருத்தம் மீதான வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்த அவர் அரசை ஏன் ஆதரிக்க வேண்டிய நிலை வந்தது? என்பதை விளக்கினார்.

அவர் தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இருந்து முக்கிய விடயங்களை வாசகர்களுக்காக தொகுத்து தருகின்றோம்.

”தந்தை செல்வா செய்த மிகப் பெரிய பிழை தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்தாபித்தமைதான். ஏனெனில் அக்கட்சி சரியான தலைமைகளிடம் பின்னர் கையளிக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் காலமாக மக்களை ஏமாற்றி வருகின்றது. மக்களை சரியாக வழிநடாத்திச் செல்கின்றமைக்கான தலைமை கூட்டமைப்பில் இல்லை. உலகின் மிகப் பெரிய பயங்கரவாதக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்.

தமிழினத்தைப் புதை குழியில் தள்ளிய- தள்ளிக் கொண்டிருக்கின்ற கட்சி இதுதான். இளைஞர்களை உசுப்பு ஏற்றி விட்டதைத் தவிர கூட்டமைப்பு எதைத்தான் செய்தது?

கூட்டமைப்பில் முக்கிய ஒரு பொறுப்பில் நான் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற முன்னரேயே ஜனாதிபதியின் காலில் விழுந்தாவது வன்னி மக்களையும், வே. பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் காப்பாற்றியிருப்பேன்.

ஆனால் கூட்டமைப்பினர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அழிய வேண்டும் என்று விரும்பினார்கள். மக்களையும், போராளிகளையும் அநியாயமாக கொன்று விட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிழையாக வழி நடத்தியவர்களும், புலிகளின் அழிவுக்கு காரணமானவர்களும் இக்கூட்டமைப்பினரே.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய என்னை இவர்கள் ஒருமுறை கூட நாடாளுமன்றில் பேச அனுமதித்தமை கிடையாது.இன்று அம்பாறை மாவட்டத்தில் ஏராளமான விதவைகள், வறியவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்து பார்த்தமையே இல்லை. முதிர்கன்னிகள் மலிந்து போய் விட்டார்கள். வேலை வாய்ப்புக்கள் எதுவும் இங்கு இல்லை.

சில வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் மத மாற்றம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க யாருமில்லை. ஆனால் கூட்டமைப்பினரோ அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

வெளிநாடுகளில் விழாக்களில் கலந்து கொள்கின்றார்கள். கட்சியின் பெயர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஆனால் அவர்கள் கூடிப் பேசும் போது ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள். கூட்டமைப்பில் அறிஞர்கள், புத்திஜீவிகள் என்று யாராவது இருக்கின்றார்களா?.சம்பந்தன் ஆயினும் சரிஇ மாவை சேனாதிராசா ஆயினும் சரி, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆயினும் சரி, ஏன் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினராயினும் சரி வேறு ஒரு கட்சியில் வெற்றி பெறட்டும் பார்க்கலாம்.

சிந்தித்து வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இல்லாமையால் தொடர்ந்தும் பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். கொழும்பிலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகள்தான் இவர்களை பெரியவர்கள் ஆக்குகின்றன.

அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கின்ற இவர்களால் இவர்களால் ஒரு குண்டூசியைக் கூட தமிழ் மக்களுக்கு கொடுக்க முடியாது. சிங்கள தேசம் தமிழர்களுக்கு நன்மைகளைக் கொடுக்க காத்திருக்கின்றது. ஆனால் பெற்றுக் கொள்ள கூட்டமைப்புத்தான் தயாராக இல்லை.

கூட்டமைப்பினர் வன்னி மக்களை அகதி முகாம்களில் சந்திக்க சென்றபோது ஒரு ரொபி பைக்கெற்றைக் கூட கொண்டு சென்றிருக்கவில்லை. வேண்டும் என்றே பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் சென்றிருந்தார்கள். தெரிந்துகொண்டே அப்படிச் செய்திருந்தார்கள்.அப்போதுதானே பிரச்சினைகள் வெடிக்கும்.

கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி யுத்தத்தால் பாதிக்கக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சைக்கிள்களை கொடுத்து விட்டு போட்டோக்களில் பெரிதாக போஸ் கொடுக்கின்றார். பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் போடுகின்றார்.

பசியில் இருக்கின்றவர்களுக்கு சைக்கிள்களைக் கொடுத்து என்ன பயன்? இன்னமும் மக்கள் இவர்களை தலைவர்களாக எண்ணிக் கொண்டிருக்கின்றமை எனக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. மக்களின் நிலை கண்டு தினமும் தூக்கமில்லாமல் தவிக்கிறேன். அழுகின்றேன்.

மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற நோக்கோடுதான் அரசை ஆதரிக்கின்றேன். நிச்சயமாக அரசின் அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றமையில் தொடர்ந்தும் பாடுபடுவேன்.”

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Comments

  • BC
    BC

    பியசேன –
    உலகின் மிகப் பெரிய பயங்கரவாதக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்.
    அல்-கயிடாவிற்க்கு அடுத்ததாக புலிகளை ஆதரிப்பதால் அவர்கள் தான்.
    இளைஞர்களை உசுப்பு ஏற்றி விட்டதைத் தவிர கூட்டமைப்பு எதைத்தான் செய்தது?
    உண்மை.
    கூட்டமைப்பில் முக்கிய ஒரு பொறுப்பில் நான் இருந்திருந்தால்… பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் காப்பாற்றியிருப்பேன்.
    எனது முழு எனது ஆதரவு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு.

    Reply
  • மாயா
    மாயா

    //கூட்டமைப்பில் முக்கிய ஒரு பொறுப்பில் நான் இருந்திருந்தால்… பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் காப்பாற்றியிருப்பேன். – பியசேன//

    பியசேன அரசோடு இணைவதும் நல்லது. ராதாகிருஸ்னர் அரசோடு இணைவதும் நல்லது. (ஆறுமுகத்துக்கு டாட்டா காட்டி விட்டு மகிந்த கட்சியில் அல்லது ராதாகிருஸ்னர் இணைகிறார்? என தகவல்) .

    விரைவில் பியசேன பிரபாகரனை எப்பவோ முடிக்க வழி செய்திருப்பேன் என சொல்வார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். பரவாயில்லை, நீங்களாவது தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நாங்கள் குறை சொல்ல மாட்டோம்.

    //தந்தை செல்வா செய்த மிகப் பெரிய பிழை தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்தாபித்தமைதான்//

    Very good

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    பொறிபறக்குதே!
    சரியான நேரத்தில் சரியான தகவலை மக்கள்முன் வெளிக்கொண்டுவரும் தேசம் நெற்றிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…தந்தை செல்வா செய்த மிகப் பெரிய பிழை தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்தாபித்தமைதான்…//
    தந்தை செல்வா ஸ்தாபித்தது ‘தமிழர் விடுதலைக் கூட்ட்ணி’ அது இப்போ ஆவரங்கால் சின்னத்துரை/சங்கரி கூட்டணியின் கையில் இருக்கிறது.

    அறிஞர்கள் அற்றி ஜாதியை வைத்து அரசியல் செய்யும் அமைப்பு என எப்படி இவர் சரியாகச் சொன்னார் என இப்போது விளங்குகிறது!

    Reply
  • Naadoode
    Naadoode

    //அறிஞர்களற்ற ஜாதியை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கட்சி த.தே.கூட்டமைப்பு – பா உ பியசேன//

    அந்தக்கட்சியுடன் இணைந்திருந்து எம்.பியாகி மகிந்த காலில் விழும் வரைக்கும் – மகிந்தவுக்கு 2/3 பெரும்பான்மை அவசியப்படும் வரை பியசேனவுக்கு இது தெரியாமலிருந்ததை அவருடைய அப்பாவித்தனம் என்று எண்ணினால் யார் தான் எது செய்ய முடியும்?

    Reply
  • Ajith
    Ajith

    Mr Piyasena,
    I would have appreciated your statement if you have said this before you contesting under TNA. You are Sinhala because you made this after getting a million from Rajapakse like other cheap politicians. You should immediately resign your MP status and contest again under SLFP if you are a gentleman? Can you do it? when you were given a chance to contest in TNA ticket and you were elected by tamil votes. You not only cheated the people who voted for you. This clearly illustrates Sinhala and Tamil can never unite and it is a good lesson for tamil parties. Sinhala is Sinhala!

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    Dear Mr. Ajith,
    Your dream will never come to truth, because the current humanity of the world wishes a world without any differences. These types of thinking are happing not only over the World but also in Sri Lanka too. When it flourishes in Sri Lanka you will be going to mad.

    Reply
  • Kathir
    Kathir

    Dear Comrades, Thanks for your(Thesam) valualble job done in favour of the people.
    I hope that it is the first time I am hearing the voice of an ordianary man, who represent the poor tamil people in the parliament.Mr.Piyasena came from the very bottom of the life and he speaks just like an ordinary man of the village.You can judge his voice which is comes from the heart.Therefore he got an angry with the culprits of TNA when he moved very close to them.
    The real enemies who have used the flight of the oppressed tamils are the TNA back Tamil Saiva,Vellala rulling class and the Mafia LTTE or Tamil Tigers.Now it is the time to totally erase the TNA from the political scene.Mr.Piyasena is an activist therefore he is willing to serve the people other than cheating the poor people.
    Dear, Mr.Piyasena wish you all the best.Please throw away the so-called Eelam garbage and Try your best to serve the people

    Reply
  • thirumal
    thirumal

    பியசேனாவின் இந்த முடிவும் பேச்சும் அரோக்கியமானதல்ல. இதையே கூட்மைப்பின் இன்னொரு தமிழ் எம்பி செய்திருந்தால் வரவேற்கலாம்.

    பியசேனாவின் இந்த முடிவு சதாரண தமிழ்மக்களிடையே சிங்கள இனத்தவர் மீதான அவநம்பிக்கையை விதைக்கும் ஆபத்துடையது.

    Reply
  • nantha
    nantha

    Politics has no definitions. It always depends on the changes of everyday! Mr. Piyasena is not an exception for the “political waves”. TNA was the “Drumming Voice “of the LTTE in the Parliament but later Sambanthan “totally” denounced the LTTE.

    TNA always blame SLFP but never fail to sleep with UNP. Can any one explain why TNA is always a “strange bed fellow” of the UNP while UNP did all the “bad things” to the Tamil people?

    Reply
  • கருணா
    கருணா

    அஜித்தின் பிரச்சனை தமிழ் தேசியம் அல்ல தமிழ் இனவாதாம் தான்! 1983 கலவரத்திலட தமிழர்களை அடித்தது சில சிங்கள கடையர்களும் அவர்களுடன் இணைந்த சில முஸ்லீம் வியாபாரிகளுமே! எனது மாமனாரின் கடையை கொழும்பில் சூறையாடியது அங்கு வேலைசெய்த முஸ்லீமுடன் சேர்ந்த ஒரு அரைச் சிங்களவர். இருவரும் அந்த கடையில் வேலைசெய்தவர்கள். அரைச் சிங்களவர் ஒரு ஒரு தமிழருக்கும் சிங்கள பெண்ணிற்கும் பிறந்தவர். இவரை தமிசிங்கள என்றோ அல்லது சிங்கதமிழு என்றும் கூறுலாம். அஜித் இங்கு பியசேனாவுக்கும் இது பொருந்தும் காரணம் இவர் ஒரு அரைத் தமிழ் சிங்களவர்.
    அடுத்தது த.தே.கூ இவர்கள் தேர்தலில் இனி வரும் காலங்களில் நிச்சயம் வெற்றி பெற முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது. கற்பனை உலகில் கப்பல் ஓட்டுவதை எப்பதான் நீங்கள் நிறுத்தப் பேகிறீர்களோ தெரியாது!

    Reply
  • மாயா
    மாயா

    //1983 கலவரத்திலட தமிழர்களை அடித்தது சில சிங்கள கடையர்களும் அவர்களுடன் இணைந்த சில முஸ்லீம் வியாபாரிகளுமே! – கருணா//

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது கருணா. இம்முறை மலையகத்துக்குச் சென்ற போது தலவாக்கொலை, நாவலப்பிட்டி தமிழர்களும் அப்படித்தான் சொன்னார்ர்கள். வெளிச் சிங்களவர்கள் எவரும் அங்கு வந்து தமிழர் சொத்துகளை அபகரிக்கவில்லையாம். அங்கிருந்த சோனகரே கலவரத்தை நடத்தினார்களாம். . இன்று தமிழர் வைத்திருந்தபெருவாரியான கடைகள் இன்று சோனகருக்கு சொந்தமாகி விட்டுள்ளது.

    Reply
  • Ajith
    Ajith

    Dear Mr Thalaphathy,
    I wish you all the best in your dream of uniting Sinhala and Tamil under the leadership of King Rajapakse. I do not understand what you meant by my dream. I know your deream of unitary Sinhala Srilanka as a Sinhala only nation. Over the past 60 years of continued effort Sinhala have achieved a lot. In this effort they have reduced the tamil population into half by riots, wars, making refugees. You have reduced the land by the name of development, forced colonisation and using miltary power in the east. Your next step in the North mixing of tamils with Sinhala under Military occupation with the aid of thesam. i don’t see any change in thinking in line with world changes. The world is changing towards more democracy instead of Dictatorship that is a happening in Sri Lanka. Sri Lanka is the only country that operates white vans by Sinhala states. Sri Lanka is the only country criminals are being given ministerial posts. I wish you on your dreams!

    Reply
  • Ajith
    Ajith

    Dear Karuna,
    Thanks for accepting the fact that it is Sinhala thugs who killed tamils. Why didn’t you explain what happened to those Sinhala thugs? Any one arrested and charged? What was Sinhala military doing? The fact is Sinhala politicians are the real thugs and Sinhala military are protectors of Sinhala thugs. If Sinhala are not racists tell me why still 99.9 of the military is Sinhala?
    I am not sure what Nisthar is going to tell of your accusation of muslims?

    Reply
  • Nadarajah Sethurupan
    Nadarajah Sethurupan

    பியசேனவின் முடிவு 100 வீதம் உண்மையானது. அவரது முடிவு பாராட்டபடவேண்டியது.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    HI! Ajith, I can speak from my personal, first hand evidence only. I was in Colombo on 22nd July 1983 after my final day of an exam, having lunch with my then friend at Greenlays Restaurant. The waiter might have thought that both of us were Tamils, of course my friend was a Tamil from Jaffna, and told “Pillaiyal, something very serious is going to happen to night or tomorrow, leave Colombo as soon as possible”.

    I had no intention to stay in Colombo, becuse I had to report back to work in Puttalam very next day. Accordingly I returned. My friend returned to her place.

    On 23rd morning I was called by my head office in Colombo for emergency services. My immediate boss in Puttalam was a Indian Tamil. He asked me to take office vehicle with the Muslim driver. I refused for some reasons and went by a private vehicle.

    On 23rd July 1983 around 10.30 am I was at Pattah bus terminal only to witness a chilling incident. Tamils were lit alive behind the Boo tree at old bus terminal. I cannot discribe my feelings now, mainly my anguise and fear .

    Before I went to my head office in Bampalapitiya, I got off at Colpitiya, where my friend stays in a convent.

    When I entred the street. Singhalese were screeming and running like headless chicknes here and there saying ” Anna Koti enavaa, Koti”( Tigers are comming…. ). Me to ran with them. I knew it was a scare mongering, but could not do differently.

    Rang the bell at the convent, a Singhalese nun told me my friend was taken away to Galle, where her sister serves as a nun, for safety by Singhalese nuns. I relieved.

    Went to office got instrutions from my boss a Norwiegien. And took a tour in Colombo on foot. Reached Borella. That is the place, where I experienced the unforgatable. It was not normal Singhalese, it was no one, but Singhalese, Muslims and Tamil thugs orchestrated the bloody, shamefull atrocity against the innocent Tamils with the help of JR. I do not need to tell how I did find out their real identities.

    Later I phoned and checked my fried’s safety she was OK. Her other sister, who was a employee of a private foreign company in Colombo, sought refuge at a Muslim house in Colpitiya.

    Ajit, you don’t need to see what Nisthar or someone else to say about the July riot. It was a terrible, unforgetable artocity aginst the innocent Tamils. It is like Holocaust against Jews, cannot be wiped out from the history.

    But my real question still is, can we all learn something from that shameful plot against humanity.

    Reply
  • கருணா
    கருணா

    அஜித் நான் இங்கு முஸ்லீம்கள் கலவரத்தை நடத்தியதாக கூறவில்லை. ஆனால் சந்தர்ப்பத்தை பாவித்து சில முஸ்லீம்களும் அரைத் தமிழர்களும் இந்த கலவரத்தில் சில தனிப்பட்ட பழி வாங்கல்களை செய்தார்கள். இது அந்த முழு இனத்தையும் பிரதிபலிக்காது என்பதே என் கருத்து. சிங்கள மக்களிலும் ஒரு சிறுபான்மையே இந்த கலவரத்தில் ஈடபட்டார்கள். எனவே ஒரு இனத்தை நீங்கள் சாடுவது மிகவும் தவறு. இலங்கை அரசில் 99 வீதம் இராணுவம் இருப்பதற்கு புலிகளும் ஒரு காரணம். எனது உறவினர் ஒருவர் நேவியில் இருந்து புலிகளால் கொல்லப்பட்ட ஒரு தமிழர். 1983 இற்கு முன் எத்தனை பேர் இலங்கை படையில் இருந்தார்கள் என்பதை நினைவு கூர்ந்து பார்ப்பது நல்லது!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //…தந்தை செல்வா செய்த மிகப் பெரிய பிழை தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்தாபித்தமைதான்…- பியசேன//

    //தந்தை செல்வா ஸ்தாபித்தது ‘தமிழர் விடுதலைக் கூட்ட்ணி’- சாநதன்//

    தந்தை செல்வா ஸ்தாபித்தது “தமிழரசுக்கட்சி”. தமிழர் விடுதலைக் கூட்டணியை ஸ்தாபித்தவர்களில் தந்தை செல்வாவும் ஒருவரேயொழிய அவர் மட்டுமல்ல.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    யார் யார் எதை ஆரம்பித்தார்களோ இவை எதுவும் எமது மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. சிங்கள அரசியல்வாதிகளை விட மோசமாக இளைஞர்களையும் அவர்கள் சக்திகளையும் வீணடித்து தமது ஆசனங்களை நிரந்தரமாக்கிக் கொள்கின்றனர். பியதாச மாத்தையா! இவ்வளவு காலமும் அந்த கூத்தமைப்புடன் தானே நின்று கூத்தடித்தீர்கள். அவர்கள் தோளில் நின்றுதானே வெற்றியும் பெற்றீர்கள். கூட இருந்து குழிபறித்து விட்டீர்களே. உங்கள் குத்துக்கரணத்துக்கு அவர்கள்போல் ஏன் புலிகள் போல் மக்களைச் சாட்டுகிறீர்கள். மக்களுக்கா மாறினேன் என்று. உங்களுக்காக மாறினேன் என்று கூறுங்கள். அடுத்து எமது மக்களுக்கு ஒரு சரியான அரசியல் தளமே தலைமையோ இல்லாமல் இருக்கிறது. இதைத்தான் அரசும் விரும்புகிறது. என்னைப் பொறுத்தவரை கூத்தணி வெறும் கூத்தணிதான். நான் இளைஞர் பேரவை தொகுதி அமைப்பாளராக இருந்தபோது மாவை அண்ணாச்சி சிறை சென்றார் அப்போ துடிப்பான இளைஞர்கள் இணைந்த கூத்தணிக்கு வால்பிடிக்கும் அமைப்பாக இல்லாமல் ஒரு தீவீரமான அரசில் அமைப்பாக வளரக்கூடியதாக ஒரு யாப்பு இயற்றினோம். அதில் முக்கியமாக ஈடுபட்டுவர்களில் காலங்சென்றவர்களை நினைவுபடுத்துகிறேன். உமா:சந்ததி:இறைகுமரன்: செந்தில்: வாசு: இப்படிச்சிலர். ஆனால் மாவை அண்ணாச்சி வந்த அதைத் தேர்தலுக்குரிய ஒன்றாக மாற்றினார். இப்போதுதான் நாம் இளைஞர் பேரவை விடுதலை அமைப்பாகப் பிரிந்தோம். இந்த மாவையா தமிழர்களுக்கு விடுதலை பற்றிப் பேசுகிறார். எது கருத்துப்படி எமது மக்கள் சிதறிப்போகாமல் இருக்க ஒரு நல்லதலைமை தேவை. அது அங்குள்ள மக்களிடம் இருந்துதான் உருவாக வேண்டும். அது மனிதத்தை நேசிக்கும் சிங்களத்தலையையாக இருக்கலாம். நிச்சயமாக ஒரு சோனகத்தலைமையாக இருக்க முடியாது. காரணம் மதமும் மத ஆழுமையுமே.

    Reply
  • Ajith
    Ajith

    Dear Karuna,
    This is what you said.
    1983 கலவரத்திலட தமிழர்களை அடித்தது சில சிங்கள கடையர்களும் அவர்களுடன் இணைந்த சில முஸ்லீம் வியாபாரிகளுமே!
    My question was Sri Lanka government was doing to arrest and charge them? You never answered that question. LTTE was not there before 1970? What proportion of Sinhala in military during that period?

    Reply
  • மாயா
    மாயா

    TNA MP Sumanthiran’s submission against 18th Amendment ( சுபேந்திரனின் பாராளுமன்ற பேச்சு)
    http://vimeo.com/14879911

    Reply
  • roshan
    roshan

    ஒரு காலத்தில் ராஜபக்ஷ அன் கம்பனிக்கு வக்காலத்து வாங்குவதையே முழுமூச்சாகக் கொண்டு செயல்பட்டவர்களில் ஒருவர் தான் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் தமிழ் அதிகாரியாக இருந்த அஸ்ரப் அலி என்பவர். உள்வீட்டு ரகசியங்கள் எல்லாம் அவருக்கு அத்துபடி. அப்படிப்பட்டவரே இப்போது இவர்களால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று விலகி வந்துவிட்டார். மனைவி பிள்ளைகளுடன் உயிருக்குப் பயந்து ஒவ்வோரிடமாக ஓடிக் கொண்டிருக்கின்றார்.

    அப்படியிருக்கு நேற்றுத் தான் ராஜபக்ஷ அன் கம்பனியுடன் சேர்ந்து கொண்டுள்ள பியசேன அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெரிதாக சேவையாற்றப் போவதாகவும் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி நன்மை செய்வார் என்றும் பீலா விடுவது ஓவர்.

    அஸ்ரப் அலி செய்தது நியாயம் என்றால் பியசேன செய்திருப்பது அநியாயம். முன்னவர் அனைத்து வசதிகள் அதிகாரங்கள் என எல்லாவற்றையும் துறந்து எம் மக்களின் உரிமைகளை மதித்து தன் மானத்துடன் வெளியில் வந்து உயிருக்கு உத்தரவாதமில்லா நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றார்.பின்னவர் எம்மக்களின் வாக்குகளினால் முன்னுக்கு வந்து விட்டு எமக்கே எட்டி உதைக்கப் பார்க்கின்றார்.

    Reply
  • naanee
    naanee

    அர்பணிப்பான அரசியலை எம்மில் பலர் எதிர்பார்க்கின்றோம். அப்படியொன்று உலகில் இன்று இல்லை. அதுவும் மூன்றாம் உலக நாடுகளில் கேட்கத் தேவையில்லை. அந்த நாட்களில் இருந்து தமிழ்தலைமைகள் தாம் வெல்வதுடன் மற்றது யாரை நிறுத்தினால் தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்ற அடிப்படையிலேயே ஆசனங்களை ஒதுக்கி வந்தார்கள். சீனியோரிட்டியோ அல்லது தகமைகளோ கருத்தில் கொள்ளப்படுவதில்லை. திருநாவுக்கரசில் இருந்து தியாகராசாவரை இப்படித்தான் நடந்தது. இன்று சரபணபவனும் பியசேனாவும் இப்படித்தான் எம்.பீ க்கள் ஆனர்கள். இன்றும் தலைமைகளுக்கு அதனால் ஏதும் இழப்புக்கள் பெரிதாக இல்லை அதற்கு ஒரு காரணமும் வைத்திருப்பார்கள். அவர்களது தேவை எம்.பீ பதவி மாத்திரமே. அது சம்பந்தனுக்கும், மாவைக்கும், சுரேசுக்கும் கிடைத்தால் காணும். இப்போது மகிந்தாவுடன் அவர்கள் விடுவதெல்லாம் ஒரு சின்ன ஊடல் முன்னர் அமிர்தலிங்கம் ஜே.ஆர் உடன் வைத்திருந்த மாதிரி. இவர்களால் இதைவிட வேறொன்றும் செய்ய முடியாது. மக்களும் நீங்கள் எவ்வளவுதான் செய்தாலும் தமிழரசு, கூட்டணி,கூட்டைமைப்பு என்ற ரீதியில் வாக்களிக்க பழகிவிட்டார்கள். இது இவர்களுக்கு நன்கு தெரியும் பிறகென்ன எமது அரசியல் இப்படியே தொடர்ந்து போகவேண்டியதுதான். புலிகளின் இவ்வளவு அடாவடித்தனத்தையும் விமர்சிக்காது இவர்கள் அமைதி காத்ததே இந்த பதவிக்காகத்தான்.

    Reply
  • nantha
    nantha

    எல்லோரும் கட்சி மாறியமைக்கு பியசேனவை “வாங்கு, வாங்கு” என்று வாங்குகிறீர்கள்.

    கட்சி மாறாதவர்கள் கொழும்பில் என்ன செய்கிறார்கள்? தமிழர்களின் வாக்குகளைப் பெற்று “தங்களுடைய” உறவினர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும் சலுகைகள் பெறவல்லவா அமைச்சுக்களின் படிகளில் ஏறி இறங்குகிறார்கள்.

    ஆனால் பியசேனவுக்கு “பிரச்சனைகள்” பற்றி “வாய்” திறக்கக் கூட யாழ்ப்பணத்துக்கல்லவா தொலைபேசி அழைப்பு விட வேண்டி வந்தது. இனி அந்தப் பிரச்சனை கிடையாது.

    Reply